//நூறாண்டுகளுக்கு முன் அன்பற்ற அன்னியர் / படையெடுப்பாளர்கள் தந்த பாலியல் கொடூரங்களால் இந்துமத வாழ்வியல் வாழ்க்கையில் அங்கமாக திணிக்கப்பட்டு இருந்த உடன்கட்டை ஏறுதல் என்பது இன்று முற்றிலும் காணாமல் போகவில்லையா?//
வாழ்த்துகள் ஹரிஹரன்!!!
Subscribe to:
Post Comments (Atom)
14 மறுமொழிகள்:
சுட்டியையும் இணைத்திருக்கலாமே! :)
முத்துக்குமரன்,
சதி என்பது அப்பட்டமாக அனைத்துப் பிரிவு பெண்மக்களாலும் ஒரு குறிப்பிட்ட நூற்றாண்டுகள் காலத்திற்கு, மாண்ட கணவனோடு மனைவியின் விருப்பத்திற்கு மாறாக தீயில் குதிக்கக் கட்டாயப் படுத்தப்பட்டதற்கு இந்த அந்நியர்கள்/படையெடுப்பாளர்கள் தந்த பாலியல் கொடூரங்கள் என்பது மிகப்பிரதானமான காரணம்.
கணவனின் பிரிவை நினைத்து உருகியபடியே தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் தியாகமாக, அப்பெண்ணால் தேர்வுசெய்யப்பட்டு இச்சடங்கு இக்காலகட்டத்தில் செய்யப்படவில்லை!
அடப்பாவி!
1982ல் ரூப் கன்வர்
கடந்த செப்டம்பர் மாதம் 95வயது மூதாட்டி குரியா:
சுட்டி வேணுமா: http://vizhippu.net/node/5215
ஆங், சொல்ல மறந்துட்டேன், இவங்கள்ளாம் உடன்கட்டை ஏறுனதுக்கு என்ன காரணம் தெரியுமா? சதாம் உசேனோ, அகமது இனேஜாத்தோ படையெடுத்து வந்துடுவாய்ங்கன்னு பயந்துதானாம்:))
இன்னோன்னு சொல்லோணம்; மீடியாவுல வந்தவரைக்கும்தேன் சொல்ல முடியும்.
`சதி' என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம், சில வட மாநிலங்களில் இப்போதும் நீடிக்கிறது. கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் ஜனக்ராணி என்ற 45 வயது பெண், தனது கணவரின் சிதையில் குதித்து உடன்கட்டை ஏறினார்.
இந்நிலையில், அதே மாநிலத்தில் மற்றொரு உடன்கட்டை சம்பவம் நடந்துள்ளது. சதார்பூர் அருகே பானியானி கிராமத்தை சேர்ந்த சியாராம் ராஜ்புத் என்பவர், நீண்ட நாளாக நோய்வாய்ப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். அதனால் துக்கத்தில் ஆழ்ந்த அவரது 95 வயதான மனைவி குரியா, உடன்கட்டை ஏறப்போவதாக கூறினார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று சியாராம் ராஜ்புத் உடலை தகனம் செய்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவண்ணம், குரியா அந்த தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. குரியாவை யாராவது தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்
ராம ராஜ்யம்!
அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓர் ஆலயம் திறந்தனர். அந்தக் கோயிலின் பெயர், சதிமாதா மந்திர்.
எழுத்தறிவு எட்டாத ஒரு கிராமத்தில், நடுத்தர வயதுடைய ஓர் ஆடவர் இறந்தார். அவரது சடலம், மயானம் சென்றது. தீ மூட்டினர். அந்தத் தீயில், உயிரோடு அவருடைய மனைவியும் தீக்குளித்தாள். இல்லை. தள்ளப்பட்டாள். இதனை உடன்கட்டை ஏறுதல் என்றனர்.
ஆதிகாலம் தொட்டு வளர்ந்து வந்த இந்தக் கொடிய பழக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக ஆர்வலர்கள், அதற்காகப் போராடினர். எனவே, உடன் கட்டை ஏறும் ‘சதி’ பழக்கம், தடை செய்யப்பட்டது.
கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுகிறாள். மனைவி இறந்தால் கணவன் தீக்குளிக்கிறானா? இல்லை. அவன் இன்னொரு திருமணம் கூடச் செய்து கொள்ளலாம்.
கால மாற்றங்கள் துரிதகதியில் நடைபெறுகின்றன. எல்லா வகையிலும் பெண்ணடிமைத்தனம் ஒழிந்து வருகிறது. ஆனால், வசுந்தரா ராஜே என்ற பெண் முதல்வர், அரசாளும் ராஜஸ்தானில் பெண்ணடிமைத்தனத்திற்கு ஆலயம் எழுப்பப்படுகிறது. அந்த சதிமாதா மந்திர் நோக்கி, மக்கள் படை திரண்டு செல்கின்றனர். உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்திற்கு மீண்டும் முடிசூட்டப்படுகிறது.
பகவத் கீதை பிறந்ததற்குப் பின்னர் எழுதப்பட்ட சாஸ்திரங்கள்தான், ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஏற்றிப் போற்றுகின்றன. அதற்கு முந்தைய அதர்வ வேதம் என்ன சொல்கிறது? இளம் கைம்பெண்கள் மறுமணம் செய்து கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறது.
மன்னராட்சி மண்டலங்கள் நிறைந்தது ராஜஸ்தான். அந்தக் காலத்தில் மன்னர் இறந்தால், அவருடைய அந்தப்புர நாயகிகளும் எரியும் நெருப்பில் இறக்கப்பட்டனர். அந்தக் கால ஜோத்பூர் மன்னர் இறந்தபோது, 85 பெண்கள் உடன்கட்டை ஏறினர். ஆனால், இன்றைக்கு எந்த மன்னராவது இறந்தால், அவருடைய ஆசை நாயகிகள் உடன்கட்டை ஏறுகிறார்களா?
ஆனால், அதே ராஜஸ்தானில் நாகரிக வாடை வீசாத தொலைதூர கிராமத்தில், உயிரோடு எரிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு ஆலயம் எழுப்புகிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு சமூகசேவகி தாக்கப்பட்டார். குழந்தைத் திருமணங்கள் கூடாது என்று அவர் எடுத்துரைத்தார். ஒரு குழந்தைத் திருமணத்தைத் தடுக்க முயன்றார். அதுதான் அவர் செய்த குற்றம்.
பழைமை விரும்பிகள், அவரைத் தாக்கினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கொடுமையை மறைக்க, மாநில அரசு எவ்வளவோ முயன்றது. ஆனால், உண்மை மைதானத்திற்கு வந்து விட்டது.
அந்தச் சமூக சேவகியைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று ஏடுகள் எழுதின. அரசில் எந்தச் சலனமும் இல்லை.
பெண்கள் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் லேசான அசைவுகள் தெரிந்தன.
‘‘குழந்தைத் திருமணம் என்பது பரம்பரையாக வருகின்ற பழக்கம். அந்தச் சம்பிரதாயத்தை விட்டு விடுங்கள் என்று நிர்ப்பந்திக்க முடியாது. படிப்படியாகத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’
குழந்தைத் திருமணத்திற்கு இப்படி நியாயம் பேசியவர், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் பாபுலால் கவுர்தான். அதனால் தாக்கியவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரை காவல்துறை ஏற்கவில்லை. பெண்களின் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு நகரும் என்று நம்பிக்கை இல்லை.
இந்த வாரம் ஒரிசாவிலிருந்து இன்னொரு செய்தி வந்திருக்கிறது. அங்கு கொடுமை கூத்தாடியிருக்கிறது.
உயர்ஜாதி வீட்டுத் திருமணம் என்றால் உள்ளூர் முடிதிருத்தும் தொழிலாளி வரவேண்டும். வாயிலில் அண்டா குண்டாக்களில் தண்ணீரை நிரப்பிக் காத்திருக்க வேண்டும்.
