''பிண'' 'நாயக' முற்போக்கு கூட்டணி


இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்ப முயற்சி - கோவையில் உணர்வாளர்கள் வழிமறிப்புப் போராட்டம்

கோவை வழியாக கொச்சி துறைமுகத்திற்கு 82 லாரிகளில் ஆயுதங்களை இலங்கை இன அழிப்புப் போருக்கு இந்தியா அனுப்ப முயற்சி. கோவைக்கருகே பெரியார் திராவிடர் கழகத்தினர் வழிமறித்து போராட்டம். 5 லாரிகளிலிருந்த ஆயுதங்கள் சேதம் என்று நக்கீரனில் செய்தி வந்திருக்கிறது. கோவையில் இருக்கும் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது போராட்டம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தனர். பதிவர் ஓசை செல்லாவிடம் பேசிய போது போராட்டத்தை பதிவு செய்த சன் தொலைக்காட்சி செய்தியாளர் அவினாசி லிங்கம் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

தமிழர்களே நாம் உறக்கம் களைக்க வேண்டிய நேரமிது. நம் மண் வழியாகவே நம் தொப்புள் கொடி உறவுகளை கொல்ல அனுப்படும் ஆயுதங்களை முற்றுகையிட்டு தடுக்க வேண்டும்
Related Posts with Thumbnails