ஈழம், கலைஞர், திருமாவளவன் போராட்டம்,சீமான் விடுதலை,

கடந்தமாதம் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாகக்கூறி கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமான், பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்துர் மணி, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் செயலாளர் பெ.மணியரசன் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிணை வழங்கியிருக்கிறது. சீமான் பிணைக்கு விண்ணப்பித்ததை ஏளனம் செய்த இந்த தேசத்தின் முழுமுதன்மையான தேசபக்தர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இந்திய தேசியத்தின் அரசியலைமைப்பு தன் குடிகளுக்கு வழங்கியுள்ள சட்ட உரிமைகளுள் ஒன்றுதான் பிணைக்கு விண்ணப்பிப்பது. அதே போல ஈழ விடுதலைக்காக உள்ளப்பூர்வமாக கொடுப்பவர்களின் நேச உணர்வு என்பது அரசின் சலுகைக்குட்பட்டு வரையறுக்கப்பட்ட உணர்வல்ல. அது தன் இனத்தின் மீதான பற்றின் காரணமாக வெளிப்படும் உணர்வு. ஈழ விடுதலைக்காக குரல்கொடுத்தால் அடக்குமுறைகளுக்கு உட்பட நேரிடும் என்பதைக் கூட அறியாத சிந்தனைத் திறனற்றவர்கள் அல்ல. இந்திய தேசியத்தின் ஏமாற்று முகத்தை தன் உரையின் வாயிலாக கிழித்தெறிந்த சீமான் அதன் விளைவுகளை நன்கு அறிந்தவரே. அதனால் அவர்கள் யாரும் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல. ஊடகங்களின் வெளியிடும் செய்திகளை படித்துக்கொண்டு சீமான் போன்றவர்களும் அவ்வாறே எண்ணுவார்கள் என்று முடிவு செய்து கொள்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் உண்மை அதுவல்ல.

இந்திய நாட்டை ஆண்ட, ஆளும் தலைவர்களில் எண்பது விழுக்காடுகளுக்கும் மேல் பிணைகளில் வெளிவந்திருப்பவரே. கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான சங்கரச்சாரியே பிணையில் இருக்கும் போது சீமான் பிணைக்கு விண்ணப்பத்தது என்பது அச்சத்தின்பால் ஏற்பட்டது இல்லை. பிணையில் வந்தாலும் மறுபடியும் ஈழ விடுதலைக்காக அவரது குரல் ஒழித்துக்கொண்டுதான் இருக்கும். சிறைச்சாலை சீமான் போன்றவரை சிதைக்காது, செதுக்கும்.

ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் 5 இலட்சம் மக்களைக் காக்க வேண்டுமென்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருமாவளவன் அவர்களை நன்றி பெருக்கோடு உணர்வுள்ள தமிழர்கள் காண்கிறார்கள். உலகம் எங்கும் விரிந்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு அவரது உண்ணாவிரதம் ஒரு வித நம்பிக்கையுணர்வைத் தந்திருக்கும். உண்ணாவிரதத்தை பாதியிலே முடித்துக்கொண்டாரே, சாகவேயில்லையே எல்லாம் நாடகம் என்றும் அவரது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லையே ஏன் முடித்துக்கொண்டார் என்று பரிவோடு கேட்பவர்கள் அதைச் செய்ய மறுக்கும் மத்திய அரசின் மீது மட்டும் மாறப்பற்று கொண்டிருப்பதேன்?? திருமாவளவனால்தான் செய்யமுடியவில்லை என்று ஏளனம் செய்பவர்களே, செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி கேள்விகளைத் திருப்புங்கள்.

திருமாவளவன் என்பவர் ஒற்றை மனிதர் அல்ல, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு அடையாளம், அவர்களின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். ஆகையால் அவர் போராட்டத்தின் நியாயங்களை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவரது உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்தே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போராட்டம் தொடர்ந்திருந்தால் பாவம் இந்திய தேசியம் பூசிக்கொண்டிருக்கும் அகிம்சை அவதாரம்தான் அம்மணமாகிப் போயிருக்கும். அகிம்சை தேசத்து முகமுடி களையப்படாதிருக்க உதவிதான் செய்திருக்கிறார். இந்த போராட்டம் குறித்த இன்னொரு நகைச்சுவை பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியினால் அதிர்ந்துதான் இப்போராட்ட யுக்தியையே கையில் எடுத்தாரான்பது. இந்திய அளவில் மாயாவதின் எழுச்சி என்பது வரவேற்கக்கூடிய ஒன்று. சிறுத்தைகளிலிருந்து பிரிந்து சென்ற செல்வப்பெருந்தகை அவர்களுக்கு மிகப்ப்பெரிய பிம்பத்தை தருவதைக் கண்டால் சிரிப்பாகத்தான் வருகிறது. செல்வப்பெருந்தகையுடன் இருப்பது செல்வமே அன்றி சிறுத்தைகளல்ல!


ஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார் என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஈழமக்களே இல்லை அவர்கள் எல்லாம் இலங்கை மக்களே என்றுரைக்கும் ஜெயலலிதா இருப்பதால்தான் கருணாநிதியை ஆதரிக்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸின் துணை இல்லாமல் ஆட்சியைக் காப்பாற்ற்க் கொள்ள அவர் அதிகம் சிரமப்ப்பட வேண்டி இருக்காது. மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அவர்கள் கவலைப்படப் போவதில்லை. ஆனால் தமிழினத்தின் எதிரிகளை அடையாளப்படுத்தி அவர்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி மக்கள் துணையோடு புறக்கணிக்க செய்வதே அவரது அரசியல் வாழ்விற்கான தலைமையான சாதனையாக இருக்கும். மாநில சுயாட்சிக்காக போராடிய இயக்கத்தின் தலைவராக இருப்பவர் டெல்லியின் இனவழிவுப்புக்கு துணை போவது என்பது மன்னிக்க முடியாத துரோகமாகும்.

காங்கிரஸ் உடனான உறவை முறித்துக்கொண்டால் அவர்கள் அதிகபட்சமாக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார்கள். தமிழின எதிரிகளை ஒன்றாய் வெல்வதற்கு அதைவிட வேறு அற்புதமான வாய்ப்பொன்று அமையாது, அதற்காக தேர்தலுக்கு முன்பே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற தேவையில்லை, அவர்களினால் தேர்தல் களத்தில் சிலநூறு வாக்குகளை தவிர வேறெந்த ஆதாயமும் இல்லை. தமிழின எதிர்களை வென்று கணிசமான நாடளுமன்ற உறுப்பினர்களோடு டெல்லி சென்றால் தேவையானதொரு, நாம் விரும்பும் அழுத்தத்தை புதிய அரசாங்கத்தின் மீது செலுத்த முடியும் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தன் நலனுக்காக கூட்டணிகளை மாற்றிக்கொண்ட வரலாற்றை கொண்டவருக்கு தன் இன நலனுக்காக மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் இருப்பை அவர்களுக்கு புரிய வைக்க இதைவிட சிறந்த தருணம் வேறெதுவுமில்லை.

இறுதியாக

கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது. நிச்சடன் வீழாது எம்தமிழினம்! இன்றைய மிகக் கடினமான துயரச் சூழலையும் தாண்டி மீண்டு வரும் தமிழினம் வரலாறாக!!!

44 மறுமொழிகள்:

Anonymous said...

அன்றைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் காங்கிரசைத் தமிழகத்தில் அடக்கி ஒடுக்கியது.பல இளைஞர்கள் தலைவர்களாக வர அடிகோலியது.

இன்றைய ஈழப்போராட்டம் தமிழ்நாட்டில் காங்கிரசை அடியோடு ஒழிக்கப் போகின்றது.தமிழ்நாட்டு அரசியல் சாக்கடையில் விழாமல் உணர்ச்சியுடன் உறுதியாக நடந்து கொள்ளும் சீமான்,திருமா என்ற இருவரைத் தலைமைக்குத் தள்ளப் போகின்றது.
காங்கிரசை அந்த அம்மையாரின் பழி வாங்கும் படுகுழிக்குள்ளும்,
பார்ப்பன அம்மையாரை பார்ப்பனீய படுகுழிக்குள்ளும் தள்ளி விட்டுத் தமிழினம் ஒன்று சேரும் அரிய வாய்ப்பை கலைஞர் அவர்களும்,ராமதாசு,நெடுமாறன் போன்றவர்களும் கெடுத்து விடக்கூடாது.
தமிழின உணர்வாளர்கள் காங்கிரசைத் தூக்கியெறிந்து விட்டு மக்களைச் சந்திக்க இது தான் அருமையானத் தருணம்.
புலிகள் எப்படியும் சிங்களத்தை வெல்லத்தான் போகிறார்கள்.அதை
எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.மக்கள் படும் அவலங்களைத் தான் அவர்களால்
தடுக்க முடியவில்லை.

மருள்நீக்கி said...

இந்தி தேசியத்தின் முகமூடி கிழிந்துதொங்குவதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி, திருமா அவர்களின் சாவினை எதிர்பார்த்தவர்கள்தானே இந்த தமிழின துரோகிகள்.