மணமகன் காலைக் கழுவ வேண்டும். மணமகள் காலைக் கழுவ வேண்டும். போதாது என்று மணவிழாவுக்கு வரும் அனைவரின் பாதார விந்தங்களையும் நீராட்ட வேண்டும்.
இந்தக் கேவலச் செயலை இனியும் செய்ய மாட்டோம் என்று இளைஞர்கள் துணிந்தனர். நாங்கள் முடிதிருத்தும் தொழில் செய்வதால்தானே இந்த இழிவான காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, குலத் தொழிலுக்கு முழுக்குப் போடுகிறோம் மாற்று வேலைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று மாநில அரசைக் கோரினர்.
பலமுறை படையெடுப்பிற்குப் பின்னர் அரசு, சிந்திக்கத் தொடங்கியது. ஆனால், உயர் ஜாதியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் குலத் தொழிலை வேறு யார் செய்வது? என்று வாதாடினர். ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை.
பூரி மாவட்டத்தில் புவனாபதி என்று ஒரு கிராமம். சென்ற மாதம் இங்கே ஒரு திருமணம் நடந்தது. கால் கழுவும் தொழிலைச் செய்ய சவரத் தொழிலாளி மறுத்தார். உருட்டல் மிரட்டல்களுக்கு அவர் அடி பணியவில்லை.
அந்தக் கிராமத்தில் நான்கு நாவிதர் குடும்பங்கள் உண்டு. அந்த நான்கு குடும்பங்களுமே உயர் ஜாதியினரின் கட்டளைகளை உடைத்தெறிந்தன.
உயர்ஜாதியினர் கூடினர். ‘பண்டைக் காலம் தொட்டு இருந்துவரும் பழக்கத்தை இவர்கள் எப்படி மாற்றலாம்? அபசாரம். அபசாரம்’ என்றனர்.
கல்யாண வீட்டிற்கு வந்து கால் கழுவி விட மறுத்த அந்த நாவித இளைஞனுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். ஆசார அனுஷ்டானங்களை அவன் மதிக்கவில்லையாம்.
அத்தோடு அவர்கள் நிற்கவில்லை. நான்கு நாவிதர் குடும்பங்களையும் ஊரிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டனர். அவர்களுக்கு இனி வேலை இல்லை. ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது. கடைகளில் அவர்கள் உணவுப் பொருள்கள் வாங்க அனுமதியில்லை.
நெஞ்சைச் சுடும் இந்தச் செய்திகள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. சவரத் தொழிலாளர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர். ‘மாற்றுத் தொழிலுக்கு எப்போது ஏற்பாடு செய்வீர்கள்? நாங்கள் மானத்தோடு வாழ்வது எப்போது?’ என்று கேள்விக்கணைகள் தொடுத்தனர். ‘ஆகட்டும். பார்க்கலாம். ஆவன செய்வோம்’ என்றுதான் அப்போதும் பதில் வந்தது.
சனாதனிகளைப் பகைத்துக் கொள்ள அரசு தயாராக இல்லை.
இப்போது மாவட்டவாரியாக, மாநில ரீதியாக சவரத் தொழிலாளர்கள் சங்கம் கண்டுவிட்டனர்.
மாவட்டந்தோறும் நீதிமன்றங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் என்று முடிவு செய்து விட்டனர். இனி மரபு வழித் தொழிலை, குலத் தொழிலைச் செய்ய மாட்டோம் என்று உறுதி கொண்டு விட்டனர். அதனை உயர்ஜாதி ஆதிக்கச் சக்திகள் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றன. ஒரிசா அரசு, உறக்கத்தில் இருக்கிறது.
ராஜஸ்தானில் பி.ஜே.பி. அரசு _ அங்கே சதி மாதா ஆலயம் எழுப்புகிறது.
மத்தியப் பிரதேசத்தில் பி.ஜே.பி. அரசு _ அங்கே குழந்தைத் திருமணம் வேண்டாம் என்றால் அது சம்பிரதாயம் என்கிறது.
