விசிலடிச்சான் குஞ்சுகளும், கருத்து சுதந்திரமும்.........
விசிலடிச்சான் குஞ்சுகளும், கருத்து சுதந்திரமும்........
கருத்துச் சுதந்திரம் பற்றியும், அதன் தேவை பற்றியும் இன்று தமிழகம் தழுவிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது..இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தித் தந்த திருமதி குஷ்புசுந்தருக்கும், திருமதி சுகாசினிமணிரத்னம் அவர்களுக்கு நன்றிகள்...
முதலில் சில அடிப்படையான கூறுகளை பார்த்துவிடுவோம்.
இந்தியா பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு பொது தேசம். இங்கு காலசூழல்களிலும் சரி, சமூக அமைப்புகளிலும் சரிபன்முக கலாச்சாரத் தன்மை உடையது. விவசாயத்தை முதுகெலும்பாக நம்பியிருக்கிற நாடு. கிராமங்கள் நிறைந்த நாடு.
இந்தியாவின் முக்கியமான அங்கம் தமிழ்நாடு. - தமிழ் மொழி - தமிழர்கள்.
தமிழர்கள் ஒரு தனி இனம். தமிழர்களுக்கென தனி மொழி இருக்கிறது. தனிக் கலாச்சாரமிருக்கிறது. தமிழினம் மிகப்பெரிய தேசிய இனமாகஇருந்திருக்கிறது. உலகின் பல பகுதிகளிலும் இந்த இனம் விரவிக் கிடக்கிறது. இன்று இந்திய தேசிய கட்டமைப்புக்குள் இந்த இனத்தின் பெரும்பகுதி இருக்கிறது. மற்றும் சில பகுதிகள் பல் வேறு தேசங்களாக சிதறிக் கிடக்கின்றன.
சரி விசயத்திற்கு வருவோம்.
கருத்துச் சுதந்திரம். ஊரெங்கும் ஒரே கூப்பாடு. கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது, மக்கள் இதைத்தான் பேச வேண்டும் என்று ஒரு கும்பல் (வன்முறைக் கும்பல்) என்று திரிகிறது. அதனால் அவர்களை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று பெருமூளைக்காரர்கள் கூக்குரலிடுகின்றனர். குஷ்புவையும், சுகாசினியையும் அப்புறம் கவனித்து கொள்வோம். முதலில் இந்த பெருமூளைக்காரர்கள் கட்டமைக்க நினைக்கும் சமூகம்எத்தகைய ஆதிக்க உணர்வுடையது?.
பாட புத்தகங்களில் தான் தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஆறு கோடிக்கு மேல்.ஆனால் ஆறுகோடி பேரின் உணர்வுகளும் இதுதான் என்றுதீர்மானிக்க ஒரு கூட்டம். அந்த கூட்டத்தில் வீற்றிருப்பவர்கள் என்ன அரிதாரம் போட்டிருக்கிறார்களோ அதையே எல்லோருடய முகமென்று சொல்வதுதான் கருத்துச் சுதந்திரம்.
நவீன முன்னேற்றம் என்ற பெயரில் மறு காலணியாதிக்க அடிமைகளாக வாழ்ந்துவரும் இந்த மாநகர வாழ்க்கைதான் இந்த மாநிலத்தின்மொத்த வாழ்க்கை என்றெரு மாயபிம்பத்தை உண்டு பண்ணி, அதுதான் மறுமலர்ச்சியின் அடையாளம் என்றும் உயர்நிலை வாழ்வு என்றும் சித்தரிக்கும் முனைப்புடன் இயங்குகிறார்கள். ஆனால் மண்ணின் தன்மையோடு வாழும் வாழ்க்கை முறை என்பது பழமையானது, மூடத்தனமானதுநாகரீகமற்றது என்று நம்மண்ணின் அத்தனை சுகங்களையும் சுகித்துக்கொண்டு அறிவிப்பு செய்கிறார்கள். பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காமல்அவர்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் தங்கள் நாகரீக வெளிப்பாட்டின் உச்சம் என்பவர்கள்தான் கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று வீர முழக்கம் செய்கின்றனர்.
