ஈழத்தமிழர்களால் மதியுரைஞர் என்றழைக்கப்பட்ட ஆண்டன் பாலசிங்கத்தின் உடனான அறிமுகம் பிரபாகரனுக்கு 1978வாக்கில் அமைந்தது. பத்திரிக்கையாளராக தன் வாழ்க்கையைத் துவங்கிய பாலசிங்கம் பிரிட்டிஷ் கவுன்சிலில் பணிபுரிந்து கொண்டிருந்தார். பல்வேறு ஆயுதக்குழுக்களை ஆராய்ந்த அவர் புலிகளுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தார். அவரது ஆயுதப்போராளிகளுக்கு அரசியல் பாடம் எடுக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.1978 கொழும்பு ரத்தினமால விமான நிலைய தாக்குதலுக்குப்பின் புலிகளின் இயக்கத்தில் மேலும் பலர் இணைந்து கொண்டனர் அவர்களில் முக்கியமானவர்கள் கிட்டு என்கிற கிருஷ்ணகுமார் மற்றும் மாத்தையா. இருவரும் புலிகளின் வெற்றிகளில் முக்கியத்துவம் வகித்தவர்கள். மாத்தையா துரோகியாக மாறிப்போனவர். குட்டிமணியும் தங்கத்துரையும் கடற்கரை வழியாக இந்தியா செல்ல முயன்ற போது இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டார்கள். குட்டிமணி தங்கத்துரையை கடற்பரப்பில் வந்து இறக்கிவிட்டுச் சென்றவர் சிறிசபாரத்தினம். அவர்களின் கைதுக்கு பிறகு டெலோவின் தலைமை பொறுப்பு சிறிசபாரத்தின் கைகளுக்கு வருகிறது. படகை ஏற்பாடு செய்தவர் பிரபாகரன். மிக ரகசியமாக திட்டமிடப்பட்ட இந்த பயணம் இலங்கை கடற்படைக்கு எவ்வாறு தெரிந்தது என்பது இன்று வரையிலும் மர்மமாகவே இருக்கிறது. குட்டிமணி தங்கத்துரை இயங்கியவரையில் புலிகள் அமைப்பிற்கும் டெலோ அமைப்பிற்கும் நெருக்கமான உறவு இருந்தது. உமாமகேசுவரனால் புலிகள் இயக்கத்தில் பிளவு உண்டான போது இந்தியாவில் பிரபாகரன் தங்கியிருந்த சமயத்தில் டெலோ உறுப்பினர்களுக்கு பிரபாகரன் பயிற்ச்சியும் அளித்திருக்கிறார். சிறிசபாரத்தினத்தின் தலைமையேற்ற பின் புலிகள் அமைப்பிற்கும் டெலோ அமைப்பிற்கும் இடையே இணக்கமான உறவுகள் இருந்ததாகத் செய்திகள் ஏதும் இல்லை. 1983 ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலையில் சிங்களக் கைதிகளால் கொடுரூமான முறையில் கொல்லப்பட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
1981 ஜூலை மாதத்தில் பிரபாகரன் மறுபடியும் தமிழகம் வந்தார். அப்போது ஆண்டன் பாலசிங்கமும், அடேல் பாலசிங்கமும் சென்னை வளசரவாக்கத்தில் மாடிக்குடியிருப்பில் தங்கியிருந்தனர். கீழ்மாடியில் போராளிகள் தங்கியிருந்தனர். போராளிகள் அடல் அம்மையாரை ஆண்ட்டி என்று அன்புடன் அழைத்தார்கள். அதே சமயத்தில் உமா மகேசுவரனும் சென்னையில் பெருஞ்சித்திரனார் இல்லத்தில் தங்கியிருந்தார். உமா மகேசுவருனும் பிரபாகரனும் பாண்டிபஜாரில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். பிரபாகரனும் ராகவனும் சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள். பிரபாகரனை கைது செய்த ஒரே போலிஸ்காரர் பாண்டிபஜார் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அவர்களே. சென்னையில் கைது செய்யப்பட்ட தகவல் ஜெயவர்த்தனே மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போனார். தமிழக காவல்துறைக்கு 10லட்சம் பரிசை அறிவித்தார். தமிழக அரசின் அழுத்தத்தாலும் எதிர்க்கட்சியாக இருந்த திமுக டெல்லியிலிருந்த காங்கிரசு அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாலும் அவர்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்க தமிழக காவல்துறை மறுத்துவிட்டது. பிரபாகரனை காக்கும் பொருட்டு தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் கலைஞரை சந்தித்தார். பழ.