விஜயகாந்தின் காமடி டைம்

விஜயகாந்த் - பண்ருட்டி ராமச்சந்திரன்....

உங்களுக்கு என்ன அரசியல் பாரம்பர்யம் இருக்கிறது?

விஜயகாந்த்: நான் காமராஜரை பக்கத்தில் நின்று பார்த்திருக்கிறேன். எம்.ஜி. ஆருடன் கை குலுக்கி இருக்கிறேன்.....

பண்ருட்டி ராமச்சந்திரன்: எம்.ஜி. ஆருக்கு பிறகு அரசியலில் தெளிவுள்ள தலைவராக நான் விஜயகாந்தை பார்க்கிறேன்...

-------

கருத்து கந்தசாமி: அப்ப பண்ருட்டியார் அடுத்த தேர்தல்ல நிக்கப்போறது கீழ்ப்பாக்கம் தொகுதியோ!!!!

8 மறுமொழிகள்:

Santhosh said...

அண்ணே நானும் MGRஐ TVல பக்கத்துல போய் நின்னு பார்த்து இருக்கிறேன் எனக்கும் ஏதாவது கட்சி பதவி குடுத்திங்கனனா நல்லா இருக்கும்ல. நேர்ல பாத்த நீங்க முதல்வர் அகிவிடுங்க TVல பாத்த எனக்கு துணை முதல்வர் பதவி போதும்.

முத்துகுமரன் said...

நன்றி சந்தோஷ்..

நீங்க துணை முதலமைச்சராகும் போது நான் தான் நிதி மந்திரி........

வாசகன் said...

நான் சொல்லாத, ஆனாக்கா சொல்ல வர இருந்த கருத்த நான் சொன்னது போல நீங்க சொல்லீருக்கிறத நானும் மறுபடியும் சொல்ல விரும்புறேன்கறத சொல்லிக்கிறேனுங்க!
(ஹி, ஹி, கருத்துன்னா இப்படில்ல இருக்கணும்.)

முத்துகுமரன் said...

கந்தசாமி உங்களுக்கு அரசியல்ல நல்ல எதிர்காலம் இருக்குது.... இப்படிப்பட்ட ஆளத்தான் நம்ம மாத்துசக்தி தேடிக்கிட்டு இருக்காப்புள........

Dr.Srishiv said...

ஹா ஹா ஹா,
நான்கூட எங்க ஊருக்கு எம் ஜி ஆர் வந்தப்போ சந்தைமேட்டுல நின்னு அவருக்கு கை காட்டினேனே? அவரும் எனக்கு கை காட்டினாருங்க, எனக்கும் சீட்டு உண்டா? ;)
அன்புடன்
ஸ்ரீஷிவ்...:) அஸ்ஸாமிலிருந்து....

b said...

முத்துக்குமரன் பின்றீங்க.. காமெடி டைம் நன்றாகச் செல்கிறது

டி ராஜ்/ DRaj said...

முத்துகுமரன்: நல்ல நகைச்சுவை. நம்ம நாடு இப்படி ஆகிப்போச்சே. Anyway, MGR-க்கு கைகாட்டின ஒருத்தருக்கு நான் கை கொடுத்து இருக்கேன். எனக்கும் மந்திரி சபையில இடம் உண்டா?

Manmadan said...

தலைவர் விஜயகாந்திடம் நான் பேசியிருக்கிறேன் .. (துபாய் கலை நிகழ்ச்சிக்கு வந்தபோது..) பதவி வேண்டுவோர் எனக்கு மடல் இடவும்..ஹிஹி..

Related Posts with Thumbnails