உங்கள் மனைவிக்கு நீங்கள் எத்தனையாவது கணவன்

நமக்கும் கல்யாண வயசு வந்திடுச்சில.....

எல்லோரையும் போல நமக்கும் கல்யாண கனவுகள் வர ஆரம்பிசிடுச்சுபா....

கனவு மட்டும் கண்டா போதுமா?

நனவாக்க வேண்டாமா?

என்ன செய்யறது.கனவு நிறைவேற மொதல்ல பொண்ணு தேவை,

அதிலயும் நமக்கேத்த பொண்ணு வேணும். நல்ல பாசமான பொண்ணா, ஒழுக்கமான பொண்ணா, தைரியமான பொண்ணா வேணும். சரி அத வீட்ல பார்த்துகுவாங்க. முகவரி வேண்டுபவர் தனிமடலில் தொடர்பு கொள்க:-)

இங்க ஒன்னு சொல்லிக்கணும்.

ஒழுக்கமான பொண்ணு வேணும்ன்னு சொல்ற தகுதி எனக்கு முழுசா இருக்குதுபா.!!

அப்புறம் சின்ன வயசில இருந்தே நாம ரசிக்கிறது கல்யாணங்களை.
அங்க நடக்கிற சுவரஸ்யமான விசயங்கள் மீது எப்போதும் ஒருவித கிறக்கமே உண்டு.பருவம் வந்த நாளில் இருந்து கலந்து கொண்ட திருமணங்களின் போது என்னை கதாநாயகனாக்கி மனசுக்குள் தனி ட்ராக் ஒன்று ஓடும். பயப்பிடாதீங்க பொன்ணு வேறதானுங்க.....

அந்த சின்ன சின்ன விளையாட்டுகள் எல்லாம் மிக மிக பிடித்தமானது. மோதிரம் எடுப்பது,எடுக்கும் சாக்கில் கையை கிள்ளுவது அல்லது பிடித்தவைத்து கொள்வது, தேங்காய் உருட்டி விடுவது, தலையில் அப்பளம் அடிப்பது, தொட்டில் கட்டி தாலாட்டு பாடுவது என நினைக்கும் போதே உற்சாகத்தை ஊட்டி விடுகிறது.சரி

அப்டியே இன்னும் கொஞ்சம் டீப்பா நம்ம கல்யாண சங்கதிகளை தெரிஞ்சிக்க பயணிச்சபோது(இப்டி எல்லாம் எழுதாட்டி நான் எப்டி இலக்கியவாதின்னு சொல்லிக்கிறது),

விழுந்தது பாரு ஒரு அணுகுண்டு.....

''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''

இந்த வேத வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் என்றால் முதலில் ஸோமன் உன்னை அடைந்தான், இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான், மோன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மனுஷ்ய வர்க்கத்தைச் சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன்

''அட,

எவ்ள தைர்யம் இருந்தா என் வீட்டுக்காரிக்கு முதல் அவன் அடுத்து இவன் அதுக்கடுத்து இவன் அப்பாலதான் நீன்னு என்கிட்டயே சொல்லுவான்.

ஆறாம் அறிவு கேள்வி கேட்குதுபா? என்னத்த சொல்றததுக்கு....


எத்தகைய ஒரு இழிவான செயலை, பெண்களுக்கு எதிரான வன்முறையை, சடங்கு என்ற பெயரில் அரங்கேற்றி இருப்பார்கள்(க்கிறார்கள்). அதையும் ஆட்டுமந்தை கூட்டம் போல கேட்டு வந்திருக்கிறார்களே மறத்தமிழர்கள்???

பெண்ணை, முழுமையாக கேவலப்படுத்தும் இந்த மாதிரியான மந்திரங்களின் மீதுதான் குடும்ப வாழ்வை கட்டி எழுப்ப வேண்டுமா? மக்களின் இறை நம்பிக்கையை அவர்களை இழிவு செய்வதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தியஇந்த நம்பிக்கை துரோகம் எத்தனை குரூரமானது. ரத்தம் வர வைப்பது மட்டும் வன்முறை அல்ல. இது போன்ற மரபுகளின் வேர்களையே அழிக்கும் தீவிரவாதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

அதன் ஒரு முயற்சியாக

என் திருமணத்தை செய்யப்போகிறேன் ( சில ஆண்டுகள் கழித்து)

இது போன்ற மந்திர மோசடிகள் இன்றி,

தன்னை இழிவு படுத்தும் சடங்குகளை ஏற்க மறுக்கும் தெளிவை பெற்ற ஒரு பெண்ணை என் இணையாக ஏற்று,

பி.கு: மந்திரத்திற்கு விளக்கமளித்து என்னை தெளிவடையச் செய்த பெரியாவாளுக்கு அடியேனின் பாதகோடி நம்ஸ்காரங்கள்.

நன்றி:( சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல்: இரண்டாம் பகுதி, பக்கம் 875)..

இந்த களேபரத்தில ஒன்னை மறந்துட்டேன் -

அதாம்பா

புத்தாண்டு வாழ்த்துகள்

56 மறுமொழிகள்:

சீமாச்சு.. said...

Hum..Hum..
indha aalukku ippothaikku ponnu kedaikkara maathiri theriyalai.

Anyway, best of luck.
Aaravathu arivai use pannarathu thevai thaan. Idhu konjam romba adhikamaath theriyarathu. Pennai "aaluvathu enpathu" neengal ninaikkira samacharam mattum illai.

Manufacturing Factory, QA, Dealer, appuram manager ellam thaandi vandha car-aith thaan pudhu car-nu sollurome.

Muthukumaran, mudhalin Ellathaiyum aaraavathu arivaala kelvi kekura pakkuvam ungalukkun vandhu vittathaa ninachukkaatheenga. Neengal valara vendiyathu innum irukkirathu..

Keyboard kaiyil irunthaal edhu venumaanaalum ezhuthalaam enbathu thaan abatham.
best of luck.

இளங்கோ-டிசே said...

புத்தாண்டு வாழ்த்து.
உங்கள் கனவு நனவாகட்டும்!

குமரன் (Kumaran) said...

முத்துகுமரன். அப்ப இந்த ஸோமன், கந்தர்வன், அக்னி என்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்கிறீர்களா? அப்படின்னா நீங்க இவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை இவர்களால் அடையப்படும் எந்தப் பெண்ணாவது பார்த்திருக்கிறார்களா?

இந்த மந்திரத்துக்கு நீங்கள் சொல்வது தான் நேரடியான பொருளா? அப்படியென்றால் இந்த மந்திரம் சொல்லி மணக்கப்பட்ட பெண்கள் எல்லாம் இந்த மூவரிடமும் படுத்தப் பின் தான் நம் தந்தையர்களை மணந்தார்களா? அப்படி இல்லையென்றால் இதில் என்ன இழிவான செயல் இருக்கிறது? இதில் என்ன வன்முறை இருக்கிறது?

இப்படி தப்பான அர்த்தம் கொண்டு விதண்டாவாதம் செய்வதாய் இருந்தால் எத்தனையோ இருக்கிறது செய்வதற்கு. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாரும் ஒரு கலர் கண்ணாடி போட்டுக் கொண்டு தானே உலகத்தைப் பார்க்கிறோம்.

ஏன் தலைப்பை இப்படி மாற்றி வைத்துப் பாருங்களேன். 'உங்கள் அம்மாவுக்கு உங்கள் அப்பா எத்தனையாவது மனைவி?'

சிவா said...
This comment has been removed by a blog administrator.
முத்துகுமரன் said...

//நீங்கள் சொல்வது //

மன்னிக்க வேண்டும் குமரன், அந்த விளக்கம் நான் சொன்னது அல்ல. காஞ்சி பெரியவர் சொன்னது. இங்கு காஞ்சி பெரியவரின் ஆளுமையையோ, தெய்வீகத் தன்மையையோ, ஞானத்தையோ கேள்வி கேட்பது என் நோக்கமல்ல. புத்திசாலிதனமாக நடப்பதாய் நினைத்து கொண்டு காஞ்சி பெரியவரைப் பற்றியான விவாதமாய் திசை திருப்ப வேண்டாம்

நான் போட்ட பதிவை சரியாகக் கூட படித்து பார்க்காமல் பின்னூட்டமிட்டு விட்டீர்கள், மீண்டுமொருமுறை படித்து பாருங்கள். அதன் பிறகும் உங்கள் வாதம் சரியானது என்று கருதினால் நிச்சயம் பதில் சொல்வேன்...

இங்கு நான் வைத்த வாதம் பெண்களை இந்த மந்திரம் இழிவு படுத்துகிறதா இல்லையா?
அது நமக்கு தேவையா?இல்லையா

இதைப் பற்றி மட்டும் விவாதிக்கலாம்.

கவலை வேண்டாம் உங்களின் இறுதி கேள்விக்கும் பதில் உண்டு.

முத்துகுமரன் said...

அண்ணே சீமாச்சு முதல்ல புத்தாண்டு வாழ்த்துகள்...

நாங்கள் பெண்களை மனிதர்களாக பாவிப்போம். அது எங்கள் மரபு, பண்பாடு.எங்கள் வீட்டு பெண்களை அவள் தாய் தந்தையர் உண்டாக்குகின்றர்.


மேலதிகரிகளும், மெக்கானிக்குகளும் நிறைந்த கார் தொழிற்சாலையில் அல்ல.உன் பண்பாட்டிற்கும் என் பண்பாட்டிற்கும் வித்தியாசம் உண்டு.


மத்தபடி தமிழ்நாட்டில் சுயபுத்தியும், சுய மரியாதையும் உடைய பெண்கள் உண்டு.அதனால் என் திருமணம் குறித்து நீங்கள் அதிகம் கவலைப் பட வேண்டாம்


அந்த மாதிரி பெண்கள் உன் கண்ணில் தட்டுபட மாட்டார்கள்.குஷ்புக்கள் வேண்டுமானால் தட்டுபடலாம்

குமரன் (Kumaran) said...

நண்பரே. நான் சரியாகத் தான் படித்திருக்கிறேன். விளக்கமாய் இன்னும் கொஞ்சம் நேரத்தில் பின்னூட்டம் இடுகிறேன்.

முத்துகுமரன் said...

நன்றி டிசே

புத்தாண்டு வாழ்த்துகள்.

கவிஞரிடம் இருந்து சற்று விரிவான பார்வையை எதிர்பார்த்தேன்.

முத்துகுமரன் said...

நன்றி சிவா.

என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் நன்றி.

பாராட்டுகளை, அங்கீகரிப்புகளையோ எதிர்பார்த்து எழுதுவதில்லை. போலியான வெளிச்சப் புகழுக்காக மயங்குவதும் கிடையாது.

இது கிண்டல் பதிவு அல்ல. ஆதங்கப் பதிவு. விவரமறிந்த நாமே இது பற்றி பேசாமல் ஒதுங்கி கொண்டால் யார் பேசுவது.

வாழ்க்கைதுணை -மனைவி என்பது உயிருக்கு அடுத்த நிலை உறவு. அத்தகைய உறவை ஏற்றுக் கொள்ளும் பொழுது இத்தகைய மந்திரம் தேவையா?

நான் புரட்சி செய்யும் நோக்கத்தில் எழுதியாதாக சொன்னீர்கள். அந்த முடிவு என்னளவில் என் வாழ்க்கைத் துணைக்கு நான் கொடுக்கும் மரியாதை. அவ்வளவுதான்

இந்த மந்திரத்தின் பொருள் புரிந்த ஆண்மகன் யாரும் ஒப்ப மாட்டான். அதுதான் அந்த பதிவின் சாரம்சம்.

எல்லோருக்கும் உறைக்க வேண்டும் என்பதாலேயே கனத்த மனதுடன், உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட தலைப்பு.

உங்கள் பின்னூட்டத்தின் தொனி புரிகிறது.

உங்கள் அக்கறைக்கும், நம்பிக்கைக்கும் என்றென்றூம் நன்றி உடையவனாக இருப்பேன்

Thangamani said...

இந்த மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறவைகளில் பல பழமையானவை. சில குழுக்களில் பெண்கள் திருமணம் ஆகும் முன் குழுத்தலைவர் வீட்டில் அல்லது குழுவின் குரு வீட்டில் முதல் இரவைக் கழித்துவிட்டு பிறகு திருமணம் நடக்கும்.

அல்லது தேவர்களை தங்கள் மேல் ஏற்றிக்கொள்ளும் பூசாரிகளும் (அக்காலத்தில்)உண்டு.

சில கற்பிதங்கள், கற்பனைகள், உருவகங்கள் கூட இருக்கும்.
எப்படி இருப்பினும் இவைகளை இன்றைய புரிதலில், பழக்கத்தில் அர்த்தப்படுத்திக்கொள்வதும், இன்றைய சடங்காகக் கொள்வது பொருத்தமற்றதுதான்.


இன்னும் எல்லா மந்திரங்களின் பொருளையும் படித்துப்பாருங்கள்!

rv said...

முத்துக்குமரன்,
அவசரப்படுகிறீர்கள் என்று மட்டுந்தான் என்னால் சொல்ல முடியும்.

குரான், பத்து கட்டளைகள் போல (நான் மதத்துவேஷம் பிடித்தவன் என்று பின்னூட்டங்கள் வருமுன்)இந்துமதத்தில் இதைத்தான் செய்ய வேண்டும் என்று எந்த உபநிஷத்திலும் சொல்லவில்லை (ஆறு மதங்களை உள்ளடக்கியது என்பதே இதற்கு சாட்சி). மேலும் காலத்திற்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளலாம் என்று மனுமுதல் பலரும் சொல்லியிருக்கின்றனர்.

ஐநூறு வருடங்களுக்கு முன் உலகம் தட்டையெனக்கூறி கலீலியோவை எரித்தார்கள் என்று கூறுவது போன்றது இது. ஆம், எரித்தார்கள். ஆனால், சிவா சொன்னது போல நாம் இருக்கும் காலகட்டம் அன்றையது அன்று.

//இன்னும் எல்லா மந்திரங்களின் பொருளையும் படித்துப்பாருங்கள்! //
தங்கமணி என்ன பொருளில் சொல்லியிருந்தாலும் அதையே மீண்டும் வழிமொழிகிறேன்.

சங்கராச்சியாரையும் இந்துமதத்தையும் பார்த்து காறித்துப்ப மற்றுமொரு சந்தர்ப்பம் என்ற வகையில் தாங்கள் பதிவு செய்திருந்தால், என்னுடைய இந்த பின்னூட்டத்தை தயவு செய்து நீக்குமாறு வேண்டுகிறேன்.

குமரன் (Kumaran) said...

நண்பரே முத்துகுமரன். இப்போது என் பின்னூட்டத்தை மறுமுறை படித்தேன்.

//ஏன் தலைப்பை இப்படி மாற்றி வைத்துப் பாருங்களேன். 'உங்கள் அம்மாவுக்கு உங்கள் அப்பா எத்தனையாவது மனைவி?'
//

இது முத்துகுமரன் என்ற தனிமனிதரைப் பற்றிய தாக்குதல் போலும் தோன்றுகிறது. அப்படி எழுதுவது என் நோக்கம் அல்ல. அப்படி நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் மன்னித்துவிடுங்கள்.

இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்தவுடன் ஆஹா, முத்துகுமரனா இப்படி பரபரப்பூட்டும் படி தலைப்பு வைத்திருக்கிறார் என்று தோன்றித் தான் உள்ளே வந்து பார்த்தேன். அதனால் தலைப்பை 'உங்கள் மனைவிக்கு நீங்கள் எத்தனையாவது கணவன்' என்பதற்குப் பதிலாக 'உங்கள் அம்மாவுக்கு உங்கள் அப்பா எத்தனையாவது கணவன்' என்று போட்டிருந்தால் இன்னும் சூப்பர் பரபரப்பாய் இருந்திருக்கும் என்ற பொருளில் எழுதப்பட்ட வரி அது.

குமரன் (Kumaran) said...

'நீங்கள் சொல்வது' என்ற வார்த்தையை வைத்து நான் உங்கள் பதிவைச் சரியாகப் படிக்கவில்லை என்று எண்ணிவிட்டீர்கள். நான் சரியாகத் தான் படித்தேன். அந்த விவாக மந்திரத்தின் பொருள் காஞ்சிப் பெரியவர் சொன்னது தான். ஆனால் அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் (ஆறாம் அறிவு, இழிசெயல், வன்முறை, ஆட்டுமந்தை கூட்டம்) போன்றவை என்னை சூடேற்றி விட்டன. விட்டால் 'கயல்விழி' என்று யாராவது பெயர் வைத்தால் 'ஆஹா. என்ன அநியாயம். அந்தப் பெண் மனிதப்பெண். அவள் கண்களைப் போய் மீன் கண்கள் என்று சொல்லி வன்முறையைத் தூவி விட்டிருக்கிறார்களே. என்ன இழிசெயல் இது. எத்துணைத் தைரியம்' என்று பொங்குவீர்கள் போலிருக்கிறது.

