நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே

தமிழகத்தில் பெரியாரும் அவரது தாக்கம் இன்னும் குறையாதிருப்பது பலருக்கு எரிச்சலைத் தருகிறது/தந்துகொண்டிருக்கிறதும். மனிதனின் இயற்கையான கடவுள் பக்தியைக்கூட இன்று தங்கள் சுயநல உணர்வுகளுக்காக உருமாற்றுதலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பெரியாரைப் பற்றிய திரித்தல்களில் ஒன்று அவரது மனைவி இறந்த போது அவர் மகிழ்ந்தவர். அத்தகைய கீழான எண்ணம் கொண்டவர் என்று நிறுவ படாதபாடு படுகிறார்கள். நாகம்மையாரின் மறைவு பெரியாருக்கு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் அவரரே பதிவு செய்திருக்கிறார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாகம்மையார் மறைந்த மூன்று நாட்கள் கழித்து ''குடிஅரசில்'' அவர் எழுதிய தலையங்கத்தின் சில பகுதிகள்..(14.5.33)

நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே..

''எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.33 தேதி ஆவி நீத்தார். நாகாம்மாளை நான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை...

நான் சுயநலவாழ்வில் 'மைனராய்', 'காலியாய்', 'சீமானாக', இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் துறையின் முற்போக்குக்கும் நாகாம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்கமுடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கின்றேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை..

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்தே வந்தேன். ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவுமே விளங்கவில்லையே.

நாகம்மாளை அற்ப ஆயுளென்று யாரும் சொல்லிவிட முடியாது. அவருக்கு 48 வயது ஆனபோதிலும் அது இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய 23.5 வயதிற்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு கஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன்

''--- கடந்த 2,3 வருசங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும்( சங்கரச்சாரிகள் போல - ஆனால் அவ்வளவு ஆடம்பரத்துடன் பணவசூலுக்கல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பயணத்திலேயே இருக்கவேண்டும் என்றும், நமக்கென்று ஒரு வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்திரவாசமோ இருப்பது கூடாதென்றூம் கருதி வந்ததுண்டு. அதற்கு வேறு எந்த தடையும் இருந்திருக்கவில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள். இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு மகிழ்ச்சிக்குரியக் காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையே தருவதாகும்''
*
இதுதான் பெரியார்... வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்த உண்மையான மகாத்மா.. தன் இழப்புகள் கூட மக்களுக்கான தன் பயணத்திற்கு ஒரு வசதி என்று நினைத்தவர் பெரியார். அதைத் திரிப்பவர்களெல்லாம் வக்கிரங்கள் பீடிக்கப்பட்ட மனநோயாளிகள். அவர்கள் முறையான சிகிச்சை பெற்று நலவாழ்வு வாழவேண்டும் என்பதே என் அவா
**நன்றி**
குடி அரசு 14.5.33
''ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்''- என்.ராமகிருஷ்ணன்

23 மறுமொழிகள்:

thiru said...

பெரியாரை போல சமூகநீதிக்காக தன்னை, தனது செல்வத்தை, உழைப்பை, சிந்தனையை, குடும்பத்தை என அனைத்தையும் செலவிட்ட பேரறிவு மிக்க தலைவரை காண்பது அரிது. 95 வயதிலும் மோத்திரப்பையை சுமந்தபடி மூலை முடுக்கெல்லாம் சென்று தமிழினம் மூடநம்பிக்கையிலிருந்தும் பார்ப்பனீய அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெற கருத்துரைகளை அறிவுமுழக்கமாக வழங்கியவர். அதன் பிரதிபலன் தான் இன்று தமிழகம் மதவெறி பா.ஜ.கா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது.

நல்ல பதிவு முத்துகுமரன்!

Sri Rangan said...

முத்துக்குமரன்,வணக்கம்!

நல்லவொரு பதிவைத் தந்திருக்கிறீர்கள்.திரித்தெழுதுபவர்களுக்குத் தகுந்த பதிலைத் தந்தது சிறப்பானது.நன்றி!


அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

சம்மட்டி said...

பெரியார் சந்தர்பவசத்தில் சொல்லியதை பிடித்து தொங்கிக்கொண்டு, தமிழை காட்டுமிராண்டி பாசை என்று சொன்னார் திரும்ப திரும்ப எழுதிவரும் இந்த கூட்டம் ஏற்கனவே பலமுறை நிராகரிக்கப்பட்டு முக்கு உடைக்கப்பட்டதுதான். வரலாறுகளை அறியாத இன்றைய தலைமுறைகளை திசைத்திருப்புவது தான் அவைகளின் நோக்கம்.

கருப்பு said...

பெரியாரைப்பற்றிய மிகவும் அருமையான பதிவைத் தந்த முத்துக்குமரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

பெரியார் எனும் மாமனிதர், மனிதர்களை மனிதராக்க முயன்றார். அது பிடிக்காத சிலர் அவரை கண்டதும் சொல்வார்கள்.

