தங்கமணியின் பெயரில் சில போலி பின்னூட்டங்கள்...

நன்றி தேசபக்தி சீமான்களே என்ற என்னுடைய பதிவில் தங்கமணி அவர்களின் பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த போலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

தமிழ்மணமும், பூங்காவும் இந்திய தேசியத்திற்கு எதிராகவும், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவும் இயங்குவது போன்ற தோற்றத்தை தர பலநாட்களாக முயற்சிகள் நடந்துவருவது தெரிந்த ஒன்றுதான். சமூகத்தின் மாற்றுக் குரல்கள் ஒலிக்கும் போது சிலருக்கு நெருடலாகத்தான் இருக்கும். அவை விவாதிக்கப்பட வேண்டியது.

இந்த சூழலில் பூங்கா பற்றி விமர்சித்து திரு. ஜடாயு அவர்கள் பதிவிட்டிருந்தார்கள். விமர்சிப்பது அவர் உரிமை. அதிலும் இந்த பின்னுட்டம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பெயரிலி அவர்களின் பெயரிலும் ஒரு பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. தங்கமணி பெயரில் பிரசுரிக்கப்பட்ட அதே பின்னூட்டம் எனது பதிவிலும் இடப்பட்டு இருந்தது

//தங்கமணி has left a new comment on your post "நன்றி தேசபக்தி சீமான்களே":

ஜடாயு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது.

உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானதா? உங்கள் மனதில் கைவைத்துச் சொல்லுங்கள். பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தார்கள், உடையை இழந்தார்கள். கஞ்சிக்கும் வழியின்றி பார்ப்பனர்களை அண்டிப் பிழைக்கும் ஒரு இழிந்த நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.

அப்படி வரலாற்றில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே சிலர் பதிவுகளை எழுதிகிறார்கள். அப்படியான உண்மைப் பதிவுகளை பூங்காவில் போடாமல் ஆர்.எஸ்.எஸ் ஒரு நற்பணிகள் செய்யும் மன்றம் என்று எழுதும் உங்களின் பதிவுகளையும் அரவிந்தன் போன்ற அடிவருடும் கும்பலின் பதிவுகளையுமா போடச் சொல்கிறீர்கள்?

பூங்கா என்பது இதழ். தமிழ்மணம் என்பது திரட்டி. இரண்டும் வெவ்வேறு என்கிறோம் நாங்கள், ஆனால் இரண்டும் ஒன்று என்கிறீர்கள் நீங்கள். எனவே உங்கள் வழிக்கே வருகிறேன், இரண்டும் ஒன்றுதான். எப்போது உங்களுக்கு பூங்காமேல் நம்பிக்கை இல்லையோ அப்போதே தமிழ்மணத்தில் இருக்க உங்களுக்கு தகுதி இல்லை.

நீங்களாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் மரியாதை. இல்லை என்றால் நாங்களாக கழுத்தைப் பிடித்து தள்ளி உங்களை வெளியேற்ற வேண்டி இருக்கும்.

நீங்கள் படித்தவர், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மதியாதார் வாசல் மிதியாதே என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்த கடிதம் உங்களுக்கு மட்டும் இல்லை அரவிந்தனுக்கும் சேர்த்துதான்!

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by தங்கமணி to என் பார்வையில் at 11:06 AM, March 29, 2007
Anonymous has left a new comment on your post "நன்றி தேசபக்தி சீமான்களே": //


இந்த பின்னூட்டத்தை என் பதிவில் அனுமதித்ததே தங்கமணி பெயரில் தவறாக பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பதை தெரிவிக்கவே.

என் பதிவில் அரவிந்தன் நீலகண்டன் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் வேறு எங்கோ தெரிவித்த கருத்தை எடுத்துக் கொண்டு அதுக்கு பதிலாக மற்றொரு பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது. இங்குதான் போலியாக இயங்கிய நபரின் புத்திக் கூர்மையும் வெளிப்படுகிறது. முகமும் வெளிப்படுகிறது.

அது கீழே

அரைவிந்தருக்கு தங்கமணி அவர்களின் எச்சரிக்கைக் கடிதம்:-

//காறி உமிழ்கிறேன்//

அரவிந்தன் நீலகண்டன்,

உங்களை மதித்து பதில் சொன்னேன். இன்னும் நீங்கள் திருந்துவதாக இல்லை. நான் தமிழ்மணத்தின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் என்றாவது தெரியுமா? அதுவும் தெரியாதா?

இதுகூட தெரியாமல் நீங்கள் எல்லாம் வலைப்பதிவு எழுதி மக்கள் படித்து... என்ன கருமம் அய்யா இது?