நீங்கள் 'தெய்வத்தின் குரலை' முழுதுமாகப் படித்திருப்பீர்களா தெரியவில்லை. இந்தப் பதிவில் நீங்கள் போட்டிருக்கும் கருத்து 'உண்மை'யிலோ வேறு ஏதோ தி.க. இதழிலோ இதே 'நன்றி:( சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல்: இரண்டாம் பகுதி, பக்கம் 875)' என்ற குறிப்புடன் படித்திருக்கிறேன். நீங்களும் அங்கிருந்து தான் எடுத்துப் போட்டீர்களா? அப்படியென்றால் ஏன் 'பி.கு: மந்திரத்திற்கு விளக்கமளித்து என்னை தெளிவடையச் செய்த பெரியாவாளுக்கு அடியேனின் பாதகோடி நம்ஸ்காரங்கள்.' என்ற நக்கல்?

செய்யும் நக்கலை எல்லாம் செய்துவிட்டு நான் புத்திசாலித்தனமாக நடப்பதாய் நினைத்துக் கொண்டு விவாதத்தை காஞ்சிப் பெரியவரைப் பற்றியதான விவாதமாய் திசைத் திருப்புவதாய் வேறு சொல்கிறீர்கள். இதை என்ன சொல்ல?

நிச்சயமாக விவாதம் காஞ்சிப் பெரியவரைப் பற்றி அல்ல. இந்தத் திருமண மந்திரத்தைப் பற்றித் தான். உங்கள் அறிவுரைப் படி மீண்டும் உங்கள் தெளிவான பதிவைப் படித்துப் பார்த்துவிட்டேன். இப்போது என் பின்னூட்டத்திற்கு விளக்கம் கூறுகிறேன்.

நிச்சயமாக இந்த மந்திரம் பெண்களைக் கேவலப்படுத்தவில்லை என்பது தான் என் கருத்து.

ஸோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்கள் இயற்கையை உருவகப்படுத்திய தெய்வங்கள். அவர்கள் அந்தப் பெண்ணை திருமணத்திற்கு முன்பு பாதுகாப்புடன் வைத்திருந்தார்கள். இனி மேல் உன் கணவனாகப் போகும் நான் உன்னைப் பாதுகாப்புடன் வைத்திருப்பேன் என்பதை 'கயல்விழி' என்ற பெயரில் உள்ள இலக்கிய நயம் போன்ற நயத்துடன் சொல்லப் பட்டக் கருத்து. இதைத் திரித்து அந்த உருவகங்கள் என்னவோ மனிதர்கள் போல எண்ணிக்கொண்டு இது பெண்களின் மேல் திணிக்கப் பட்ட வன்முறை அது இது என்று அறிவாளித்தனமாய் புலம்புகிறீர்களே. அதைத் தான் என் கேள்விகளில் கேட்டேன்.

இப்போது திரும்பவும் என் கேள்விகளைக் கேட்கிறேன். நீங்கள் திராவிடர் கழக அபிமானி போல் தெரிகிறீர்கள். அதனால் உங்களைப் பொறுத்தவரை இந்தத் தெய்வங்கள் பொய். இல்லையா? இந்த ஸோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்கிறீர்களா? அவர்கள் பொய் என்றால், அப்புறம் எங்கிருந்து வன்முறை வந்தது. அவர்கள் உண்மை என்றால் (என்னைப் போன்ற பாகனிச வாதிகள் அப்படித்தானே நம்புகிறோம்) அதை நான் மேலே சொன்ன விளக்கமாகத் தானே கொள்ளவேண்டும். இது தான் என் கேள்விகளின் உள் அர்த்தம். உணர்ச்சிவேகத்தில் வெறும் கேள்விகளாய்க் கேட்டுவிட்டேன். விளக்கம் தந்துவிட்டேன். உங்கள் பதில் என்னவோ?

இதை எழுதும்போதே இன்னொன்றும் தோன்றுகிறது. நான் என் நேரத்தை வீணாக்குகிறேனோ என்று.
//எல்லாரும் ஒரு கலர் கண்ணாடி போட்டுக் கொண்டு தானே உலகத்தைப் பார்க்கிறோம்.
//
நீங்கள் ஒரு கலர் கண்ணாடி போட்டுக் கொண்டு இந்த விஷயத்தை அணுகுகிறீர்கள். நான் வேறு கலர் கண்ணாடி போட்டுக் கொண்டு இந்த விஷயத்தை அணுகுகிறேன். அதனால் இருவரும் மற்றவர் சொன்னது சரி என்று சொல்வது சந்தேகம். நேரம் வீணாகிறதா இல்லையா என்பது உங்கள் பதிலைப் பார்த்தால் தான் தெரியும்.

இந்தக் களேபரத்தில் ஒன்றை மறந்துவிட்டேன். புத்தாண்டு வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

//விவரமறிந்த நாமே இது பற்றி பேசாமல் ஒதுங்கி கொண்டால் யார் பேசுவது.
//

முத்துகுமரன். நீங்கள் சொன்ன மாதிரி என் ஆவேசப் பின்னூட்டமும் இது தான். விவரமறிந்த நாமே இது பற்றி பேசாமல் ஒதுங்கிக் கொண்டால் யார் பேசுவது. தயவு செய்து இது வடமொழியில் இருக்கும் மந்திரம் என்பதால் நான் இவ்வளவு பேசுகிறேன் என்று எண்ணாதீர்கள். எனக்குத் தமிழில் இருக்கும் ஆர்வமும் பற்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். 'நான் மலஜலம் கழித்துவிட்டு கால் கழுவினேன்' என்பதை சமஸ்கிருதத்தில் சொன்னால் அது மந்திரம் ஆகிவிடுமா என்று கிண்டலாய் பாட்டுக்கொரு புலவன் கேட்டதை மிகவும் ரசித்தவன் நான். இந்த மந்திரத்துக்கு இது பொருள் இல்லை என்று கூறுவதே என் நோக்கம்.

//அத்தகைய உறவை ஏற்றுக் கொள்ளும் பொழுது இத்தகைய மந்திரம் தேவையா?
//

அதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். எனக்குத் தோன்றும் பொருளின் படி இந்த மந்திரம் இழிசெயலோ, வன்முறையோ அல்ல. அதனால் எனக்கு இந்த மந்திரம் தேவையில்லை என்று தோன்றவில்லை.

//இந்த மந்திரத்தின் பொருள் புரிந்த ஆண்மகன் யாரும் ஒப்ப மாட்டான். //

நீங்கள் சொன்ன பொருள் தான் உண்மை என்றால் எந்த ஆண்மகனும் ஒப்ப மாட்டான். ஆனால் நான் சொல்லும் பொருள் தான் உண்மை என்பது என் கருத்து. அதனால் என்னை நீங்கள் ஆண்மகன் என்று ஒப்புக்கொள்ளாவிட்டால் நஷ்டம் எனக்கு அன்று.

//எல்லோருக்கும் உறைக்க வேண்டும் என்பதாலேயே கனத்த மனதுடன், உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட தலைப்பு.
//

இருக்கலாம். மாற்றுக் கருத்தைக் கேட்டபின் அது சரி என்று தோன்றினால் அதனை உடனே ஒப்புக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.

Sundar Padmanaban said...

ஒரு துணுக்கை மட்டும் நேரடியாக அர்த்தப்படுத்திக்கொண்டு இப்படி ஒரு பதிவைப் போட்டு விட்டீர்களே முத்துக்குமரன்? :(( இது "மெல்லத் தமிழினி சாகும என்று என்றோ பாரதி சொல்லியிருக்கிறார்" என்று மேடைக்கு மேடை முழங்குவதைப் போன்றிருக்கிறது.

நேரடியாக அர்த்தப்படுத்துவதில் வரும் அனர்த்தங்களில் இதுவும் ஒன்று.

சோமன், கந்தர்வன், அக்னி என்பவர்களை நீங்கள் ஏன் ஒரு பெண்ணின் "கணவர்களாக"ப் புரிந்துகொண்டீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்துவிடும் வழக்கம் இருந்தது. அந்த வழக்கத்திற்கும் காரணங்கள் இருந்தன. அதைக் "குழந்தைத் திருமணம்" என்று எப்படியெப்படியோ திரித்து எதிர்த்து அக்காலத்தில் பெண்குழந்தை பிறந்ததும் திருமணம் செய்துவைத்து விடுவார்கள் என்ற அளவிற்குக் கொண்டுபோனார்கள். ஏன் வயதுவந்தவுடன் திருமணம் செய்துவிடும் பழக்கம் வந்தது என்ற காரணங்களுக்குள் போகவேண்டாம் (இன்னும் சில விவகாரங்களுக்குள் போகவேண்டி வரும் என்பதால்). இந்த மந்திரங்களுக்கு வருவோம்.

காஞ்சிப் பெரியவர் குறிப்பிட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள். திருமண சடங்குகளைப் பற்றி அவர் சொல்லியிருப்பதில் இன்னும் சில குறிப்புகள்:

"நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கிறோம். கண்களுக்குச் சூரிய பகவான்; கைகளுக்கு இந்திரன் - இது போன்று. இதே போல குழந்தை ஜனித்ததிலிருந்து அது வளர்ந்து பெரியவனா(ளா)கும் வரை ஒவ்வொரு பருவத்திலும் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. ஓவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்திற்கு - தெய்வத் தன்மைக்குப் ஒப்புமைப் படுத்தியிருக்கிறோம்.

இதன்படி ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம் வரை "ஸோமனின் (Moon God)ஆதிக்கத்தில்" இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போலவே "குளிர்ச்சியாக" இருக்கிறாள். (ஆண்கள் அணியும் வேஷ்டியின் பெயரும் சோமன்).

பிறகு இந்தச் "சோம பருவத்திலிருந்து" "பூப்பெய்தும் பருவம் வரை" விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பியிருக்கும் பெண் குழந்தை. இப்பருவத்தில் அவள் "கந்தர்வனின் ஆதிக்கத்தில்" இருக்கிறாள் அவள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய கந்தர்வ பருவம்!

பூப்பெய்திய பருவத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை அவள் "அக்னியின் ஆதிக்கத்தில்" - அதாவது அக்னி போன்று எழுந்து தகிக்கும் காம உணர்வுகளுடன் - இருக்கிறாள்.

இப்பொழுதிருக்கும் எவ்வித வசதிகளுமற்ற, எந்தவித நவீனத் தாக்கங்களும், தேவைகளுமற்ற எளிய வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டத்தை மனதில் கொண்டால், பெண் வீட்டைப் பார்த்துக்கொள்ள, ஆண் வெளியில் வேலை செய்து பொருளீட்டி ஜீவனத்தை நடத்தும் குடும்ப அமைப்பை மனதில் கொண்டால், பருவமடைந்து அக்னியின் பிடியில் இருக்கும் - காம உணர்வுகளில் உந்தப்பட்டுக்கொண்டிருக்கும் - ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொடுப்பதே பெற்றவர்களின் முக்கிய கடமையாக இருந்தது - அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கும் பெண் - குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி, திருமணம் செய்விக்கப்பட்டு ஓர் ஆண்மகனின் கைகளில் ஒப்படைக்கப் படுகிறாள்.

ஆக, நிலவைப் போல் குளிர்ந்து நிற்கும் குழந்தை, விளையாட்டுத் தனம் நிரம்பி அழகு ததும்பும் பருவத்தைக் கடந்து, பூப்பெய்தி, பிறகு அவ்வயதிற்குரிய உணர்வுகளால் உந்தப்பட்டு காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கும் போது, ஆண்மகனைக் கைப்பிடித்து திருமண பந்தத்தின் மூலம் குடும்ப வாழ்க்கையைத் துவங்குகிறாள் - என்று இதைப் புரிந்துகொண்டால் நலம்.

நேரடியாக இம்மந்திரங்களுக்கு அர்த்தம் கற்பிக்கத் துவங்கினால் ஒன்றும் மிஞ்சாது - நமக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர்கள் உள்பட - நாம் அடையாளமற்றவர்களாவோம்.

ஒவ்வொரு சமூக அமைப்பிலும் பல நம்பிக்கைகள், சடங்குகள், வேறுபாடுகள், பிரிவுகள் என்று எவ்வளவோ இருக்கின்றன. காலவோட்டத்திற்குத் தகுந்தவாறு சில மாறுகின்றன; சில மாற்றப் படுகின்றன; சில கைவிடப்படுகின்றன; சில அப்படியே தொடர்கின்றன - நமக்கு இதைப் பற்றிக் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது - நீங்களோ நானோ கேள்வி கேட்கலாம் - கேளுங்கள் பகுத்து அறிந்து கொள்ளுங்கள்.

அதற்கு முன் துணுக்குகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் சற்று முயற்சியெடுத்து Big Picture-ஐயும் பார்த்துக்கொண்டீர்களென்றால் இன்னும் நலம்.

சமூக கட்டமைப்புக்குள் சிக்கிக் கொள்ளாமல் தனித்து இயங்கவும் நீங்கள் முடிவெடுக்கலாம் - அது உங்கள் உரிமை. ஆனால் சமூகத்தையோ அதன் நம்பிக்கைகளையோ பழிக்கத் தேவையில்லை. குற்றம் கண்டுபிடிக்கத் தொடங்கினால் - வாழ்க்கையில் நம்புவதற்கு - நம்பி வாழ்வதற்கு எதுவும் மிஞ்சாது - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

அன்புடன்
சுந்தர்.

குமரன் (Kumaran) said...

//இந்த மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறவைகளில் பல பழமையானவை. சில குழுக்களில் பெண்கள் திருமணம் ஆகும் முன் குழுத்தலைவர் வீட்டில் அல்லது குழுவின் குரு வீட்டில் முதல் இரவைக் கழித்துவிட்டு பிறகு திருமணம் நடக்கும்.

அல்லது தேவர்களை தங்கள் மேல் ஏற்றிக்கொள்ளும் பூசாரிகளும் (அக்காலத்தில்)உண்டு.
//

தங்கமணி சொன்ன கருத்துகளை நானும் படித்திருக்கிறேன். இப்போதும் சில பழங்குடியினரிடம் இந்தப் பழக்கம் இருப்பதாகவும் படித்திருக்கிறேன். ஆனால் இப்போது சிலர் இப்படி இருப்பதால் அந்தக் காலத்திலும் அப்படித் தான் இருந்திருப்பார்கள் என்று யாராவது அறுதியிட்டுக் கூற முடியுமா என்று தெரியவில்லை. அதுவும் நிச்சயமாக இந்த மந்திரத்தைக் கொண்டு அதை அறுதியிட முடியுமா தெரியவில்லை.
//சில கற்பிதங்கள், கற்பனைகள், உருவகங்கள் கூட இருக்கும்.
எப்படி இருப்பினும் இவைகளை இன்றைய புரிதலில், பழக்கத்தில் அர்த்தப்படுத்திக்கொள்வதும், இன்றைய சடங்காகக் கொள்வது பொருத்தமற்றதுதான்.
//

இது நான் சொல்லும் விளக்கத்திற்கு அருகில் வருகிறது. இதில் வரும் தெய்வங்களும் அவர்களுடன் பெண்ணுக்குச் சொல்லப்படும் உறவும் உருவகம் தான். அது உடல் உறவு அல்ல. அதனை இந்தக் காலத்தில் நாம் 'அடைந்தேன்' என்னும் சொல்லுக்கு கூறும் 'தாம்பத்ய உறவு' என்று பொருள் கொண்டு விதண்டாவாதம் புரிவது பொருத்தமற்றது. அதை இன்றைய சடங்காக வைத்திருப்பது அவரவர் செய்யவேண்டிய முடிவு. அதனை வன்முறை, ஆட்டுமந்தைக் கூட்டம் என்றெல்லாம் பேசுவது கொஞ்சம் ஓவர்.

சீமாச்சு.. said...

Hi Muthu Kumaran,
Thanks for the response. After posting my first response, I did refer to the pages you mentioned in Deivathin Kural Vol 2. If you actually read the book for this page, Sankarachariar does state these as "the meaning given by dravidian parties for this mantra". After that he goes on explaining this mantra for 8 pages . The meaning you refer here WAS NOT GIVEN by Sankarachariar. If you want, I can send you scanned pages from the book. And you can read for yourself.
For your age, you might not have seen enough to talk about these mantra. Focus your energies in getting your professional skills up. You are in the prime time in your career.
You will get a time when you really look for the meanings of these verses.
I am not forcing you to use these mantra in your wedding. How you conduct your wedding is purely your choice. In the same way, how I conduct my wedding and what is the meaning of the verses I use is my choice. Please do not make fun of other people's customs. If you really want to know the meaning of these rituals you better start from the beginning.

Best of luck and happy new year!!
Endrendrum Anbudan,
Seemachu

முத்துகுமரன் said...