தங்கள் வழியில் தொடர்ந்து நின்று பெரியாரின் சீரிய கருத்துகளைப் பரப்பவும்.

Jay said...

பெரியாரைப் பற்றிய புரிதல்கள் மிகவும் குறைந்தும் திரிந்தும்போய்க்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்களைப் போன்ற இளைஞர் தைரியமாக எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. Periyar Bashing என்பது இணையக்கலாச்சாரமாக ஆக்கப்பட்டுவிட்ட இந்த வேளையில் இதைச் சய்திருக்கிறீர்கள்.
மீண்டும் பாராட்டுக்கள்.
பெரியாரின், 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூல் படித்தற்கிரியது.

siva gnanamji(#18100882083107547329) said...

mozhi oru karuvidhan enru avar karudhinar..adhu ariviyal anugumurai
mozhidhan ellame enbadhu unarvu poorvamanadhu
thurathirushtavasamaga, unarvin adippadayil makkalaith thoondi aadhayam adaindhavargal mozhiyin valarchikku seydhadhu enna?
periyar ezhuthu seerthirutham kondu vandhar...matravargal...?

யாழ்ப்பாணம் said...

முத்துக்குமரன்,
தங்களின் இப் பதிவுக்கு மிக்க நன்றி.
இத் தகவல்கள் எனக்கு இதுவரை தெரியாது. பெரியாரின் வரலாற்றை பள்ளிகளில் கட்டாய பாடமக்க வேண்டும்.

ஜோ/Joe said...

Thumps Up Muththukkumaran!

பரஞ்சோதி said...

நல்லதொரு பதிவு.

பெரியாரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக படித்து அவர் மீது மதிப்பு கூடுகிறது, தொடர்ந்து கொடுங்கள்.

Pot"tea" kadai said...

முத்துக்குமரன்,
பதிவிற்கு மிக்க நன்றி!
மேன்மேலும் இது போன்ற பதிவுகளை இடுமாறு வேண்டுகிறேன். அறியாப்பிள்ளைகளும், செல்லாக்காசுகளும் பெரியாரைத் திரித்தும், தேவைக்குப் புறம்பான இடங்களில் அவர் பெயரை பயன்படுத்துவதையும் தவிர்க்க இது போன்ற பதிவுகள் தேவையாய் இருக்கிறது.

//இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு மகிழ்ச்சிக்குரியக் காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையே தருவதாகும்//

பெரியாரின் பெயர்க் காரணத்திற்கு இது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்!

சந்திப்பு said...

மக்கள் தலைவர்களுக்கு எதிராக இருக்கும் போது திரிக்க முடியாதவர்கள், இறந்த பின் திரிப்பது கேவலமான இழிசெயல். பெரியாருக்கு எதிராக உலவும் பல கட்டுக்கதைகளில் இதையும் சேர்த்து விடலாம். அவர் பிள்ளையாரை வழிபட்டார் என்று கூறியவர்கள் இதையும் கூறுவார்கள், இதற்கு மேலும் கூறுவார்கள்.

முத்துகுமரன் said...

கருத்து சொன்ன திரு, ஸ்ரீரங்கன், சம்மட்டி, விடாது கறுப்பு, ஜெய், சிவஞானம்ஜி, யாழ்ப்பாணம், ஜோ, பரஞ்சோதி, பொட்டீக்கடை, சந்திப்பு ஆகியோருக்கு எனது நன்றிகள்..

பெரியாரின் சிந்தனை செயல் எல்லாம் தமிழ் சமூகத்திற்காகவே சிந்தித்தது. அதை தமிழகமும் உணர்ந்தே இருக்கிறது. அதனால்தான் அவர் இறந்த பின்பும் அவரின் போராட்டம் இறக்காமல் இருக்கிறது. இருக்கும்!! இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட....

b said...

நாகம்மாளுக்கு பெரியார் முழு சுதந்திரம் கொடுத்து இருந்தார். பெண் உரிமை என்று மேடைக்குமேடை பேசும் பெரியாரின் வீட்டில் நாகம்மாள் முழு சுதந்திரத்துடன் இருந்தார் என்பதுதான் உண்மை.

ஆனால் வீட்டுக்கு வராமல் இப்படி ஊர் ஊராக சுற்றுகிறாரே என்பதற்காக நாகம்மாள் அவர்கள் பெரியாருடன் கோபித்ததாகவும் படித்து இருக்கிறேன். மற்றபடி அவர்கள் இருவரிடத்தில் பெரிய பிரச்னை எல்லாம் இல்லை.

பெரிய மனிதர்கள் தம் இழப்புகளைக்கூட எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு உங்கள் பதிவு நல்ல முன்னுதாரணம்.

J. Ramki said...

அப்போது மணியம்மை எங்கே இருந்த்தார்?

முத்துகுமரன் said...

அப்போது மணியம்மை எங்கே இருந்த்தார்?