நெடுமாறனும் அதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டார். போராளிகளுக்குள் சண்டையிட்டுக்கொள்வது அவர்களுக்காக ஆதரவு திரட்டுபவர்களை சங்கடப்படுத்துகிறது என்று பிரபாகரனையும் கண்டித்தார். தொடர்ச்சியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அதில் போராளிகளை நாடு கடத்தக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி சென்னை நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. பிரபாகரன் மதுரையில் பழ.நெடுமாறன் வீட்டில் ஏறத்தாழ 7 மாதங்கள் தங்கியிருந்தார். அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே அங்கு தங்கியிருந்தார். பழ.நெடுமாறனுக்கும் பிரபாகரனுக்குமிடையேயான நெருக்கத்தை நாம் புரிந்து கொள்ளவும், ஈழப்போரின் இறுதியில் சிங்கள அரசால் பரப்புரை செய்வது போல் பிரபாகரன் இறக்கவில்லை என்று பழ.நெடுமாறன் சொல்வதன் நம்பகத்தன்மையும் புரிந்து கொள்ளலாம்.
உமா மகேசுவரனுக்கும் பிரபாகரனுக்கும் சமரசம் செய்ய அமிர்தலிங்கம் இலங்கையில் இருந்து வந்தார். பெருஞ்சித்தரனார் இல்லத்தில் சமரச பேச்சு நடந்தது. இறுதியில் புலிகள் அமைப்பும் உமா மகேசுவரனின் புளோட் அமைப்பும் ஒருவருக்கொருவர் அவர்களின் பாதையில் குறுக்கிடுவது இல்லை என்றும் உமா புலிகள் அமைப்பிற்கு உரிமை கோருவதில்லை என்றும் முடிவானது.
1981மே இறுதியில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓரிரு இடங்களையாவது கைப்பற்ற வேண்டும் என்று சிறில் மேத்யூ மற்றூம் காமினி திசநாயகவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். மே31ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடைபற்ற கலவரத்தை தொடர்ந்து கோவில்களுக்கும் யாழ்ப்பாண மார்க்கட்டுக்கும் தீவைத்தனர். அடுத்த நாள் மிகக்கோராமான இனவழிப்பு சம்பவம் நடந்தது. ஆசியாவின் மிகச் சிறந்த நூலகமான யாழ் நூலகம் ஜூன் 1ம் தேதி தீக்கிரையாக்கப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் பல அரிய நூல்களையும், தொகுப்புகளையும் உள்ளடக்கிய 97000 புத்தகங்களும் எண்ணிலடங்கா கைப்பிரதிகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த நூலக எரிப்பு மிகப்பெரிய கலாச்சார அழிப்பு நிகழ்ச்சியாக வரலாற்றின் பக்கங்களில் கருமையாக பதிவானது. நூலக எரிப்பைத் தொடர்ந்து திருவள்ளுவர், ஒளவையார், ஆறுமுகநாவலர் ஆகியரோது சிலைகளும் சிரச்சேதம் செய்யப்பட்டன. இதிலிருந்து இது ஒரு திட்டமிட்ட இன அடையாள அழிப்பாக புரிந்த கொள்ள இயலும். தமிழர் பண்பாட்டு சுவடுகளை அழிப்பதை ஒரு கொள்கையாகவே சிங்கள இனவெறி அரசு கொண்டிருந்தது. 1977ல் ஈழவேந்தனின் பிரத்யோக நூலகமும், 1983ல் சிவசிதம்பரத்தின் நூலகமும், 1984 பருத்தித்துறை ஹார்ட்லி பல்கலைக்கழகத்தின் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டது.