தலித்துகளின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தது யார்? நான்கு வர்ணத்தை கண்டு பிடித்தது யார்? ப்ரம்மாவின் மும், தோள், தொடை, காலில் இருந்து பிறந்ததாக மக்களை வகைப்படுத்தியது யார்? குஜராத் கலவரத்துக்கு யார் காரணம்? பாதிரியார் கொலைக்கு யார் காரணம்?

பதிவுகளை தமிழ்மணம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எழுதுவதாக இருந்தால் எழுதுங்கள். இல்லை என்றால் தாராளமாக விலகி விடுங்கள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் நிலைமைக்கு எங்களை தயவுசெய்து ஆளாக்க வேண்டாம்.

தாங்கள் என்னை ஆபாசமாக பேசியதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் தாங்கள் தமிழ்மணம் திரட்டியில் இருந்தும் முற்றாக நீக்கப்படுவீர்கள்.

இது முதல் எச்சரிக்கைக் கடிதம்.

அன்புடன்,
தங்கமணி.


தங்கமணி அவர்களின் பதிவுகளைப் படித்திருப்பவர்களுக்கு எளிதாகப் புரியும் இது அவருடைய எழுத்துகள் இல்லை என்று. இந்த விடயங்கள் தெரிந்தும் அந்த பின்னூட்டங்களை ஜடாயு அனுமதித்தாரா அல்லது தமிழ்மண நிர்வாகிகள் பாசிசத் தன்மையோடு நடக்கிறார்கள் என்பது போன்ற தோற்ற மயக்கத்தை தர பயன்படுத்திக் கொண்டாரா என எனக்குத் தெரியாது. போலிகளுக்குத் துணை போகின்றவர்கள் யார் என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்.

இந்த போலிப்பின்னுட்டமிட்டவருக்காக வருந்துகிறேன். நல்ல மனநல மருத்துவரை அணுகி சுகமடைய முயற்சி செய்யுங்கள்.

நன்றி தேசபக்தி சீமான்களே

பார்ப்பனிய முகமூடிகளை
சுட்டினாலே
இந்திய தேசிய எதிர்ப்பு

நன்றி தேசபக்தி சீமான்களே
உங்கள்
ஒப்புதல் வாக்குமூலத்திற்கு

ஐந்தில் அடங்குமா :-)

மனித வாழ்வு என்பதே உறவுகளாலும் உணர்வுகளாலும் முன்னும் பின்னும் பிணைக்கப்பட்ட
ஒரு சங்கிலித் தொடர்பயணம்தான். எனவேதான் இந்த வடிவில் வரும் எந்த நிகழ்வும் இயல்பாக நம்மை கவர்ந்துவிடுகிறது.இணையத்திலும் நான்கு, ஆறு , சுடர், Tag என மீண்டும் மீண்டும் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் இவைகள் உறவுச் சங்கிலியாக பரிணமித்துவிடுகின்றன. இன்று என்னையும் இந்த விளையாட்டில் தன்னடக்க செம்மல் தம்பியும்,
கிரிக்கெட் தேழர் பாஸ்ட்பவுலரும்,

இணைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. வித்தியாசமான அல்லது கிறுக்குத்தனமான எண்ணங்களை பகிர்ந்து கொள்ள அழைத்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒரு கிறுக்கனாகவும் வெளிப்பார்வைக்கு வித்தியாசமானவனாகவும் காட்சி தருகிறான். என்னைப் பற்றி நான் வித்தியாசமாக உணர்வதை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நிழல்கள்-நிஜங்கள்:
சிறுவயதிலிருந்தே நான் உணரும் ஒரு பழக்கம் இது. நிழலான வடிவங்கள் மீதான ஈர்ப்பு. எந்த ஒரு பொருளையும், இடத்தையும், மனிதனையும் கற்பனையாக நான் விரும்பிய வண்ணம் உருவாக்கிக் கொள்வது. பார்க்காத ஒரு மனிதரைப் பற்றி பேசும் போது அவரைப் பற்றி பேசப்படும் செய்திகளை வைத்து அவரது தோற்றம் இப்படி இருக்கும், குரல் இப்படி இருக்கும், குணம் இப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பது. மிகப்பெரும்பான்மையான நேரங்களில் இப்படி கற்பித்து கொள்வது எனக்குள் பெரும் மகிழ்ச்சியை தரும். இதே போலத்தான் இடங்களைப் பற்றியான கற்பனை. குறிப்பாக வீடுகளைப் பற்றியான கற்பனை. பலமுறை வீடு பார்த்துவிட்டு அப்பா சொல்லும் குறிப்புகளைக் கொண்டு ஒரு வீட்டை என் விருப்பப்படி வடித்துக் கொள்வேன். அநேகமாக எல்லா தருணங்களிலும் என் கற்பனைக்கு பொருந்தாமலே இருந்திருக்கிறது. எப்போதுமே நிஜமான நிழலை நான் உள்வாங்கவில்லை.

