இசை, இளையராஜா, பெரியார்.

சமீபத்தில் வலைப்பூவில் வெகுவாக பேசப்பட்ட விடயம் பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா மறுத்தது. அரசியல் அநாதையாகிப் போன பா.ஜ.க இளையராஜவின் இந்த முடிவை ஆதயமாக்கி அரசியல் செய்ய முனைகிறது.

முதலில் ஒரு பணியை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் இளையராஜாவிற்கு உண்டு. அதை யாரும் விவாதத்திற்கு உட்படுத்த இயலாது. அந்த வகையில் இந்த மறுப்பு எதார்த்தமானது. நிர்பந்தத்தின் காரணமாகவோ, மனவிருப்பமின்றியோ வெளிவரும் எந்த படைப்பும் உயிர்ப்புடன் இருந்திடாது. ஒரு கலைஞனாக அவர் எடுத்திற்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே.

ஆனால் அவர் மறுத்ததற்கு காரணம் பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றால் இசையில் ஞானியாக இருந்தாலும் வாழ்வியலில் அவர் பூஜ்ஜியம் என்றே காட்டுகிறது.

பெரியாரை பின்பற்றுபவரும் சரி, அவரை எதிர்ப்பவரும் சரி அவரை ஒரு கடவுள் மறுப்பாளராகவே அடையாளப்படுத்துகின்றனர். பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது விரிந்த தளம் கொண்டது. அவரின் கடவுள் எதிர்ப்பு என்பது
வேத அதிகார எதிர்ப்பே. இந்த மக்களை சாதியின் பெயரால் வர்ண அடுக்குகளில் வைத்து அடிமைப்படுத்திய வேதத்தை, வேத அதிகாரத்தை எதிர்ப்பதற்கு எடுத்த கருவியே.

தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார். ஆனால் இறை நம்பிக்கை என்னும் பெயரில் மனித குலத்தை அடிமைத்தனம் செய்வதை மிக மூர்க்கமாக, தயவு தாட்சண்யமின்றி எதிர்த்திருக்கிறார். அவர் அமைத்து கொடுத்த பாதைதான் நாம் இன்று ஓரளவேனும் வாழ்க்கையில் சுயமரியாதையோடு பயணிக்க வழி செய்திருக்கிறது. பெரியாரை வாசிக்க, புரிந்து கொள்ள, அடிப்படையில் மனதளவிலேனும் சமத்துவத்தை கொண்டிருப்பவராக வேண்டும். அத்தைகைய எண்ணம் இல்லாத எவராலும் அவரை உள்வாங்கி கொள்ள இயலாது.

இளையராஜா ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.


இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல

89 மறுமொழிகள்:

லக்கிலுக் said...

//இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல//

அருமையாகச் சொன்னீர்கள். புரியவேண்டியவர்களுக்கு புரியட்டும்.

ஜோ/Joe said...

முத்துக்குமரன்,
சரியாக சொன்னீர்கள்!நன்றி!

tamilreber said...

"இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல."

பெரியாரியவாதிகள் கருத்து முரண்பாடுகளை எப்படிக் கையாள்வர்கள் என்பதுதான் குஷ்பு விவகாரத்தில் தெரிந்து விட்டதே.அதற்குப் பிறகுமா இளையராஜாவிற்கோ அல்லது திரை உலகைச்
சேர்ந்த வேறு எவருக்கோ பெரியாரியவாதிகள் மீது நம்பிக்கை வரும்.இளையராஜாவிற்கு அப்படிப்பட்ட நிலை வராது, பெரியாரியவாதிகள் உதவியும் தேவைப்படாது.இளையராஜாவை வைத்து தேவைப்பட்டால் அரசியல் செய்யத்தான் அவர்கள் விரும்புவார்கள்

நாடோடி said...

தனிமனித சுதந்திரம் என்று ஒன்று கேள்விபட்டீர்பீர்கள் என்று எண்ணுகிறேன். பெரியார் பார்பனீயத்தை எதிர்கக கொடுக்கப்பட்ட தனிமனித சுதந்திரமாது இவருக்கு கொடுங்கள்.

bala said...

//பெரியாரியவாதிகள் கருத்து முரண்பாடுகளை எப்படிக் கையாள்வர்கள் என்பதுதான் குஷ்பு விவகாரத்தில் தெரிந்து விட்டதே.//

தமிழ்ரெபெர் அய்யா,

குஷ்பு விஷயத்தில் மட்டுமல்ல..கண்ணகி சிலை விஷயத்திலும் பகுத்தறிவோடு செயல்பட்டார்களே.
இப்போ இளையராஜா விஷயத்திலும் பகுத்தறிவு முத்திரை பளிச்சுனு தெரியுது.

பாலா

G.Ragavan said...

// ஆனால் அவர் மறுத்ததற்கு காரணம் பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றால் இசையில் ஞானியாக இருந்தாலும் வாழ்வியலில் அவர் பூஜ்ஜியம் என்றே காட்டுகிறது. //

பூஜ்ஜியமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் குறைவாக இருக்கும் என்றே நினைக்கிறேன். ஆன்மீகத்திலும் அவர் சற்றுக் குழப்பவாதிதான். அவர் ஒரு இசையமைப்பாளர். நல்ல இசையை எதிர்பார்க்கலாம். வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும். நடிகனை நடிகனாக மட்டும் பார்க்க வேண்டியது போல இசையமைப்பாளரையும் அப்படியே பார்க்க வேண்டியுள்ளது. அவருடைய மற்ற கருத்துகள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

// இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல //

பெரியாரியவாதிகள் மட்டுமல்ல. பெரியாரைத் தெரியாமல் இருந்தாலும் மக்களிடையே பாகுபாடு இருக்கக்கூடாது என்று கருதுகின்றவாதிகளின் ஆதரவும் அவருக்குக் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் சொன்னது போல நிச்சயமாக எந்த அரசியல்வாதியும் அல்ல.

Anonymous said...

மக்கா,

//பெரியாரை வாசிக்க, புரிந்து கொள்ள, அடிப்படையில் மனதளவிலேனும் சமத்துவத்தை கொண்டிருப்பவராக வேண்டும். அத்தைகைய எண்ணம் இல்லாத எவராலும் அவரை உள்வாங்கி கொள்ள இயலாது.//

அப்படிப் போடு அருவாளை!!
பெரியார் என்றால் நாத்திகம் என்ற அளவிலே யோசிப்பவர்கள் தலையில் 'நறுக்'க்குன்னு குட்டியிருக்கே.நல்லா இருடே!!

சாத்தான்குளத்தான்

CrazyTennisParent said...

முத்துகுமரன்,

இளையராஜா இசை ஞானி.சிந்தினை சிற்பி என்று அவரை எடுக்க தேவையில்லை என்ற ராகவனின் கருத்து சிந்திக்கத்தக்கது.என்னை பொருத்தவரை பொறுத்தமானது என்றும் சொல்வேன்.

இரண்டாவது பத்தியில் கொஞ்சம் குழப்பமே.

//பெரியாரியவாதிகள் மட்டுமல்ல. பெரியாரைத் தெரியாமல் இருந்தாலும் மக்களிடையே பாகுபாடு இருக்கக்கூடாது என்று கருதுகின்றவாதிகளின் ஆதரவும் அவருக்குக் கண்டிப்பாக இருக்கும்.//


அப்போ பெரியாரிய வாதிகள் மக்களிடையே பாகுபாடு இருக்கவேண்டும் என்பவர்களா?:))

வஜ்ரா said...

//
தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார்.
//

ஆ..!

அதிர்ச்சியில் விரல்கள் டப்பு டப்பாக தைப் அதிக்கிறது..

G.Ragavan said...

// அப்போ பெரியாரிய வாதிகள் மக்களிடையே பாகுபாடு இருக்கவேண்டும் என்பவர்களா?:)) //

அப்படியில்லை முத்துக்குமரன். பெரியாரைப் பற்றி நான் அறிந்தது மிகக்குறைவே. பெரியாரியவாதி மட்டுமே பாகுபாடு பார்க்காதவன் என்ற தொனியில் நீங்கள் சொன்ன கருத்தை மாற்றியிருக்கிறேன். பெரியாரைப் பற்றி தெரியாவிடினும் சிலபலர் பாகுபாடு பாராதாராக இருப்பார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன். என்னைப் பெரியாரியவாதி என்று சொல்லிக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் நான் சாதீய, மதப் பாகுபாடுகளைப் பார்க்கின்றவனும் அல்லன். மத நம்பிக்கையை விட கடவுள் நம்பிக்கை பெரிதென்று எண்ணுகின்றவன். என்னைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதற்காகச் சொன்னது. பெரியாரின் பெயரைச் சொன்னால் மட்டுமே பாகுபாடுபாராதவன் என்று சொல்ல முடியாது என்பதற்காகக் குறிப்பிட்டது அது.

விழிப்பு said...

//பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா மறுத்தது.//

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் ஒன்றும் நின்று விடாதல்லவா?

//முதலில் ஒரு பணியை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் இளையராஜாவிற்கு உண்டு. அதை யாரும் விவாதத்திற்கு உட்படுத்த இயலாது. அந்த வகையில் இந்த மறுப்பு எதார்த்தமானது. நிர்பந்தத்தின் காரணமாகவோ, மனவிருப்பமின்றியோ வெளிவரும் எந்த படைப்பும் உயிர்ப்புடன் இருந்திடாது. ஒரு கலைஞனாக அவர் எடுத்திற்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே.//

முற்றிலும் உடன் படுகிறேன்.

ராஜா வின் இசையை மட்டும் ரசித்து அவரின் இத்தகைய செயல்களை புறந்தள்ளுவோமே.

முத்துகுமரன் said...

//அப்படியில்லை முத்துக்குமரன்.//
அது முத்து தமிழினி ராகவன். அப்புறம்
முத்துவும் முத்து தமிழினியும் ஒன்னுன்னு அறிவிச்சிட போறாங்க:-). பயமாகீதுபா:-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல

They kept quiet when Davinci Code
was banned.They kept quiet when
Salma and Badr Sayeed were insulted
by islamic fundamentalists.They
did nothing when Tasleema Nasreen
was prevented from addressing a
meeting.They will criticise only
hindus and hindusism and will
not dare to oppose fundamentalists
of other religion. In so many occassions they have done nothing.In case
of Kushboo and Jain sannyasins
they proved how intolerant they
were.Raaja would need neither
their support nor sympathy.

naathigan said...

Friend

Periyar remains as a topic of discussion. this itself is a message to the society.

Thanks

Amar said...

//அரசியல் அநாதையாகிப் போன பா.ஜ.க//

அதெல்லாம் பேரனுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று தெரிந்தால் மஞ்ச சால்வை,வேட்டி, கோவனம் எல்லாம் அவிழ்ந்தாலும் தெரியாமல் கூட்டனி சேருவார்கள்.

//அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான்//

டாவின்சி கோட் தடைசெய்யபட்ட போது வாட்டிகனுக்கு எதிராக அனிதிரண்டு ஆர்பாட்டம் நடத்திய அறிவாளிகளை நாடு பார்த்து 32யையும் காட்டி சிரித்தது.

எனக்கு தெரிந்து குஷ்பு விவகாரத்திலும் சீமாறு எடுத்துகொண்டு தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், சமனர்களுக்கு கோமனம் கட்டிவிடுவதிலும் தான் பெரியாரின்
வாரிசுகள் ஆர்வம் அதிகமாகியுள்ளது.

இல்லாதவனுக்கு பள்ளிக்கூடம் கட்டுவதிலோ பாடம் சொல்லிகொடுப்பதிலோ ஒன்றையும் வெட்டிமுறிக்கவில்லை.

G.Ragavan said...

// முத்துகுமரன் said...
//அப்படியில்லை முத்துக்குமரன்.//
அது முத்து தமிழினி ராகவன். அப்புறம்
முத்துவும் முத்து தமிழினியும் ஒன்னுன்னு அறிவிச்சிட போறாங்க:-). பயமாகீதுபா:-) //

ஓ முத்து தமிழினியா அது. :-) மன்னிச்சுக்கோங்க முத்து தமிழினி. முத்துன்னு பாத்ததும் அடுத்து குமரனோன்னு நெனச்சுச் சொல்லீட்டேன்.

மாசிலா said...

நடிகனைப்போல் இசையமைப்பாளன் ஒரு கலைஞன். அவன் நடுநிலையுடன் நடந்துகொள்ளவேண்டும். கொடுத்த பாத்திரத்தை ஏற்று அந்த வட்டத்திற்குள் இருக்கும்வரை தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும். இதனால், வில்லன் வேடம் போடுவதினால் நிஜ வாழ்க்கையில் வில்லனாக போவதில்லை. குழப்புகிறார் இளைய ராசா.

Nakkiran said...

// தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார். //

இதற்கு ஆதாரமாக ஏதாவது சுட்டி இருக்கிறதா?.. உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தான் கேட்கிறேன்... இறைவன் என்ற கான்செப்டே கிடையாது என்று சொன்னவர் தான் பெரியார்... பிறகு வந்த அண்ணா தான் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று மாற்றினார்...
தயவு செய்து தவறான கருத்தை பரப்பாதீர்கள்...

முத்துகுமரன் said...

//தயவு செய்து தவறான கருத்தை பரப்பாதீர்கள்... //

தவறான கருத்தை பரப்ப வேண்டிய அவசியம் இல்லை நக்கீரன். எஸ்.வி.ராஜதுரை-வ.கீதா அவர்கள் தொகுத்த பெரியாரின் பேச்சுகளில் இந்த செய்தி இடம் பெற்றிருக்கிறது. இணையத்தில் இதற்கான சுட்டிகள் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் நூலில் இருக்கிறது. அதை உங்கள் பார்வைக்கு தரவும் முயற்சி செய்கிறேன். அந்த பக்கத்தை வருடியோ அல்லது தட்டச்சு செய்தோ போடுகிறேன்.

நன்றி

சிநேகிதன் said...

இளையராஜா தன்னை ஒரு தலித் என்று அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்பது உண்மைதான். ஆனால் தன் திறமையை கொண்டே தான் அடையாளம் காணப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதில் என்ன தவறு இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை.
ஒரு தலித் இவ்வளவு திறமையாக உயர்திருக்கின்றான் என்று சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

கே.ஆர் நாராயணன் ஜனாதிபதியான போது கூட அவர் தலித் என்பதால்தான், தலித்துக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பாதால் தான் அவர் ஜனாதிபதியாக்கப்பட்டார் என்று பல மூடர்கள் சொல்லிகொண்டிருந்தானார். அதற்கு மேலாக அவரின் திறமையைப்பற்றி யாரும் பெரிதாக கூறவில்லை. அவரை ஏன் தலித் என்ற வகையில் அடையாளம் காணுகிறீர்கள். திறமையான ஒருவருக்கு உரிய பதவி கிடைத்துள்ளது என்று அவருடைய திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கவேண்டியது தானே.

பொருளாதாரத்தில் உயர்ந்த பலரும் இன்னும் தன்னை தலித் என்று கூறி வறுமையில் வாடும் தலித்திற்கு கிடைக்கவேண்டிய சலுகைகளையெல்லம் அனுபவித்திக்கொண்டிருக்கிறார்களே அவர்களின் மத்தியில் இளையராஜா எவ்வளவோ மேல்.

தன்னை தலித் என்று சொல்லிக்கொள்வதில் அவர் அசிங்கப்படவில்லை ஆனால் தன் திறமையை தலித் என்கிற அடையாளத்துடன் காட்டுவதையே அவர் வெறுக்கிறார். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கு யாரும் புரிந்துகொள்வதில்லை.

Thamil said...

ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை அமுலில் கொண்டு வந்திருந்தால், இதே இளையராஜா சொல்லி இருப்பார் நான் ஒரு இசை அமைப்பாளராக இருந்திருந்தால் பெரியாரின் படத்துக்கு இசை அமைத்திருப்பேன் என்று. இருக்கவேண்டியவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் சரியாக சிந்திக்க முற்படலாம்.

Babble said...

முத்துக்குமரன்,
உங்க கண்ணோட்டத்திலேயே பெரியாரை எல்லாரும் பார்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள். பெரியார் என்றாலே பலருக்கு நினைவு வருவது அவரது கடவுள் மறுப்பு தான். பெரியார் வாழ்ந்த காலத்தில் நாமும் இல்லை, இளையராஜாவும் இல்லை. இன்று கடவுள் சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் செல்வது போன்ற நிலையிலேயே தி.க. தன்னை நிறுவிக்கொண்டுள்ளது. பெரியார் பற்றி முழுதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களை போல தேடி முயன்று படித்திருந்தாலே தவிர அவர் பற்றிய கருத்துக்கள் இன்றைய பெரியார் பின்பற்றுவர்கள் உண்டாக்கி இருக்கும் தோற்றம் தான் தெரியும்.
அந்த கண்ணோட்டத்திலேயே அதிக இறை பக்தியுள்ளவராக உள்ள இளையராஜா இதை அனுகியிருக்கலாம். அது மட்டும் இல்லாமல், இது போன்ற வரலாற்று நாயகர்கள் பற்றிய படங்களில் முழு மனதோடு, ஈடுபாட்டோடு இருக்கவேண்டும், நம் நம்பிக்கைக்கு முறனான கருத்து கொண்டவரின் படத்தில் நம்மால் ஈடுபட முடியாது என்று நினைத்திருக்கலாம்.
எனக்கு பெரியார் பற்றிய சார்பு/எதிர்ப்பு நிலை எதுவும் இல்லை. ஒரு மாற்று கண்ணோட்டதிற்காகவே இதை இங்கே சொல்கிறேன்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த படத்திற்கு இசை அமைக்க தயாரிப்பாளர் தர முன்வந்த தொகை என்னவென்று தெரியாது. அது குறைவாக இருந்து அதை நாசுக்காக மறுக்க கூட அவர் இந்த காரணத்தை சொல்லி இருக்கலாம். நாம் படித்த பத்திரிக்கை செய்தியை வைத்து ஒருவர் மீது தீர்ப்பு சொல்வது ஆராய்ந்த முடிவில்லை என்று நினைக்கிறேன்.

முத்துகுமரன் said...

//கே.ஆர் நாராயணன் ஜனாதிபதியான போது கூட அவர் தலித் என்பதால்தான், தலித்துக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பாதால் தான் அவர் ஜனாதிபதியாக்கப்பட்டார் என்று பல மூடர்கள் சொல்லிகொண்டிருந்தானார். அதற்கு மேலாக அவரின் திறமையைப்பற்றி யாரும் பெரிதாக கூறவில்லை. //

உண்மைதான் சிநேகிதன். கே.ஆர்.நாராயணன் மிகப்பெரிய திறமைசாலி. அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் அரசியல் தேர்வுகள் எல்லாம் திறமையின்பாலா முடிவு செய்யப்படுகிறது. அரசியல் ஆதாய கணக்குகளே அதற்கு அடிப்படை. இந்த உண்மை கசக்கத்தான் செய்யும். ஏன் அப்துல் கலாம் எடுத்து கொள்ளுங்கள், அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது அவரது திறமையின் அடிப்படையிலா?? குஜராத் கலவரங்களினால் சர்வேத அளவில் நம்முகத்தின் மீது படர்ந்து இருந்த கரியைத் துடைத்துகொள்ள அவர் உபயோகப்படுத்தி கொள்ளப்பட்டார். இது போன்று எதிர்பாராத நன்மைகளும் அரசியல்வாதிகளினால் நமக்கு கிடைத்து விடுவதுண்டு, அதான் எதார்த்தம்.

முத்துகுமரன் said...

//நாம் படித்த பத்திரிக்கை செய்தியை வைத்து ஒருவர் மீது தீர்ப்பு சொல்வது ஆராய்ந்த முடிவில்லை என்று நினைக்கிறேன்.//

நன்றி babble. நானும் இளையராஜவிற்கு இந்த வாய்ப்பை ஏற்கவோ, மறுக்கவோ முழு உரிமை இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறேன். அதற்கான காரணியங்களின் மீதுதான் எனது விமர்சனமும். தனிப்பட்ட முறையில் இளையராஜாவின் இசைக்கு ரசிகன், ஏன் வெறியன் என்று கூட சொல்வேன். இதுவும் ஒரு கருத்து பகிர்வுதான்.

நன்றி தமிழ்.

ஜோ/Joe said...

"அவர் ‘பெரியார்’ படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப் பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ, ‘பெரியார்’ படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார். "


‘‘நான் ஆன்மிகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை ‘பெரியார்’ படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். "

-இளையராஜா ஜூ.வி -ல்

rmsachitha said...

இளைய ராஜாவுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்கிறார், கடவுள் மறுப்புக்கொள்கையை கொண்டவர் பெரியார் என்றாலும், கற்ப்பு விசயத்தில் தமிழர்களின் எண்ணத்தை பெரியார் பிரதிபலிக்கவில்லை.

இளையராஜாவின் முடிவை நான் ஆதரிக்கிறேன். நன்றி.

rmsachitha said...

இளைய ராஜாவுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்கிறார், கடவுள் மறுப்புக்கொள்கையை கொண்டவர் பெரியார் என்றாலும், கற்ப்பு விசயத்தில் தமிழர்களின் எண்ணத்தை பெரியார் பிரதிபலிக்கவில்லை.
இளையராஜாவின் முடிவை நான் ஆதரிக்கிறேன். நன்றி.

முத்துகுமரன் said...

ஜோ மிக்க நன்றி. பெரியாரை பற்றிய இளையராஜாவின் கருத்துகளை இங்கே தந்தமைக்கு.

முக்கியமாக''//பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல.//

Aravindan Neelakandan said...

