நான்காம் எஸ்டேட்களின் நாலாந்தரங்கள்

The Fourth Estate என்று ஜனநாயகாத்தை காக்கும் தூண்களில் ஒன்றாக பத்திரிக்கைதுறையை குறீப்பிடுவதுண்டு. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது. குறைந்தபட்ச நேர்மையாவது இருக்கிறதா? செய்திகள் பரிமாற்றம் என்ற நிலையிலிருந்து செய்திகளை திணித்தல் என்றாகி விட்டது. இவர்களின் நிலை எலும்புத்துண்டுக்கு அலையும் நாயின் நிலைதான். வீசப்படும் எலும்புத்துண்டிற்கேற்ப விசுவாசம் இருக்கும்....


சுதந்திரப்போராட்டம் முதல் இன்றைய குஷ்பு வரை எப்படி எல்லாம் தரங்கெட்டுப் போயிருந்தன என்பதைப் பற்றி அவ்வப்போது பார்ப்போம்.
( வருமானமற்ற நேர்மையான பத்திரிக்கைகளை விட்டு விடுவோம் )

11 மறுமொழிகள்:

இப்னு ஹம்துன் said...

வருமானத்தை குறி வைப்பதில் போய் விடுகிறது ஊடகங்களின் 'தன்' மானம்.

அடைப்புக் குறிக்குள் இருக்கிறது 'பொருள்'.

சந்திப்பு said...

தங்களின் நாலந்தர எ°டேட்டுக்களை பற்றிய கருத்து மிகப் பொருத்தமானது. சீரழிந்துள்ளது பத்திரிகைதுறை. அதிலும் குறிப்பாக தமிழ்பத்திரிகையுலகம் தலைகுனிவை நோக்கி செல்கிறது... பாலியல் உணர்வை தூண்டும் அல்லது பாலியல் காட்சிகளை கொண்ட படம் இடம் பெறவில்லையென்றால் அவர்களுக்கு தூக்கம் வருவதில்லை... இவர்கள்தான் கலாச்சார காப்பாளர்கள்! சம்மட்டியடி!

கே. செல்வப்பெருமாள்

பரஞ்சோதி said...

முத்துக்குமரன், பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்களின் இம்சை தாங்க முடியவில்லை.

உலகையே திருத்துவதாக கூறிக் கொள்ளும் இவர்களை திருத்துவது யார்?

பொது இடங்களில் இவர்கள் நடந்துக் கொள்ளும் முறை வெறுப்பையே உண்டாக்குகிறது.

கண்டிப்பாக அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிடும் பத்திரிக்கை, தொலைக்காட்சி சேவைகளை கட்டுப்படுத்த சரியான சட்டம் தேவை.

குமரன் (Kumaran) said...

என்ன முத்துகுமரன் (பாம்பாட்டி என்று அழைக்கலாமா?) நவம்பரில் ஒன்றுமே எழுதவில்லை போலிருக்கிறது. தீவிர வலைப்பூக்கள் வாசகராகி விட்டீர்களா என்ன?

ஆமாம். ஒரு எளியன்- கூடல் மாநகரிலிருந்துன்னு அறிமுகம் இருக்கே. நீங்க மதுரைக்காரரா என்ன?

முத்துகுமரன் said...

என் தாத்தாக்கள்தான் என்னை பாம்பாட்டி என்று அழைப்பார்கள். நீங்கள் விரும்பினால் அழைத்துகொள்ளுங்கள்.

இவ்வளவு நாளா தமிழ்மணத்தில இணைப்பு கொடுக்க முடியாம இருந்தது. இப்பத்தான் கஷ்டப்பட்டு உள்ள நுழைஞ்சிர்க்கேன். இனிமேல் ஜமாய்ச்சிடலாம்.

ஆமாம் நான் மதுரைக்காரனே... சொந்தௌஉர் கிருஷ்ணன் கோயிலிக்கு அருகில் உள்ள வத்திராயிருப்பு......

முத்துகுமரன் said...

தன்மானமற்ற ஊடகங்கள்தான் நம்மைப் பற்றி சான்றிதழ்கள் கொடுக்க அலைகின்றன். தங்கள் கருத்துக்கு நன்றி இப்னுஹும்துன்

முத்துகுமரன் said...

உண்மையான வார்த்தைகள் செல்வப்பெருமாள். இன்றைய தமிழ் ஊடகங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு எலும்புத்துண்டுக்கு அலையும் நாய்கள் போல ஆகிவிட்டன. குறிப்பாக திரைப்படத்துறையினருக்கு சேவகம் செய்யும்.....

முத்துகுமரன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி பரஞ்சோதி..... சட்டம் கொண்டு வந்தால் பாசிசம் என்று கதறுவார்கள்.. மேலும் சட்டங்களினால் ஒரு பிரயோஜன்மும் இல்லை. ஏனென்றால் அது உபயோகிப்பவர்களை பொறுத்தே அமைகிறது.

இதுவரை நம் நாட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களில் பெரும்பாலும் கைதானவர்கள் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களின் எதிரிகள்தான்...

குமரன் (Kumaran) said...

மதுரைக்காரர் தானா....அப்ப மூனு விதத்துல நெருங்கிட்டீங்க. நானும் மதுரை தான். படிச்சது கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில். அப்போது இரண்டு வருடம் வத்திராயிருப்பு நடுத்தெருவில் (ஒரு வீட்டில தாங்க) இருந்திருக்கேன்.

//சொந்தௌஉர் கிருஷ்ணன் கோயிலிக்கு அருகில் உள்ள வத்திராயிருப்பு// அதென்ன கிருஷ்ணன் கோயிலுக்கு அருகில் உள்ள வத்திராயிருப்பு? கிருஷ்ணன் கோவிலையே நான் ச்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளன்னு தான் அறிமுகப்படுத்தியிருக்கேன். நீங்க என்னடான்னா கிருஷ்ணன் கோவில் பக்கத்துலன்னு சொல்றீங்க? :-)

முத்துகுமரன் said...

என்ன இது அங்க இங்கன்னு கடைசில நெருங்கின சொந்தமாகிட்டோம்.... வெளியூர் ஆளுங்களுக்குத்தான் திருவில்லிப்புத்தூர்க்கு பக்கத்தில கிருஷ்னன்கோயிலுக்கு பக்கத்திலன்னு அறீமுகப்படுத்தனும். மருதக்காரங்களுக்கும் அப்படிச் சொல்லக்கூடாது இல்லையா?. எங்களின் பூர்வீக வீடு இருந்தது தெற்குத் தெரு. தபால் நிலையம் பின்புறம்தான்...

கார்மேகராஜா said...

///////சொந்தௌஉர் கிருஷ்ணன் கோயிலிக்கு அருகில் உள்ள வத்திராயிருப்பு// அதென்ன கிருஷ்ணன் கோயிலுக்கு அருகில் உள்ள வத்திராயிருப்பு? கிருஷ்ணன் கோவிலையே நான் ச்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளன்னு தான் அறிமுகப்படுத்தியிருக்கேன். நீங்க என்னடான்னா கிருஷ்ணன் கோவில் பக்கத்துலன்னு சொல்றீங்க? :-)////////////


நம்ம ஊர விட்டுட்டீங்கலே! அப்படியே காடனேரிய சேர்த்திடுங்க.

Related Posts with Thumbnails