திருமாவின் இம்முடிவை வரவேற்கிறேன்.

Anonymous said...

//ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் 5 இலட்சம் மக்களைக் காக்க//

அய்ந்து லட்சம் தமிழரின் இந்நிலைக்கு இன்னொரு காரணமான, 'பயங்கரவாதம்' என்னும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கும், அழித்தொழிப்பிற்கு துணை போகும் விடுதலை புலிகள் போன்ற அமைப்பும் ஒரு காரணம்தானே. ஏன் அவர்களை சனநாயக பாதையில் போரிட உங்களைப் போன்றோர் அழுத்தம் கொடுப்பதில்லை? மீண்டும், தமிழினத்திற்கு துரோகம் துரோகம் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்களே தவிர, பயங்கரவாதமோ, அடுத்த நாட்டின் தலைவரை போட்டு தள்ளுவதோ போன்ற செயல்கள் ஈழப் போராட்டத்தில் தமிழீழ கோரிக்கையை உலக அரங்கில் வலுவிழக்க செய்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லையே.

விபு அமைப்பு செய்ய வேண்டியது -

- ஈழ மக்கள் விரும்பினால் வன்னி பகுதியை விட்டு வெளியேறி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். சிங்கள் அரசு பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உலக அரங்கில் உரத்து சொல்ல வேண்டியது.

- ராசீவ் காந்தி கொலையில் தங்கள் அமைப்பு சம்பந்தபட்டிருக்கிறதா இல்லையா என்று தெளிவாக உலக அரங்கில் சொல்ல வேண்டியது. 'துன்பியல் நிகழ்வு' என்றால் அதற்கு அவர்கள் பொறுப்பேற்கிறார்களா? இல்லையா? என்று விளக்கமாக தெளிவாக சொல்ல வேண்டியது.

இவ்விரண்டு செயல்களும் விபு அமைப்பின் மேலான மதிப்பை உயர்த்தி, தமிழீழ கோரிக்கையை வலுப்பெறச் செய்யும்.

திருமா, கொ.மணி, வைகோ, இராமதாசு போன்றோர் 'ஆக்கபூர்வமாக' செயல்பட நினைத்தால் இதுவே வழி.

விபு அமைப்பு தனது குறிக்கோளாக கொள்ள வேண்டியது - ஈழத் தமிழரின் சம உரிமையை. தங்களது ஆட்சிக் கனவை அல்ல. அல்ல. அல்ல.

முத்துகுமரன் said...

//அய்ந்து லட்சம் தமிழரின் இந்நிலைக்கு இன்னொரு காரணமான, 'பயங்கரவாதம்' என்னும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கும், அழித்தொழிப்பிற்கு துணை போகும் விடுதலை புலிகள் போன்ற அமைப்பும் ஒரு காரணம்தானே. //

செப்டம்பர் 11 நிகழ்வுக்கு பிறகு விடுதலைப் போராட்டங்களும் கூட பயங்கரவாதம் என்ற தொகுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டது.விடுதலைப்புலிகளின் போராட்டம் விடுதலைப் போராட்டமே அன்றி பயங்கரவாதம் அல்ல, உங்களின் பார்வை ஊடகங்கள் கட்டமைத்திருக்கும் பொதுப்புத்தியைத் தாண்டி பிரச்சனையின் ஆழத்தைப் பார்க்கவில்லை. சிங்கள அரசாங்கத்தின் குரலாகவே விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்ன்படுத்துகிறார்கள் எனும் பொருள்பட அமைந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செய்வது பயங்கரவாதம் என்றால் சிங்கள அரசு செய்வது என்ன தர்ம யுத்தமா?

ஈழப்போராட்டம் ஆயூத கட்டத்தை அடைந்தது அது சுதந்திரம் பேற்ற 35 ஆண்டுகளுக்கு பிறகேதான். ஈழத்தமிழர்களின் பெருந்தன்மைக்கு பரிசாக கிடைத்தது ஏமாற்றமும் அவர்களின் நிலப்பரப்பில் சிங்கள குடியேற்றமும்தான்.

ராஜீவ் காந்தி மரணம் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு பின்னடைவுதான் என்றாலும் ராஜீவின் உயிருக்கு கொடுக்கும் முக்கியத்த்துவம் அங்கு சிங்கள அரச பயங்காரவாதத்தினால் கொல்லப்படும் உயிர்களுக்கு இல்லாது போனது ஏன். சாத்திரி அவர்களின் ராஜீவ் காந்தியை போட்டுட்டாங்களாம் என்ற பதிவை வாசித்து பாருங்கள். அவர்களின் வலி புரியும்.