இளையராஜா அவர் குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால் குறிப்பிட்ட அடையாளங்களுடன் இருக்கவேண்டுமா? இன்றைக்கு கே.ஆர்.நாராயணன் குஜராத் கலவரத்தில் பாஜக எதிர்ப்பு நிலை எடுத்ததன் அடிப்படையில் அவரது தலித் அடையாளமென போற்றுபவர்கள், அது கே.ஆர்.நாராயணனின் காங்கிரஸ் முகம் என்பதனை மறந்து விடுகின்றனர். ஆனால் லல்லு ஆட்சியில் தலித் படுகொலையின் போது அங்கு சட்டம் ஒழுங்கு அழிந்துவிட்டது என சொந்த கட்சியின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது வாஜ்பாய் அரசுக்கு குடியரசு தலைவர் ஆட்சியை பீகாரில் அமுல்படுத்த ஆதரவளித்தார் கே.ஆர்.நாராயணன். அது அவரது கட்சி அரசியல் கடந்த தலித் உரிமை போராளி முகம். அன்று தலித் பெயரால் வியாபாரம் நடத்துகிற பம்மாத்துகள் கே.ஆர் நாராயணனது நிலைபாட்டை ஆதரித்தனவா? சில மாதங்களுக்கு முன்னால் அரைகுறை தகவல்களின் பெயரில் திரித்து இசைஞானி மீது அபாண்டமாக ஒரு கட்டுரையை குடிகாரத்தனமாக எழுதினான் ஒரு அஃறிணை - அவுட்லுக் ஆனந்த் என்கிற பம்மாத்துகாரன். அவனுக்கு சிங்கியடித்தனர் இங்கிருந்த சில முற்போக்குகள். ஏதோ இசைஞானி ரமணரை பாடினால் அது அவர் அந்தணராக முயற்சிப்பதாக கைகூசாமல் ஒருவன் தீம்தரிகிட என்று 'ஓ' போட்டான். சுருக்கமாக இந்த முற்போக்கு பகுத்தறிவு அஃறிணைகளுக்கு தலித்துகள் இவர்கள் போட்ட கோட்டில் ஓட வேண்டும். அவர்களை மோசமான நிலையில் வைத்து இவர்கள் புண்ணை சொரிந்து பிச்சை கேட்பவனை போல அரசியல் நடத்தவேண்டும். ஈவெராவே கீழவெண்மணியில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்த்து வாயை கூட திறக்கமுடியாத வக்கிரபுத்தி பிடித்த சிறியார்தானே. பின்னே அந்த கூட்டத்துக்கு எப்படி இசைஞானி மீது மதிப்பு வரும்? அண்ணல் அம்பேத்கார் குப்பைத்தொட்டிக்கு போக வேண்டியது என சொன்ன ஆரிய இனவாத படையெடுப்பு கோட்பாட்டை தனது மூளையில் (அண்ணல் அம்பேத்காரின் வார்த்தைகளை இந்தவிதத்தில் ஈவெரா உண்மையாக்கியிருக்கிறா'ர்'(ன்).) சுமந்து அரசியல் நடத்திய கீழ்த்தரத்தின் பெயர்தான் சிறியா'ர்'(ன்) ஈவெரா.

ROSAVASANTH said...

அரவிந்தன் நீலகண்டன், இந்த பின்னூட்டம் (கருத்துரீதியில் சந்தேகம் இல்லாவிட்டாலும், மொழியை பார்த்து) நீங்கள் எழுதியதுதானா என்று சந்தேகமாக இருக்கிறது. எதற்காக இதுவரை மற்ற கருத்துக்களை மதிப்பதாகவும் நடித்தீர்கள், எதிரிகளையும் 'திரு' போட்டு அழைத்தீர்கள் என்று புரியவில்லை. ஒரு வேளை எதிர்நிலைபாடுகளை வைத்திருப்பவர்கள் மீது, நம்பிக்கை வைப்பது பிரச்சனைதானோ என்னவோ?!

(முத்துகுமரன். சிறியவன் ஆனந்தை எங்கு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவரை குடிகாரன் என்று திட்டுவதை, ஆனந்த் பதிலளிக்காத (அல்லது வாசிக்க வராத இடத்தில்) எப்படி அனுமதிக்கிறீர்கள். பெரியார் பற்றிய வசையையும் (கருத்தை அல்ல) எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று புரியவில்லை. )

Hariharan # 03985177737685368452 said...

//தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார். ஆனால் இறை நம்பிக்கை என்னும் பெயரில் மனித குலத்தை அடிமைத்தனம் செய்வதை மிக மூர்க்கமாக, தயவு தாட்சண்யமின்றி எதிர்த்திருக்கிறார்.//

முத்துக்குமரன்,

முழுசா ஒரு பூசணித்தோட்டத்தையே ஒருகப் சோற்றில் மறைத்திருக்கின்றீர்கள்! வாழ்த்துக்கள்.

முத்துகுமரன் said...

//(முத்துகுமரன். சிறியவன் ஆனந்தைஎங்கு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவரை குடிகாரன் என்று திட்டுவதை, ஆனந்த் பதிலளிக்காத (அல்லது வாசிக்க வராத இடத்தில்) எப்படி அனுமதிக்கிறீர்கள். பெரியார் பற்றிய வசையையும் (கருத்தை அல்ல) எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று புரியவில்லை. )
//

ரோசா வருகைக்கு நன்றி.
சில விளக்கங்களை கொடுக்க விரும்புகிறேன். முதலில் பின்னூட்டங்களை திருத்தம் செய்து வெளியிடுவது எப்படி என்பது எனக்குத் தெரியாது. அதனால் ஒன்று பிரசுரிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். மேலும் எனக்கு ஆதரவான கருத்துகளை கொண்ட பின்னூட்டத்தை மட்டும்தான் வெளியிடும் விருப்பம் கொண்டவனும் அல்ல, ஆனந்த் குறித்தான அரவிந்தன் நீலகண்டனின் பின்னூட்டத்திற்கு எனது விளக்கத்தை உடனடியாக கொடுத்திருக்க வேண்டும். பணியின் காரணமாக பின்னூட்டத்தை மட்டும் பிரசுரித்து விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

நீங்களும்தான் ஞாநியை விமர்சித்து இருந்தீர்கள்.ஞாநி உங்கள் பதிவுகள் எல்லாவற்றையுமா வாசிக்கிறார். அவர் தரப்பு விளக்கத்தை சொல்ல. அதை எப்படி எடுத்து கொள்வது விமர்சன உரிமையா?

தன்மீதான வசைகளையும், சேறுகளையும் தாங்கிக் கொண்டவர்தான் பெரியார். இதனால் ஒன்றும் கோபித்துக் கொள்ளமாட்டார்.:-).

எனினும் தனிநபர் தாக்குதல் குறித்தான பின்னூட்டங்களில் விழிப்புடன் இருப்பேன் என்று தெரியப்படுத்தி கொள்கிறேன்

- யெஸ்.பாலபாரதி said...

//ஆனால் அவர் மறுத்ததற்கு காரணம் பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றால் இசையில் ஞானியாக இருந்தாலும் வாழ்வியலில் அவர் பூஜ்ஜியம் என்றே காட்டுகிறது//

ஆமென் அப்படின்னு சொல்ல நினைப்பதற்குள் பின்னி பெடல் எடுத்து இருக்காங்க இத்தனை பேரு!

இளையராசா அய்யர் ஆகனும்னு முடிவெடுத்து கொள்ளை வருசமாச்சு.. இப்போ போய்.. கண்டதை பேசிகிட்டு.
அவரோட கஷ்ட காலத்துலையும் நாம தான் அவருக்கு பக்க பலமா இருப்போம்னு இப்ப நெனைக்கிறதன் விளைவு தான்..

//சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை ‘பெரியார்’ படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.//
இப்படி சொல்ல வச்சு இருக்கு.

லக்கிலுக் said...

////தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார். ஆனால் இறை நம்பிக்கை என்னும் பெயரில் மனித குலத்தை அடிமைத்தனம் செய்வதை மிக மூர்க்கமாக, தயவு தாட்சண்யமின்றி எதிர்த்திருக்கிறார்.//

முத்துக்குமரன் அவர்களின் இந்த ஒரு கருத்தை வைத்துக் கொண்டு கும்மி அடிப்பவர்கள் கவனத்திற்கு :

"பெரியார் குன்றக்குடி அடிகளாரின் வேண்டுகோளை ஏற்று அவரது மடத்துக்குச் சென்றபோது அங்கிருந்த பணியாளர் ஒருவர் விவரம் புரியாமல் தீபராதனைத் தட்டை பெரியார் முன் நீட்டியிருக்கிறார். உடனே அடிகளார் பதறிப் போய் அந்த பணியாளரை கடிந்துக் கொண்டார்.

பெரியாரோ புன்னகையுடன் தீபராதனைத் தட்டிலிருந்து விபூதியை எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டார். இது பெரியார் மதநம்பிக்கை கொண்ட அடிகளாருக்கு கொடுத்த மரியாதை"

- இது வரலாறு. பெரியாரைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாத கோமாளிகளின் பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம் முத்துக் குமரன்.

ROSAVASANTH said...

//நீங்களும்தான் ஞாநியை விமர்சித்து இருந்தீர்கள்.ஞாநி உங்கள் பதிவுகள் எல்லாவற்றையுமா வாசிக்கிறார். அவர் தரப்பு விளக்கத்தை சொல்ல. அதை எப்படி எடுத்து கொள்வது விமர்சன உரிமையா? //

நான் ஞாநியின் எழுத்தை, கருத்தை விமர்சித்திருக்கிறேன்; அவர் குடிகாரரா, பெண்பித்தரா என்று அல்ல. (ஆனந்தை பற்றி நான் கூடத்தான் எழுதியிருகிறேன்.) இங்கே வருவது ஒருவரின் சொந்த வாழ்க்கை சார்ந்த தகவல், அல்லது அவதூறு. (குடிகாரனாய் இருப்பதில் சிறுமை இல்லை என்று நான் நினைப்பதும், ஆனந்தும் கூட நினைக்கலாம் என்பதும் வேறு விஷயம்.)

ROSAVASANTH said...

அநி 'குடிகாரத்தனமாக' என்று எழுதியுள்ளதை குடிகாரன் என்று வாசித்துவிட்டதற்கு மன்னிப்புகள். எனினும் பெரியார் உட்பட பலரை ஒருமையில் திட்டும் பின்னூட்டம் குறித்த என் கருத்தில் மாற்ரமில்லை.

முத்துகுமரன் said...

//இங்கே வருவது ஒருவரின் சொந்த வாழ்க்கை சார்ந்த தகவல், அல்லது அவதூறு//

வருங்காலங்களில் கவனத்தில் கொள்கிறேன் ரோசா.

நன்றீ

CrazyTennisParent said...

//பெரியாரைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாத கோமாளிகளின் பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம் முத்துக் குமரன்.//

:))

கருத்து சுதந்திரம் மற்றும் இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்களும் வரலாறும் தெரிந்துக்கொள்ளவாவது இதை அனுமதிக்கலாம் என்பது என் கருத்து.