//இது முத்துகுமரன் என்ற தனிமனிதரைப் பற்றிய தாக்குதல் போலும் தோன்றுகிறது. அப்படி எழுதுவது என் நோக்கம் அல்ல. அப்படி நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் மன்னித்துவிடுங்கள்//

குமரன் உங்கள் பதில் கண்டு மகிழ்ச்சி. உங்கள் நோக்கம் தனிமனித தாக்குதல் இல்லை என்பதை அறிந்திருந்தாலேயே உடனடியாக அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தினேன்

முத்துகுமரன் said...

//சங்கராச்சியாரையும் இந்துமதத்தையும் பார்த்து காறித்துப்ப மற்றுமொரு சந்தர்ப்பம் என்ற வகையில் தாங்கள் பதிவு செய்திருந்தால், என்னுடைய இந்த பின்னூட்டத்தை தயவு செய்து நீக்குமாறு வேண்டுகிறேன்.//

எந்த ஒரு தனி மனிதரையும் இழிவு படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. இந்து என்றூ பிற்காலத்தில் உண்டான ஒரு பதத்தை கொண்டு எல்லா மதத்தையும் இணைத்து கட்டாதீர்கள்....

முத்துகுமரன் said...

குமரன், சுந்தர் தங்கள் விரிவான பதில்களுக்கு நன்றி. இந்த பதிவில் இன்னும் சிலருடைய கருத்துகளை குறிப்பாக பெண் வலைப்பதிவாளர்களின் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன். அதன் பிறகு எனது பதில்களையும் சொல்கிறேன்.

பூங்குழலி said...

ஐயா முத்துக்குமரன், என்னை புலம்பும்படி ஆக்கிவிட்டீர்களே. இதோ எனது புலம்பல்கள்.

பரஞ்சோதி said...

யோவ் என்னய்யா இது,

சிறுப்பிள்ளைத்தனமா தலைப்புடன் ஒரு பதிவு.

ஏதாவது புதுமையா செய்றேன்னு பழைய குப்பையை கிளருறீரு. மரியாதையா இக்காலத்திற்கு தேவையானதை யோசித்து புரட்சிக்கரமாக ஏதாவது எழுதுங்க. இல்லேன்னா பேசாம காதல் கவிதையை எழுதிகிட்டு இருங்க.

கிண்டல், நக்கல், இருப்பதை திரிப்பது, திரிந்ததை சரி செய்வது, பரபரப்பு உண்டாக்க, பலரை பாதிக்க தலைப்பு கொடுப்பது, இது போன்றவை எழுத நிறைய பேர் இருக்காங்க, உங்களுக்கு அந்த வேலை வேண்டாம்.

அடுத்த முறை சக்தியை விட்டு உம் காதை கடிக்க வேண்டும்.

கடுப்புடன்
பரஞ்சோதி

(உமக்கு நிறைய வாட்டி புத்தாண்டு நல்வாழ்த்துகள் சொல்லிடேமுல்ல).

J S Gnanasekar said...

அருமையான படைப்பு. என்ன அதிகமாக திட்டு வாங்குகிறீர்கள். பழுத்த மரம் கல்லடிபடுகிறது.

என்னைப் போல் சிலபேர், நாகரீகம் கருதி மறைமுகமாக எங்கள் படைப்புகளில் சொல்லி வந்த ஒரு நிகழ்வை..........., நீங்கள் பூனைக்கு மணி கட்டிவிட்டீர்கள்.

உங்களின் இந்தப் படைப்பில் நான் ரசித்த வரி இது:

//தன்னை இழிவு படுத்தும் சடங்குகளை ஏற்க மறுக்கும் தெளிவை பெற்ற ஒரு பெண்ணை என் இணையாக ஏற்று//

ரொம்ப கஷ்டம்.

இதுபோல் நல்லது சொல்லுங்கள். நானும் சொல்கிறேன்.

-ஞானசேகர்

சிவா said...

முத்துகுமரன்! எனது பின்னோட்டத்தை நீக்கி விட்டேன். அதை அங்கே நிரந்தரமாக வைத்து ஒன்றும் ஆக போவதில்லை. உங்களுக்கு என் கருத்தை கூறவே அதை போட்டேன். அதை மாடரேட் பண்ணி பதிவில் போட்டதற்க்கு மிக்க நன்றி,

நண்பன்,
சிவா

ramachandranusha(உஷா) said...

அன்புள்ள முத்துகுமரன்,
மனிதன் மனதில் கேள்விகள் எழும் பொழுதுதான் அவன் சிந்தனைகள் மேம்படும். ஆனால் சிந்தனை என்ற பெயரில் கிறுக்குதனமாய் வாதம் செய்வது என்பது வேறு. எல்லா குப்பைகளையும் படியுங்கள். தெளிவு தன்னால் கிடைக்கும்.

என்னுடைய பதினைந்து வயதில் பெரியார் மொழிகளையும், அருள்வாக்கு என்று கல்கியில் வரும் பெரியவரின் கருத்துக்களையும் விரும்பிப்படிப்பேன். பெரியாரின் நாத்தக வாதத்தைவிட சமுகபார்வையும், பெண்களைப் பற்றி அவர் சொன்னதும் இன்றுவரை யாரும் சொல்லவில்லை என்பது உண்மை.

அதே போல, பெரியவர் (காஞ்சி)- ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உட்பிரிவின் தலைவர். சரியா? மதம், சாதி சார்ந்த கட்டுபபாடுகள் எந்த மத தலைவருக்கும் உண்டு. ஆக அதை விட்டு விடலாம் அல்லது விட்டு விட்டேன்.( உடனே நான் அந்த மடத்தை சேர்ந்தவள் என்ற போர்ட்டை மாட்டிவிடாதீங்கபா)

ஒழுக்கம், நேர்மை, எளிமை, வரதட்னையை எதிர்த்தது, ஜோதிடம் பார்க்காமல், வெறும் கோத்திரம் பார்த்து கல்யாணம் செய்தால் போதும் ( கோத்திரம் ஒன்றே என்றால் சகோதர, சகோதரி என்று பொருள்), பட்டு கட்டக்கூடாது என்று வலியுறுத்தியது போன்றவை என்னை கவர்ந்தன.


மனிதர்கள், மகாத்மா உட்பட குறைகள் உடையவர்களே. குறையில்லாத மனிதன் இல்லை என்னும் பொழுது, மோசமானவன் என்று சுட்டிக்காட்டுபவனிடமும் ஏதாவது நல்ல குணம் இருக்கும்.

வேதங்கள் தோன்றி பல ஆண்டுகள் ஆகியுள்ளன. அதில் கூறப்படுபவை சில இந்த காலத்துக்கும் பொருந்தும் சில அபத்தமாய் இருக்கும். இந்த சரி, அபத்தம் உலகில் உள்ள அனைத்து மத நூல்களுக்கும் பொருந்தும். நீங்கள் குறிப்பிட்ட ஸ்லோகத்தின் பொருள் நானும் திரு.சுந்தர் சொல்வதைப் போல தான் பொருள் கொண்டிருந்தேன்.

சப்தபதி மந்திரம் என்று நெருப்பை சாட்சியாய் வைத்து ஒரு ஆணும், பெண்ணும் சுற்றி வந்து கணவனை, மனைவியாக மாறுவார்கள். அந்த மந்திரத்தின் பொருள் அவர்களை வாழ்க்கை துணை என்றும்,
யாரையும் ஏற்ற தாழ்வு இன்றி தோழன், தோழி என்று சொல்லப்படும். இப்படி வாழ்க்கையில் இணையும் ஒரு ஆணையும் பெண்ணையும் தோழன், தோழி என்று சொல்லுவது இந்துமதத்தில் மட்டும்தான்.

இந்த மந்திரங்களின் பொருள் மனைவி கணவனிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று எழுதிய சாண்டில்யருக்குக் கூட தெரியவில்லை. பொருள் தெரியாமல் கடைப்பிடிக்கப்படும் பல சடங்குகள் ஏன் இன்னும் நம் இந்து சமுதாயத்தில் நடக்கிறது என்றால் வெறும் ஐதீகம் அவ்வளவுதான். கல்யாணம் ஆனதும் வலது காலை வைத்து மருமகள் உள்ளே வருவது, ஆராத்தி எடுப்பது என்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்று யாரும் உங்களை வற்புறுத்தவில்லை, சட்டமும் இல்லை. நீங்கள் சட்டப்படி கையெழுத்திட்டு வாழ்க்கை துணையை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்னும் ஐம்பது வருடம் கழித்து இதுக்கூட அபத்தம் என்று ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் முறை வரும்.

கடைசியாய் மதங்களின் நீட்சியே சாதி என்பது என் எண்ணம். மதத்தை ஒதுக்கிவிட்டு மனிதம் வாழத் தொடங்கினால் மண்ணுலகம் சொர்க்கமாகும். ஆனால் சமூகத்தில் வாழும்பொழுது, பெண்ணான என்னால் என்னை பாதிப்பதற்கு மட்டுமே நான் குரல் கொடுக்க முடியும். ஒவ்வொன்றிற்கும் எதிர்வாதம் செய்ய ஆரம்பித்தால் வாழ்க்கை நரகமாகும்.

இந்த குறளை ஞாபகம் வைத்துக் கொண்டு எதையும் உணர்ச்சிவசப்படாமல் படியுங்கள்.

"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு"

பி.கு பெண் இணைய பதிவாளர்களுக்கு என்று நீங்கள் கேள்வி எழுப்பியதால் இந்த பதில், இல்லை என்றால் இத்தகைய வாக்குவாதங்களில் நான் தலையிடுவதில்லை. இதில் ஏதாவது தவறு, குற்றம், குறை இருந்தால் மன்னிக்கவும்.

முத்துகுமரன் said...

சுந்தர் முதலில் பெரியவரின் தெய்வத்தின் குரலின் இருந்து விளக்கங்களை எடுத்து கொடுத்தமைக்கு நன்றி..
இந்த மந்திரங்கள் சம்பந்தமான விளக்கங்களை தெய்வத்தின் குரலில் ரைட் ஆனரபிள் சாஸ்திரிக்கு சொல்லும் பதிலாக விளக்கி இருக்கிறார்.
திராவிட சிரோன்மனிகளிக்கு அல்ல ( திரு சீமாச்சு கவனித்து கொள்க).
நண்பர்களின் வற்புறுத்தளுக்கேற்ப தெய்வத்தின் குரலை (உணர்ச்சிவசப்படாமால்?!) சற்று விரிவாக படிக்க நேர்ந்தது. படித்ததிலிருந்து வாயடைத்து போயிருக்கிறேன்.
என்ன அற்புதமான விளக்கம், அற்புதமான சிந்தனைகள்... அப்பப்பா நெஞ்சம் நிறைந்து விட்டது.

நீங்கள் சொன்னமாதிரியான விளக்கம் அல்ல அது. பால்ய விவாகம் வேண்டும் என்பதை வற்புறுத்தி அவர் செய்த பிரசங்கம் அது.
பிராம்மம் வகைத் திருமணமே உயர்ந்தது என்பதை வலியுறுத்தும் பொருட்டே அவர் சீர்திருத்த பிராமணர்களுக்கு சொன்ன அறிவுரை அது.

உங்கள் விளக்கப்படி சோமன், கந்தர்வன், அக்னி என்பவர்களளின் பாதுகாப்பில் அந்த பெண் இருக்ககிறாள்.

ஆனால் பெரியவரின் கூற்றுப்படி கணவனாக போகிறவன் கந்தர்வனிடம் கேட்பது

ஏ விச்வாஸுவே உன்னை நமஸ்காரம் பண்ணுகிறேன்! நீ இந்த பெண்ணை விட்டு எழுந்திருந்து போ! வேறொரு பெண் குழந்தையிடம்
போய்ச் சேரு. இவளுக்கு நான் பதியாகி விட்டேன் அல்லவா, அதனால் என்னிடம் கொடுத்து விட்டு, நீ தகப்பனார் வீட்டில் இருப்பவளும்,
விவாஹம் ஆகாதவளுமான இன்னொரு பெண்ணை சென்றடைவாக என்று கல்யாண பிள்ளை வேண்டிக் கொள்கிறான்.

மேற்கண்ட வரிகளிலிருந்து அந்த பெண் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறாள், அந்த ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டிதான் இந்த மந்திரத்தை வரன் சொல்லுகிறான்.
இங்கு இந்த தேவதைகள் அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டார்கள் என்ற அர்த்ததில் எடுத்து கொள்ள கூடாது என்று சொல்கிறீர்கள்

அதாவது உடல்ரீதியான பாதிப்பு இல்லை என்ற வாதத்தைதான் முன்வைக்கிறீர்களே தவிர கணவனாக வரப்போகிறவனுக்கு முன்னமே
அவள் தேவதைகள் எனப்படும் இவர்களின் கட்டுபாட்டை ஏற்று கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு உந்தி தள்ளுகிறீர்கள். பாதுகாப்பு என்பதுதான்
ஏற்பாடு என்றால் ஆண் குழந்தைகளுக்கு இந்த பருவங்கள் ஏன் கிடையாது??


இரண்டாவது பெண் என்பவள் அசுத்தமானவள் என்பதே வேதத்தின் தாத்பர்யம். விவாகங்களுக்கு பல உத்தேசங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது பெண்ணின் சித்தபரிசுத்தி ஏற்பட பதி என்ற
பிடிப்பை ஏற்படுத்தி தருவது என்றும் பால்ய விவாகத்திற்கான அவசியத்தை குறிப்பிடுகிறார். எங்கு இருந்து சுத்திரிகரிக்க வேண்டி வந்தது அந்த பால்ய வயதில்????
மேலும் பெண்கள் விவாகம் நடந்தேறும் வரை பரமேஸ்வரனியே தன் பதியாக நினைத்து வணங்குவது, பின்னர் யார் பதியாக வந்தாலும் அவனை பரமேஸ்வரனிடத்தில் மாற்றிக் கொள்வது
என்று பெண் வாழ்ந்தால்தான் நாடு சுபிட்சமடையும், நரகத்தை தவிர்க்கலாம் என்றூ வாதிடுகிறார்.

இந்த மந்திரத்தின் தாத்பர்யம் பெண் களங்கமானவள், சுத்திகரிக்கபட வேண்டியவள் இதையே திரு, சோ அவர்கள் தன்னுடைய மஹாபாரதம் பேசுகிறது என்னும் படைப்பில் திரெளபதியின் ஐவர் திருமணத்தை நியாயப்படுத்தும்
போது தன் கருத்தாக குறிப்பிடுகிறார்.(பெண் இயல்பிலே பல ஆண்களுடன் உறவு கொள்ளும் விருப்பம் உடையவள்). இதை பெண்ணை களங்கப்படுத்தி அடிமைப்படுத்தும் சாசனமாகத்தான் ஏற்படுத்த பட்டதே தவிர
வேறொன்றும் இல்லை.


இந்த வக்கிர சிந்தனையத்தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர பெண் களங்கனவள் என்பதை ஒருபோதும் ஏற்பதில்லை.


//சமூக கட்டமைப்புக்குள் சிக்கிக் கொள்ளாமல் தனித்து இயங்கவும் நீங்கள் முடிவெடுக்கலாம் - அது உங்கள் உரிமை. ஆனால் சமூகத்தையோ அதன் நம்பிக்கைகளையோ பழிக்கத் தேவையில்லை. குற்றம் கண்டுபிடிக்கத் தொடங்கினால் - வாழ்க்கையில் நம்புவதற்கு - நம்பி வாழ்வதற்கு எதுவும் மிஞ்சாது - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.//

இந்த சமூக வழக்கத்தை தங்களைத் தாண்டி மற்றவர்கள் மீதும் திணிக்கும் போது அதன் மீதான விமர்சினங்களூம், அதிலிருந்து விலகக் கோரும் உரிமையும் தவிர்க்க முடியாதவை.


இது குறித்து மேலும் தெளிவாய் அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளின் வழியாக பயணிக்கவும்

http://www.kamakoti.org/tamil/2dk37.htm

http://www.kamakoti.org/tamil/2dk38.htm

http://www.kamakoti.org/tamil/2dk39.htm

http://www.kamakoti.org/tamil/2dk40.htm

என்னை ஒரு மீள்வாசிப்புக்கு உட்படுத்தியமைக்கு நண்பர்களுக்கு என் நன்றிகள்

Sundar Padmanaban said...

//நானும் *திரு.சுந்தர்* சொல்வதைப் போல//

அய்யய்யோ உஷா. என்னிலருந்து இப்படி ஆரம்பிச்சிருக்கீங்க???

Sundar Padmanaban said...

//அதாவது உடல்ரீதியான பாதிப்பு இல்லை என்ற வாதத்தைதான் முன்வைக்கிறீர்களே தவிர கணவனாக வரப்போகிறவனுக்கு முன்னமே
அவள் தேவதைகள் எனப்படும் இவர்களின் கட்டுபாட்டை ஏற்று கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு உந்தி தள்ளுகிறீர்கள்.//

//இந்த சமூக வழக்கத்தை தங்களைத் தாண்டி மற்றவர்கள் மீதும் திணிக்கும் போது அதன் மீதான விமர்சினங்களூம், அதிலிருந்து விலகக் கோரும் உரிமையும் தவிர்க்க முடியாதவை.//

ஒரு வாதத்திற்கும் இன்னும் சற்று தெளிவடையவும் கேட்கிறேன்.

ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினர் மீது அவர்களது நம்பிக்கைகளைத் திணிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வதாகப் பொருள் கொள்ளலாமா? அப்படியென்றால், வேத மந்திரங்களை நம்பும் சமூகத்தினர், மற்ற சமூகத்தினரை - இசுலாமியர்களை - கிறித்தவர்களையும் - வேத மந்திரங்களைப் பின்பற்றச் சொல்லித் திணித்தார்கள் என்கிறீர்களா?

//பால்ய விவாகம் வேண்டும் என்பதை வற்புறுத்தி அவர் செய்த பிரசங்கம் அது.//

ஏன் பால்ய விவாகம் என்றும் அப்போதைய முகலாயப் படையெடுப்பில்; ஆக்கிரமிப்பில் நிகழ்ந்த இந்துப் பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் பற்றியும் - குறிப்பாக மணமாகாத பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றியும் குறிப்பிட்டு, வயது வந்தவுடன் உடனடியாகத் திருமணம் செய்துகொடுக்கும் பழக்கம் வந்தது என்பதையும் படித்ததாக நினைவு. அது சரி. படையெடுப்பு என்றாலே எல்லா வன்முறைகளையும் விடப் பிரதானமான வன்முறை ஆக்கிரமிக்கப் படும் நிலத்தின் பெண்களின் மீதான வன்முறைதானே - இதற்கு விதிவிலக்காக எந்தவொரு நாடும் இல்லை என்றே நினைக்கிறேன்.

சமூகத்திக்குள்ளோ, சமூகத்துக்கு வெளியேயோ, நம்பிக்கைகள் என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட உரிமை - இதில் திணிப்பு என்பது வன்முறை.

பொதுவாக வன்முறைகள் - ஜாதி, மதம், நிறம் எல்லாவற்றையும் தாண்டி "வல்லானால் எளியவன் / பலவீனமானவன் மீது செலுத்தப்படுவது". அந்த வகையில் பார்த்தால் வேத மந்திரங்களெல்லாம் தூசு மாதிரி. ஆனை அளவிற்கு ஆண்கள் பெண்கள் மீது இந்த நொடி வரை உளவியல் ரீதியாக, மன ரீதியாக, உடல் ரீதியாக - ஜாதி, மதம், சமூகம் என்ற எந்த வரையறைகளுக்குள்ளுமில்லாது - வன்முறையை ஏவிக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான் நிஜம்.

பெண்களுக்கு எதிரான ஆயிரக்கணக்கான வன்முறைக் காரணிகளில் வேதங்களும் அடங்கும் என்பது உங்கள் நம்பிக்கை. முதலில் இதைப் பெண்கள் நம்பவேண்டும். என்னைக் கேட்டால் பொருள் புரியாது - ஒரு சடங்காகச் செய்யப்படும் இத்தகைய திருமணங்களில் ஓதப் படும் மந்திரங்களைவிட பெண்கள் கவலைப் படுவதற்கும் பயப்படுவதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமான விஷயம் ஆண்கள். உடல் ரீதியாக வலிமைப் படைத்த ஆண்களால் (மிருகங்களில் கூட ஆணாதிக்கம் பரவலாக உண்டுதானே?) நடத்தப்படும் உலகம் இது. பெண்கள் வலுவான நிலையை அடையும் காலத்தில், ஆண்கள் அடக்கப் படுவார்கள் - பரிணாமச் சுழற்சியாக அது நடக்கும் போது பெண்கள் ஆண்களுக்கு எதிரான வன்முறை அடக்குமுறைகளைப் பற்றி இம்மாதிரி வலைப்பதிவுகளில் விவாதித்துப் பரிதாபப் படுவார்கள்.!!!

அக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பல சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இக்காலத்தில் எந்தப் பயன்பாடும் இல்லை - அல்லது இக்காலத்திய நவீன நம்பிக்கைகளோடு ஒத்து வராதவை.

தீட்டு, விலக்கு போன்றவற்றிற்கு மருத்துவ ரீதியாகக் காரணங்களைக் கூறி அதற்காக, அம்மூன்று நாட்களில் வேலை எதுவும் செய்ய விடாது ஓய்வெடுக்க விடும் பழக்கம் இருந்தது என்றும் எங்கோ படித்திருக்கிறேன்.

நான் சைவம் என்பது என் நம்பிக்கை. அசைவம் சாப்பிடுவது அசைவர்களின் நம்பிக்கை. என்னை அவர்கள் ஏளனம் செய்யவும் வேண்டாம்; நான் அவர்களை வசை பாடவும் வேண்டாம். அவரவர் நம்பிக்கைகள் அவரவர்க்கு. இதில் திணிப்பு எங்கிருந்து வருகிறது? அப்படி ஏதாவது திணிக்கப்பட்டால் அது கண்டனத்துக்குரியது; கண்டிக்கத் தக்கது.

வேதமுறைத் திருமணமோ; சுயமரியாதைத் திருமணமோ - "திருமணம்" எதற்கு? எதற்காகச் சங்கிலியால் மாட்டைக் கட்டுவது போலப் பெண்ணுக்கு மட்டும் தாலி கட்டவேண்டும். எதற்காக மனைவி கணவனை வாங்க போங்க என்றும்; கணவன் மனைவியை ஒருமையில் அழைக்கலாம் என்பதும்? எதற்காக ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பர்தா அணியக் கட்டாயப் படுத்த வேண்டும்? இந்நாகரீக காலத்திலும் ஏன் பெண்கள் வண்டியோட்டக் கூடாது (இந்தியாவில் அல்ல). இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம் - முடிவில்லாது. எல்லாமே ஒரு சமூக அமைப்பின் நம்பிக்கைகளே.

குழலியின் பதில் பதிவில் சில பின்னூட்டங்களில், மேலாடையின்றி பெண்களை உலவ விட்டு (கேரளாவில்) தங்களது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்ட பார்ப்பனர்கள் என்பது போல் யாரோ எழுதியிருந்ததைப் படித்தேன். அதற்கு முன் கேசாதிபாதம் வரை மறைத்து ஆடையணிந்தவர்களை வலுக்கட்டாயமாக ஆடை துறக்கச் செய்து அரை நிர்வாணமாக உலவும்படி பார்ப்பனர்கள் செய்தார்களா என்ற கேள்வி மனதில் எழுந்தது.

நவீனத்தின் உச்சத்திலிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் சில ஆப்ரிக்கப் பழங்குடிகள் மேலாடையில்லாது உலவுவதை அவ்வப்போது டாக்குமண்ட்ரிகளில் காட்டுகிறார்கள். அவர்கள் அப்படி உலவுவதில் அவர்களுக்குக் கிலேசங்கள் இல்லை. நாகரீகப் போர்வையில் மாட்டிக்கொண்டிருக்கும் நாகரீகச் சிகாமணிகளாகிய நம் கண்களுக்கு அது அடக்கு முறையாகத் தெரியக்கூடும். அதற்கும் பார்ப்பனர்கள் காரணம் என்றும் யாராவது சொல்லக் கூடும்.

மத அடையாளங்கள் எல்லா மதங்களிலும் உண்டு. வேதங்களும் எல்லா மதங்களிலும் உண்டு. அனைத்து மறைகளிலும் தற்காலத்திற்கு ஒவ்வாத நிறைய நம்பிக்கைகளும் வழக்கங்களும் உண்டு; இதை யாராலும் மறுக்க முடியாது. நம்புவர்கள் நம்பிக்கொண்டு அவ்வழியே செல்லட்டும். நம்பாதவர்கள் - இவற்றை நம்பமாட்டோம் என்ற நம்பிக்கையோடு - ஒரு வழியில் செல்லட்டும். செல்லும் வழி எவ்வழியாக இருந்தாலும் அடையுமிடம் ஒன்றே. என் வழி பெரிது உன் வழி பெரிது என்றும் அடித்துக்கொள்ளாத - சமாதான வாழ்க்கைப் பயணமே நமக்குத் தேவை.

வரலாறு கறை படிந்தது.

நம் கவலை நிகழ் எதிர் காலங்கள் பற்றியது. இறந்த காலத்தைத் தோண்டினால் பிண வாடைதான் அடிக்கும்.

இறந்த காலத்தைத் தோண்டவதோ அல்லது நிகழ் எதிர் காலங்களைப் பற்றிக் கவலைப் படுவதோ அவரவர் விருப்பம்.

வேறு என்ன சொல்ல?

முத்துகுமரன் said...

//யோவ் என்னய்யா இது,

சிறுப்பிள்ளைத்தனமா தலைப்புடன் ஒரு பதிவு.//

//கடுப்புடன்
பரஞ்சோதி//

என்ன காமடி பண்றீங்களா?

எதுக்குயா கடுப்பு வருது உங்களுக்கு....

தனிமடல் போடுகிறேன்.அங்க உங்களை கவனிச்சிக்கிறேன்

முத்துகுமரன் said...

//சுயமரியாதைத் திருமணம் அல்லது தமிழில் மந்திரங்கள் ஓத திருமணம் செய்து கொள்ளலாம்//

நல்ல யோசனை மத்தளராயன்.

வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

முத்துகுமரன் said...

//ஐயா முத்துக்குமரன், என்னை புலம்பும்படி ஆக்கிவிட்டீர்களே. இதோ எனது புலம்பல்கள்//

நன்றி பூங்குழலி.

உங்கள் பதிவையும் வாசித்தேன். நன்றாக இருந்தது. என்னை திட்டியது உட்பட:-)

முத்துகுமரன் said...

//இந்த குறளை ஞாபகம் வைத்துக் கொண்டு எதையும் உணர்ச்சிவசப்படாமல் படியுங்கள்.//

அதைத்தான் நானும் சொல்கிறேன்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.


சங்கராச்சாரியர் உட்பட....

முத்துகுமரன் said...

//அருமையான படைப்பு. என்ன அதிகமாக திட்டு வாங்குகிறீர்கள்//

நன்றி ஞானசேகர்.

என் பதிவின் நோக்கம் புரிந்து கொண்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. இது போன்ற புதிய நட்புகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது

//தன்னை இழிவு படுத்தும் சடங்குகளை ஏற்க மறுக்கும் தெளிவை பெற்ற ஒரு பெண்ணை என் இணையாக ஏற்று//

//ரொம்ப கஷ்டம்.//.

கவலையில்லை ஞானசேகர். அப்படி ஒரு பெண் வரும்வரை காத்திருப்பேன்

முத்துகுமரன் said...

அது என்னய்யா பேரு வழவழா_கொழ கொழா, நெசப்பேர சொல்லி வாருங்கய்யா.. உண்மையச் சொல்ல முகமுடி எதற்கு..?

முத்துகுமரன் said...

//தன்னை கதாநாயகனா நெனச்சு எத்தனை மணப்பொண்ணுங்க மேல வன்முறை அரங்கேற்றி இருக்காரோ? யாரு கேக்கறது அதையெல்லாம்? உங்களை மாதிரி பொண்ணுங்க எல்லாம் அங்கதமா (அப்படின்னா என்னன்னு இன்னும் சரியா புரியல) பேசவேண்டியது தான். நேரடியா சொல்ல முடியுமா என்னா? //

வாய்ச்சொல் வீரன்,
ஆனாலும் அனாசிய கற்பனை வளமய்யா உமக்கு. கிரகம் எனக்கு இப்பிடி எல்லாம் தோண மாட்டேங்குதே:-),

என் கனவில் வந்தவள் எனக்கு மனைவியாக வரப்போகிற ஒரு பெண்தான்...முகமற்ற அவளைத்தான் தேடிகினு இருக்கேன்

மரத் தடி said...

இனிமே அய்யிரு மந்திரம் சொன்னா அர்த்தம் இன்னான்னு கேளுங்க...

ஆப்டாபிக்:-சுந்தர இம்புட்டு நாளா அய்யிருன்னு எனக்கு தெரியாது.

முத்துகுமரன் said...

என் அடிப்படையான கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் எதுவும் இல்லை. உங்களின் இந்த மவுனத்தை என் கருத்துகளுக்கான
சம்மதமாக எடுத்து கொள்கிறேன்.

//வரலாறு கறை படிந்தது.

நம் கவலை நிகழ் எதிர் காலங்கள் பற்றியது. இறந்த காலத்தைத் தோண்டினால் பிண வாடைதான் அடிக்கும்.

இறந்த காலத்தைத் தோண்டவதோ அல்லது நிகழ் எதிர் காலங்களைப் பற்றிக் கவலைப் படுவதோ அவரவர் விருப்பம்.

வேறு என்ன சொல்ல?//

இறந்த காலத்தின் பிணவடை நிகழ்காலத்திலும் தொடரக்கூடாது என்பதுதான் என் எண்ணம்.


//ஒரு வாதத்திற்கும் இன்னும் சற்று தெளிவடையவும் கேட்கிறேன்.//

//ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினர் மீது அவர்களது நம்பிக்கைகளைத் திணிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வதாகப் பொருள்
கொள்ளலாமா? அப்படியென்றால், வேத மந்திரங்களை நம்பும் சமூகத்தினர், மற்ற சமூகத்தினரை - இசுலாமியர்களை -
கிறித்தவர்களையும் - வேத மந்திரங்களைப் பின்பற்றச் சொல்லித் திணித்தார்கள் என்கிறீர்களா?//

சுந்தர். அப்பாவிதனமா கேள்விகள் கேட்கலாம். ஆனால் இந்த அளவுக்கு அப்பாவிதனமா கேக்குற மாதிரி நடிக்கிறது கொஞ்சம் அதிகம்
இந்த வேத மந்திரங்கள், சாதி என்ற சமூக கட்டமைப்புக்குள் ஏன் புத்திசாலிதனமாக இஸ்லாமியரையும் கிருத்துவர்களையும் இணைக்கிறீர்கள்.
இது இந்து சமயத்திற்குள் மற்ற பிரிவனிர்களிடையே தங்கள் பழக்க வழக்கங்களை, சடங்குகளை திணிக்கும் செயல்களைத்தான் குறிப்பிட்டி இருக்கிறேன்.
( இந்து மதம் என்னும் சொல்லை இஸ்லாமிய, கிருத்துவ, சீக்கிய, சமண, புத்த மதங்களைத் தவிர்த்த இன்ன பிற மக்களை ஒரு பொதுமைபடுத்தி அழைக்கிறேன்.)
ஆகையால் என் அடையாளத்தை தவறாக சித்தரிக்க முயற்ச்சிக்க வேண்டாம்.)


//ஏன் பால்ய விவாகம் என்றும் அப்போதைய முகலாயப் படையெடுப்பில்; ஆக்கிரமிப்பில் நிகழ்ந்த இந்துப் பெண்களுக்கெதிரான
வன்முறைகளைப் பற்றியும் - குறிப்பாக மணமாகாத பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றியும் குறிப்பிட்டு, வயது வந்தவுடன்
உடனடியாகத் திருமணம் செய்துகொடுக்கும் பழக்கம் வந்தது என்பதையும் படித்ததாக நினைவு. அது சரி. படையெடுப்பு என்றாலே
எல்லா வன்முறைகளையும் விடப் பிரதானமான வன்முறை ஆக்கிரமிக்கப் படும் நிலத்தின் பெண்களின் மீதான வன்முறைதானே -
இதற்கு விதிவிலக்காக எந்தவொரு நாடும் இல்லை என்றே நினைக்கிறேன்.//

நீங்கள் சரியாக படிக்காவிட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை சுந்தர்.

இரண்டு விசயங்கள் இங்கு தெளிவு படுத்தி கொள்ள வேண்டும்.

ஒன்று முகலாய படையெடுப்பில் நிகழ்ந்த இந்து பெண்களுக்கெதிரான வன்முறைகள் பற்றி வரலாற்று ஆவணங்கள், பதிவுகள் கிடையாது.\
அப்பிடி இருந்தால் அதைக் காட்டுங்கள்.

இரண்டாவது இந்த முகலாயப் படையெடுப்புகளில் இருந்து இந்து பெண்களை காப்பதற்காகத்தான் பால்ய விவாகம் என்று கூறியதும் சங்கராச்சாரியார் இல்லை.
அது பால்ய விவாகத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடிய எ,. ரங்காச்சாரியார், சிவஸ்வாமி அய்யர், சுந்தரமய்யர், கிருஷ்ணசாமி அய்யர் மற்றும்
ரைட் ஆனரபிள் சாஸ்திரி போன்றவர்கள் சொல்லியதே. அதையும் தனது அபார வாத திறமையால் தவிடுபொடியாக்கி விடுகிறார் பெரியவர்.

நேரம் கிடைத்தால் பொறுமையாக உட்கர்ந்து படித்து பாருங்கள்.

//சமூகத்திக்குள்ளோ, சமூகத்துக்கு வெளியேயோ, நம்பிக்கைகள் என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட உரிமை -
இதில் திணிப்பு என்பது வன்முறை. //

ஆமாம். இந்த ஒரு இடத்தில் நாம் இருவரும் ஒரே புள்ளியில் இணைகிறோம்.

