தேர்தல் பிரசாரம்: பழ. நெடுமாறனுக்கு அனுமதி

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசியதாக கூறி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தார் பழ. நெடுமாறன். பின்னர் அவரை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

இந் நிலையில் பழ. நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், வரும் சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளை ஆதரித்துத் தேர்தல் பிரசாரம் செய்ய தான் விரும்புவதாகவும், இதற்கு வசதியாக தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஜாமீன் நபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நெடுமாறனின் கோரிக்கையை ஏற்று அவரது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டது.
இருப்பினும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசவோ, பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

நிபந்தனை தளர்த்தப்பட்டதையடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
**நன்றி- தட்ஸ்தமிழ்.காம்**

5 மறுமொழிகள்:

முத்து(தமிழினி) said...

முத்து

"தேசியவியாதி"களுக்கு ஜாலிதான். கலைஞரை போட்டு தாளிக்க இன்னொரு வாய்ப்பு...but i am eager to see how vaiko will react and respond to this......

முத்துகுமரன் said...

என்ன சொல்ல வர்றீங்க முத்து,
யாரை தேசியவியாதினு சொல்றீங்க?????

வை.கோ பழநெடுமாறனை பற்றி எதுவும் பேசமாட்டார் என்றே நம்புகிறேன்.. ஆனால் தேர்தல் அரசியல் சாக்கடையானது என்பதையும் மறுக்க இயலாது

சந்திப்பு said...

நெடுமாறன் யாரை ஆதரிக்கிறார் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

வசந்தன்(Vasanthan) said...

நெடுமாறன் பிரச்சாரம் செய்வாரென்று கேள்விப்படுவது ஆச்சரியமாயிருக்கிறது. ஆனால் சுப.வீ தொடங்கிவிட்டதைப் பார்த்தால் ஐயாவும் குதிப்பார் போல்தான் உள்ளது.

அப்டிப்போடு... said...

நெடுமாறன், சுப.வீ வரிசை நீள்கிறது. ஒன்று சேர்வது மகிழ்ச்சியளிக்கிறது எனக்கு., தம்பிக்கு எப்படி?

Related Posts with Thumbnails