அருண்மொழி said...

எப்படியோ பெரியார் இளையராஜா உருவத்தில் வந்து இல.கணேசனுக்கும், எஸ்.வி.சேகருக்கும் நல்ல பல்பு கொடுத்துவிட்டார் :-)

குரு, சிஷ்யன் படத்தில் ஒரு டயலாக் வரும்
"இப்ப என்னா செய்வீங்க", "இப்ப என்னா செய்வீங்க"

அருண்மொழி said...

கீழ்வெண்மணி குறித்து பெரியார் என்ன சொன்னார் என்பது இந்துத்வியாதிகளுக்கு என்ன தெரியும்? திண்ணையில்தான் பிதற்றுகிறார்கள் என்றால் இங்கேயுமா...

Aravindan Neelakandan said...

//இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல.//
இளையராஜாவை -தலித் சாதனையாளர் ஒருவரை- அவன் என விளித்தது உறுத்தாத ரோசாவசந்துக்கு ஈவெரா என்கிற உயர்சாதிகாரருக்கு 'ன்' போட்டது உறுத்துவது ஏன்? சாதிய வெறிதானே காரணம்? என்று கேட்டு ரோசாவசந்தின் வார்த்தைகளை கட்டுடைத்து அதில் ஒரு சாதிய பார்வை இருப்பதை காட்டலாம். ஆனால் அது நிச்சயமாக நேர்மையற்றதனமாகத்தான் இருக்கும். எனது நேர்மை குறித்து ரோசாவசந்தின் சான்றிதழை எதிர்பார்த்தோ அல்லது அவருடைய நேர்மைக்கு சான்றிதழ் அளிக்க கூடிய எவ்வித பீடத்திலுமோ நான் இல்லை. அவ்வாறு இருக்க பிரியப்படவும் இல்லை. ஆனாலும் இந்த பதிவுக்கான பின்னூட்ட இழையில் இளையராஜாவை ஏகவசனத்தில் குறிப்பிட்டிருப்பது ஏன் எந்த முற்போக்கு மகானுபாவனுக்கும் உறுத்தவில்லை என்பதும் ஆனால் ஈவெராவை சொன்னால் மட்டும் தைக்கிறது என்பதும் எனக்கு புரியவில்லை. நான் மிகவும் மதிக்கும் இசைஞானியை ஏகவசனத்தில் அழைத்ததாக நான் உணர்ந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு அது. மேலும் ஆனந்த்தை நான் ஒன்றும் குடிகாரன் எனக் கூறவில்லை. குடிகாரத்தனமான எழுத்து என்றுதான் கூறினேன். (அதனை பின்னர் ரோசாவும் குறிப்பிட்டுள்ளார்.) கீழவெண்மணி நிகழ்வை கண்டித்து தன்னிச்சையாக/உடனடியாக ஈவெரா வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டால் எனது நிலைபாட்டை நிச்சயமாக மாற்றிக்கொள்வேன்.

முத்துகுமரன் said...

//இளையராஜாவை -தலித் சாதனையாளர் ஒருவரை- அவன் என விளித்தது உறுத்தாத //

அப்படி போடு அருவாள, அவன் என்று ஏகவசனத்தில் விளித்ததாக நீங்கள் பொருள் கொண்டால் இலக்கண வகுப்பிற்குதான் செல்ல வேண்டும்.

Aravindan Neelakandan said...

//ஈவெராவை - அவன் பகுத்தறிவுக்கு -அதன் அடிப்படையான பரிணாம அறிவியலுக்கு நாளைக்கு ஆபிரகாமிய மதவெறிக்கும்பலால் ஆபத்து வந்தால் குரல் கொடுக்க ஹிந்துத்வவாதிதான் வரவேண்டும்.//

இதில் அவன்யாரைக் குறிக்கிறது செப்பலாமே - இலக்கண விதிகளோடு?

அருண்மொழி said...

//

கேள்வி: கீழ்வெண்மணியில் விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் கண்டு கொள்ளவில்லை என்று ஒரு பிரச்சாரம் நடை பெறுகிறதே?

பதில்: அக்கொடுமை நடந்த மறுநாள் விட்டு மறுநாள் (28-1௧2-1௧968) தந்தை பெரியார் ஒரு நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.

"கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம் தற்காப்புக்காக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உள்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டை பூட்டிக் கொளுத்தி, 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளையும் இது போன்ற அராஜகங்களையும் சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சிகளால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்கு தகுதியில்லை. இதற்காக நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்று கருதத் தேவையில்லை. அதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை" என்று எழுதி இருக்கின்றாரே - உண்மை இவ்வாறு இருக்க புழுதி வாரித் தூற்றுவோர் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்

(திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பதில் - விடுதலை ஞாயிறு மலர் 11.2.2006)

//

பெரியார் திடல் எங்கு உள்ளது என்பது தெரியும் என நம்புகின்றேன். அங்கு பழைய விடுதலை, குடியரசு நாளேடுகள் ஆவணப்படுத்தி வைத்து இருக்கின்றார்கள். முழு அறிக்கையும் தேவை எனில் அங்கு சென்று படித்து அறிந்து கொள்ளலாம்.

(குறிப்பு) யார் வேண்டுமென்றாலும் அங்கே சென்று படிக்கலாம். நம்மவா, மத்தவா என்று வேறு படுத்தி பார்க்கமாட்டார்கள் :-).

Aravindan Neelakandan said...

// இந்தக் கொடுமைகளையும் இது போன்ற அராஜகங்களையும் சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சிகளால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்கு தகுதியில்லை. இதற்காக நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்று கருதத் தேவையில்லை. அதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை//

வாசகன் said...

""// தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார். //

இதற்கு ஆதாரமாக ஏதாவது சுட்டி இருக்கிறதா?.. உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தான் கேட்கிறேன்... இறைவன் என்ற கான்செப்டே கிடையாது என்று சொன்னவர் தான் பெரியார்... பிறகு வந்த அண்ணா தான் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று மாற்றினார்...
தயவு செய்து தவறான கருத்தை பரப்பாதீர்கள்...//" -Nakkiran
//"முழுசா ஒரு பூசணித்தோட்டத்தையே ஒருகப் சோற்றில் மறைத்திருக்கின்றீர்கள்! வாழ்த்துக்கள்.// - Hariharan

பெரியாரின் சில வார்த்தைகள்:

'மனிதனை மனிதனாக மதிக்கக் கூடிய மதத்தையோ, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்காத மதத்தையோ, காசு பணம் செலவு செய்து தான் தன்னை வணங்க வேண்டும் என்று கூறாத கடவுளையோ நாம் வேண்டாம் என்று கூறவில்லை. உயர்வு தாழ்வுகளைச் சமன் செய்து ஒற்றுமை உணர்ச்சியைத் தூண்டிவரும் கடவுளை வணங்குவதில் யாருக்குத்தான் தடையிருக்க முடியும்?.

சூத்திரப்பட்டத்தை கற்பித்து நிலைநாட்டி வரும் கடவுளை, அதற்கு ஆதாரமான புராண இதிகாசங்களைஅழித்தொழியுங்கள்.அன்பும் அறிவுமயமானதுமான கடவுளை வணங்குங்கள். கடவுளைவணங்குதல் என்றால் என்ன? தேங்காய் உடைத்து திரு விழாச் செய்து,பார்ப்பானுக்கு தட்சணை கொடுத்து அவன் காலில் விழுவதில்லை.ஒழுக்கமாகநடப்பதும் உயர்ந்த பண்புகள் கொள்வதுமே அன்பும் அறிவுமான கடவுளை வணங்குதல் என்பதற்கு ஏற்றதாகும்"
(ஆதாரம்: பெரியாரின் பொன்மொழிகள்)

Aravindan Neelakandan said...

// இந்தக் கொடுமைகளையும் இது போன்ற அராஜகங்களையும் சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சிகளால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்கு தகுதியில்லை. இதற்காக நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்று கருதத் தேவையில்லை. அதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை//

ஓகோ இதுதான் தலித் படுகொலையை கண்டிக்கும் இலட்சணமா? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று. அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் விபச்சாரி மகன் என்றிருக்கிறது. இந்த அரசியல் நிர்ணய சட்டத்தை துடப்பத்தால் அடிக்கவேணும் என்று பேச ஈவெராவுக்கு வாய் இருக்கிறது. தலித்துகளை எரித்தவர்களை குறிப்பிட்டு பேச நாக்கு வர மாட்டேன் என்கிறது அல்லவா? மற்ற எல்லாவற்றுக்கும் வளைய வளைய சுற்றுகிற நாக்கு நரம்பில்லாமல் அதனை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறது அல்லவா? ராமனுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்த தெரிந்த பேர்வழிக்கு இந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்காக ஒரு ஊர்வலம் நடத்தகூட வக்கில்லாமல் போகிறது அல்லவா? இதுதான் ஈவேராவின் கண்டனம்? செய்தவர்களை தண்டி என்று ஒரு வார்த்தை கிடையாது. செய்ய தவறிய மாநில அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை முனகல் கிடையாது. மாறாக 'நம்மை ஆள நாமே தகுதியா? என்கிற ரீதியில் வெங்காயத்தனமாக ஒரு புலம்பல். இதற்கு பெயர் கண்டனமா?

கடைசி பெஞ்ச் said...

ஏதோ லடாயில் இந்த முடிவை ராஜா எடுத்திருக்கவேண்டும். ஜூவியைப் படியுங்கள். சும்மா சும்மா ஒரு கலைஞனை மீண்டும் மீண்டும் சீண்டிப்பார்க்காதீர்கள். சர்ச்சைகள் ராஜாவிற்குப் புதிதில்லை. பெரியாரியமோ, ஆன்மீகமோ அவரது வாழ்வின் வெற்றிக்கு உதவவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

இதற்கு அரசியல் சாயம் பூச என்னாளும் ராஜா விரும்பமாட்டார். ///
இளையராஜாவை வைத்து தேவைப்பட்டால் அரசியல் செய்யத்தான் அவர்கள் விரும்புவார்கள் /// முற்றிலும் சரி.

அருண்மொழி said...

//கீழவெண்மணி நிகழ்வை கண்டித்து தன்னிச்சையாக/உடனடியாக ஈவெரா வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டால் எனது நிலைபாட்டை நிச்சயமாக மாற்றிக்கொள்வேன். //

பெரியாரின் முழு அறிக்கை என்னிடம் இல்லை. இருந்ததை பின்னூட்டமாக இட்டுவிட்டேன். கேட்டது கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டாரா என்று.அதற்கு பதில் அளிக்கப்பட்டுவிட்டது. அதில் அவரை திட்டவில்லை , காரம் போதாது .... என்றால் அதை பெரியாரிடம்தான் கேட்க வேண்டும்.

CrazyTennisParent said...