1982ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜெயவர்த்தனே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அந்த தேர்தலின் போது புலிகளின் தாக்குதலில் இருந்தும் அவர் தப்பியிருந்தார். தேர்தல் முடிந்த ஒருவாரத்தில் சாகவகச்சேரி காவல்நிலையம் சீலன் என்ற சார்லஸ் ஆண்டனி தலமையில் தாக்குதல் நடத்தப்படது. அந்தக்குழுவில் சங்கர், புலேந்திரன், மாத்தையா, சந்தோசம் உள்ளிட்ட எட்டுபேர் ஈடுபட்டிருந்தனர். இதில் காயம்பட்டிருந்த சீலனுக்கு யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் நித்தியானந்தனும் அவரது மனைவி நிர்மலாவும் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தனர். சீலன் சிகிச்சைக்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டார். அவர் பத்திரமாக சேர்ந்த செய்தியை சொல்லவந்த சங்கர் ராணுவத்தினரால் சுடப்பட்டார். மூன்று கிலோமீட்டர் காயத்துடன் ஓடிச்சென்று பாதுகாப்பான இடத்தில் தனது கூட்டாளியிடம் துப்பாக்கியை தந்துவிட்டு மூர்ச்சையானர் சங்கர். இறக்கும் போதும் கூட எதிரிகளிடத்தில் ஆயுதம் சிக்கக்கூடது என்பது புலிகளின் மந்திரம். மூர்ச்சையான சங்கரை படகில் போட்டுக்கொண்டு தமிழகம் கொண்டு சென்றனர். பயிற்சிமுகாமிலிருந்த பிரபாகரன் செய்தி கேட்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரின் மடியில் தம்பி தம்பி என்று சொல்லிக்கொண்டே உயிர்நீத்தான். அவரது நினைவுதினமே புலிகளினால் மாவீரர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சில ஆங்கில புரட்டு ஏடுகளும், சிங்களமும் சொல்லுவது போல் பிரபாகரனின் பிறந்த தினம் மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுவதில்லை. சங்கரின் மரண தினமே மாவீரர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
தந்தை செல்வா இருந்தவரை இலங்கையின் சுதந்திரதினமான பிப்ரவரி 4 துக்க நினைமாக கடைபிடிக்கப்பட்டது. அவரின் அரசியல் வாரிசாக இருந்த அமிர்தலிங்கம் செல்வாவின் மரணத்திற்கு அடுத்த ஆண்டில் அவ்வாறாக கடைபிடிக்கவில்லை.அதை விடுத்து அவர் செவ்வனே நாடாளுமன்ற பணிகள் ஆற்றிக்கொண்டிருந்தார். சற்றொப்ப தந்தை செல்வா கடைபிடித்த எல்லாவற்றையும் மறந்தவராக அரசியல் சந்தர்ப்பவாதியாக மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தவராக மாறத்தொடங்கியிருந்தார்.
1983 மார்ச் மாதம் அதுலத் முதலி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக ஜெயவர்த்தனே நியமித்தார். இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றீ இருந்த அவர் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை வளர்த்து இலங்கை ராணுவத்தை வளமக்கினார். அதே போல் யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகப்பு மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். அமிர்தலிங்கத்தை கலந்து கொள்ள வைப்பதற்காக அப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாகவும் அறிவித்தது. தேர்தலைப் புறக்கணிக்குமாறு போராளிக்குழுக்கள் குறிப்பாக புலிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் மிரட்டலுக்கு பணிந்து பெரும்பாலானோர் தேர்தலிலிருந்து விலகிக்கொண்டனர். மீறி நின்ற இரண்டு ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்கள் இருவர் புலிகளால் கொள்ளப்பட்டனர். போராளிக்குழுக்கள் இந்த தேர்தலை எதிர்ப்பதற்கு முக்கியமான காரணங்கள் உண்டு. கண்துடைப்புக்காக நடத்தப்படும் இந்தத் தேர்தல்களின் மூலம் சர்வதேச சமூகத்தில் தமிழர்களுக்கு நல்லாட்சி வழங்குவதாக காண்பித்து நிதியுதவி பெற்று அதன் மூலம் ராணுவத்தை பலமாக்கி தமிழ் மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதை எதிர்க்கவே இவ்வாறான அறைகூவல் விடப்பட்டது. அமிர்தலிங்கம் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை மாறாக தம்பிமாருக்கு சவால் விடுகிறேன், தேர்தல் புறக்கணிப்பை மக்களிடம் விடுவோம் அவர்கள் தீர்மானிக்கட்டும் என்று. மொத்தம் 2 சதவீத வாக்குகளே பதிவாகின. பருத்தித்துறையில் 0.75 சதவீத வாக்குகளே பதிவாகின. தந்தை செல்வாவின் சீடராக இருந்தாலும் மக்களின் உணர்வை புரிந்து கொள்ளத்தவறிய அமிர்தலிங்கம் மக்களால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டார்.