ஊடகங்கள் ( பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள்...) இந்த நாகரீக கணவான்களின் வலுவான ஆயுதம். அதைக்கொண்டு மக்களின் மீதுதிட்டமிட்டு கத்திகள் துப்பாக்கிகள் இன்றி காயங்கள் ஏற்படாத ஆரோக்கியமான வன்முறைகளை தொடுக்கிறார்கள். சமுதாய சீரழிவுகளை அரங்கேற்றி அதற்கொரு புனிதப்பூச்சளித்து எல்லோரும் சீரழியலாம் வாருங்கள் என்ற அழைப்புகள். எடுத்துகாட்டுகள் சொல்ல எத்தனையோ இருக்கிறது. தற்போது எல்லோராலும் பேசப்படும் பிரச்சனைகளிலிருந்து பார்ப்போம்.
இந்தியா டுடே வெளியிட்ட கருத்து கணிப்பு....
இந்த இதழ்களின் கருத்துகணிப்புகளின் நோக்கம் என்ன? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதா? எத்தகையான விழிப்புணர்வு அது? அடிப்படை நேர்மைகூட இல்லாமல் ஒரு குறுகிய எண்ணிக்கைகயிலான பெண்களிடம் கருத்து கேட்டு? அதற்கு மெருகேற்றும் வகையில் அழகு பெண்களின் அவையங்கள் தெரியுமாதிரியான வண்ணப்புகைப்படங்கள் இட்டு இது தான் தமிழ்பெண்களின் எண்ணங்கள் என்றுசொல்வது எத்தனை அயோக்கியதனம். கருத்து கணிப்பில் கலந்து கொண்ட பெண்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எந்த வகையில் அவர்கள் அனைத்து பெண்களின் சார்பாகவும் பேசும் பிரதிநிதித்துவம் பெற்று இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.ஏதோ நகரங்களில் வசிக்கும்பெண்கள்தான் பெண்கள் அவர்களுக்கு இருக்கிற சிந்தனை, அவர்களிக்கிருக்கிற தேவை, அவர்களிக்கிருக்கிற பிரச்சனைகள்தான்எல்லா பெண்களுக்குமானது என்று எந்த அளவீடுகளீல் பொருத்துகிறார்கள்.... எல்லாவற்றிற்கும் பதில்- சபலப்புத்தி கொண்ட வாசகர்களின்உணர்ச்சி நரம்புகளை தூண்டிவிட்டு பணம் பண்ணிய ஒரு வக்கிர வியாபார சாணக்கியத்தனம்.
அதிலும் இந்த பத்திரிக்கைகளின் நோக்கம் எந்த அளவில் இருக்கிறது? மாறிவரும் சூழல்களுக்கேற்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்என்ற ஒற்றைச் சிந்தனையிலையிலே பத்திரிக்கை என்னும் மிகப்பெரிய சக்தியை மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தாமல் மலினப்படுத்தி மாசுபடுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பெண்கள் என்றால் கண்ணுக்கு தெரிபவர்கள் நடிகைகள். நடிகையின் நகவிரல் நீளம்எவ்வளவு என்பதிலிருந்து இடுப்பில் எத்தனை கிராம் சதை கூடியிருக்கிறது என்பதுதான் அத்தியாவசியமாகிறது. ஒரு சதவீதத்திற்கும் குறைவான இந்த நடிகைகளை ஒட்டு மொத்த பெண்களின் பிரதிநிதிகளாக்கும் சிந்தனை வன்முறைகளை அரங்கேற்றுகிறார்கள். அது எல்லாம் ஆரோக்கியமான வன்முறைகள்தொலைக்காட்சிகள் நாங்கள் பத்திரிக்கைகளுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டி ஒரு போலி வாழ்வியல் முறையைமக்கள் மீது திணிக்கிறது. இவை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். இது குறித்தான சமூக விழிப்புணர்வு வரவேண்டும்.