அருண்மொழி மற்றும் தமிழ்மகனுக்கும் வாழ்த்துக்கள்.

நச்சென்று கொட்டியதற்கு.குட் ஒர்க்.

CrazyTennisParent said...

நீலகண்டன் அவர் அரசியலை பேசுகிறார். பெரியாரின் கருத்து அவருக்கு புரியாதது போல் இருக்கிறார்.அதில் ஆச்சரியம் இல்லை.

GiNa said...

குஷ்பு நடிக்கிறேன் என்று சொன்னார் ஆனால் அவர் கொள்கையை காரணம் காட்டி நடிக்கக்கூடாது என்று கூச்சலிட்டார்கள்.

இளையரஜா ஒருவேளை கொள்கையை காரணம் காட்டி இசையமைக்க மறுத்திருந்தால் அதை பாராட்டத்தானே வேண்டும் ? ;D

//
எனக்கு ஆதரவான கருத்துகளை கொண்ட பின்னூட்டத்தை மட்டும்தான் வெளியிடும் விருப்பம் கொண்டவனும் அல்ல//

சூப்பர் உள்குத்து! புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

கீழ்வெண்மணி படுகொலை குறித்து பெரியார் வெளியிட்ட அறிக்கை கம்யுனிஸ்ட்களை குறை
சொல்கிறது.அவரது அறிக்கைக்கும்,திண்ணையில் மலர்மன்னன் கீழ்வெண்மணி படுகொலை குறித்து
எழுதியிருப்பதற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.பெரியார் வெளியிட்ட அறிக்கையை படித்தாலே அவர்
யாரை எவ்வளவு கண்டிக்கிறார், யாரை குறை சொல்கிறார் என்பது தெரிந்து விடும்.
அந்த விஷயத்தில் பெரியார் எடுத்த நிலைப்பாடுகள் அபத்தமானவை. பெரியார் குறித்த
புனித பிம்பங்களை உருவாக்குவோர்,பெரியார் பக்தர்கள் எதையாவது எழுதி சமாளிக்கப்
பார்க்கலாம்.அப்படித்தான் ஒருவர் எழுதியிருக்கிறார் குதிரை வீரன் பயணத்தில்.அதை
கீற்று தளத்தில் படிக்கலாம்

✪சிந்தாநதி said...

ஜோ முக்கிய பாகத்தை இங்கே பின்னூட்டி இருக்கிறார். இன்னும் சற்று விவரங்கள் இங்கே...

http://valai.blogspirit.com/archive/2006/11/15/இளையராஜா-மறுக்கிறார்.html

ரவி ஸ்ரீநிவாஸ் said...

வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்து வந்தாரென்பதும் 28.12.68 அன்றுமாலையே இல்லம் திரும்பினாரென்பதும், டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் திரு.கி.வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியக் கிடைப்பதால், பெரியாரால் அறிக்கையெதுவும் எழுதவியலாததை அனுமானிக்கலாம். எனினும், 12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீடு வெளிப்படுகிறது:

"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''

According to Periyar asking for an
increase in wages is not correct.
Since he wanted workers
to live within their means it should apply to all those who get
wages/salaries.
So I hope Muthu and others who swear by Periyar will not ask for
any raise in their salaries and perks.And if given will refuse to
accept them.Is that acceptable
to those who swear by Periyar.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

'மனிதனை மனிதனாக மதிக்கக் கூடிய மதத்தையோ, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்காத மதத்தையோ, காசு பணம் செலவு செய்து தான் தன்னை வணங்க வேண்டும் என்று கூறாத கடவுளையோ நாம் வேண்டாம் என்று கூறவில்லை. உயர்வு தாழ்வுகளைச் சமன் செய்து ஒற்றுமை உணர்ச்சியைத் தூண்டிவரும் கடவுளை வணங்குவதில் யாருக்குத்தான் தடையிருக்க முடியும்?.

If so has Periyar ever recognised
organisations like Ramakrishna Mutt. Has he ever praised such
organisations.

லக்கிலுக் said...

//நம்மவா, மத்தவா என்று வேறு படுத்தி பார்க்கமாட்டார்கள் :-).//

சங்கர மடத்திலும் இது நடைமுறையில் இருக்கிறதா என அறிய விரும்புகிறேன் ;-)

╬அதி. அழகு╬ said...

ராசாவப் பத்தி எல்லாரும் பேசறீங்க. ராசா ஒரு கோயிலு கட்டி குடுத்தாராம். கோயிலு கட்டி குடுத்தவரையே அந்த கோயிலுக்கு உள்ள வரக்கூடாதுன்னு தடுத்துட்டாங்களாமே. தெரியாமக் கேக்குறேன். யாருக்காவது தெரிஞ்சுதுன்னா சொல்லுங்க.

Hariharan # 03985177737685368452 said...

//கடவுளைவணங்குதல் என்றால் என்ன? தேங்காய் உடைத்து திரு விழாச் செய்து,பார்ப்பானுக்கு தட்சணை கொடுத்து அவன் காலில் விழுவதில்லை.

ஒழுக்கமாகநடப்பதும் உயர்ந்த பண்புகள் கொள்வதுமே அன்பும் அறிவுமான கடவுளை வணங்குதல் என்பதற்கு ஏற்றதாகும்"//

ஈவெரா ரெண்டையுமே பின்பற்றாத ஆள். இம்மொழியை நச்சு என்று சொல்லலாமே அன்றி நச்ன்னு குட்ட முடியாது!

CrazyTennisParent said...

//So I hope Muthu and others who swear by Periyar will not ask for
any raise in their salaries and perks.//

அடேங்கப்பா..அது என்ன நான் மட்டும் இங்க?

நான் பூர்ஷவா வர்க்கத்தில் சேர்ந்து சில நாட்கள் ஆகிறது ஐயா:))

தலைவர் ரவிக்காக மீண்டும் பெரியாரின் ஒரு கருத்து

" ராமசாமி சொல்றானேன்னு மட்டும் எதையும் நம்பாதே......"

ROSAVASANTH said...

முத்துகுமரன் பதிவில் 'அவன்' போட்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் குழந்தைக்கும் இளயராஜாவை இழிவு படுத்த (மற்ற இடங்களில் 'அவர்' என்று சொல்லிவிட்டு ) 'அவன்' என்று சொல்லவில்லை என்று புரியலாம். ஆனால் முத்து ஏன் போட்டார் எனபது குறித்து எனக்கும் தெளிவில்லை (இதையும் வைத்து கும்மியடியுங்கள் அநி). கேனத்தனாமாக கூட அதை செய்திருக்கலாம்; கைப்பிழை, எழுத்துப்பிழையாக கூட இருக்கலாம், தெரியாது. அதை பற்றி விளக்கம் எதுவும் கேட்காமல் இத்தனை நீளமாக உதார் விடுவது, ஒன்றுமில்லாத விஷயத்தை வைத்து எப்படி தர்க்கரீதியில் அரவிந்தன் நீலகண்டன் (வேறு இடங்களில் அறிவுபூர்வமாய் புத்திசாலித்தனமாய் பேசுபவர்) ஜல்லியடிப்பார் என்பதற்கான உதாரணம் இது. பல நேரங்களில் இந்த லட்சணத்தில்தான் அநியின் எழுத்தும் தர்க்கமும் இருக்கிறது.


அடுத்து இன்னமும் ஒரு பத்தி அர்த்தமுள்ளதாக எழுத வராமல் காக்கா எச்சங்களை (பல முறை வேண்டுமென்றே provoke செய்தும்) இட்டுவரும் ரவி ஸ்ரீனிவாஸ் எழுதியது பற்றி. மலர் மன்னனுக்கும் பெரியாருக்கும், ஒற்றுமை இருப்பதாக (வெத்தாக) ஜல்லியடுக்கும் ரவி, தான் அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரே மாதிரி பேசுவதை ஒப்புக்கொண்டு, குறைந்த படசம் அநி காட்டும் நேர்மையுடன், வெளிப்படையாக பேச வேண்டியதுதானே.

அநி, பெரியார் எதற்காக ஊர்வலம் விடவில்லை என்கிறார், அது சரி, நாட்டில் தலித் மீதான எத்தனை அராஜங்களுக்கு இந்துதவா அமைப்புகள்(அதை அவர்களே செய்த போது செய்வது ஓவராய் இருக்கும், மற்றவர்கள் செய்தபோது) ஊர்வலம் நடத்தியிருக்கின்றன?

பெரியாரின் கீழ வெண்மணி அறிக்கையை (அதன் தேர்ந்தெடுத்த சில பகுதிகளை) இப்போதுதான் படித்தேன்,. (இதுவரை பெரியார் அது குறித்து பேசவே இல்லை என்று ஜல்லியடித்து வந்தார்கள்.) அது தலித் பிரச்சனையல்ல, ஒரு கம்யூனிஸ்டுகளின் கூலி உயர்வு போராட்டம், தனது இயக்கம் அதை நோக்கியது அல்ல என்பதாக அவருக்கு தெளிவு இருந்திருக்கிறது. பெரியார் இங்கே கம்யூனிஸ்டுகள் பற்றி (அற்புதமாக) சொன்னதை வேறு இடத்தில் அரவிந்த நீலகண்டன் ஒப்புகொள்வார்; தானும் சரக்கவிழ்த்து விடுவார். ஆனால் ரவி (பெரியார் சொன்னதை திரித்து "According to Periyar asking for an increase in wages is not correct" என்று கொஞ்சம் கூட அறிவு இல்லாமல், ஒண்ணாப்பு பிள்ளை போல கேட்கும்வரை, ரவியிடம் எதுவும் பேசமுடியாது. பதிவு பதிவாக போய் ஆங்கிலத்தில் எச்சம் விடுவதை மட்டுமே அவர் செய்ய முடடியும்.

நடந்த அக்கிரமங்களை நியாயப்படுத்துவது அல்ல. ஒரு சமுதாய மாற்றத்தில் தனக்கான கரிசனங்கள், எதற்காக வாழ்வா சாவா போராட்டம் நடத்துவது, அதன் விளைவுகள், பக்க விளைவுகள் பற்றி அவருக்கான பார்வைகள் இருந்தன. அதை தலித் நோக்கில் விமர்சிப்பது எனக்கு ஒப்புதலானதே. ஆனால் இங்கே அரவிந்தன் நீலகண்டனும், ரவி ஸ்ரீனிவாஸும் காட்டும் கரிசனம் முதலை கண்ணீரை விட கபடமானது. அவர்கள் நோக்கம் தலித் மீதான் கரிசனம் அல்ல, தங்கள் பக்க அரசியலுக்காக (அரசியல் என்று சொல்வது அநிக்கும் மட்டும் பொருந்து, ரவிக்கு தன் ஜாதி சார்ந்த obsession மட்டுமே! ) மட்டும் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ROSAVASANTH said...