கறுப்பு ஜீலை - இனவெறிக் கோரத்தாண்டவம்
சீலன் என்கிற சார்லஸ் ஆண்டணியின் மரணம். சீலன் இலங்கை ராணுவ அதிகாரி உடையில் ஜூலை 6ம் தேதி காங்கேசன் துறை அரசு சிமெண்ட் தொழிற்சாலைக்குள் நுழைந்து எக்ஸ்புளோடர்களை எடுத்துச் சென்றார். அதிர்ச்சி அடைந்த சிங்கள ராணுவம் அதே பாணியில் அவரை பிடிக்க முயற்சி செய்தது. அப்போது நடைபெற்ற சண்டையில் சீலன் படுகாயமுற்றார் அவரோடு சென்ற அருணாவும் காயம்பட்டார். இனி தப்பிக்க இயலாது என்ற சூழலிலே அருணாவிடம் தன்னைச் சுடுமாறு ஆணை பிறப்பிக்கிறார். புலிகள் அமைப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சீலனை எப்படிச் சுடுவது என்ற யோசனையில் அருணா தயங்க ஆயூதம் எதிரியின் கையில் சிக்கிவிடக்கூடாது என்ற இயக்கத்தின் கொள்கைக்காக தன் உயிரை எடுக்கும் பொறுப்பை தன் தோழனுக்கே தந்தார். அருணாவும் அவரைச் சுட்டுவிட்டு தப்பிச்சென்றார். சீலன் மாவீரனுக்குரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
முப்பதே பேர் இருக்கும் இயக்கத்தில் அடுத்தடுத்து மூன்று முக்கியமானவர்களை இழந்ததற்கு பதிலடியாக சிங்கள அரசிற்கு பாடம் புகட்ட புலிகள் தீர்மானித்தனர். அதற்காக ஜூலை 23ம் தேதி மத்தகல் ராணுவமுகாமைச் சேர்ந்த ராணுவ ரோந்து வண்டிக்கு குறி வைக்கப்பட்டது, திருநெல்வேலி சந்திப்பில் நிலக்கண்ணிவெடி வைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் செல்லக்கிளி,பிரபாகரன், கிட்டு, விக்டர், புலேந்திரன், சந்தோசம், அப்பையா உட்பட 14பேர் ஈடுபட்டனர். அந்த தாக்குதலில் செல்லக்கிளி இறந்து போனார், இதே செல்லக்கிளிதான் பாஸ்தியம்பிள்ளையை கொன்று ஆயுதப்போராட்ட வரலாற்றில் முக்கியமான நிகழ்வை தொடங்கியிருந்தார். இதற்கான பதிலடியாக சிங்கள அரசு செய்ததே வரலாற்றின் கருப்புப்பக்கங்களில் ரத்தக்கறை படிந்த கறுப்பு ஜூலை கோரத்தாண்டவம்.