மறதி:
இன்னைக்கு வரைக்கும் இந்த குணம் என்னை விட்டுப் போகவில்லை. எங்க வீட்ல சொல்லுவாங்க உனக்கு கை மறதிடானு. எந்த பொருளானாலும் கையில் வைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்படியே எங்காவது மறந்துவிடுவேன். அதிகம் நான் மறப்பது சாவிகளே. பள்ளி கூட தருணத்தில் சைக்கிள் சாவியை தொலைத்துவிடுவேன். சைக்கிள் சாவியை சமயலறை, கழிவறை, பீரோ என இடம் பொருள் ஏவல் இல்லாமல் தேடுவேன். எனக்கு தட்டுப்படவே செய்யாது. அம்மா வந்துதான் எடுத்து கொடுப்பார்கள் ஒவ்வொரு முறையும். சில நேரங்களில் கண் எதிரே இருக்கும். அந்த ஒரு இடத்தைவிட்டு மத்த எல்லா இடங்களிலும் தேடும் பார்வை திறன் என்னுடையது. காலம் மாறி இருந்தாலும் பழக்கம் அப்படியே இருக்கிறது. சைக்கிள் சாவிக்கு பதில் சமயங்களில் அறைச்சாவி. கைபேசி, பர்ஸ் என தொடர்கிறது. என்ன ஒரு வசதி கைபேசியை மறந்துவிட்டால் எளிதாக கண்டுபிடித்துவிட முடிகிறது. இன்னொரு கைபேசியிலிருந்து அழைப்பு அனுப்பி:-). அதே போல பர்ஸ்க்கு ஏதேனும் வழி இருந்தால் கண்டறிய வேண்டும்.

புத்தகங்கள்(வாசிப்பு):
புத்தகங்கள் மீது எப்போதும் எனக்கு மிகுந்த பிரியம். எந்த நேரமானாலும் ஏதாவது ஒன்றை எடுத்து வாசித்துக்கொண்டிருப்பேன். ஆனந்தவிகடன், குமுதம் பொன்றவை எல்லாம் அரைமணி நேரம்தான். விறுவிறுவென வாசித்துமுடித்துவிடுவேன். அடுத்தவர் கையில் இருக்கும் புத்தகத்தை வாசிக்க ரெம்பபிடிக்கும். அவர்கள் இரண்டு பத்தி முடிப்பதற்குள் இரண்டு பக்கங்களை வாசித்திவிட்டு காத்துகிடப்பேன் எப்போ அடுத்த பக்கம் திருப்புவார்கள் என்று. வீட்டில் சாப்பிடும் போது கையில் ஏதேனும் ஒன்று வாசிக்க இருக்க வேண்டும். கதைபுத்தகங்கள் எதுவும் இல்லையென்றால் அப்பாவின் சேமிப்பில் இருக்கும் கம்யூனிச புத்தகங்களை வாசிப்பேன். சில நேரம் அப்பாவின் சங்க சம்பந்தமான துண்டறிக்கைகளை வாசித்து கொண்டிருப்பேன். அது பத்துவருட பழையதாக இருந்தாலும். சப்பாட்டு நேரத்தில் புத்தகத்தை பார்த்துகொண்டு தரையில் சோறு உண்ண முயற்சித்த தருணங்களும் உண்டு. என் தலைமாட்டில் புத்தகங்கள் வைத்துக் கொண்டு உறங்குவது மிகப் பிடித்தமான செயல். ஆனாலும் ஒரு சில புத்தகங்கள் தண்ணி காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. முன்பு பாட புத்தகங்கள். இப்போது கவிதை புத்தகங்கள்.

காதல்:
அது என்னவோ தெரியாது எனக்கு காதலர்கள் என்றால் என் நெருங்கிய உறவைப் போல நினைத்துக்கொள்வேன். காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களோடு எப்படியாவது நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று துடிப்பேன். கல்லூரிக்காலத்தில் இந்த கிறுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால் இதனாலேயே அற்புதமான நண்பர்களும் எனக்கு கிடைத்தார்கள். காதலிப்பவர்களிடம் அவர்களின் கதை கேட்பது பிடித்தமான ஒன்று. தாந்தோன்றித்தனமாக சிலநேரம் அறிவுரை சொல்வதும், நான் சொல்வது போலவே நடப்பதும் பின்பு சொன்னவனுடன் இன்னும் நட்பு இறூகுவதும். கல்லூரிகால நினைவுகளை இப்போது நினைக்கும் போது எந்த அழுத்தத்தையும் போக்கும் புன்முறுவல் கிடைப்பது ஒரு சுகம்.