எந்த வகையான திணிப்பும் வன்முறை என்பதை நீங்களும் கவனத்தில் கொள்க...

//அந்த வகையில் பார்த்தால் வேத மந்திரங்களெல்லாம் தூசு மாதிரி. ஆனை அளவிற்கு ஆண்கள் பெண்கள் மீது இந்த நொடி வரை
உளவியல் ரீதியாக, மன ரீதியாக, உடல் ரீதியாக - ஜாதி, மதம், சமூகம் என்ற எந்த வரையறைகளுக்குள்ளுமில்லாது - வன்முறையை
ஏவிக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான் நிஜம். //.


பெண்னின் ஆதாரத்தை களங்கப்படுத்தும் இந்த மந்திரங்கள்தான் பெண்கள் மீதான உளவியல் வன்முறைகளின் ஆணிவேர்.

ஆணி வேரை அறுக்காமல் மற்ற களைகளை நீக்குவதில் ஒரு மாற்றமும் ஏற்படாது.

ஏனுங்க ரெம்ப கவனமா வேத மந்திரங்களை இந்த வன்முறைகளுக்கு வெளியே தள்ளும் புனிதப்பூச்சு வேலை.


//பெண்களுக்கு எதிரான ஆயிரக்கணக்கான வன்முறைக் காரணிகளில் வேதங்களும் அடங்கும் என்பது உங்கள் நம்பிக்கை. முதலில் இதைப்
பெண்கள் நம்பவேண்டும். என்னைக் கேட்டால் பொருள் புரியாது - ஒரு சடங்காகச் செய்யப்படும் இத்தகைய திருமணங்களில் ஓதப் படும்
மந்திரங்களைவிட பெண்கள் கவலைப் படுவதற்கும் பயப்படுவதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமான விஷயம்
ஆண்கள். உடல் ரீதியாக வலிமைப் படைத்த ஆண்களால் (மிருகங்களில் கூட ஆணாதிக்கம் பரவலாக உண்டுதானே?) நடத்தப்படும்
உலகம் இது. பெண்கள் வலுவான நிலையை அடையும் காலத்தில், ஆண்கள் அடக்கப் படுவார்கள் - பரிணாமச் சுழற்சியாக அது நடக்கும்
போது பெண்கள் ஆண்களுக்கு எதிரான வன்முறை அடக்குமுறைகளைப் பற்றி இம்மாதிரி வலைப்பதிவுகளில் விவாதித்துப் பரிதாபப் படுவார்கள்.!!!//


சுந்தர் உங்கள் எள்ளல் (அ) நகைச்சுவை உணர்வை ரசிக்கிறேன், மற்றும் மரபு வழி ஆணாதிக்க சிந்தனைக்கூறுகளின் தாக்கத்தை உணர்கிறேன்.

பெண்கள் நிச்சயம் இந்த உளவியல் வன்முறையை உணர்வார்கள். அவர்கள் அறிந்து கொள்ளவேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் போராடுகிறோம்.

நிச்சயம் அதற்குண்டான பலன் கிடைக்கும். இன்றில்லாவிட்டால் நாளையாவது..

//அக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பல சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இக்காலத்தில் எந்தப் பயன்பாடும் இல்லை - அல்லது இக்காலத்திய
நவீன நம்பிக்கைகளோடு ஒத்து வராதவை. //


எந்த பயன்பாடும் இல்லாத, நவீன நம்பிக்கைக்கு ஒத்து வராத ஒரு சடங்காக செய்யப்படும் விசயத்தில் கூட பெண்ணை ஏன் இழிவு
செய்ய வேண்டும். அதை விட்டுவிட சொல்லும் போது அதை ஏற்கமுடியாமல் எல்லோரையும் தடுப்பது எது?.

பெண்கள் கவலைப்பட நிறைய விசயங்கள் இருக்கிறது. மறுக்கவில்லை. அதற்காகவும் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும். கொடுக்கும் எவரோடும்
என் கரங்கள் இணைந்திருக்கும்.

//தீட்டு, விலக்கு போன்றவற்றிற்கு மருத்துவ ரீதியாகக் காரணங்களைக் கூறி அதற்காக, அம்மூன்று நாட்களில் வேலை எதுவும்
செய்ய விடாது ஓய்வெடுக்க விடும் பழக்கம் இருந்தது என்றும் எங்கோ படித்திருக்கிறேன்.//

ஆமாம். ஆனால் நம் நா(வீ)ட்டில் நடப்பது என்ன? பெண்களுக்கு ஓய்வைக் கொடுக்கிறோமா? தீண்டாமை செய்கிறோமா?
அவரவர் மனசாட்சிக்கு தெரியும்...

வேதமுறைத் திருமணமோ; சுயமரியாதைத் திருமணமோ - "திருமணம்" எதற்கு? எதற்காகச் சங்கிலியால் மாட்டைக் கட்டுவது போலப்
பெண்ணுக்கு மட்டும் தாலி கட்டவேண்டும். எதற்காக மனைவி கணவனை வாங்க போங்க என்றும்; கணவன் மனைவியை ஒருமையில்
அழைக்கலாம் என்பதும்? எதற்காக ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பர்தா அணியக் கட்டாயப் படுத்த வேண்டும்?
இந்நாகரீக காலத்திலும் ஏன் பெண்கள் வண்டியோட்டக் கூடாது (இந்தியாவில் அல்ல). இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம் -
முடிவில்லாது. எல்லாமே ஒரு சமூக அமைப்பின் நம்பிக்கைகளே.

முதலில், நீங்கள் தகவல்களை தினமும் புதுப்பித்துக் கொள்ளுங்கள். சவுதி வீதிகளில் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கி நாட்கள் பலவாகி
விட்டன. தவறான யுகத்தில் வாழும் நீங்கள், சவுதி நண்பர்களைத் தொடர்பு கொண்டு, இது பற்றி மேலும் தெளிவடையுங்கள்.

இரண்டு முரணான விசயங்களை பொதுமைப்படுத்தி அதனை இணைத்து விவாதிப்பது முறையானது அல்ல.

ஒவ்வொன்றூம் அவரவர் நம்பிக்கைகள் அதில் திணிப்பு வேண்டாம், அதை பற்றிய விமர்சனங்கள் வேண்டாம் என்று ஒருபுறம்,
போகிற போக்கில் இன்னொருவருடைய நம்பிக்கையை கிண்டல் செய்வது, அதைப் பற்றி கேட்கும் போது மீண்டும் நம்பிக்கைகளின்
பின்னால் ஒளிந்து கொள்வது - உங்கள் பார்வையில் அது சாதுர்யம்

பர்தா ஏன் என்று ஏராளமான பதிவுகளில் இஸ்லாமிய சகோதரர்கள் விளக்கியிருக்கிறார்கள். படித்து பார்த்து கொள்ளுங்கள்.
மேலும் பர்தா விவகாரம் பற்றியும் வண்டியோட்டகூடாது என்று சொன்ன நாட்டைப்பற்றியும் மரத்தடி குழுமத்தில் ஏற்கனவே விவாதங்கள்
நடைபெற்றிருக்கிறது என்பதும் தெரியும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால் ஒரு தனிப்பதிவை தொடங்குங்கள். விவாதிக்கலாம்.

ஆகையால் நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் இருந்தால் சொல்லுங்கள்.

ஒரு சமூக கட்டமைப்பின் உட்பிரிவுகளுக்குள் நடக்கும் விவாதத்தை வேறு பக்கம் நகர்த்த வேண்டாம்.

நான் மந்திரம் சொல்லாமல் திருமணம் செய்யலாம் என்பதற்கே இவ்வளவு குதி குதிக்கிறீர்கள்.

ஆனால் மாட்டை கட்டுவது போல் தாலி எதற்கு என்று கேட்கிறீர்கள்.

உங்களின் இந்த சிந்தனை தெளிவு என்னுள் மகிழ்வை ஏற்படுத்துகிறது.

இங்கு ஞாபகப்படுத்தி கொள்ளவேண்டிய ஒரு செய்தி - பழந்தமிழர் மரபில் தாலி கிடையாது. வெறும் மலர்கள்தான்.


//குழலியின் பதில் பதிவில் சில பின்னூட்டங்களில், மேலாடையின்றி பெண்களை உலவ விட்டு (கேரளாவில்) தங்களது வக்கிரத்தைத்
தீர்த்துக்கொண்ட பார்ப்பனர்கள் என்பது போல் யாரோ எழுதியிருந்ததைப் படித்தேன். அதற்கு முன் கேசாதிபாதம் வரை மறைத்து
ஆடையணிந்தவர்களை வலுக்கட்டாயமாக ஆடை துறக்கச் செய்து அரை நிர்வாணமாக உலவும்படி பார்ப்பனர்கள் செய்தார்களா என்ற
கேள்வி மனதில் எழுந்தது. //

எழுந்து என்ன செய்தது என்பதை சொல்லுங்கள். அதைப்பற்றி பிறகு விவாதிப்போம்

//நவீனத்தின் உச்சத்திலிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் சில ஆப்ரிக்கப் பழங்குடிகள் மேலாடையில்லாது உலவுவதை அவ்வப்போது
டாக்குமண்ட்ரிகளில் காட்டுகிறார்கள். அவர்கள் அப்படி உலவுவதில் அவர்களுக்குக் கிலேசங்கள் இல்லை. நாகரீகப் போர்வையில்
மாட்டிக்கொண்டிருக்கும் நாகரீகச் சிகாமணிகளாகிய நம் கண்களுக்கு அது அடக்கு முறையாகத் தெரியக்கூடும். அதற்கும் பார்ப்பனர்கள்
காரணம் என்றும் யாராவது சொல்லக் கூடும்.//.

இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதைதான்.

இது அப்பட்டமான ஊடக வன்முறைகளே. ஒரு இனத்தின் வாழ்வியல் நிகழ்வுகளை, அவருகளுக்குள் இருக்கும் பேதமில்லாத வாழ்க்கைமுறைகளை
பதிவு செய்கிறேன் எனும் போர்வையில் அதை அவர்களின் நாகரீகமற்ற தன்மையாக சித்தரித்து விற்கின்ற அவலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இது மாதிரியான டாக்குமண்ட்ரிக்கள் எடுப்பவர்கள் மீதும் அவர்களின் நோக்கங்கள் மீதும் கடுமையான விவாதங்கள் உலகளவிலும் நடைபெற்றிருக்குறது. இந்தியாவிலும் இது மாதிரியான டாக்க்மண்டிரி
எனும் போர்வையில் பழங்குடி மக்களின் வாழ்வியலை தவறான வெளிச்சபார்வைக்கு கொண்டு செல்வதும் கண்டிக்கப்பட்டுள்ளது. இது
உலகெங்கும் பொதுவாக கண்டிக்கபட்டு வரும் விசயம். இதன் காரணம் கொண்டே, அந்தமான தீவுகள் மற்றும் பழங்குடிகள் வாழும் இடங்களில் பிற நாட்டவர்களோ, அல்லது
டாக்குமெண்டரி எடுக்கும் நம் நாட்டவர்க்கோ அனுமதி இந்திய அரசு கொடுப்பதில்லை. தேவையானால், விசாரித்து கொள்ளுங்கள்.
ஆனால், இத்தகைய ஒரு வலுவான அரசு பழங்குடிகளைப் பாதுகாக்க, ஆப்பிரிக்காவில் இல்லை என்பதாலும் இது நிகழ்கிறது.இதில்
பார்ப்பணர்களை எதற்கு இழுக்கிறிர்கள் என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்கு தெரிந்திருக்கும் போலும். ஒரு வேளை அதே பார்ப்பானிய சிந்தனையோட்டமுடையவரகளோ?

//மத அடையாளங்கள் எல்லா மதங்களிலும் உண்டு. வேதங்களும் எல்லா மதங்களிலும் உண்டு. அனைத்து மறைகளிலும் தற்காலத்திற்கு
ஒவ்வாத நிறைய நம்பிக்கைகளும் வழக்கங்களும் உண்டு; இதை யாராலும் மறுக்க முடியாது. நம்புவர்கள் நம்பிக்கொண்டு அவ்வழியே
செல்லட்டும். நம்பாதவர்கள் - இவற்றை நம்பமாட்டோம் என்ற நம்பிக்கையோடு - ஒரு வழியில் செல்லட்டும். செல்லும் வழி எவ்வழியாக
இருந்தாலும் அடையுமிடம் ஒன்றே. என் வழி பெரிது உன் வழி பெரிது என்றும் அடித்துக்கொள்ளாத - சமாதான வாழ்க்கைப் பயணமே
நமக்குத் தேவை.//

உங்கள் எண்ணம் போலவே சமாதான வாழ்க்கை பயணம் தான் எல்லோருக்கும் தேவை.

சனாதான வாழ்க்கை அல்ல.

நண்பன் said...

// இரண்டு முரணான விசயங்களை பொதுமைப்படுத்தி அதனை இணைத்து விவாதிப்பது முறையானது அல்ல.

ஒவ்வொன்றூம் அவரவர் நம்பிக்கைகள் அதில் திணிப்பு வேண்டாம், அதை பற்றிய விமர்சனங்கள் வேண்டாம் என்று ஒருபுறம்,
போகிற போக்கில் இன்னொருவருடைய நம்பிக்கையை கிண்டல் செய்வது, அதைப் பற்றி கேட்கும் போது மீண்டும் நம்பிக்கைகளின்
பின்னால் ஒளிந்து கொள்வது - உங்கள் பார்வையில் அது சாதுர்யம்

பர்தா ஏன் என்று ஏராளமான பதிவுகளில் இஸ்லாமிய சகோதரர்கள் விளக்கியிருக்கிறார்கள். படித்து பார்த்து கொள்ளுங்கள்.
மேலும் பர்தா விவகாரம் பற்றியும் வண்டியோட்டகூடாது என்று சொன்ன நாட்டைப்பற்றியும் மரத்தடி குழுமத்தில் ஏற்கனவே விவாதங்கள்
நடைபெற்றிருக்கிறது என்பதும் தெரியும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால் ஒரு தனிப்பதிவை தொடங்குங்கள். விவாதிக்கலாம்.

ஆகையால் நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் இருந்தால் சொல்லுங்கள்.//

நன்றி.

உங்கள் மதத்திற்குள் நடக்கும் விவாதத்திற்குள் நுழைந்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் வந்து விடுமோ என்ற நிலமையைத் தவிர்த்து, நேர்மையாக விவாதத்தை நடத்திச் செல்வதற்கு.

உங்களைப் போன்ற இளைஞர்களின் விழிப்புணர்ச்சி, இன்றைய சமுதாயத்துக்கு அவசியம் தேவை.

Keep it up

பர்தா, பெண்கள், மற்றும் பிற நம்பிக்கைகள் பற்றிய விமர்சனங்களைத் தனித்தலைப்பாக தொடங்கினால், பதில் சொல்கிறோம்.

விவாதத்தைத் திசை திருப்ப மட்டுமே, இந்த மாதிரி மாற்று மதத்தினரை இழுத்துக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை அன்பர்கள் கை விட்டு, விவாதிக்கப்படும் பொருளை ஒட்டியே விவாதித்துச் செல்லுங்கள்.

புத்தாண்டு வாழ்த்துகள்,

அன்புடன்
நண்பன்

இப்னு பஷீர் said...

இந்துமத சம்பிரதாயங்களைப் பற்றிய ஒரு பதிவில் திரு. சுந்தர் இஸ்லாத்தை வம்புக்கு இழுத்திருப்பது தேவையற்றது.

//...முகலாயப் படையெடுப்பில்; ஆக்கிரமிப்பில் நிகழ்ந்த இந்துப் பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் பற்றியும் - குறிப்பாக மணமாகாத பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றியும்...//

திரு. சுந்தர் அவர்கள் அவரது இந்த்க்கூற்று பற்றி தயவு செய்து ஆதாரங்களுடன் ஒரு பதிவு எழுத வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

//எதற்காக ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பர்தா அணியக் கட்டாயப் படுத்த வேண்டும்? இந்நாகரீக காலத்திலும் ஏன் பெண்கள் வண்டியோட்டக் கூடாது (இந்தியாவில் அல்ல).//

இதையெல்லாம் பற்றி விவாதிக்க சுந்தர் தயார் என்றால் என்னைபோன்ற முஸ்லிம் வலைப்பதிவர்களும் தயார். முத்துக்குமரனின் பதிவின் நோக்கத்தை திசை திருப்பாமல் நீங்கள் ஒரு தனி பதிவு எழுதுங்கள்.