அந்த தாக்குதலில் இறந்து போன 13வீரர்களையும் சவப்பெட்டியில் எடுத்து வருவதற்கு பதிலாக ரத்தமமுறைந்த போன பாலிதீன் பைகளில் கட்டி எடுத்து வந்து அதிக என்ணிக்கியில் குவிந்திருந்த சிங்கள மக்களுக்கு காட்டி வெறியூட்டும் ஈனச் செயலை இலங்கை ராணுவம் செய்தது. மேலும் அவர்களது இறுதிச் சடங்கு கொழும்பில் நடைபெறாது என்று அவர்களின் இனவெறியை மேலும் தூண்டியது. செய்தி கேள்விப்பட்டதும் சிங்கள வெறியர்கள் கொழும்பு நகரம் முழுவதிலும் வன்முறையில் ஈடுபட்டனர், 209 இடங்களுக்கு தீவைப்பு 49 தமிழர்கள் படுகொலை என அந்த இனவழுப்பு வெறிச்செயல் தொடங்கியது. இதை எதிர்பார்த்து ஏராளாமன சிங்களர்களை ஜெயவர்த்தனே அரசு முன்கூட்டியே கொழும்புவிற்கு வரவைத்திருந்தது. இந்த வன்முறையின் ஊடாக அதிக பாதுகாப்புமிக்க சிறையான வெளிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 53தமிழ்க்கைதிகளை கொல்வதற்கும் திட்டமிடப்படு இருந்தது. அதற்காக ஜெயவர்த்தனே அரசு தேர்ந்தெடுத்திருந்தத முன்னாள் கைதி கோனவாலா. 14வயது பாலியியல் பலாத்காரம் செய்த குற்றத்தின் பேரில் சிறையிலடைக்கப்படிருந்த அவன் ஜெயவர்த்தனேயின் இரண்டாவது அதிபர் தேர்தல் வெற்றியின் பின்பு மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு இருந்தான். தங்கள் இனவெறியை தீர்த்துக்கொள்வதற்காக எவ்வளவு கீழ்த்தரமாகவும் நடந்து கொள்ள ஜெயவர்த்தனே தயங்கியது இல்லை. கோனாவாலா தலைமையில் 300-400வரையிலான கும்பல் சிறைக்குள் புகுந்தது. அவர்களுடன் அங்கிருந்து சிங்களக் கைதிகளும் இணைந்து கொண்டனர். மிகக்கொடுரூரமான ஆயுதங்களுடன் உள்நுழைந்த அந்த இனவெறிக்கும்பல் 35தமிழ் அரசியல் கைதிகளை கொன்று குவித்தது. சிறைச்சாலை வளாகத்திலிருந்த புத்தரின் சிலை முன் இந்த 35அரசியல் கைதிகளும் பிணங்களாக குவிக்கப்பட்டனர். கைது செய்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்தும் அவரது ஆண்குறியை அறுத்தும் வெறியாட்டம் நடத்தினர். தன் மரணத்திற்கு பிறகு தன் கண்கள் தானம் செய்யப்பட வேண்டும் அதனூடாக மலரும் தமிழீழத்தை காண வேண்டும் என்று சொல்லியிருந்த குட்டிமணியின் கண்கள் புத்தரின் முன்னால் தோண்டியெடுக்கப்படு அழிக்கப்பட்டது. கொடூரமாக கொல்லப்பட்ட 35 அரசியல் கைதிகளின் உடல்களை அவர்களின் உறவினரிடம் கொடுக்காமல் ஒட்டுமொத்தமாக பெட்ரோல் ஊற்றி எரித்தது ஜனநாயக ஜெயவர்த்தனே அரசு. சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடனே இச்சம்பவம் நடந்தது என்பதை BBC நிரூபித்திருந்தது.
இந்தக்கலவரம் பற்றிய செய்திகள் வெளிவரக்காரணமாக இருந்தவர் அனிதா பிரதாப் அவர்கள். கொழும்பில் நடந்த இவ்வன்முறை வெறியாட்டாம் தாய்த்தமிழகத்தை உணர்ச்சிப்பிழம்பாக்கியது. அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழகம் ஒட்டுமொத்தமாக எழுச்சியுற்றது. தமிழகக் உச்சக்கொதிநிலை அடைந்தது. இலங்கை உடனான ராஜாங்க உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். வன்முறை தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவை இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தொடர்பு கொண்டார், தொடர்ச்சியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் கொழும்பு சொன்றார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை பிரதமர் பிரேமதாசாவால் வெகுநேரம் காக்க வைக்கப்பட்டார். இவை எல்லாம் அப்போது இந்தியத்தூதுவராக இருந்த J.N.தீக்சத் அவர்களின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் பதினைந்து செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றூகையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெறுகிறது அதைப்பார்த்துக்கொண்டு இந்தியா சும்மா இராது என்று எச்சரித்தார். இந்திய சுதந்திர தின விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அமிர்தலிங்கம் அழைக்கப்பட்டிருந்தார். வழக்கமாக பிற நாட்டு அதிபர்களையோ. பிரதமர்களோயோ சிறப்பு அழைப்பாளார்களாக அழைக்கும் இந்தியா சின்னத்தீவின் எதிர்க்கட்சி தலைவரை அழைத்ததிலிருந்து இந்திராகாந்தியின் ஈடுபாடு புரிந்து கொள்ளத்தக்கது. அதே சமயம் அணிசேரா நாடக இருந்த இந்திய அமெரிக்க சோவியத் பனிப்போரில் சோவியத்தின் பக்கம் இருந்தது. ஆனால் ஜெயவர்த்தனா முழுதாக அமெரிக்க ஆதரவாளராக இருந்ததை உணர்ந்த இந்திரா தமிழ் போராளிக்குழுக்களை ஆதரிக்கவும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்தார். இந்திராவின் கண்களுக்கு இனப்படுகொலையாக தெரிந்தது அவர் பெயரால் இன்று கட்சி நடத்தும் சோனியாவிற்கும் அவரது காங்கிரசு அரசிற்கு மனிதாபிமான மீட்பு நடவடிக்கையாக தெரிந்தது வரலாற்றூ சோகம் மட்டுமல்ல இந்தியாவின் வரலாற்றுத்துரோகமும் கூட.