மரணத்திற்கு பின்:
என் மரணத்திற்கு பின் என்ன ஆவேன் என்பதை அறிய மிகுந்த ஆவலுண்டு.பலமுறை கனவாகவும் வரும். நான் இறந்து நாற்காலியில் கிடத்தி வைக்கப்பட்டீருப்பேன். உறவினர்கள் எல்லாம் அழுவார்கள். ஏன் இவர்கள் அழுகிறார்கள் என புரியாது. இறந்த பின்பு மனைவியோடு பேசிக்கொண்டிருப்பேன். நான் போறேன். நீ எல்லாத்தையும் பார்த்துகோ என்று சொல்லுவேன்.அதே சமயம் அப்படி இறந்தால் அதன் பின்பு எங்கு இருப்பேன். இந்த உடம்பு எங்க போகும். பிரபஞ்ச வெளியில் மிதப்பேனே? என்று யோசிக்க ஆரம்பிக்கும் போதே உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். உடனே எப்படியாவது தூங்க வேண்டும் என துடிப்பேன். மிகப்பிரியமானவரை நினைத்துக் கொண்டு அவர் பெயரை தொடர்ச்சியாக உச்சரித்து தூங்கிவிடுவேன்.

அப்பாடா!! எப்படியோ நானும் எழுதிவிட்டேன். சங்கிலித் தொடர் அறுபடாது இருக்க நானும் ஒரு ஐந்து பேரை கோர்த்துவிடுகிறேன்.
சிவபாலன்
குழலி
பாலபாரதி
லக்கிலுக்
பொன்ஸ்

அன்புடன்
முத்துகுமரன்

சமஸ்கிருத அறிஞர்கள் உதவுக...

இந்து மதத்தினையும், வேதங்களை குறித்தும் ஒருவர் மாற்றுக் கருத்துகளையோ, விமர்சனங்களையோ செய்யும் போது சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை மொழி. பரந்து விரிந்த இந்துமதத்தின் வேதங்களும்,நீதிகளும் சமஸ்கிருதத்தில் இருந்துவிட கடைக்கோடி மனிதனுக்கு சிரமம்தான். ஓராண்டிற்கு முன் இங்கே ஒரு மந்திரத்தை முன் வைத்து நான் போட்ட பதிவின் போதே நான் தவறான மொழிபெயர்ப்பை வாசித்ததாக கடிந்து கொண்டார்கள். ஆகவே மீண்டுமொருமுறை அந்த தவறைச் செய்யமால், நான் வாசித்த சில சமஸ்கிருதச் சுலோகங்களுக்கு அல்லது மந்திரங்களுக்கான உண்மையான அர்த்தம் என்னவென்பதினை நண்பர்களிடம் விளக்கம் கேட்டு விடலாம் என்பதற்காகவே இந்தப் பதிவை இடுகிறேன். சரியான மொழிபெயர்ப்பு கிடைத்த பின்பே அவை தொடர்பான எனது கருத்துகளை சொல்வதையோ சந்தேகங்களை கேட்பதோ முறையானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவைகளுக்குத்தான் எனக்கு சரியான மொழிபெயர்ப்பு வேண்டும்.

''வேதம்:ஸ்மிருதி:சதாச்சார்: ஸ்வஸ்ளச ப்ரிய மாத்மன:!''

''யோவமன்யேத் தே மூலே ஹேதுசாஸ்த்ராஅயத் த்விஜ:!
ஸ ஸாதுபிர்பஹிஷ்கார்யோ நாஸ்த்கோ வேதநிந்தக்:!!

''ஸ்ருதித்வைதம் து யத்ர ஸ்யாப்தத்ர தர்மாவுபெள ஸ்ம்ருதெள!''

''யா வேதபாஹ்யா: ஸ்ம்ருத்யோ யாஸ்ச காஸ்ச குத்ருஷ்:!
ஸர்வாஸ்தா நிஷ் வலா: ப்ரேத்ய தமோநிஸ்டா ஹித்: ஸ்ம்ருதா:!!''

''வேதாயத்வோபநிபந்திருதத் ப்ரமாண்ய ஹி மனோ: ஸ்ம்ருத்
மன்வர்த்தவிபரீதா து யா ஸ்மிருதி ஸா ந சஸ்யதே!!''

''புராண மாநவோ தர்ம: ஸாங்கோ வேத ஸ்சித்ஸித்!
ஆங்யாஸித்தானி சத்வாரி ந ஹந்தவ்யானி ஹேதுபி!!''


சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற, சமஸ்கிருதத்தை நன்கறிந்த இனிய வலை நண்பர்கள் இதற்கான சரியான காழ்ப்புணர்வற்ற தமிழ் மொழிபெயர்ப்பினைத் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Related Posts with Thumbnails