//அதற்கு முன் கேசாதிபாதம் வரை மறைத்து ஆடையணிந்தவர்களை வலுக்கட்டாயமாக ஆடை துறக்கச் செய்து அரை நிர்வாணமாக உலவும்படி பார்ப்பனர்கள் செய்தார்களா என்ற கேள்வி மனதில் எழுந்தது. //

நீங்கள் முஸ்லிம்களை குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் நல்லது (உங்கள் பதிவில்)

//வேதங்களும் எல்லா மதங்களிலும் உண்டு. அனைத்து மறைகளிலும் தற்காலத்திற்கு ஒவ்வாத நிறைய நம்பிக்கைகளும் வழக்கங்களும் உண்டு; //

உங்கள் வேதங்களிப் பற்றி நீங்கள் இப்படி சொல்லிக்கொள்ளலாம். யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. ஆனால் மற்ற மதங்களின் வேதங்களையும் இப்படி ஒரு பொதுப்படையான தன்மைப்பெயருக்குள் அடைக்க நீங்கள் அந்த வேதங்களை எந்த அளவிற்கு ஆய்ந்து அறிந்திருக்கிறீர்கள்?

முத்துகுமரன் said...

என் வார்த்தைக்கு மதிப்பளித்து உங்கள் எண்ணத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி உஷா.

ஆனால் உங்கள் பதிவு ஒரு பெண்ணின் கருத்தை பிரதிபலிக்காமல் போனது ஏமாற்றமே

நண்பன் said...

// உங்கள் பதிவு ஒரு பெண்ணின் கருத்தை பிரதிபலிக்காமல் போனது ஏமாற்றமே //

ஆமாம். பிரதிபலிக்கவில்லை தான்.

நுனிப்புல் எழுத்துகளில் ஆழம் இருக்காது.

முன்பு புதுமைப் பெண் வேடமிட்டதை அறிவேன்.

பர்தாக்களைக் குறித்து திருவாய் மொழிந்த சகோதரியின் முற்போக்குத் தனத்தை அறிவேன்.

அன்று தாக்கப்படுவதற்கு இஸ்லாம் கிடைத்தது.

ஆனால், இன்று?

Sundar Padmanaban said...

//சுந்தர இம்புட்டு நாளா அய்யிருன்னு எனக்கு தெரியாது.//

மரத் தடி அண்ணே! அப்படியா? எனக்கும் தெரியாதுங்க :) அப்ப இத்தினி நாளு நான் நாட்டுக்கோட்டை செட்டியார்னு நினைச்சுக்கிட்டு இருந்தீங்களா? மன்னிக்க. நான் ஐயர் வாளோ வீர வாளோ இல்லை :) உங்களுக்கு நான் என்னவாக இருந்தால் 'செளகரியமோ' அதாக வைத்துக்கொள்ளுங்கள்.

சாதி அடையாளங்களை வைத்துக்கொண்டு, பழகுபவர்கள் அனைவரிடமும் அவ்வடையாளங்களைக் கண்டுபிடிக்க தொடர்ச்சியாக மனதில் Cookie ஒன்றை ஓட்டிக்கொண்டே இருந்து, கண்டுபிடித்ததும் கண்டுபிடிப்பைப் பொருத்து புன்முறுவலோ புருவம் நெறிதலோ செய்யும் ஆசாமிகளை நான் மனதார வெறுக்கிறேன். அவர்களைப் பற்றிய நினைப்பே என்னுள் ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

முத்துக்குமரன்,

//என் அடிப்படையான கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் எதுவும் இல்லை. உங்களின் இந்த மவுனத்தை என் கருத்துகளுக்கான
சம்மதமாக எடுத்து கொள்கிறேன்.//

உங்களின் அடிப்படையான கேள்வியாக நான் புரிந்து கொண்டது என்னவென்றால்: (என் புரிந்து கொள்ளல் சரியென்றால் பின்வரும் என் கருத்தை வாசிக்கவும். தவறென்றால் ஒதுக்கிவிடவும்.)

1. வேத மந்திரங்கள் பெண்களை இழிவு படுத்துகின்றன. இது பெண்களின் மீதான உளவியல் வன்முறை. ஆதலால் இம்முறைகளில் திருமணம் நடப்பதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்து 99% மந்திரம் சொல்லுபவரைத் தவிர மணமகனுக்கோ அல்லது மணமகளுக்கோ அல்லது திருமணத்தில் கலந்துகொண்டிருக்கும் உறவினர்களுக்கோ இம்மந்திரங்களின் அர்த்தம் யாருக்கும் தெரியாது; புரியாது. கோவிலில் அர்ச்சனை என்ற பெயரில் பூசாரி சொல்லும் மந்திரங்களில் ஒரு அட்சரம் கூட எனக்குப் புரியாது.

"அனைவரது நன்மைக்காக, நன்றாக இருக்கவேண்டும் என்று மந்திரங்கள் சொல்லுகிறார்கள்; யாகம் வளர்க்கிறார்கள்; வீட்டில் தீபம் ஏற்றுகிறார்கள். பண்டிகைகளை ஏற்படுத்திக் கொண்டாடுகிறார்கள்" என்ற வரையில்தான் எனது புரிந்துகொள்ளல்கள். எனக்கு எந்த வேதமும் தெரியாது. நீங்கள் குறிப்பிட்டதால் அந்த மந்திரத்தைப் பற்றி இணையத்தில் தேடிப்பார்த்ததில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எனது முதல் பின்னூட்டத்தை இட்டேன்.

புரியாமல் காதில் விழும் மந்திரங்களால் ஒரு நஷ்டமும் இல்லை; நம்பிக்கையினடிப்படையில் செய்யப்படும் சடங்குகளாலும் எந்த நஷ்டமுமில்லை என்னும் போது இதைத் திருமணத்திற்கு முன்பு அனைத்து இளைஞர்களும், யுவதிகளும் படித்துப் புரிந்து கொண்டு, பின்பு அவை இல்லாமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எந்த அளவு நடைமுறையில் சாத்தியப் படும் விஷயம் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி மந்திரங்கள் பெண்களின் மீதான துவேஷங்கள் இழிவுகள் வன்முறைகள் என்று உணர்ந்தவர்கள், தெரிந்தவர்கள் மந்திரங்களில்லாத தாலியுமில்லாத சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொள்வதே ஒரே வழி. இதற்கு மேல் என்ன தீர்வுகள் இருக்கின்றன என்பது சிற்றறிவுக்கு எட்டவில்லை.

2. ஒரு மதத்தின் உட்பிரிவுகளில், ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அவர்களது வன்முறைகளையும் இழிவுகளையும் மற்ற பிரிவுகள் மீது திணிக்கின்றனர்.

இச்செய்தியை உங்களது பிரதான பதிவில் என்னால் காணமுடியவில்லை. நீங்கள் சொல்லியிருந்தது இந்த மந்திரங்களை வைத்துப் பெண்களை இழிவு செய்கிறார்கள். நான் புரிந்து கொண்டது பார்ப்பனர்கள் இம்மந்திரங்களைச் சொல்லி பார்ப்பனப் பெண்களை இழிவு படுத்துகிறார்கள் என்று. பார்ப்பனர்கள் மற்ற ஜாதிக்காரர்களை வேண்டுமென்றே இம்மந்திரங்களைச் சொல்லித்தான் திருமணம் நடத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்தி மற்ற ஜாதிக் காரர்கள் மீது உளவியல் ரீதியாக வன்முறை செய்துள்ளார்கள் என்று நீங்கள் சொல்ல வந்திருந்தால், மன்னிக்க, என் பின்னூட்டம் "இது உண்மையெனும் பட்சத்தில் அப்படி வன்முறையை நடத்தியவர்கள் கண்டனத்துக்குரியவர்கள்" என்று ஒரு வரியில் முடிந்து போயிருக்கும்.

//இறந்த காலத்தின் பிணவடை நிகழ்காலத்திலும் தொடரக்கூடாது என்பதுதான் என் எண்ணம். //

என் எண்ணமும் அதுவே. அதற்கான எத்தகைய (வன்முறையற்ற) முயற்சிகளையும் நான் ஆதரிக்கிறேன்.

//அப்பாவிதனமா கேள்விகள் கேட்கலாம். ஆனால் இந்த அளவுக்கு அப்பாவிதனமா கேக்குற மாதிரி நடிக்கிறது கொஞ்சம் அதிகம்
இந்த வேத மந்திரங்கள், சாதி என்ற சமூக கட்டமைப்புக்குள் ஏன் புத்திசாலிதனமாக இஸ்லாமியரையும் கிருத்துவர்களையும் இணைக்கிறீர்கள்//

எந்த வித அப்பாவித்தனத்தோடு (நடிப்போடு)ம், புத்திசாலித்தன இணைப்புகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் நான் அதை எழுதவில்லை. அப்படி தொனித்திருந்தால் என் தவறு. மன்னிக்கவும். நீங்கள் குறிப்பிட்டிருந்தது

"இந்த சமூக வழக்கத்தை தங்களைத் தாண்டி மற்றவர்கள் மீதும் திணிக்கும் போது அதன் மீதான விமர்சினங்களூம், அதிலிருந்து விலகக் கோரும் உரிமையும் தவிர்க்க முடியாதவை."

இதை நேரடியாக "இந்து மதத்திற்குள் பார்ப்பனர்கள் என்ற பிரிவினர் மற்ற பிரிவினர் மீது தமது வழக்கங்களைத் திணித்து வன்முறை செய்திருக்கிறார்கள்" என்று நீங்கள் சொல்லியிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது. இப்போது எனக்குத் தெளிவாகிவிட்டது. மற்ற மதத்தினரை (ஏன் எம்மதத்தினரையும்) இழுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதில் ஆர்வமோ ஈடுபாடோ இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன். நண்பர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க.

//ஆவணங்கள், பதிவுகள் கிடையாது.\
அப்பிடி இருந்தால் அதைக் காட்டுங்கள்.//

பதிவுகள் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. அது சரி. இது என்ன வாதம் என்று புரியவில்லை. பதிவுகள் ஆவணங்கள் இருந்தால்தான் பேசவேண்டும் என்றால் "பார்ப்பனர்கள் மந்திரங்களை மற்ற சாதிகளின் மீது திணித்திருக்கிறார்கள்; உளவியல் ரீதியாக வன்முறை செய்தார்கள; இழிவு படுத்துகிறார்கள் " என்று ஆவணங்கள், பதிவுகள் வைத்துக்கொண்டுதான் நீங்கள் பேசுகிறீர்களா? இதை அப்பாவித்தனத்தோடோ புத்திசாலித்தனமான கேள்வியோடோ கேட்கவில்லை. நிஜமாகவே தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தினால் கேட்கிறேன். அப்படி இருக்கிறதென்றாலும் காட்டுங்கள் என்று கேட்க மாட்டேன் :)

//பெண்னின் ஆதாரத்தை களங்கப்படுத்தும் இந்த மந்திரங்கள்தான் பெண்கள் மீதான உளவியல் வன்முறைகளின் ஆணிவேர்.//

நான் குறிப்பிட்டது உலகளாவிய அளவில் பெண்களின் மீதான - இன்றைய தேதிவரையில் - நடத்தப்படும் வன்முறைகளைப் பற்றி. நீங்கள் ஒரு நாட்டில் ஒரு மத்திற்குள், சில ஜாதிப்பிரிவுகளுக்குள் நிகழ்வதைப் பற்றிச் சொல்கிறீர்கள். மொத்ததில் பெண்களின் மீதான வன்முறைகள் - பார்ப்பனப் பெண்களின் மீதான வன்முறைகளையும் சேர்த்து - அறவே ஒழிக்கப் பட வேண்டியவை. (இந்தப் புள்ளியிலும் நான் உங்களுடன் இணைகிறேனா?)

//ஆணி வேரை அறுக்காமல் மற்ற களைகளை நீக்குவதில் ஒரு மாற்றமும் ஏற்படாது.

ஏனுங்க ரெம்ப கவனமா வேத மந்திரங்களை இந்த வன்முறைகளுக்கு வெளியே தள்ளும் புனிதப்பூச்சு வேலை//

உலகளாவிய அளவில் இன்று நடக்கும் பெண்களின் மீதான வன்முறைகளுக்கு "ஆணிவேர்" இந்தியாவில், இந்து மதத்தில், பார்ப்பனர்கள் என்ற உட்பிரிவினரின் வேத மந்திரங்களே காரணம் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. மன்னிக்க. எம்மதங்களைப் பின்பற்றுவோருக்கும் அம்மதங்களின் வேதங்கள் புனிதமானவை. அது அவர்களது நம்பிக்கைகள். அப்புனிதத்தை இந்து மதத்திற்கு ஏன் மறுக்கவேண்டும்? மதசார்பற்றவர்களாக இருந்துவிட்டுப் போகலாமே? நான் நம்புவது "உடல்ரீதியாக வலியவர்களாக இருக்கும், பீடத்தில் அமர்ந்துகொண்டு, எல்லா மதிப்பீடுகளையும் நிர்ணயித்த, நிர்ணயிக்கும் ஆண்கள்தான் பெண்கள் மீதான வன்முறைக்கு ஆணிவேர், மரம், கிளை, இலை எல்லாம். அவர்கள் பயன்படுத்தும் வன்முறை ஆயுதங்களில் இம்மாதிரியான மந்திரங்களும் அடங்கியிருக்கலாம் - அவற்றின் பொருள் நீங்கள் சொல்வதாக இருக்கும்பட்சத்தில்".

//இது இந்து சமயத்திற்குள் மற்ற பிரிவனிர்களிடையே தங்கள் பழக்க வழக்கங்களை, சடங்குகளை திணிக்கும் செயல்களைத்தான் குறிப்பிட்டி இருக்கிறேன்.//

இதை உங்கள் பிரதான பதிவில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதால் குழப்பம். இப்பது தெளிவாகிவிட்டது.

//ஆமாம். ஆனால் நம் நா(வீ)ட்டில் நடப்பது என்ன? பெண்களுக்கு ஓய்வைக் கொடுக்கிறோமா? தீண்டாமை செய்கிறோமா?அவரவர் மனசாட்சிக்கு தெரியும்...//

சுந்தரின் மனசாட்சி: "யம்மாடி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. இன்னிக்காவது என்னை காப்பி போட விடு. எனக்கு உப்புமா மட்டும் செய்யத் தெரியும். அது வேண்டான்னா நீ தெம்பாகிற வரைக்கும் ஹோட்டல்லருந்து வர வச்சு சாப்ட்டுக்கலாம். பொண்ணுங்களைத் தயார்பண்ணி ஸ்கூல் அனுப்புறதை நான் பாத்துக்கறேன். நீ கொஞ்சம் தூங்கு. உனக்கும் சேத்து லஞ்ச் வாங்கிட்டு வந்துர்றேன். சரியா?"

//இந்த முகலாயப் படையெடுப்புகளில் இருந்து இந்து பெண்களை காப்பதற்காகத்தான் பால்ய விவாகம் என்று கூறியதும் சங்கராச்சாரியார் இல்லை.//

இந்தச் சுட்டியில் http://kamakoti.org/hindudharma/part18/chap4.htm

இப்படிக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டினேன்.

"Vaisnavas and Smartas learned in the sastras held meeting at Kancipuram and Tiruvaiyuaru respectively and put forward the view that, according to the Vedas, girls in the past were married after they had attained puberty. They found an explanation for the origin of the custom of child marriages. Their view was this : After the advent of Islam in India, Hindu girls were abducted and dishonoured in large numbers. Girls already married were spared, they claimed. That is how the now custom of child marriage came into practise. The reformers now argued that we must go back to what they thought was the original Vedic practice and put an end to the uncivilized custom of pre-puberty marriages. "

//ஆனால் மாட்டை கட்டுவது போல் தாலி எதற்கு என்று கேட்கிறீர்கள்.

உங்களின் இந்த சிந்தனை தெளிவு என்னுள் மகிழ்வை ஏற்படுத்துகிறது.

இங்கு ஞாபகப்படுத்தி கொள்ளவேண்டிய ஒரு செய்தி - பழந்தமிழர் மரபில் தாலி கிடையாது. வெறும் மலர்கள்தான//

பழங்கன்னடர், பழந்தெலுங்கர், மற்ற பழங்குடியினரின் மரபிலும் - மொத்த இந்தியாவிலும் இம்மரபு கிடையாதென்றே வைத்துக்கொள்வோம். ஆக தாலி கைபர் கணவாய் மூலமாக வந்த விஷயம் என்று சொல்கிறீர்கள். இருக்கட்டும். எனக்குத் தெரியாது. உங்களிடம் வரலாற்றுப் பதிவுகளோ வரலாற்று ஆவணங்களோ காட்டுமாறு கேட்கமாட்டேன் :)

முத்துக்குமரன். தமிழர் தமிழ் என்பதை விடுங்கள். உங்களின் பொதுவான செய்தி : இந்தியாவில் இருக்கும் பார்ப்பன ஜாதியினர் இந்தியாவில் இருக்கும் மற்ற இந்து மத ஜாதியினர் மீது அவர்களது வேத மந்திரங்களால் வன்முறை செய்கிறார்கள் - சரிதானே?