//f so has Periyar ever recognised
organisations like Ramakrishna Mutt. Has he ever praised such
organisations.//

அப்படி நினைத்தால்தான் பாராட்டமுடியும். ரவி மாதிரி ஜாதி obsession கொண்da பேர்வழிகள் சொல்வதற்காக செய்ய முடியாது. ஆனால் பெரியார் குற்றக்குடி அடியார் போன்றவர்களை பாராட்டத்தானே செய்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் சங்கராச்சாரியாருடன் கூட உரையாட தயாராக இருந்ததை, உரையாடியதை ஒரு எக்ஸ்ட்றீம் உதாரணமாக் தருகிறேன்.

ROSAVASANTH said...

தலித் பார்வையில் பெரியாரை பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவையாக நான் நினைப்பதை, ரவி மேற்கோள் காட்டிய, கீற்று கட்டுரையில் செல்வமும் சொல்கிறார்.

http://www.keetru.com/kuthiraiveeran/june06/selvam.html

பூனா ஒப்பந்தத்தின்போது பெரியார் ஐரோப்பியாவிலிருந்தபோதும் அம்பேத்கருக்கு ‘6, 7' கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிட கேலவமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்துவிடாதீர்கள்' என்று தந்தி கொடுத்ததுடன் ‘மகாத்மாவின் பொக்கவாய்ச் சிரிப்பில் மயங்கியும், மாளவியா, ராஜகோபாலாச்சாரியார் போன்ற பிரகஸ்பதிகளின் ஆசிர்வாதத்திற்கு ஏமாந்ததும் கையெழுத்து போட்டதும் தலித்துகளின் விடுதலையைப் பாழாக்கிவிட்ட'தென விமர்சனம் செய்தவர் பெரியார். மேலும் ‘பூனா ஒப்பந்தம் இதர இடங்களில் எப்படிப் போனாலும் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையாவது ரத்து செய்யப்பட வேண்டுமென'வும் (குடி அரசு 03.02.1935) பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானதெனவும் வலியுறுத்தினார். (குடி அரசு 8.11.1925).

ரவி ஸ்ரீநிவாஸ் said...

One can read Malarmannan's views in Thinnai. Any one can compare that with The full statement
by Periyar on the massacre in Keezh Venmani and his subsequent
speech to know whether my view is
correct or not.

முத்துகுமரன் said...

தகவல்களுக்கு நன்றி ரோசா,

சமீப காலத்தில் பெரியாரை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானவராக சித்தரிக்க முயலும் போக்கு இந்துத்துவவாதிகளினால் ஒரு யுத்தியாகவே பயன்படுத்தபட்டு வருகிறது. பெரியாரின் வாழ்வும் பேச்சும் ஒரு திறந்த புத்தகம். தனது எல்லா நிலைப்பாடுகளையுமே அவர் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

ROSAVASANTH said...

இணையத்துடன் தொடர்ந்து தொடர்பில் இல்லாது, வேலைகளுக்கு இடையில் மேலே உள்ளவைகளை எழுதினேன். இடையில் எழுதியதை அசை போட்டபோது செய்த மறு பரிசீலனையில் கிடைத்த நெருடலை மட்டும் இங்கே பதிவி செய்கிறேன்.

இப்போதும் ரவி, மற்றும் நீலகண்டனின் நோக்கங்களை பற்றி எழுதியதில், கம்யூனிஸ்டுகளை பற்றி பெரியார் பல காலமாய் சொல்லி வந்ததை பற்றியும், எனக்கு புதிய மாற்று கருத்து எதுவும் இல்லை; கீழ் வெண்மணி பிரச்சனை ஒரு தலித் சார்ந்த, தலித் உரிமைக்கான பிரச்சனை அல்ல, கூலி உயர்வு போராட்டம் என்ற பெரியாரின் புரிதல் பற்றிய கருத்திலும் மாற்றமில்லை.

"தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் ..." என்று சொல்லதைன் பின்னுள்ளவை மட்டுமே நெருடுகிறது. இதையே சாதிய சட்டகத்தை வைத்து சொன்னால் அதை பெரியார் அயோக்கியத்தனம் என்று (சரியாக) சொல்லுவார். ஆனால் வேறு இடத்தில் போராட்டத்திற்கு எதிரான தர்க்கத்தை அளிக்கிறார் (அதற்கான பிண்ணணி என்னவாக இருந்தாலும்). 'தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் வாழவேண்டும்; என்பது போராடுவதற்கு எதிரான, மாற்றத்திற்கான எதிரான பிற்போக்கு மனோபாவம். பெரியார் இதை சொன்னதன் பிண்ணணியை புரிய முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் அவர் தொடர்ந்து எதிர்த்து வந்த கம்யூனிஸ்டுகள் பற்றிய நிலைப்பாட்டுடன், கம்யூனிஸ்டுகள் பெரியார் இயக்கம் பற்றி எடுத்த நிலைபாடுகளுடன் சேர்த்து பார்க்க வேண்டும். அவை எப்படியிருந்தாலும், தனியாக பார்க்கும் போது பெரியாரின் இந்த கூற்று ஏற்கத்தக்கவை அல்ல, எதிர்க்க வேண்டியது என்றே நினைக்கிறேன். எனக்கு ஏற்பட்ட மாற்றுக்கருத்தை பதிவு செய்ய இந்த பின்னூட்டம். இதற்கும் மேல் இதை தொடரும் எண்ணம் இல்லை. நன்றி

முத்துகுமரன் said...

விவாதத்தின் வாயிலாக நல்லதொரு கருத்து பகிர்வுகளை தந்தமைக்கு மிக்க நன்றி ரோசா.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்து பெரியார் வெளியிட்ட அறிக்கை இணையத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.கிடைத்தால் இடுகிறேன். தஞ்சை மாவட்டத்தில் கம்யுனிஸ்ட்கள் வெறும் கூலி உயர்வுப் போராட்டம் மட்டும் நடத்தவில்லை, சமூகப் பிரச்சினைகள் குறித்தும் போராடியிருக்கிறார்கள். எனவே கம்யுனிஸ்ட்கள் கூலி உயர்விற்காக மட்டுமே எப்போதும் குரல்
கொடுத்தனர் என்பது யார் கூறினாலும் தவறு. பெரியார் என்றைக்காவது ஒரு தனித்துவமுள்ள சமூக அக்கறையும், தொழிலாளர் நலனையும் முன்னிறுத்தும் தொழிற்சங்கத்தினை உருவாக்கியிருக்கிறாரா.
இல்லை எனில் ஏன் இல்லை. பெரியாரியவாதிகள் பெரியார் குறித்து மிகைப்படுத்தப்பட்ட தோற்றத்தினை உருவாக்கினால் அதை பிறர், குறிப்பாக தலித்கள் கேள்விக்குட்படுத்தினால்
அது பெரியாரியவாதிகளுக்கு கசப்பாக இருக்கும். 1968ல் என்ன நிலைப்பாடு எடுத்தார் அது சரியா என்று கேட்டால் 1930களில் அவர் கூறியதை சொல்வதா பதில். குதிரைவீரன் பயணத்தில் வெளியான கட்டுரை அதைத்தான் செய்கிறது.

லக்கிலுக் said...

//ராசாவப் பத்தி எல்லாரும் பேசறீங்க. ராசா ஒரு கோயிலு கட்டி குடுத்தாராம். கோயிலு கட்டி குடுத்தவரையே அந்த கோயிலுக்கு உள்ள வரக்கூடாதுன்னு தடுத்துட்டாங்களாமே. தெரியாமக் கேக்குறேன். யாருக்காவது தெரிஞ்சுதுன்னா சொல்லுங்க.//

சுமார் 5 லட்சம் ரூபாய் சொந்தப் பணத்தை திருவண்ணாமலை கோயிலுக்காக செலவு செய்தார் இளையராஜா...

கும்பாபிஷேகம் செய்யவந்த சங்கராச்சாரியார் இளையராஜாவுக்கு பூணூல் இல்லை. எனவே இளையராஜா அங்கே வந்தால் நான் வரமாட்டேன் என்று பெருந்தன்மையுடன் சொன்னார்.

அப்போது ஆட்சியில் இருந்த அம்மாவும் இளையராஜா நம்மவா இல்லை என்று கூறி அந்த விழாவுக்கு இளையராஜாவுக்கு அழைப்பு கூட அனுப்பாமல் புறக்கணித்தார்.

அரவிந்தன் நீலகண்டன் said...

கீழவெண்மணி தலித் பிரச்சனை அல்ல அது கூலி பிரச்சனை. ஈவெரா அதனை கூறியதன் பிண்ணணியை ஆராய வேண்டும். பீகாரில் இசுலாமிய பெண்ணை மணந்தால் அதற்காக தலித்தை இஸ்லாமியர்கள் கொன்றால் அது பெண் பிரச்சனை. ஹரியானாவில் சில மேல்சாதி அஃறிணைகள் தலித்துகளை மாட்டை கொன்றார்கள் என்று சொல்லி கொன்றால் அது போலிஸ்-ஊழல் பிரச்சனை. என்ன மாதிரி சமாளிப்பு இது? ஒருவரை ஆதரிப்பது என எடுத்துக்கொண்டால் எந்த அளவுக்கும் போய்விடலாம் அல்லவா?

இதுவரை நான் எழுதிய கட்டுரைகளில் எத்தனைமுறை ஈவெராவை அவன் என ஏக வசனத்தில் கூறியுள்ளேன். நான் ஒன்றும் இசைஞானியை 'அவன்' என வலைப்பதிவர் எழுதியதையோ பின்னர் அதையே ஒருவர் பின்னோட்டத்தில் மீள்-கோள் காட்டி எழுதியதையோ வைத்து கொண்டு 'கும்மியடிக்கவில்லை'. என்னை எது ப்ரவோக் செய்தது என மீண்டும் சுட்டிக் காட்டினேன். அப்போது கூட எனக்கு ஈவெராவை அவர் என அழைக்காமல் இருக்க முடியவில்லை அதே நேரத்தில் நான் மதிக்கும் ஒரு ஆளுமைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமரியாதைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற தீவிரத்தில் அதை 'ர்' என்றும் (ன்) என்றும் எழுதியிருந்தேன்.

நான் தலித்துகளுக்கு உதவுவதில்/குரல் கொடுப்பதில் இருக்கும் கயமை முதலை கண்ணீரை விட கயமையானது என கண்டுபிடித்து கூறிய ரோசாவசந்துக்கு வாழ்த்துக்கள். இது நேர்மையின் சிகரம்!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''

Were communists really trying to
overthrow DMK govt in 1968.
As far as I know the answer is
NO.CPI(M) & CPI were not with
naxalites nor did they promote
violence as a solution. At that
time Anna was alive. The communist parties in Tamil Nadu could not
faulted by raising issues that
affect livelihoods of labor.
Remeber all they asked was a
fair wage.It was not a campaign
for land reforms or distribution
of land to landless. I would argue
that Periyar raised a bogey of overthrowing govt. and spread of violence and so that
the govt. and the land lords could
not be blamed.

aathirai said...