விடுதலைப்புலிகள் தங்கள் தாக்குதல்களில் போர் நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் சிங்கள அரசாங்கம்தான் இறந்ந்தவர்களின் உடல்களை அம்மணமாக்கி பார்த்தது.

சனநாயகப்பாதையில் திரும்பி அமைதி ஒப்பந்தத்தில் பங்கெடுத்துகொண்டார்க்களே, சிங்கள அரசாங்கம் என்ன செய்தது?? நேர்மையாக நடந்து கொண்டதா? கிளநொச்சி வீழ்ச்சிக்கு திட்டமிட்டது சமாதானகாலத்திலேயேதான் அதனால் இந்ந்த வெற்றியில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று சொன்னாரே ரணில்விக்கரமசிங்கே?? சனநாயகத்தை எதிரி எந்த தருணத்திலும் பின்பற்றாத போது அவர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏனோ??

வன்னியை விட்டு மக்கள் வெளியேறினால் அவர்கள் உயிர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது, சிங்கள அரசாங்கம் பொறூப்பேற்குமா? ஏற்கனவே கையகப்படுத்திய நிலப்பரப்புகளில் வாழும் மக்களின் மீதே குண்டுவீசி அழித்தொழித்துக்கொண்டுதானே இருக்கிறது??

தமிழின அழித்தொழிப்பை தடுக்க யாரும் முனையாத போது யாரின் உத்திரவாதத்தின் பேரில் அவர்கள் செய்ய முடியும்? ஈழத்தமிழ் மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த சிங்கள அரசாங்கம் வாய்பெதுவும் தந்திருக்கிறதா??

அரசு என்னும் பேரில் எவ்வளவு பயங்கரவாதம் வேண்டுமானாலும் செய்யலாம் அப்படித்தானே???

முத்துகுமரன் said...

//தமிழ்நாட்டு அரசியல் சாக்கடையில் விழாமல் உணர்ச்சியுடன் உறுதியாக நடந்து கொள்ளும் சீமான்,திருமா என்ற இருவரைத் தலைமைக்குத் தள்ளப் போகின்றது///

அப்படியானதொரு விழிப்புணர்வு வந்தால் மிகவும் மகிழ்வேன்.

வருகைக்கு நன்றி அனானி.

முத்துகுமரன் said...

//இந்தி தேசியத்தின் முகமூடி கிழிந்துதொங்குவதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி, திருமா அவர்களின் சாவினை எதிர்பார்த்தவர்கள்தானே இந்த தமிழின துரோகிகள்.

திருமாவின் இம்முடிவை வரவேற்கிறேன்//

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மருள்நீக்கி

கோவி.கண்ணன் said...

//அதே போல ஈழ விடுதலைக்காக உள்ளப்பூர்வமாக கொடுப்பவர்களின் நேச உணர்வு என்பது அரசின் சலுகைக்குட்பட்டு வரையறுக்கப்பட்ட உணர்வல்ல. அது தன் இனத்தின் மீதான பற்றின் காரணமாக வெளிப்படும் உணர்வு//

நீண்ட நாள் சென்று எழுதினாலும் வழக்கமான வெள்ளம் !

அருமை அருமை ! தொடர்ந்து எழுதுங்க சாமி !

கானா பிரபா said...

கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு மக்கள் இடம்பெயர்ந்தால் மட்டும் பிரச்சனை ஓய்ந்து விடும் என்பது சிறுபிள்ளை தனம். யாழ்ப்பாணத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புபட்ட ஆதரவாளர்கள், ஏன் ஒன்றுமே செய்யாது இருந்தவர்கள் என்று வயது வேறுபாடின்றி கொல்லப்பட்டதும், காணாமல் போனதும் தெரியாதா?

இராணுவப் பகுதிக்கு இவர்கள் இடம்பெயர்ந்தால் தள்ளாடும் முதியவரை விடுத்து எல்லோரும் பூண்டோடு அழிக்கப்படுவார்கள். என்ன வித்தியாசம் விமானத் தாக்குதலுக்கும் தோட்டா பாய்ந்து இறப்பதற்கும்?

Anonymous said...

தீர்க்கமான கருத்துகளை எடுத்து வைக்கும் நீங்களே பாருங்கள், ஈழ தமிழர்களின் இன்றைய நிலைக்கு வி.பு. அமைப்பும் ஒரு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர். கேட்டால் 'பொது புத்தி' என்ற பழைய பல்லவியே பாடுகினீர்கள்.