ஒரு நூலிழையைப் பிடித்துப் போகும்போது, திடீரென்று தமிழர் மரபு என்றால் எனக்கு மறுபடியும் குழம்புகிறது. அப்படியென்றால் மற்ற மாநிலங்களில் இப்பிரச்சினை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. (இதிலும் எவ்வித அப்பாவித்தனமும் புத்திசாலித்தனமும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறேன்).

// இத்தகைய ஒரு வலுவான அரசு பழங்குடிகளைப் பாதுகாக்க, ஆப்பிரிக்காவில் இல்லை என்பதாலும் இது நிகழ்கிறது.இதில்
பார்ப்பணர்களை எதற்கு இழுக்கிறிர்கள் என்று எனக்கு புரியவில்லை//

குழலியில் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது:

// எம் சமூகத்தை கைபர், போலன் கணவாய் வழி (படையெடுத்து)வந்த வந்தேறிகள் காலம் காலமாக அடிமைப் படுத்தி வைத்திருந்ததையும், எம் சகோதரிகளை மேலாடை இட விடாமல் அரை நிர்வாணமாய் அலையவிட்டு(இப்பொழுதும் கேரள மண்ணின் சில இடங்களில் உண்டு) தனது வக்கிர கழிசடை சிந்தனைக்கு வடிகால் தேடியதையும்//

இதைத் தான் "ஏற்கெனவே கேசாதி பாதம் வரை ஆடையணிந்தவர்களை ஆடைகளைத் துறக்கச் செய்து உலவ விட்டார்களா பார்ப்பனர்கள்? என்ற கேள்வி எழுந்தது" என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு இஷ்னு பஷீர் என்ற நண்பர் "நீங்கள் முஸ்லிம்களை குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரிகிறது." என்று குறிப்பிட்டிருக்கிறார். சத்தியமாக இல்லை ஐயா. எந்த மதத்தினரையும் புண்படுத்தும், கிண்டல் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை என்பதை மறுபடி தெரிவித்துக் கொள்கிறேன்.

//ஆகையால் என் அடையாளத்தை தவறாக சித்தரிக்க முயற்ச்சிக்க வேண்டாம்.//

நான் யாரையும் "அடையாளம்" கண்டுகொண்டு பிறகு பழகுகிற ஆசாமி இல்லை. நான் காணவிரும்பும் ஒரே அடையாளம் 'நட்பு' என்பதே.

யாரையும் வம்புக்கிழுக்கும் உத்தேசம் எனக்கு இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு மத இறை நம்பிக்கைகளில் ஆர்வம் இல்லை. அதற்காக மற்றவர்களின் நம்பிக்கையைக் கிண்டல் செய்கிற வக்கிர மனம் எனக்கு இல்லை. நானும் மும்மதத்தவர்களின் தொழுகை இடங்களுக்குப் போயிருக்கிறேன். எல்லாவிடங்களிலும் எல்லாவற்றையும் இயக்குகிற பரம்பொருளை உணர்ந்திருக்கிறேன். இதில் தொழுகையோ, சிலுவையோ, குங்குமமோ ஒரு குறியீடாகவே, நம்பிக்கையாகவே பார்க்கிறேன்.நம்பிக்கைகளைச் சார்ந்து வாழ்க்கையை நடத்திச் செல்வதும், சாராத வாழ்வு வாழ்வதும் அவரவர் விருப்பம். அடுத்தவர்களின் நம்பிக்கைகளை அவமதிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.

//நான் மந்திரம் சொல்லாமல் திருமணம் செய்யலாம் என்பதற்கே இவ்வளவு குதி குதிக்கிறீர்கள்.//

உங்கள் கருத்துகளை நீங்கள் பதிவு செய்வது போல், அதற்கு எதிர்மறையான கருத்துகளைச் சிலர் பதிவு செய்தால் அவர்கள் குதிப்பதாக அர்த்தம் என்று இப்போது புரிந்துகொண்டேன்.

நண்பன்,

//விவாதத்தைத் திசை திருப்ப மட்டுமே, இந்த மாதிரி மாற்று மதத்தினரை இழுத்துக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை அன்பர்கள் கை விட்டு, விவாதிக்கப்படும் பொருளை ஒட்டியே விவாதித்துச் செல்லுங்கள்.//

எவ்வித உள்நோக்கமின்றி சாதாரணமாக எழுதியதைத் தயவுசெய்து தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். விவாதிக்கப்படும் "பொருள்" என்னவென்று இப்போது எனக்கு உள்ளங்கை நெல்லிக் கனியாகப் புரிந்துவிட்டது. :)

திரு. ibnu basheer அவர்களுக்கு,

//உங்கள் வேதங்களிப் பற்றி நீங்கள் இப்படி சொல்லிக்கொள்ளலாம். யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. ஆனால் மற்ற மதங்களின் வேதங்களையும் இப்படி ஒரு பொதுப்படையான தன்மைப்பெயருக்குள் அடைக்க நீங்கள் அந்த வேதங்களை எந்த அளவிற்கு ஆய்ந்து அறிந்திருக்கிறீர்கள்?//

எனக்கு எங்கள், உங்கள், அவர்களின் என்று எந்தவித வேதத்தைப் பற்றியும் ஒரு அட்சரம் கூடத் தெரியாது. "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை; தந்தை சொல்மிக்க மந்திரங்கள் இல்லை" என்பது போன்ற எளிய மந்திரங்கள் தெரியும். அவ்வளவுதான். பெற்றோர்கள் மகிழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் செய்யச் சொல்வதைக் கேள்வி கேட்காமல் செய்யும் சாதாரண மகன் நான் - அவற்றில் எனக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும், பிடிக்காவிட்டாலும். அதே போல் நான் நம்புவற்றை என்னைச் சுற்றியிருப்பவர்களும் என்னைச் சார்ந்திருப்பவர்களும் நம்ப வேண்டும் என்று கட்டாயப் படுத்த மாட்டேன். யாராருக்கு எது நம்பிக்கையோ அவற்றை மதித்து அப்படியே அவர்களை - அவர்கள் யாராக இருந்தாலும் - ஏற்றுக்கொண்டு பழகவேண்டும் என்பதே எனது வாழ்க்கை முறை.

எனக்கு எந்த மந்திரமும் மதமும் அதன் fine details-களும் தெரியாது என்பதால் தனிப்பதிவு, பொதுப்பதிவு, ஆழமான புள்ளிகளில் சரியாக இணைந்து கொள்ளும் விவாதங்கள் என்று எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன். இதற்கு முன்பு இத்தகைய கருத்துகளில் யாரோடும் விவாதித்ததில்லை. முழு முதற் காரணம் விஷய ஞானமின்மை, விருப்பமின்மை - அவ்வளவே.

இதெல்லாம் அனைத்துக் கற்றுத் தெளிந்திருக்கும் பண்டிதர்கள் விவாதிக்க வேண்டிய விஷயம் என்று மிகச் சரியாகப் புரிந்துகொண்டேன். "பின் என்ன மயித்துக்கு இங்கு வந்து பின்னூட்டம் இட்டாய்?" என்று கேட்கிறீர்களா? இதே கேள்வியைத் தான் நான் வடிவேலு ஒரு படத்தில் அவரது ஆள்காட்டி விரலை அவரது மூக்குக்கு நேராகவே நீட்டிக் கேட்டுக்கொள்வது போல என்னைப் பார்த்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

இனி தவறுகள் நிகழாது கவனமாக இருப்பேன். அறிஞர்களின் வாதப்பிரதிவாதங்களை மெளனமாகப் படித்துக்கொண்டு, தெரிந்ததை இன்னும் மேம்படுத்திக் கொண்டு - தொந்தரவு எதுவும் கொடுக்காமல்.

யாருக்காவது எனது பின்னூட்டங்களால் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அருள் கூர்ந்து மன்னிக்கவும். அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

(கேள்வி கேட்டதும் ஓடிட்டான்யா. சாதுர்யமாக மறைஞ்சுக்கிட்டான். ஒளிஞ்சுக்கிட்டான் என்று இன்னும் நம்புபவர்களுக்கு - நம்பிக் கொள்ளுங்கள் - நம்புங்கள் - நம்பிக்கைதானே வாழ்க்கை!)

***

முத்துகுமரன் said...

நன்றி சுந்தர்.

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. நேரம் இல்லாததால் இரவு பதில் எழுதுகிறேன்.

ramachandranusha(உஷா) said...

«ýÒûÇ ÓòÐìÌÁÃý,
¦Àñ¸Ùì¸¡É À¢Ãò¾¢§Â¡¸ ¯½÷׸û, ¸ÕòÐì¸û, ±ñ½í¸û ±ýÚ ¾É¢Â¡ö ´ýÚ ¯ñÎ ±ýÀ¾¢§Ä§Â ±ÉìÌ ´ôÒ¨Á¢ø¨Ä. ¬§½¡ ¦Àñ§½¡ «ÅÃÅ÷ ÅÇ÷ó¾ Ýú¿¢¨Ä, ÀÊò¾ ÀÊôÒì¸û, ÀÆÌõ Åð¼õ þÅü¨È ¨Åò§¾ ±ñ½í¸û ²üÀθ¢ýÈÉ ±ýÀÐ ±ý ¾¡ú¨ÁÂ¡É ±ñ½õ.

முத்துகுமரன் said...

உஷா அவர்களின் பதிவின் யுனிகோடாக்கம்:

**அன்புள்ள முத்துக்குமரன்,
பெண்களுக்கான பிரத்தியோக உணர்வுகள், கருத்துக்கள், எண்ணங்கள் என்று தனியாய் ஒன்று உண்டு என்பதிலேயே எனக்கு ஒப்புமையில்லை. ஆணோ பெண்ணோ அவரவர் வளர்ந்த சூழ்நிலை, படித்த படிப்புக்கள், பழகும் வட்டம் இவற்றை வைத்தே எண்ணங்கள் ஏற்படுகின்றன என்பது என் தாழ்மையான எண்ணம். **

Amar said...

முத்துகுமரன்,

அந்த மந்திரத்தின் அர்த்தம் என்னவென்று சரியாக புரிந்து கொண்டு பின்னர் எழுதியிருக்க வேண்டுமோ?

Honestly, if you have the least understanding* of the verses should you not disqualify yourself from writing such a blog entry ?

And quite nice of you to have avoided posting the correct translations of the verses.
Very clever eh ?

I would have appreciated if you had written about the caste issues in these so called Mutts.

முத்துகுமரன் said...
This comment has been removed by a blog administrator.
முத்துகுமரன் said...

சுந்தர் - உங்கள் நீண்ட பதிவிற்கு ஒரு விளக்கமாகக் கொடுக்கிறேன். பதிலுக்குப் பதிலான வாதம் ஒன்றுமில்லை. ஆயினும், தெய்வத்தின் குரல் தமிழாக்கத்தைச் சுட்டியதும்,
ஆங்கிலத்திற்கு தாவுகின்றீர்கள். ஆனால், அங்கேயும் நீங்கள் முழுமையாக வாசிக்காமல், வாதத்தின் ஆரம்பத்தில் சீர்திருத்தக்காரர்களின் வாதம் என்னவென்று கூறிவிட்டு, அதை மறுக்க
தனது வாதத்தைத் தொடர்கிறார். இதை தமிழிலும் நான் குறிப்பிட்டிருந்தேன். மீண்டும் ஆங்கிலத்தில் கீழே கொடுத்திருக்கிறேன்.

மேற்கொண்டு விவாதிக்க விரும்பவில்லை என்று நீங்கள் சொல்லிவிட்டதால், விவாதங்களாக இல்லாமல், தகவலாகத் தருகிறேன் கீழ்க்கண்டவற்றை.

//சாதி அடையாளங்களை வைத்துக்கொண்டு, பழகுபவர்கள் அனைவரிடமும் அவ்வடையாளங்களைக் கண்டுபிடிக்க தொடர்ச்சியாக
மனதில் Cookie ஒன்றை ஓட்டிக்கொண்டே இருந்து, கண்டுபிடித்ததும் கண்டுபிடிப்பைப் பொருத்து புன்முறுவலோ புருவம் நெறிதலோ
செய்யும் ஆசாமிகளை நான் மனதார வெறுக்கிறேன். அவர்களைப் பற்றிய நினைப்பே என்னுள் ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.//

எனக்கும் அந்த ஒவ்வாமை உண்டு சுந்தர்.

என் நண்பர்கள் பலரின் சாதி என்ன என்று இன்னமும் எனக்கு தெரியாது.

பின்னூட்டங்களை edit செய்யும் வசதி இல்லாததால் ஒன்று பதிவிட முடியும் அல்லது நிராகரிக்க முடியும். அதனால்தான் மரத் தடியின்
பின்னூட்டத்தை முழுமையாக பதிவிட வேண்டியதாயிற்று. உங்களின் சாதி என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு இல்லை.
இந்த வகையில் உஷா அவர்களின் பின்னூட்டங்கள் தொடர்பான முடிவையே நானும் பின்பற்ற எண்ணி இருக்கிறேன்.
பதிவுகளுக்கு சம்பந்தமில்லாத தனிமனித தாக்குதல்கள், விமர்சனங்களை இனி பதிவிட போவதில்லை.

//எனக்குத் தெரிந்து 99% மந்திரம் சொல்லுபவரைத் தவிர மணமகனுக்கோ அல்லது மணமகளுக்கோ அல்லது திருமணத்தில்
கலந்துகொண்டிருக்கும் உறவினர்களுக்கோ இம்மந்திரங்களின் அர்த்தம் யாருக்கும் தெரியாது; புரியாது. கோவிலில் அர்ச்சனை என்ற
பெயரில் பூசாரி சொல்லும் மந்திரங்களில் ஒரு அட்சரம் கூட எனக்குப் புரியாது.

"அனைவரது நன்மைக்காக, நன்றாக இருக்கவேண்டும் என்று மந்திரங்கள் சொல்லுகிறார்கள்; யாகம் வளர்க்கிறார்கள்; வீட்டில் தீபம்
ஏற்றுகிறார்கள். பண்டிகைகளை ஏற்படுத்திக் கொண்டாடுகிறார்கள்" என்ற வரையில்தான் எனது புரிந்துகொள்ளல்கள்.//

நாட்டில் பலரின் நிலமை இதுதான். நன்மை நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் மேற்கண்ட சடங்குகளைச் செய்கிறோம் என்ற
நம்பிக்கையை நானும் மதிக்கிறேன். யாருடைய நம்பிக்கையையும் கிண்டல் செய்து மகிழ்ச்சியடையும் குரூர எண்ணத்தில் எழுதப்பட்ட
பதிவு அல்ல. நாம் நம்பிக்கையோடு நம்பிக்கை வைக்கும் பொழுது, அந்த நம்பிக்கையைக் காப்பது அவர்களது கடமை. நம்பிக்கையெனும்
பெயரில் நடைபெறும் வன்முறையை உணர்ந்ததால் அதைப் பதிவு செய்கிறேன்.

//எனக்கு எந்த வேதமும் தெரியாது.
நீங்கள் குறிப்பிட்டதால் அந்த மந்திரத்தைப் பற்றி இணையத்தில் தேடிப்பார்த்ததில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எனது முதல்
பின்னூட்டத்தை இட்டேன். //

உங்களுடைய நேர்மையை நான் பாராட்டுகிறேன்.

//புரியாமல் காதில் விழும் மந்திரங்களால் ஒரு நஷ்டமும் இல்லை; நம்பிக்கையினடிப்படையில் செய்யப்படும் சடங்குகளாலும் எந்த
நஷ்டமுமில்லை என்னும் போது இதைத் திருமணத்திற்கு முன்பு அனைத்து இளைஞர்களும், யுவதிகளும் படித்துப் புரிந்து கொண்டு,
பின்பு அவை இல்லாமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எந்த அளவு நடைமுறையில் சாத்தியப் படும் விஷயம் என்று
எனக்குத் தெரியவில்லை. //

ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் அடியிலிருந்துதான் தொடங்குகிறது.

நான் ஒருவனே இதை மாற்றப்போகிறேன் என்று சொல்லவில்லை.என்னளவில், என்னால் முடியுமளவற்கு ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

சிறுதுளி பெருவெள்ளம்.

//அப்படி மந்திரங்கள் பெண்களின் மீதான துவேஷங்கள் இழிவுகள் வன்முறைகள் என்று உணர்ந்தவர்கள், தெரிந்தவர்கள்
மந்திரங்களில்லாத தாலியுமில்லாத சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொள்வதே ஒரே வழி. இதற்கு மேல் என்ன தீர்வுகள்
இருக்கின்றன என்பது சிற்றறிவுக்கு எட்டவில்லை.//

கண்டிப்பாக இதற்கு மேலான தீர்வை யாரும் எதிர்பார்க்கவில்லை.


2. //ஒரு மதத்தின் உட்பிரிவுகளில், ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அவர்களது வன்முறைகளையும் இழிவுகளையும் மற்ற பிரிவுகள் மீது
திணிக்கின்றனர்.