பெண்ணியவாதிகள் எத்தனை பேர் இந்த ஆரோக்கிய வன்முறைகளை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
பெண்ணியம் என்பது சமூகத்தில் பெண்களுக்கு உரிய அனைத்து உரிமைகளை வழங்குவதாகவும். தன் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய உரிமை உடையவளாகவுனம்அவர்களின் சுயமரியாதை காக்கப்படுவதாகவும் யாரையும் எதிர்பார்த்து வாழ்ந்திடா பொருளாதார சுயசார்பை அடைவததாகவும், தனக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடக்கூடியதுணிவைத் தரக்கூடியதாக அமைய வேண்டுமே தவிர ஒழுக்கமின்மைதான் சுதந்திரம் என்பது அல்ல. இதைச் சொல்பவர்களை ஆணாதிக்கவாதிகள்என்று தூற்றுவது அறிவார்ந்த செயலாகாது.
இந்த போலி பெண்ணியவாதிகள் முன் வைக்கும் தத்துவம் அடிமை மாற்றமாக இருக்குமே தவிர உண்மையான விடுதலையாக இருக்காது.
பாமர மக்கள்தான் இந்த திரை மாயையில் விசிலடிச்சான் குஞ்சுகளாக இருக்கிறார்கள் என்று நினைத்தை பொய்த்து காட்டி இருக்கிறார்கள் இன்றைய நம் முற்போக்கு சிந்தனைச் சிங்கங்கள். அதிலும் இந்த ரசிக போதையின் உச்சத்தில் அவர்களின் சிந்தனைகள் மழுங்கிப் போய் ஒழுக்க கேட்டிற்கு வால்பிடிக்கும் அவல நிலைக்கு தள்ளிவிட்டது. குஷ்பு இந்தியா டுடேவில் அளித்த பேட்டி- பாதுகாப்பான உடலுறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.எய்ட்ஸ் போன்ற நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள அவசியமான ஒன்று என்று. ஆனால் ஒன்றை மறந்து விட்டார் ஒழுக்கம்தான் எய்ட்ஸ் வராமல் காக்கும் நிரந்திரத் தீர்வென்பதை. அதை ஏன் வலியுறுத்தவில்லை . அந்த அளவோடு அவர் நிறுத்தி இருக்கலாம்.
ஆனால் தமிழர்கள் எத்தனை பேர் திருமணத்திற்குமுன் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்று கேட்டது உண்மையிலேயே ஒழுக்கமாக வாழும் தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் இல்லையா?அவர் முன் வைத்த கருத்துகளில் என்ன வகையான பெண் சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான கருத்துகள் என்ன இருக்கிறதுதப்பு செய்யுங்கள், தப்பாக இல்லாமல் சரியாக தப்பு செய்யுங்கள். விழிப்புணர்வு என்பது என்ன தவறை எப்படிச் சரியாக செய்வது என்பதா?
தமிழ்பெண்களை கேவலப்படுத்திய குஷ்புவை காப்பாற்ற இந்த வி.கு க்கள் சரணடைந்தது தந்தை பெரியாரிடம்......
இத்தனை நாட்கள் வெறுத்தொதுக்கப்பட்ட பெரியார் அவர்களை காக்க வந்த ஆபந்பாந்தனாக, கடவுள் அவதாரமாகவே தெரிகிறார். எந்த இடத்திலும் ஒழுங்கீனத்தை அணு அளவும் அங்கீகரிக்காத அவரின் சிந்தனைகளை கொச்சைப்படுத்தி, ஒழுங்கீனத்தை வலியுறித்ததாக திரித்து சொல்லும் போதுதான் அவர்களின் குறுக்கு புத்தி வெளிப்பட்டு விட்டது. இது தமிழர்களுக்கெதிராகான ஒரு போரை தமிழர்களை கொண்டே, தமிழகத்திற்குள் நடத்தத்துடிக்கும் அரிசியல் அரிப்புதான் என்று. அதை அறியாத சில பெரியாரிய சிந்தனையாளர்கள்சிலரும் விட்டில் பூச்சிகளானதுதான் வருத்தத்திற்குரியது.