ஒரிசாவில் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி _ குலத் தொழிலைச் செய் என்று ஆதிக்க சக்திகள் மிரட்டுகின்றன.
இதோ, இப்போது இன்னொரு சேதி வருகிறது. குஜராத் நரேந்திர மோடி அரசு, பத்தாம் வகுப்பிற்கு சமூக விஞ்ஞானப் பாடப் புத்தகம் வெளியிட்டிருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு அந்தப் புத்தகம் ஓர் அபார காரணம் கூறியிருக்கிறது.
இளம் விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப்படுவதால்தான் மக்கள் தொகை பெருகுகிறது என்று அந்தப் பாடப் புத்தகம் கூறுகிறது.
மனு தர்ம காலத்திற்கு நாட்டை இழுத்துச் செல்ல இவர்கள் ஆசைப்படுகிறார்களா?
சரித்திரச் சக்கரத்தை பின்னோக்கி சுழற்றிப்
பார்க்கிறார்கள்.
நன்றி:-குமுதம் ரிப்போர்ட்டர் Aug 2005
'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!
ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.
விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.
ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339
//ரூப்கன்வர் என்கிற ராஜஸ்தானியப் பெண் கணவன் இறந்தவுடன் தானும் அந்த நெருப்பில் இறங்கி உடன்கட்டை ஏறியதை எல்லோரும் கை கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு, ‘இந்தியப் பாரம்பரியத்தை ரூப்கன்வர் மற்று மொரு முறை நிரூபித்திருக்கிறார்’ என்று அதை ஒரு விழாவாகவும் கொண்டாடினார் கள் என்பதுதான் சோகம். //
* மைதிலி சிவராமனுடைய ஒரு கட்டுரையிலிருந்து
ஆமாம். (ஆரிய) அந்நியர்களின் அராஜகத்தால் தோன்றிய கொடூர பழக்கம்தான் இந்த சதி.
//ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர்.//
'சதி'காரர்களால் சகித்துக் கொள்ள முடியாத சரித்திர உண்மை இது!
:))
போட்டுத் தாக்குதல் மிக வன்மையாகத் தான் இருக்கிறது. எத்தனை எத்தனை வகையான வரலாறுகள்? முத்துகுமரனுக்கும் பொன்ஸுக்கும் பிடித்த வரலாறு ஒன்று. வாசகன், ராஜா, மரைக்காயர் போன்றவர்களுக்குப் பிடித்த வரலாறு ஒன்று. ஹரிஹரன்களுக்குப் பிடித்த வரலாறு ஒன்று. இதுல எதுவுமே முழுசு இல்லை. எல்லாம் யானையைத் தடவும் குருடர்கள். இதில் வெற்றியின் வெற்றுச் சிரிப்பு வேறு.
முத்துக்குமரன்,
//நூறாண்டுகளுக்கு முன் அன்பற்ற அன்னியர் / படையெடுப்பாளர்கள் தந்த பாலியல் கொடூரங்களால் இந்துமத வாழ்வியல் வாழ்க்கையில் அங்கமாக திணிக்கப்பட்டு இருந்த உடன்கட்டை ஏறுதல் என்பது இன்று முற்றிலும் காணாமல் போகவில்லையா?//
வாழ்த்துகள் ஹரிஹரன்!!!
சதியின் ஆரம்பம் கிறிஸ்துவின் பிறப்பிற்கு முந்தையது. பழங்காலத்தில் மக்கள் கொண்டிருந்த மறு பிறப்பு கொள்கைக்கேற்ப, ஒருவன் இறக்கின்ற பொழுது, அவனது மறு உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் - அந்த மனிதனின் விதவைகள், மற்றும் அவன் மதித்த பொருட்கள், குதிரைகள் அனைத்தும் அவன் சடலத்துடன் அடக்கம் அல்லது எரியூட்டப்பட்டது. அவனது மறு உலக வாழ்க்கையில் அவனுக்கு விருப்பமான அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கை தான். ஊர் எனும் நகரத்து அரசர்கள், பாரோ என்னும் எகிப்திய மன்னர்கள், சீன பழங்குடி மக்கள் ஆகியவர்களிடையே இப்பழக்கம் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.