இச்செய்தியை உங்களது பிரதான பதிவில் என்னால் காணமுடியவில்லை. நீங்கள் சொல்லியிருந்தது இந்த மந்திரங்களை வைத்துப்
பெண்களை இழிவு செய்கிறார்கள். நான் புரிந்து கொண்டது பார்ப்பனர்கள் இம்மந்திரங்களைச் சொல்லி பார்ப்பனப் பெண்களை இழிவு
படுத்துகிறார்கள் என்று. பார்ப்பனர்கள் மற்ற ஜாதிக்காரர்களை வேண்டுமென்றே இம்மந்திரங்களைச் சொல்லித்தான் திருமணம்
நடத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்தி மற்ற ஜாதிக் காரர்கள் மீது உளவியல் ரீதியாக வன்முறை செய்துள்ளார்கள் என்று நீங்கள்
சொல்ல வந்திருந்தால், மன்னிக்க, என் பின்னூட்டம் "இது உண்மையெனும் பட்சத்தில் அப்படி வன்முறையை நடத்தியவர்கள்
கண்டனத்துக்குரியவர்கள்" என்று ஒரு வரியில் முடிந்து போயிருக்கும். //

ஒவ்வொரு வாதத்தையும் சொல்லித் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களிடத்தில், சொல்லித்தானே
ஆக வேண்டி இருக்கிறது. விவாதத்தின் big picture ஐப் புரிந்து கொள்ளவில்லை என்பதால், என்னை காரணம் காட்ட வேண்டாம்.
அது உங்கள் பார்வையின் அகலத்தைப் பொறுத்தது.

//இதை நேரடியாக "இந்து மதத்திற்குள் பார்ப்பனர்கள் என்ற பிரிவினர் மற்ற பிரிவினர் மீது தமது வழக்கங்களைத் திணித்து வன்முறை
செய்திருக்கிறார்கள்" என்று நீங்கள் சொல்லியிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது. இப்போது எனக்குத் தெளிவாகிவிட்டது. மற்ற மதத்தினரை
(ஏன் எம்மதத்தினரையும்) இழுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதில் ஆர்வமோ ஈடுபாடோ இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க. //

பதிவுகள் ஆவணங்கள் இருந்தால்தான் பேசவேண்டும் என்றால் "பார்ப்பனர்கள் மந்திரங்களை மற்ற சாதிகளின் மீது திணித்திருக்கிறார்கள்;
உளவியல் ரீதியாக வன்முறை செய்தார்கள, இழிவு படுத்துகிறார்கள் " என்று ஆவணங்கள், பதிவுகள் வைத்துக்கொண்டுதான் நீங்கள்
பேசுகிறீர்களா?

ஆமாம். நானே அதற்கு சாட்சி. பாதிக்கப்பட்ட என் இனமும் அதற்கு சாட்சி. இதற்கான ஆவணங்கள் - எத்தனை எத்தனை போராட்டங்களாக
நிகழ்ந்திருக்கின்றன என்பதற்கு தமிழ் நாடே சாட்சி. இது கூட தெரியாது என்றால், அது நிச்சயமாக கண்ணை மூடிக் கொண்டீர்கள் என்று தான்
பொருள்.

நீங்கள் கைப்புண்ணிற்கு கண்ணாடி கொண்டு வா என்று சொல்லுகிறீர்கள்.

தூங்குபவனை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது. அப்படி எழுப்பப்போகிறேன் என்று அதிபுத்திசாலித்தன வேலையில்
நான் இறங்கப்போவதில்லை.

***

பெண்னின் ஆதாரத்தை களங்கப்படுத்தும் இந்த மந்திரங்கள்தான் பெண்கள் மீதான உளவியல் வன்முறைகளின் ஆணிவேர்.

//உலகளாவிய அளவில் பெண்களின் மீதான - இன்றைய தேதிவரையில் - நடத்தப்படும் வன்முறைகளைப் பற்றி.
நீங்கள் ஒரு நாட்டில் ஒரு மத்திற்குள், சில ஜாதிப்பிரிவுகளுக்குள் நிகழ்வதைப் பற்றிச் சொல்கிறீர்கள். மொத்ததில் பெண்களின் மீதான
வன்முறைகள் - பார்ப்பனப் பெண்களின் மீதான வன்முறைகளையும் சேர்த்து - அறவே ஒழிக்கப் பட வேண்டியவை.
(இந்தப் புள்ளியிலும் நான் உங்களுடன் இணைகிறேனா?)//

//ஆணி வேரை அறுக்காமல் மற்ற களைகளை நீக்குவதில் ஒரு மாற்றமும் ஏற்படாது.

ஏனுங்க ரெம்ப கவனமா வேத மந்திரங்களை இந்த வன்முறைகளுக்கு வெளியே தள்ளும் புனிதப்பூச்சு வேலை//

//உலகளாவிய அளவில் இன்று நடக்கும் பெண்களின் மீதான வன்முறைகளுக்கு "ஆணிவேர்" இந்தியாவில், இந்து மதத்தில்,
பார்ப்பனர்கள் என்ற உட்பிரிவினரின் வேத மந்திரங்களே காரணம் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
மன்னிக்க. எம்மதங்களைப் பின்பற்றுவோருக்கும் அம்மதங்களின் வேதங்கள் புனிதமானவை. அது அவர்களது நம்பிக்கைகள்.
அப்புனிதத்தை இந்து மதத்திற்கு ஏன் மறுக்கவேண்டும்? மதசார்பற்றவர்களாக இருந்துவிட்டுப் போகலாமே? நான் நம்புவது
"உடல்ரீதியாக வலியவர்களாக இருக்கும், பீடத்தில் அமர்ந்துகொண்டு, எல்லா மதிப்பீடுகளையும் நிர்ணயித்த, நிர்ணயிக்கும்
ஆண்கள்தான் பெண்கள் மீதான வன்முறைக்கு ஆணிவேர், மரம், கிளை, இலை எல்லாம். அவர்கள் பயன்படுத்தும் வன்முறை ஆயுதங்களில்
இம்மாதிரியான மந்திரங்களும் அடங்கியிருக்கலாம் - அவற்றின் பொருள் நீங்கள் சொல்வதாக இருக்கும்பட்சத்தில்". //

மந்திரம் ஓதி மணம் முடிப்பவர்களைப் பற்றித்தான் இங்கு பேசப்படுகிறது. உலகளாவிய பெண்களைப் பற்றி அல்ல.

****

//இந்தச் சுட்டியில் http://kamakoti.org/hindudharma/part18/chap4.htm

இப்படிக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டினேன்.

"Vaisnavas and Smartas learned in the sastras held meeting at Kancipuram and Tiruvaiyuaru respectively and put
forward the view that, according to the Vedas, girls in the past were married after they had attained puberty.
They found an explanation for the origin of the custom of child marriages. Their view was this :
After the advent of Islam in India, Hindu girls were abducted and dishonoured in large numbers. Girls already married
were spared, they claimed. That is how the now custom of child marriage came into practise. The reformers now a
rgued that we must go back to what they thought was the original Vedic practice and put an end to the uncivilized
custom of pre-puberty marriages. "//


தொடக்கம் தாண்டி மேலே போகவில்லை போல இருக்குது.

குழந்தை திருமணம் நடைமுறைக்கு எப்படி வந்தது என்ற சீர்திருத்தவாதிகளின் விளக்கம்தான் நீங்கள் மேலே குறிப்பிட்டது. இந்த
வாதத்தை மறுத்து பால்ய விவாகம்தான் வேத காலத்திலிருந்து பிராமணர்களுக்கு அனுமதிக்கபட்ட உயர்தர திருமணம் என்று
தனது நிலமையை வாதிக்கிறார் பெரியவர்.

காஞ்சி பெரியவரின் வாதமே இது இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட விசயம் அல்ல வேதம் சம்பந்தப்பட்ட விசயம் என்று
தெளிவுபடுத்தி விடுகிறது. தன்னுடைய மத நம்பிக்கையை சிதைப்பதற்கு எந்த ஒரு போலி காரணங்களையும் ஏற்க மறுக்கிறார். சில வரிகள்
உங்கள் வாசிப்பிற்காக:-

1. "In the light of these Vedic mantras and the dharmasastra quoted, are not the reformers right? What is your answer, Svamiji?" I will give my answer.

2. It is for these reasons that the dharmasastras, which are based on the Vedas and which constitute Hindu law, permit eight forms of marriage. In all these eight, the bride and groom have the right to be united in wedlock with the chanting of mantras. But brahma is the highest of the eight forms. In it the bride must not have attained puberty. "Pradanam prak rtoh": -- this statement is in the dharmasastras themselves. A girl's marriage, which has same significance for her that the upanayana has for a boy, must be performed when she is seven years old (or eight years from conception

3. This is our reply to the school of opinion represented by the Rt Hon'ble Srinivasa Sastri. If the mantras in question are chanted at the time of the marriage of girls who have come of age, it does not mean that all marriages are to be celebrated after the girls have attained puberty. According to the brahma form of marriage, the girl must not have had her menarche. There is incontrovertible proof for this in the Vedic mantra chanted at the end of the marriage rite. .

4.Though the reformists quote from the Vedas and sastras in support of their view, they fail to take into account the context in which the relevant passages occur. They see them in isolation. That is why they keep arguing that the customs followed by people steeped in our traditions are contrary to the sastras.

5.In the past the common people did not know how to counter the arguments of the reformists. Even so they did not accept their views thinking it best to follow the practices of their elders, of great men. That is why the bill brought twice by the Rt Hon'ble Srinivasa sastri before the legislative council to amend the marriage act (with reference to the age of marriage) did not receive enough support. Later (Harbilas) Sarda introduced the bill which [on its passage] came to be called the Sarda Act. Many people (in the South) think Sarda was a women and call the law named after him the "Sarda Act". The Central legislative assembly was equally divided on the bill -- 50 percent for and 50 per cent against. Then the British asked one of the nominated members to vote in favour of the bill; and thus the minimum age of marriage for girls was raised by a legal enactment. The bill was passed not on the strength of public opinion but because if the government's intervention. The mind of our British rulers worked thus: "The Congress has been demanding svaraj but we have refused to grant it. Let us give it some satisfaction by being of help in inflicting an injury on the (Hindu) religion. "

மேற்கொண்ட அனைத்தும் நீங்கள் தந்த சுட்டியின் மூலமாக நான் தெரிந்து கொண்டது. இது அனைத்தும் ரைட் ஆனரபிள்சாஸ்திரி வகையறாக்களுக்கு(சீர்திருத்தவாதிகள்) சொல்லப்பட்டது.

நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ள முடியாவிட்டால் மேற்கண்ட வாசகம் 5ன் மொழி பெயர்ப்பாவது -
கடந்த காலத்தில் இந்த சீர்திருத்தவாதிகளின் கூற்றை எப்படி மறுப்பது என்று பாமர மக்கள் அறிந்திருக்கவில்லை.. அதனால் பெரியவர்கள் சொல்படி நடப்போம்...............................


பழங்கன்னடர், பழந்தெலுங்கர், மற்ற பழங்குடியினரின் மரபிலும் - மொத்த இந்தியாவிலும் இம்மரபு கிடையாதென்றே வைத்துக்கொள்வோம்
ஆக தாலி கைபர் கணவாய் மூலமாக வந்த விஷயம் என்று சொல்கிறீர்கள். இருக்கட்டும். எனக்குத் தெரியாது. உங்களிடம் வரலாற்றுப்
பதிவுகளோ வரலாற்று ஆவணங்களோ காட்டுமாறு கேட்கமாட்டேன் :)

ஆவணந்தான காட்டிட்டா போச்சு.......

வெறும் கையில ஒன்னும் மொழம் போடல.....

அகநானூறு, பாடல் 86, நல்லாவூர்க்கிழார் எழுதிய பாடலில் வரும் வரிகள்:

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல்இருங்க் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல்மணம் கழிந்த பின்றை

அகநானூறு, பாடல் 136, விற்றூற்று மூதெயினனார் எழுதிய பாடலில் வரும் வரிகள் 10 - 18 வரை.

மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்புஅமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண்நறு முகையொடு வெண்நூல் சூட்டி
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி
மழைப்பட் டன்ன மணல்மலி பந்தர்
இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றி
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்.......

இதற்கான விளக்கத்தை தமிழ் ஆசிரியர் ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது, தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்
- Dr.K.K. பிள்ளை எழுதிய நூலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

மேலும், ஆண்டாள் நாச்சியார், கண்ணன் தம்மை மணந்ததாகக் கண்ட கனவை தன் தோழியிடம் கூறும் பொழுது, திருமண சடங்குகள் அத்தனையும்
கூறியவிடத்து, தமக்கு, கண்ணன் தாலி கட்டியதாகக் கூறவில்லை. 'மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்தென் கைத்தலம் பற்ற கணாக்கண்டேன் தோழி
நான்' என்று மட்டும் தான் தெரிவிக்கிறார். கந்த புராணம், பெரிய புராணம் ஆகிய நூல்களில் குறிப்பிடப்படும் திருமணங்களிலும் மணமகன், மணமகளுக்குத்
தாலி கட்டியதாகத் தெரியவில்லை. திருமணத்தின் போது மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் - பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு ஏற்படவில்லை
என்று ஊகிக்க வேண்டியது உள்ளது. இவ்வழக்கத்தைத் தெரிவிக்கும் முதல் கல்வெட்டு, கி.பி 958ஆம் ஆண்டுக்கு உரியதாகும்.

இன்னும் விளக்கம் கேட்போருக்கு நாளை இரவில் மீண்டும் தொடர்கிறேன். (இப்போதே மணி 2.30 ஆயிடுச்சி. நாளைக்கு வேற டூட்டிப்பா....)

சமுத்ரா,

I never knew that you were a higher authority than Sankaracharya in the realm of Vedas....

விடிய விடிய கதை கேட்டுட்டு, கட்சீல சீதைக்கு ராமன் சித்தப்பன்னு ஏன் சொல்றப்பா?

கொஞ்சம் கம்முனு கெட(ங்க).

rv said...

////ஆக தாலி கைபர் கணவாய் மூலமாக வந்த விஷயம் என்று சொல்கிறீர்கள்.//

இதை பதிவிலியே வெளிப்படையாக சொல்லியிருக்கலாமே.. இவ்வாறு கூறியிருந்தால் யாருமே உங்கள் கூற்றுப்படி 'குதித்திருக்கமாட்டார்களே' (inclduing me)

நன்றி

குழலி / Kuzhali said...

//குழலியில் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது//
அது பூங்குழலி பதிவுங்க, நம்ம பதிவு இல்லை....

Amar said...
This comment has been removed by a blog administrator.
Sundar Padmanaban said...

//அது பூங்குழலி பதிவுங்க, நம்ம பதிவு இல்லை.//

மன்னிச்சுக்குங்க குழலி. உங்க அங்கதத்திற்கு வந்து அங்க இருந்த பின்னூட்டங்களை படிச்சு அப்புறம் சில சுட்டிகளைச் சுட்டிச் சுற்றியதில் வழிதவறி விட்டதில் விளைந்த குழப்பம். அதை எழுதியது நீங்கள் இல்லை என்பது மட்டும் நினைவில் இருந்தது. :) இனி கவனமாக இருப்பேன். நன்றி.

முத்துகுமரன் said...

//அன்புள்ள முத்துக்குமரன்,
பெண்களுக்கான பிரத்தியோக உணர்வுகள், கருத்துக்கள், எண்ணங்கள் என்று தனியாய் ஒன்று உண்டு என்பதிலேயே எனக்கு ஒப்புமையில்லை.//

மனசு நெறஞ்சு போச்சு உஷா.

பெண்கள் தனியாக, சுயமாக சிந்தித்து இருந்தால் என் போன்றோருக்கு வேலையே இல்லை.

பாரதி கண்ட புதுமை பெண்களை காண இன்னும் எத்தனை காலங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.

முத்துகுமரன் said...

//
//ஆக தாலி கைபர் கணவாய் மூலமாக வந்த விஷயம் என்று சொல்கிறீர்கள்.//

இதை பதிவிலியே வெளிப்படையாக சொல்லியிருக்கலாமே.. இவ்வாறு கூறியிருந்தால் யாருமே உங்கள் கூற்றுப்படி 'குதித்திருக்கமாட்டார்களே' (inclduing me)

நன்றி
//

இந்த விஷயத்தை இங்கு பேசியது சுந்தர் - நான் இல்லை. அதற்குப் பதிலளிக்கையில் தான் அதை மேற்கோள் காட்ட வேண்டிய சூழ்நிலை வந்தது.

இப்பொது தெளிவாயிற்றா ?

Muthu said...

just now i saw this post..i will write after some time after going through the post and comments

Muthu said...

ஒரு குறிப்பிட்ட மந்தரத்தை மட்டும் விமர்சிக்க போய் இவ்வளவு விவாதங்கள..முத்து
குமரன்...அனைத்து திருமண மந்திரங்களையும் படித்து அதன் திரண்ட கருத்தை ஒரு பெரிய பதிவாக போடுங்கள..அவற்றில் உங்கள் கருத்துக்களையும் சேர்த்துக்கொடுங்கள்.....

Related Posts with Thumbnails