இப்போது கருத்து சுதந்திரத்தை தூக்கி நிறுத்த கனிமொழி மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆரம்பத்திருக்கும் இயக்கம் கருத்து.... அனைவரும் தயக்கமின்றிகருத்துகளை வெளியிட தங்களது இணையதளம் வாய்ப்பாக இருக்கும் என்றதொரு அறிவிப்பு வேறு. படிக்கும் போது எழும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களின் புரிதல்கள் ஆரம்ப நிலையிலே தெளிவில்லாத ஒன்றாக இருக்கிறது. குஷ்பு பிரச்சனையையும்சுகாசினியின் பிரச்சனையையும் ஒட்டு மொத்த பெண்ணினத்தின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்கிறார் கனிமொழி. கனிமொழியை பொறுத்தவரைகுஷ்புவும், சுகாசினியும்தான் பெண்ணினம். என்ன ஒரு போலித்தனம். அடித்தட்டு மக்களுக்களை உணர்ந்து கொள்ளாத அல்லது அவர்களின் வாழ்வியலையோபிரச்சனைகளுக்காகவோ குரல் கொடுக்காத இவர் ஒழுங்கினத்தை முன்னிறித்தியவர்களுக்காக கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்.இது அவரது ஆதிக்க மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.கார்த்திக் சிதம்பரம்.... கருத்து சுதந்திரம் பற்றி பேச இவருக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் தமிழர்களின் சார்பாக பேசுகிறேன்என்று சொன்னால் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. தமிழ்வழிக் கல்வி தொடர்பான வழக்கில் இவரது தாயார் வழக்கறிஞர் நளினி சிதம்பரம்நீதி மன்றத்திலே ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் எனது குழந்தைக்கு தாய்மொழி தமிழ் கிடையாது என்று. அவரது தாய்மொழி தமிழ் இல்லைஎன்ற பின்பு அவர் எந்த வகையில் தமிழர் ஆக முடியும். இவர் சொல்கிறார் காலத்திற்கேற்ற கலாச்சாரம் மாற வேண்டாமா? தமிழ் கலாச்சாரத்தில் ஜீன்ஸ் போடும் பழக்கம் இருந்ததா, பீசா சாப்பிட்டமா?உடைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால் ஒழுக்க அளவீடுகளிலும் மாற்றம் வேண்டும் என்பதா? எதோடு எதைப் பொறுத்துவது.....
தமிழ் மக்கள் கருத்து சுதந்திரத்திற்காக நிறுவியிருக்கிற இவர்களின் கருத்து இயக்கத்தின் இணைய தளம் தணிக்கைக்குட்பட்டது. குறிப்பாக எவரும் தமிழில் கருத்து சொல்ல முடியாது. அவர்கள் பேசுகிறார்கள் கருத்துச் சுதந்திரம் பற்றி...
தொடரும்........
9 மறுமொழிகள்:
எங்கே உங்கள் கட்டுரை? இன்னும் வரலை?
இன்னைக்கு மாலைக்குள் போட்டு விடுகிறேன்.... நேற்று நான் பதியும் போது மணி நள்ளிரவு 1. இன்று மதியத்திற்கு மேல் போட்டு விடுகிறேன்...
உங்கள் எதிர்பார்ப்பு எனக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி குமரன்
விசிலடிச்சான் குஞ்சுகளும், கருத்து சுதந்திரமும்... என்ற தங்களது பதிவினை எதிர்பார்த்து நானும்... தங்களது எழுத்து நடை - கருத்துக்கள் செறிவாக அமைந்துள்ளது. வரவேற்கிறேன்.
கே. செல்வப்பெருமாள்
நன்றி செல்வ பெருமாள். கட்டுரை தயாராகிக்கொண்டிருக்கிறது. முடித்தவுடன் பதிக்கிறேன். கொஞ்ச நேரம் ஆயிட்டா கோச்சுக்காதீங்கப்பா
அண்ணே.. இன்னைக்கு தேதி 25! :)
சரிசரி... எப்பமுடியுதோ அப்ப போடுங்க உங்கபதிவை.. :)
பன்முகப்பட்ட இந்திய நாட்டில் - தமிழகத்திலும் கூட (தமிழர்கள், தெலுங்குர், மலையாளிகள், சௌராஷ்டிரர்கள், பர்மா தமிழர்....) 6 கோடி மக்கள் மீது எவ்வாகை தங்களது கருத்தை திணிக்கிறார்கள் என்பது சிந்தனைக்குரியது.