இனப்படுகொலையின் காரணமாக கடும் அழுத்தத்தைத் சந்தித்த ஜெயவர்த்தனா அதற்கு மாற்றாக ஒரு வேலை செய்தார். இந்து மத வளர்ச்சித்துறை என்று புதிதாக ஒரு துறையை உருவாக்கி ராசதுரை என்ற தமிழரை அதற்கு அமைச்சராக நியமித்தான். இந்தியாவில் இருக்கும் பாசிச வெறி அமைப்புகளான பாஜக, விசுவஹிந்த் பரிஷத் மற்றூம் காஞ்சி சங்கராச்சாரியாரையும் சந்திக்க வைத்தான். உலக இந்து சமயமாநாடு என்று கொழும்பில் ஏற்பாடு செய்ய இங்கிருக்கும் இந்துத்துவ பாசிச அமைப்புகள் அதில் கலந்து கொண்டன. இதை இங்கு குறிப்பிட முக்கியக்காரணம் இன்று இந்துத்துவ அமைப்புகள் போடும் ஈழ ஆதரவு முகமுடியை புரிந்திகொள்ளச்செய்திடவே. பாசிசவெறியர்களுக்கு மதம் ஒரு தடையே கிடையாது என்பதைத்தான் அங்கு நடைபெற்ற இந்து சமய மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிருக்கும் இந்துத்துவ அமைப்புகள் நிரூபித்தன. உலகமே ஜெயவர்த்தனாவிற்கு எதிராக குரல் எழுப்பிய தருணத்தில் இந்துத்துவவாதிகளின் இந்த சிங்கள ஆதரவு என்பதை தமிழுக்கு எதிரான அவர்களின் மரபார்ந்த எதிர்ப்பின் வெளிப்பாடேயாகும். ஈழத்தமிழர்களை அவர்களின் தமிழகத்து தமிழர்களின் நீட்சியாகவே பார்த்ததுமே இதன் காரணிகளாக இருக்கக்கூடும். அவர்களின் புராணா இதிகாசங்களின் படி ஈழத்தமிழர்கள் ராவண வம்சத்தினர். அதனாலேயே எந்த தயக்கமுமின்றி சிங்களரோடு சங்கமிக்க முடிகிறது. இதன் தொடர்ச்சியாக சிங்கள ரத்னா ராமையும் நாம் இணைத்துப்பார்க்கலாம். காஞ்சி சங்கராச்சாரி கைதுசெய்யப்பட்ட உடன் ஆந்திர எல்லைக்கு கார் எடுத்துக்கொண்டு சென்ற ராமிற்கான ஈழ எதிர்ப்பின் பின் இருக்கும் இந்துத்துவ கூறுகளும் புலப்படும்.
இந்திராவின் மரணம் – ராஜீவின் தவறான வெளியுறவுக்கொள்கை, அமைதிப்படை அக்கிரமங்கள், ராஜீவ் மரணம் புலிகளின் போர் வெற்றிகள், சறுக்கல்கள் அடுத்த பகுதியில்
0 மறுமொழிகள்:
Post a Comment