இந்த அறிக்கையை படித்த நியாபகம் உள்ளது. நினைவிலிருந்து எழுதுகிறேன்.
கூலி உயர்வினால் தொழிலாளர்கள் வாங்கக் கூடிய பொருட்களின் விலையும்
உயரும். இதனால் பிரயோசனமில்லை. "தொழிலாளர்கள் நிர்வாகத்தில்
பங்கு கேட்க வேண்டும்" என்று எழுதியிருந்தார். ஒரிஜினல் கட்டுரையை எடுத்து
போடுவது நேர்மையாக இருக்கும்.

SnackDragon said...

அரவிந்தன் நீலகண்டனுக்கு சுட்டிக்காட்ட எல்லா உரிமையும் உண்டு என்று முழுமையாக நம்புகிறேன். ஆனால்,

10:30 க்கு எழுதிதையும் ,


அநி ://ஈவெராவே கீழவெண்மணியில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்த்து வாயை கூட திறக்கமுடியாத வக்கிரபுத்தி பிடித்த சிறியார்தானே//


3:15 க்கு எழுதியதையும்,
அநி://கீழவெண்மணி நிகழ்வை கண்டித்து தன்னிச்சையாக/உடனடியாக ஈவெரா வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டால் எனது நிலைபாட்டை நிச்சயமாக மாற்றிக்கொள்வேன்.//


பெரியார் பேசிய‌தை இங்கு ஒருவ‌ர் வெளியிட்ட‌வுட‌ன்,அநி 8:09 க்கு எழுதியதையும் பார்த்து,
அநி மாற்றுக்கருத்துக்கு மதிப்பளிக்கும் பண்பை அனைவரும் அறியவேண்டும். முதலில், பெரியார் அதை எதிர்க்கவே இல்லை என்று எழுத வேண்டியது, அவர் எதிர்த்துள்ளார் என்று தெரிந்தவுடன் அநி எதிர்பார்க்கும் அளவுக்கு பெரியார் எதிர்க்க வில்லை என்று எழுதுவது. (இன்னும் கூட பெரியார் பெரிதாக் செய்திருக்கலாம் என்று நானும் ஒத்துக்கொண்டாலும், அநி போன்ற பிரட்டி பிரட்டிப் பேச முடியாதவனாக இருக்கிறேன்.)

// தலித்துகளை எரித்தவர்களை குறிப்பிட்டு பேச நாக்கு வர மாட்டேன் என்கிறது அல்லவா? மற்ற எல்லாவற்றுக்கும் வளைய வளைய சுற்றுகிற நாக்கு நரம்பில்லாமல் அதனை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறது அல்லவா? ராமனுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்த தெரிந்த பேர்வழிக்கு இந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்காக ஒரு ஊர்வலம் நடத்தகூட வக்கில்லாமல் போகிறது அல்லவா? இதுதான் ஈவேராவின் கண்டனம்? செய்தவர்களை தண்டி என்று ஒரு வார்த்தை கிடையாது. செய்ய தவறிய மாநில அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை முனகல் கிடையாது. மாறாக 'நம்மை ஆள நாமே தகுதியா? என்கிற ரீதியில் வெங்காயத்தனமாக ஒரு புலம்பல். இதற்கு பெயர் கண்டனமா? //


அநி, கொஞ்ச‌மாவ‌து மாட்டிக்கொள்ளாம்ல் எழுதுங்கள். ;)

SnackDragon said...

எல்லாவற்றையும் விட,
அநி இன்னும் கூட இளையராஜவை தலித் அடையாளத்தோடு பார்க்கும் குணம் இருப்பதையும் காட்டும்படி உளறிவிட்டு

////இளையராஜாவை **தலித் சாதனையாளர் ஒருவரை **- அவன் என விளித்தது உறுத்தாத //

கீழ்வெணிமணி குறித்து பெரியாரின் எதிர்வினையை அளப்பதெல்லாம் எந்தக் காமடியில் சேர்ப்பது என்பது குழப்பமாக உள்ளது.

╬அதி. அழகு╬ said...

//இதுவரை நான் எழுதிய கட்டுரைகளில் எத்தனைமுறை ஈவெராவை அவன் என ஏக வசனத்தில் கூறியுள்ளேன். //

அரவிந்தன், பெரியாரை 'அவன் - இவன்' என்று ஏகவசனத்தில் எல்லாம் கூறவில்லை; பெரியாரை, சிறியார் என்று மட்டுமே குறிக்கிறார். பார்க்க:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=806022410&format=html :

// ... மாறாக இதே விசயம் ,ஈவெரா சிறியார் வழி செல்லும் பகுத்தறிவற்ற கும்பலின் பிரச்சார இலக்கியத்தில் எவ்வாறு திருகுவேலையுடன் 'யோக்கியமாக ' அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒப்பிட்டு பார்க்கவும்.//

╬அதி. அழகு╬ said...

//கும்பாபிஷேகம் செய்யவந்த சங்கராச்சாரியார் இளையராஜாவுக்கு பூணூல் இல்லை. எனவே இளையராஜா அங்கே வந்தால் நான் வரமாட்டேன் என்று பெருந்தன்மையுடன் சொன்னார்.

அப்போது ஆட்சியில் இருந்த அம்மாவும் இளையராஜா நம்மவா இல்லை என்று கூறி அந்த விழாவுக்கு இளையராஜாவுக்கு அழைப்பு கூட அனுப்பாமல் புறக்கணித்தார்.//

நன்றி லக்கி!

Nakkiran said...

//'மனிதனை மனிதனாக மதிக்கக் கூடிய மதத்தையோ, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்காத மதத்தையோ, காசு பணம் செலவு செய்து தான் தன்னை வணங்க வேண்டும் என்று கூறாத கடவுளையோ நாம் வேண்டாம் என்று கூறவில்லை. உயர்வு தாழ்வுகளைச் சமன் செய்து ஒற்றுமை உணர்ச்சியைத் தூண்டிவரும் கடவுளை வணங்குவதில் யாருக்குத்தான் தடையிருக்க முடியும்//

Then why is this...

Denial of God
------------------------
There is no god
There is no god at all
He who invented god is a fool
He who propagates god is a knave
He who worships god is a primitive


http://www.periyar.org/html/sp_nogod_eng.asp

Really I don't understand....பெரியாருக்கு கடவுள் குறித்து இருவிதமான கருத்துக்கள் இருந்த்ததா????

அரவிந்தன் நீலகண்டன் said...

ஓகோ இதுதான் கண்டிக்கிற இலட்சணமா? தவறு செய்தவர்களை எங்கே ஐயா கண்டித்திருக்கிறார்? "இப்படி செய்தவனுங்க எல்லாம் மனுசனுங்களா வெங்காயம் இவனுங்களையெல்லாம் தண்டிக்காம இருக்கிற ஆட்சி ஒரு ஆட்சியா வெங்காய ஆட்சி. இவனுங்க எல்லாம் மனுசனுங்களா அன்னைக்கே நான் சொல்லலை வெறும் கண்ணீர் துளி பசங்க" என்றெல்லாம் பேசியிருந்தால் சரி அடுத்த நிமிசம் நானே ஈவெரா பெரியார்தான். அவர் உண்மையிலேயே தலித் விடுதலைக்கு முக்கியமானவர் நான் சொன்னதெல்லாம் தவறு. மன்னிக்கவும் மறுபரிசீலனை செய்கிறேன் என ஒத்துக்கொள்கிறேன். ஆனால் உப்பு சப்பில்லாமல் ஈவெராத்தனமே இல்லாமல் ஒரு அறிக்கை. திமுக சென்னை தேர்தல் வன்முறையை கண்டிக்கிற மாதிரி ஒரு அறிக்கை. அதில் இருப்பதெல்லாம் அதை வைத்து மத்திய அரசு வெள்ளைக்காரனிடம் இருந்திருக்க வேணும் என்கிற புலம்பல். இதெற்கெல்லாம் 'பகுத்தறிவு பகலவன்' 'அமிலம் கொட்டும் கரும்பாறை' இத்யாதிகள் தேவையில்லை. வெள்ளைக்கார ஆபிசில் பணியாற்றி ரிடையர்ட் ஆன வயசான கிழவர் போதும்: "இண்டியண்ஸுக்கு ரூல் பண்ண தெரியாது வெள்ளைக்காரன் இருந்திருந்தா இப்படி நடக்க விடுவானோ" என்று பேச. ஆனால் சம்ப்ரன் முதல் வங்காளம் வரை அடிமை கூலிகளாக இந்தியர்களை இந்திய மெக்காலேயிஸ்ட் மேல்வர்க்க கைகூலிகளுடன் இணைந்து வெள்ளைக்காரன் நடத்திய கொள்ளைக்கார ராஜ்ஜியத்தின் சுரண்டல் வரலாறு கூட தெரியாததாக பகுத்தறிவு கரும்பாறை இருந்திருக்கிறது கீழ வெண்மணி விசயத்தில் என்பதுதான் வேடிக்கை. இதில் கரும்பாறைக்கு ஜால்ரா தட்டி என் பின்னூட்டத்தில் முரண் கண்டுபிடிக்க பகுத்தறிவு பிரகாசிக்கும் ஒரு அறிஞர் குழாம் வேறு. மீண்டும் சொல்கிறேன் அறிக்கை அல்ல, தெளிவான கண்டன அறிக்கையை காட்டுங்கள் ஐயா. Riders மற்றும் escape windows இல்லாத கண்டன அறிக்கை. அவர் அந்தணர்களை திட்டிய மொழி தெரியுமல்லவா, அதே சுடுமொழியில் கீழவெண்மணியில் தொழிலாளர்களை எரித்த மிருகங்களை கண்டித்து ஒரு அறிக்கை. காட்டுங்கள். நான் ஈவெரா குறித்த எனது பார்வையை மாற்ற தயாராக இருக்கிறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

"கும்பாபிஷேகம் செய்யவந்த சங்கராச்சாரியார் இளையராஜாவுக்கு பூணூல் இல்லை. எனவே இளையராஜா அங்கே வந்தால் நான் வரமாட்டேன் என்று பெருந்தன்மையுடன் சொன்னார்.

அப்போது ஆட்சியில் இருந்த அம்மாவும் இளையராஜா நம்மவா இல்லை என்று கூறி அந்த விழாவுக்கு இளையராஜாவுக்கு அழைப்பு கூட அனுப்பாமல் புறக்கணித்தார்"

Do you have any proof for this.
If my memory is right, a committee
was formed to collect money and
perform Kumbabishekam.Raja was a member in that.But after
elections in 2001 the new
govt. took over that job and
hence committee was dissloved.
In 2002 Kumbabishekam was
performed.

ROSAVASANTH said...

