அம்மாவுக்கு பிறந்தநாள்உன் முகம்
காண காத்திருந்த தருணம்
என் இரண்டாம் கருவறைக் காலம்.

ஒட்டாத எதிர் வாழ்முறையில்
நாமிருந்தாலும்
கறை களைந்து,
கனம் மறந்து
தாய்மையோடு
ஒவ்வொரு நொடியும்
சுமக்கிறாய் என்னை
மழலையாய்.

என் சொந்தப் பெயர்போலவே
இனிக்கிறது
என்னை நீ அழைக்கும்
உன் தெய்வத்தின் பெயரும்.

வானமாய் விரிந்திருக்கும்
உன் அன்பை
சொற்களில் சிறைபிடித்திடாமல்
சொல்கிறேன்.

அம்மா உனக்கு
பிராத்தனைகளோடு
என் பிறந்தநாள் வாழ்த்து

3 மறுமொழிகள்:

முத்துகுமரன் said...

முதல் வாழ்த்து நான்தான்.. அம்மா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

DJ said...

உங்கள் அம்மாவிற்கு என் அன்பும், வாழ்த்தும்.

பரஞ்சோதி said...

முதலில் அம்மாவுக்கு என் வாழ்த்துகள்.

அன்னையின் அன்பை இன்றும் நினைத்து பார்க்கிறேன். அன்னைக்கே தெரிந்திருந்தா தொலைபேசியில் அம்மாவிடம் பேசியிருப்பேன்.

ஓய், இனிமேல் பதிவு போட்டால் சொல்லுங்கய்யா, எதேச்சையாக எட்டி பார்த்தேன்.

Related Posts with Thumbnails