இந்தப் பழக்கம் மத்திய ஆசியாவைச் சார்ந்த நாடோடிகளிடமும் இருந்தது. அவர்கள் இந்தியாவினுள் நுழைந்த பொழுது, இந்தப் பழக்கமும் நுழைந்தது. யார் இந்த மத்தியா ஆசியா நடோடிகள்? சொல்லாமலே தெரிந்து கொள்ளலாமே!!!
இந்த நடைமுறைக்கு புராண காலத்திலேயே உதாரணம் உண்டு. பிரம்ம தேவனின் யக்னகுண்டத்தில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட சதிதேவியை இப்பழக்கத்தின் ஆரம்பமாக சிலர் குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர் மகாபாரதத்தைக் குறிப்பிடுகின்றனர். பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரி, கணவனின் சிதையில் சதியை மேற்கொண்டார் என்பது.
ரிக் வேதத்திலும் இது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
சதி பற்றிய முதல் குறிப்புகள் அலெக்ஸாண்டரின் படையெடுப்புகள் போது எழுதப்பட்ட குறிப்புகள் தான். ஆரம்பகால ஸ்மிர்தி இலக்கியங்களில் இது பற்றிய குறிப்பு காணப்பட்டாலும் அது வற்புறுத்தப்படவில்லை. சதி பற்றிய முதல் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது கி.பி.510ல். எரான் என்னுமிடத்தில். இருப்பது இன்றைய மத்தியப் பிரதேசத்தில். ஒரு நினைவுப்பாடலுடன்.
இந்த சதியைப் பற்றி கி.பி.1333ல் இப்னு பதூதா குறிப்புகள் எழுதியுள்ளார். பெருமைமிக்க செயலாக இந்துக்கள் கருதினர் என்றாலும், அது கட்டாயமாக்கப்படவில்லை என்கிறார்.
இத்தாலியப் பயணியான பியட்ரோ டெல்லா வால்லே 1623 நவம்பரில் நடந்த சதியைப் பற்றிய விரிவான குறிப்புகளை எழுதியிருக்கிறார்.
இந்தப் பழக்கம் பின்னர் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டது - ராஜா ராம் மோஹன் ராயின் பிரம்ம சமாஜத்தின் பெருமுயற்சியால் - ஆங்கிலேயக் காலத்தில்.
அது சரி, இந்தப் பழக்கம் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது?
# விதவைகள் மறுமணம் மறுக்கப்பட்டது. சாத்தியமேயில்லை என்னும் அளவில். (மனு - 5 - 162). விதவைகளுக்கு இழைக்கப்பட்ட மிகக் கொடூரமான அநீதிகள் - வாழ்வதை விட சாவதே மேல் என்ற நிலைமைக்கு இட்டுச் சென்றது.
# மூதாதையர் அனைவரும் இச்செயலினால், சொர்க்கம் புகுவர். கணவனை சொர்க்கத்தில் மீண்டும் அடையலாம். பல கோடி ஆண்டுகள் அவனுடன் இன்புற்று வாழலாம் என்று பிறந்தது முதல் மேற்கொள்ளப்படும் மூளைச் சலவை.
# இவை எல்லாவற்றையும் விட மிக முக்கிய காரணம் - விதவை என்பவள் சமூகத்தில் ஒரு உபரி மனுஷி. எந்த சூழலிலும் அவளைப் பொருத்த இயலவில்லை. அவளை அழித்தொழிப்பதன் மூலம், அவளுக்குண்டான செலவுகள் குறையும் - அவளுடைய நகைகள் மற்றும் உடைமைகள் மற்றவர்களுக்குக் கிடைக்கும். அத்துடன் ஒரு அபசகுணமாக எல்லோருடைய நல்வாழ்வுக்கும் இடைஞ்சலாக இருப்பதொழியும். மேலும், அவளால் எழக்கூடிய பாலியியல் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.