//ெரியாரியவாதிகள் பெரியார் குறித்து மிகைப்படுத்தப்பட்ட தோற்றத்தினை உருவாக்கினால் அதை பிறர், குறிப்பாக தலித்கள் கேள்விக்குட்படுத்தினால்
அது பெரியாரியவாதிகளுக்கு கசப்பாக இருக்கும். //

ரவி இப்படி சொல்வதில் எனக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை. ஒப்புதலும் உண்டு. குறிப்பாக ரவிக்குமாரின் ஆரம்பகால கட்டுரைகளை நேர்மறையாகவே பார்கிறேன். பின்னர் அது ஈகோ சண்டைகளாக, முடிவில் வக்கிரமாக மாறியது. பெரியார் மற்ற பிரச்சனைகளில் காட்டிய தீவிரத்தை (சரியாக சொல்ல வேண்டுமானாலும் பிரச்சனையை முன்வைத்து ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவது) தலித் சார்ந்த பிரச்சனைகளில் காட்டவில்லை என்பதுதான் உண்மை. மிகவும் குறிப்பாக தலித்-பிற்படுத்தப் பட்டவர்கள் (மற்றும் இதர பார்பனரல்லாதவர்கள்) முரண்பாடு பெரிதாகி, அதற்கு நீர் உற்றுவதன் மூலம், தனது பார்பன ஆதிக்க எதிர்ப்பு பலவீனமடைவதற்கு இடம் அளிக்க அவருக்கு மனம் வரவில்லை. தலித் நலனை விட இந்த நோக்கம் அவருக்கு முக்கியமானதாக இருந்ததாக கொள்ளலாம். நமக்கான கேள்வி இதை வைத்து பெரியாரை தலித் எதிரி என்று சொல்ல முடியுமா என்பதுதான். அப்படி சொன்னால் அவரது மற்ற நிலைபாடுகளை எப்படி பார்பது? கீழ் வேண்மணி விஷயத்தல் அவர் (மருத்துவமனையில், உடல்நலக் குறைவில்) (ரவி இங்கே சொல்வது போல் அல்லாமல்) அறிக்கை விடவில்லை; அதற்கு பிறகான ஒரு பொது கூட்டதில் அதை குறிப்பிட்டு பேசுகிறார்; என்பதாக கீற்று கட்டுரை சொல்கிறது. அதை கண்டனம் அல்ல, பிரச்சனையை திசை திருப்புவதாக் கொண்டால், அவரது மற்ற நிலைபாடுகளை எப்படி பார்பது? முதுகுளத்தூர் கலவரத்தின் போது முத்துராமலிங்க தேவரை கைது செய்யச் சொன்ன ஒரே தலைவராக இருப்பதையும், இன்றைக்கும் பார்பனர்கள் அளவிற்கு அவரை வெறுக்கும் ஒரு ஜாதியாக தேவர்கள் இருப்பதையும் எப்படி புரிந்து கொள்வது? அம்பேத்காருடனான அவரது உறவை, நிலைபாடுகளை, அம்பேத்காருக்கு பூனா ஒப்பந்த விஷயத்தில் அளித்த சரியான அறிவுரையை எப்படி பார்பது? இந்த வகையிலேயே செல்வன் கீற்று கட்டுரையில் பெரியாரின் முந்தய நிலைபாடுகளை பற்றி பேசுகிறார். (ரவிக்கு அது புரியாதது ஆச்சரியமே அல்ல.)

கம்யூனிஸ்டுகள் கூலி உயர்வு தாண்டி என்ன (தலித் சார்ந்த) சமூக பிரச்சனைகளுக்கு போராடினார்கள் என்று ரவிதான் (ஒரு வரி எச்சம் தவிர்த்து) விளக்க வேண்டும்.


காலனித்துவமும், இந்திய நிலபிரபுத்துவமும் இணைந்த செய்த சுரண்டல்களை பற்றி பெரியார் பலமுறை பேசியிருக்கிறார். பார்பனர்கள் வெள்ளைக் காரர்களுடன் செய்து கொண்ட சமரசங்கள், தங்களை உயர்த்திக் கொண்டது இதை பற்றியும் பேசியிருக்கிறார். (காங்கிரஸே துவக்க காலத்தில் ஒரு பிரிடீஷ் விசுவாச அமைப்பு என்பதையும் கவனிக்க வேண்டும்). ஆனால் பெரியார் சொல்வது பிரிடீஷ் ஆட்சியில், பார்பனியத்தை எதிர்க்க இருக்கும் வாய்ப்பும், சாத்தியங்களும் 'சுயாட்சியில்' இல்லாமல் இருப்பதை முன்வைத்தது. நீலகண்டன் சிலாகிக்கும் அம்பேதகாரும் அதை குறிப்பிட்டிருக்கிறார். (நீலகண்டனை போல, அம்பேத்கார் ஆதரவு நாடகம் ஆடத் தேவையில்லாத அருண் ஷோரி அதை வைத்து எழுதியதை கவனிக்க வேண்டும்). இதெயெல்லாம் நீலகண்டன் 'படிக்காதது, படித்தாலும் புரியாதது' ஆச்சரியம் கொள்ளத் தக்கது அல்ல. ஏனெனில் அது தற்செயலானது அல்ல; இயல்பானதும் அல்ல.

கடைசியாக நீலகண்டனின் ஆவேசம் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. இந்துத்வாதிகளிடம் உள்ள ஜாதி வெறி, தலித்கள் மீதான தாக்குதல்கள், பல இடங்களில் அவர்கள் காட்டும் மௌனம், அவர்களது தலித்துக்கு எதிரான நிலைபாடு (இன்னமும் தமிழகத்திலேயே தேவர்களுக்கு ஆதரவான நிலைபாடு) இதயெல்லாம் பற்றி பேசாமல், பெரியாரின் ஒரு 'அறிக்கை'யை முன்வைத்து கும்மியடிப்பதை தலித் ஆதரவு என்று அழைக்குமளவிற்கு எனக்கு நட்டு கழலாமல் இருப்பதை, அவர் வேறு எப்படி எதிர்கொள்ள முடியும்!

nagoreismail said...

முத்துக்குமரன், ஐ பெரிதாக்க இயலுமா? - நன்றி - நாகூர் இஸ்மாயில்

nagoreismail said...

முத்துக்குமரன், font sizeஐ பெரிதாக்க இயலுமா? - நன்றி - நாகூர் இஸ்மாயில்
(sorry for the earlier post, i missed out to write 'font size'- sori)

ROSAVASANTH said...

//ெரியார் சொல்வது பிரிடீஷ் ஆட்சியில், பார்பனியத்தை எதிர்க்க இருக்கும் வாய்ப்பும், சாத்தியங்களும் 'சுயாட்சியில்' இல்லாமல் இருப்பதை முன்வைத்தது. நீலகண்டன் சிலாகிக்கும் அம்பேதகாரும் அதை குறிப்பிட்டிருக்கிறார். //

குறிப்பாக இரட்டை வாக்குரிமை என்ற அம்பேதாகரின் கோரிக்கை, பிரிடீஷ் ஆட்சி மூலமே சாத்தியமாகியது என்று கொள்ளலாம். காந்தி தனது பிரபல உண்ணா விரத மிரட்டல் மூலம் முறியடித்தது மட்டுமில்லாமல், இன்றைக்கு அது சுய ஆட்சியில் இந்தியாவின் எந்த பகுதியிலும் சாத்தியம் என்று தோன்றவில்லை.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Periyar's statement on KeezhVenmani
massacre is at

http://www.keetru.com/dalithmurasu/mar06/periyar.html
http://www.keetru.com/dalithmurasu/apr06/periyar.html

ROSAVASANTH said...

ரவி சுட்டியளித்த, தலித் முரசில் வெளிவந்த பெரியாரின் 'அறிக்கையை' (இப்போதுதான்) படித்தேன். படிக்க மிகவும் கொடுமையாக இருந்ததை சொல்லத்தான் வேண்டும். (மேலும் அது படுகொலைகளை வெளிப்படையான வார்த்தைகளில் கண்டிக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.) இதை உண்மையில் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை ஒப்புகொள்கிறேன். பெரியாரின் மற்ற எழுத்துக்களுடன், பேச்சுக்களுடன் ஒப்பிடும்போது, இது ஜீரணிக்க இயலாததாகவே எனக்கு இருக்கிறது.

அவரது கடைசி கால எழுத்துக்களில் வெளிப்பட்ட தீவிர நம்பிக்கை வரட்சி, அதீதமான கோபம், ஒன்றையே தொடர்ந்து வரட்டுத்தனமாய் பேசுவது, (கருத்து ரீதியில்) தனிமைப்படுத்தப் பட்டது போன்றவற்றுடன் தொடர்புடையதாய் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த அறிக்கை மிகவும் பிரச்சனைக்குரியது என்று ஒப்புக்கொள்வதில் பிரச்சனையில்லை. (அது பெரியாருடையதுதான் என்று நம்புகிறேன்.) பெரியாரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்றோ, பெரியாரை பற்றி நம்பியதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டால் எல்லாம் விழுந்த விடும் என்ற நிலையிலேயோ நான் இல்லை. என்றாலும் இதை முன் வைத்து மட்டும் என்னால் பெரியார் குறித்த ஒட்டுமொத்த முடிவுக்கு வரமுடியாது. இந்த குறிப்பிட்ட விஷயத்தில் பெரியாரின் வார்த்தைகள் பெரிய நெருடலாக இருக்கிறது.

இப்போதும் ஏதாவது சால்ஜாப்பு சொல்வது பெரிய விஷயமே இல்லை. ரவி அளித்த சுட்டியை தொடர்ந்து படித்து எழுந்த உடனடி உணர்வு இது! புதிதாய் கருத்துக்கள் இருந்தால் பிறகு.

ROSAVASANTH said...

இந்த பிரச்சனை குறித்து நாளை மீண்டும் எழுதுகிறேன்.

thiru said...

முத்துகுமரன்,

விவாதம் இளையராசாவில் தொடங்கி எங்கோ போகிறது.. :)

என் பங்கிற்கு பெரியார் எந்த கடவுளை எதிர்த்தார் என்பதற்கான ஒரு சுட்டி இங்கே...

http://periyaarr.blogspot.com/2006/11/blog-post_116375875422464765.html

dondu(#11168674346665545885) said...

கோபமுள்ள இளைஞர் (angry young man) முத்துக்குமரன் அவர்களே,

இப்பதிவுக்கு மட்டுமன்றி உங்கள் எல்லா பதிவுகளுக்கும் சேர்த்துத்தான் இப்பின்னூட்டம்.

பின்னூட்டங்களைப் போட தேதி மற்றும் நேரத்துடன் வரும் ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். இப்போது 87 பின்னூட்டங்களைப் பார்க்கும்போது வெறுமனே 11:08 AM, 12:45 PM என்றெல்லாம் பார்ப்பது கேனத்தனமாக இருக்கிறது. ஒரு துல்லியம் வேண்டும் உங்கள் செய்கைகளில் என்று சற்று உரிமை எடுத்துக் கொண்டே கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முத்துகுமரன் said...

//ஒரு துல்லியம் வேண்டும் உங்கள் செய்கைகளில் என்று சற்று உரிமை எடுத்துக் கொண்டே கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன் //

மாற்றி விட்டேன் :-)

நன்றி

Related Posts with Thumbnails