ம்ம்.. அவங்க வீட்ல இருந்தார்...

Pot"tea" kadai said...

//அப்போது மணியம்மை எங்கே இருந்த்தார்?

ம்ம்.. அவங்க வீட்ல இருந்தார்...//

அப்படியா?
சொல்லவே இல்ல!!!!:-))))

JayBee said...

மணியம்மை-பெரியார் உறவைப் பற்றி அறியாமல் அதை இழிவு செய்வது நாகரிகமல்ல.

மு. சுந்தரமூர்த்தி said...

முத்துக்குமரன்,
பெரியார் அவருடைய தாயார் மறைந்தபோது எழுதியது இங்கே

முத்துகுமரன் said...

நன்றி மூர்த்தி, ரஜினிராம்கி, பொட்டீக்கடை, Jay bee, மு.சுந்தரமூர்த்தி....

சுந்தரமூர்த்தி,
தனது தாயர் மறைவு குறித்து எழுதி உள்ள பெரியாரின் கட்டுரை மிக முக்கியமானது. அது மணியம்மையை அவர் திருமணம் செய்து கொண்டதான விமர்சனங்களை அணுக உதவியாக இருக்கும்

அப்டிப்போடு... said...

//எனக்கு வாழ்வின் துறையின் முற்போக்குக்கும் நாகாம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்கமுடியாத காரியம். //

இதுவும் பெரியார் சொன்னதுதான்.,

**** சங்கரன் நாயர் அவர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடும்படி காந்தியாரிடம் சொன்னபோது, ‘அது என் கையில் இல்லை; அது ஈரோட்டில் உள்ளது. அதுவும் கண்ணம்மாள், நாகம்மாள் கையில் உள்ளது' என்று சொன்னார்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அன்று அந்த நிலையில் இருந்தது. முதலில் ஒரு பெண் மறியலுக்கு வந்து கைதானார் என்றால், அது ஈரோட்டில்தான். 144 உத்தரவு போட்டு 3 நாளில் வாபஸ் பெற்றுக் கொண்டார்கள் என்றால், அதுவும் ஈரோட்டில்தான் நடந்தது. *******

எங்கும் அவர் தன் மனைவியின் தீரம் மறைத்ததில்லை.

பெரியாரை அணுக வெறும் காகித எழுத்தைப் படித்தால் மட்டும் போதாது., அவரவர் வளர்ந்த சூழலும் முக்கியம்., அதைவிட முக்கியம் பெரியாரை அணுகிப் பார்ப்பவரின் பண்பாட்டுப் பின்புலம். இல்லையெனில் அவர் உக்கார்ந்து எழுந்திருப்பதை பத்மாசனம் செய்தார்னு எழுதிவிட்டு கோணச் சிரிப்பு சிரிச்சுகிட்டு போய்கிட்டே இருக்கவேண்டியதுதான். பெரியாரைப் புரிந்தவர்களை யாரும் எதைச் சொல்லியும் மாற்ற முடியாது., அவரின் தேவையில்லாதவர்களுக்கு அவரைப் புரிய வேண்டிய அவசியமும் இல்லை.

முத்துகுமரன் said...

//பெரியாரைப் புரிந்தவர்களை யாரும் எதைச் சொல்லியும் மாற்ற முடியாது.,//
நூற்றுக்கு நூறு விழுக்காடு மிகத் துல்லியமான வாக்கியம்

//அவரின் தேவையில்லாதவர்களுக்கு அவரைப் புரிய வேண்டிய அவசியமும் இல்லை.//
நிச்சயமாக... ஆனால் இப்போது அவர்கள்தான் பெரியாரைப்பற்றி அதிகம் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

Unknown said...

//mozhi oru karuvidhan enru avar karudhinar..adhu ariviyal anugumurai
mozhidhan ellame enbadhu unarvu poorvamanadhu
thurathirushtavasamaga, unarvin adippadayil makkalaith thoondi aadhayam adaindhavargal mozhiyin valarchikku seydhadhu enna?
periyar ezhuthu seerthirutham kondu vandhar...matravargal...? //


சிவஞானம்ஜி தங்களின் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை மொழி ஒரு கருவி எனச் சொன்னதன் சரியான அர்த்தம் விளங்காமல் தாங்கள் சொல்லுவதாகவே நான் காண்கிறேன். உணர்வு பூர்வமாகவே அவரும் மொழியை அனுகினார் என்பது உண்மை இங்கே அவர் அதைத்தான் சொல்கிறார்
:
ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.
தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.
நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால் அதன் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும் அது மறை நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன்.
மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால், நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல்தான் எதிர்க்கிறேனே யொழியப் புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.

Sivabalan said...

குமரன்

நல்ல பதிவு. அனைத்து பின்னூடங்களையும் படித்து விட்டு மீன்டும் வருகிறேன்.

இப்பதிவை என்னுடைய பதிவில் இனைத்துள்ளேன்.

நன்றி.

Related Posts with Thumbnails