குஷ்பு - சுகாசினியின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்ப்பெண்களின் கருத்தாக சித்தரிப்பதும் நகைப்புக்குரியதே! இது பியூர்லி அரசியல் (சுயநல) என்பதைத்தவிர வேறுறொன்றும் இல்லை!
இந்தியா டுடே, தமிழ் முரசு, சன் டி.வி. இவர்களுக்கு பாலியல் சார்ந்த கருத்துக்களையும், படங்களையும் மக்கள் மீது திணித்து விட்ட, கலாச்சாரம் கெட்டு விட்டது என்று கூப்பாடு போடுவதும், “எந்தக் கருத்திற்கும் வலுவான சரியான கருத்து முன்வைக்கப்படாததும் - வைக்கப்படக்கூடிய கருத்துக்கள் மிகவும் வலுவிழந்த முனைகளில் இருந்து வருவதாலும், இவர்களின் ஆட்டங்கள் தொடர்கிறது...
“கருத்து” இணையதளத்தின் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது சம்மட்டியடி!
புதிய அவதாரம் எடுத்துள்ளார்கள் ராமதாஸூம், திருமாவளவனும், நெடுமாறனும்.... “எது பண்பாடு என்ற கேள்வி எழுப்பி, அதற்கான இயக்கத்தை துவக்கப் போகிறார்களாம்”. உலகமயமாக்கல் என்ற பெயரில் அந்நிய நிறுவனங்கள் நமது உணவு முறையையும், (பெப்சி - கோக், பீஸா, பர்கர்°...) வாழ்க்கை முறையும், நமது மரபார்ந்த விவசாயத்தை சூறையாடி வருவதையும் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாதவர்கள்... தமிழ் பண்பாட்டை காக்கப் போகிறார்களா?
தங்களது முடிவை எதிர்பார்த்து... ஆவலுடன்...
கே. செல்வப்பெருமாள்
செல்வ பெருமாள் மரபு சார்ந்த விசயங்களை மீட்டெடுப்பதற்கு தமிழ் பண்பாடு, தமிழர் சார்ந்த விழிப்புணர்வு எவ்வளவு இன்றியமையாதது என்பதை தாங்கள் உணரவில்லையா?
பழ.நெடுமாறன் போன்றவர்கள் குரல்களெல்லாம் கவனம் பெறமல் இருப்பதால்தான் அவர்கள் எல்லாம் அது குறித்து போராடது போன்றதொரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது....
இதே நிலைதான் ராமதாசு மற்றும் திருமாவளவனுக்கும், தங்கள் இனத்துக்காக போராடிய போது ஜாதி அரசியல் பண்ணுகிறார்கள் என்று கூப்பாடு போட்டதும், சாதியம் தாண்டி தமிழ் என்று பொது நிலையில் இயங்கும் போது உங்கள் சமுதாயத்திற்காக போராடுங்கள் என்று பரிந்து பேசுவதும்....
அவர்கள் ஒன்றை எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தமிழர் விடுதலையில், முன்னேற்றத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையும் முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது என்பதை. இதுவும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியே
அனைவருமே ஒரு குழம்பிய நிலையில் இருக்கின்றனர். 5 ஸ்டார் ஹோட்டல் சூழலில் இருந்து கொண்டு பதிலளிப்பதும் , அதே கேள்விக்கு ஒரு ஆச்சாரமான குடும்ப சூழலில் இருந்து கொண்டு பதிலளிப்பதும் மாறுபடும்............ சீக்கிரம் அனைவரும் தெளிவு பெற்று இனி குழம்ப மாட்டோம்.குழப்ப மாட்டோம்.. எங்கள் வேலை என்னவோ அதை மட்டுமே செய்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்வார்களாக...........
இன்றுதான் இந்த பதிவை படித்தேன். அருமை.நண்பரே வாழ்த்துக்கள்.
Post a Comment