அதனாலயே, சதி என்பது விரும்பப்பட்டதாக, போற்றிப் புகழப்பட்டு, தெய்வத்தின் தன்மையை ஏற்றி, பெண்களைத் தூண்டுவதில் முனைந்தனர்.
ஹரிஹரன் - சொல்ல முயன்ற அன்பற்ற அன்னியர் என்பது உண்மை தான். மத்தியா ஆசியாவின் நாடோடிகள் அலைஅலையாக இங்கே நுழைந்த பொழுது அவர்கள் இந்த 'சதி'யையும் அழைத்து வந்து விட்டார்கள்.
இதை முத்துக்குமரன் இத்தனை பெரிது படுத்தி இருக்க வேண்டியதில்லை என்பதே எனது எண்ணம்.
1. The Wonder That Was INDIA - AL BASHAM pages 186 - 188.
2. மனுதர்ம சாஸ்திரம் - தொகுத்தவர்: திருலோக சீதாராம் - 5 - 162
3. http://www.kamat.com/kalranga/women/sati/whysati.htm
நன்றி,
அன்புடன்
நண்பன்
ராஜசன் சார்,
உங்கள் எண்ணப்படியே, உலகத்தில் உங்களைத்தவிர அனைவரும் குருடர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
'யானை'யை முழுதாய் பார்த்த நீங்களாவது அதைப் பற்றி சொல்லுங்களேன்.
அப்புறம்,நண்பனுடைய கருத்து பற்றியும் உங்களுக்கு ஒரு முன்கருத்து இருக்கும்னு நினைக்கிறேன். சரிதானே?
யாருங்க அது அவுரங்கசீப்பை அன்பான அரசன் என்று சொல்லி ஏற்கனவே திரிக்கப்பட்ட மதச் சார்பற்ற அரசியல் இந்தியவரலாற்றை இன்னும் கூடுதல் காமடி ஆக்கியது?
ரஜபுத்திரர்களிடையே சதி கூடுதலாக இருந்ததற்கு பண்டைய பாரதத்தின் பார்டர் தேசமான பாரசீகத்திலிருந்து அன்பற்றவர்கள் படையெடுத்ததை நேரடியாகச் சந்தித்து உடனடியாக வன் கொடுமைகளைச் சந்தித்தவர்கள் இந்த ராஜபுத்திர இனமே!
கருத்து என்பதே தான் படித்த,அறிந்த, நம்பும் விஷயங்கள் சார்ந்த சாய்வுத்தன்மையின் வெளிப்பாடுதானுங்களே என்பது என் கருத்து! :-))
எல்லோருக்கும் பொதுவான நடந்தேறிய, மெய்யான இந்திய வரலாற்றை அறியத் தரப்படவேண்டும்!
தாஜ்மகாலுக்கும் மும்தாஜ்ஜுக்கும் சம்பந்தமே இல்லை என்பதெல்லாம் எல்லோரும் அறியவேண்டும்! ஒரு பொய் உலக அதிசயமான அவலம் மாதிரியானவைகளை வரலாறு எனப்படித்து மார்க் வாங்குவதை நிறுத்தவேண்டும்! :-))
//யாருங்க அது அவுரங்கசீப்பை அன்பான அரசன் என்று சொல்லி ஏற்கனவே திரிக்கப்பட்ட மதச் சார்பற்ற அரசியல் இந்தியவரலாற்றை இன்னும் கூடுதல் காமடி ஆக்கியது?//
ஐயா, திரிஹரன்,
அவ்ரங்கசீப்பை இங்கு யாரும் அன்பானவர் என்று சொல்லவில்லையே!
அரசரானவர் என்று தானே சொல்லியிருக்கிறார்கள்.
..ம்...ம், இப்ப விளங்குது நீங்கள் சொல்கிற 'வறலாறு'வின் இலட்சணம்.
Post a Comment