வி.பு. கொன்றது எல்லாம் சிங்களவர்களை மட்டும்தானா? பத்மநாபாவை ஏன் கொன்றார்கள்? இந்த கேள்விக்கு எப்பொழுதும் சொல்லப்படும் 'அவர் ஒரு துரோகி' பதிலை காட்டிலும் வேறு ஏதேனும் யோசித்து சொல்லுங்களேன். ஈழத் தமிழருக்கு வேறு எந்த பிரதிநித்துவமும் கூடாது என்பது வி.பு.வினரின் நோக்கம்தானே?

சனநாயகப் பாதையில் திரும்பி அமைதி ஒப்பந்தத்தில் பங்கெடுத்தவர்களை சிங்கள அரசாங்கம் மட்டுமா ஏமாற்றியது? இந்த 'இனமான' உணர்வு என்னும் முகமூடியை கழட்டிவிட்டு யோசித்து சொல்லுங்கள். அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்தபோது ஆயுதங்கள் வாங்கி மேலும் போருக்கு தயாராக செல்விடுவதற்கு பதிலாக, சர்வதேச அரங்கில் சிங்கள இன அழிப்பு பற்றிய பிரச்சாரத்தை கையெடுத்திருக்கலாமே? வி.பு. அமைப்பில் அதற்கான ஆட்கள் இல்லாமல் போனாலும், தமிழகத்தில் இருந்து ஆதரவுக் குரல்கள் பல ஒலித்திருக்குமே.

சனநாயகத்தை எதிரி பின்பற்றவில்லை என்பதை நிரூபிப்பது எப்படி? அதே தவறை நாமும் செய்தால் அப்பொழுது எங்கே தவறு / சரி என்ற வித்தியாசம்?

ராசீவின் அமைதி ஒப்பந்ததில் நடந்த முதல் குளறுபடி என்ன? அமைதிப் படை இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு அமைதியை நிறுவும் என்ற அடிப்படையில் வி.பு. எரிச்சலடைந்ததுதானே உண்மை?

ஈழமக்களின் தேவை என்ன? மனம் விட்டு சொல்லுங்கள். அமைதியான சம உரிமையுள்ள இணக்கமான வாழ்க்கையா? அல்லது தனித் நாடா? 1983-ல் நடந்த இனவெறி தாக்குதலை அம்பலபடுத்தி தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றெடுத்து இன்று இலங்கையையும் ஒரு சிங்கப்பூர் / மலேசியா போன்ற தமிழினம் இணக்கமாக இருக்கும் நாடாக மாற்ற விடாமல், ஈழ மக்களை அல்லல்படும் இனமாகவே இறுக்கி வைத்திருக்கும் செயலுக்கு ஒருவகையில் வி.பு. அமைப்பு காரணமா இல்லையா?

தற்போதைய தீவிரவாத நிலைக்கு மாற்றாக வேறு எந்த விடுதலை முயற்சியும் செய்திருக்க முடியாதா? கண்டிப்பாக முடியும்.

சிங்களப் போரின் முழுநிலையையும் அறியாமலேயே பேச முடியாது. பரந்தனிலும், கிளிநொச்சியிலும் குண்டுகள் வீசப்பட்டதற்கு முக்கிய காரணம் அங்கிருந்து வி.பு. கட்டமைப்புதான். எதற்காக வி.பு. இலங்கை இராணுவத் தளபதியை தாக்க திட்டமிட வேண்டும்? தமிழினத்தை காப்பாற்ற பொறுப்பெடுத்திருக்கும் வி.பு. அமைப்பு இங்கேதானே தவறு செய்கிறது. பொன்சகோவை அவர்கள் தீர்த்து கட்ட திட்டம் தீட்டியதின் விளைவாக இராணுவத்தின் பதில் தாக்குதல் யார் மேல் நடக்கும்? மக்களின் பின்னால் மறைந்திருக்கும் இயக்கதினர் மேல்தானே?

வன்னியை விட்டு தமிழ் குடும்பங்கள் வெளியேற விரும்பினால் சிங்கள அரசாங்கம் பொறுப்பேற்கத்தான் வேண்டும். அவர்களை காக்க ஒற்றுமையான தமிழ் அரசியல் தலைமை உருவாக வேண்டும். அதுதான் இன்றைய ஈழ மக்களின் அவலத்திற்கு சரியான மருந்தாக அமையும்.

வி.பு. அமைப்பு மட்டுமல்ல. ஈழதமிழரின் நலனுக்கு குரல் கொடுக்கும் யாவரும் அறிந்து கொள்ள வேண்டியது - துப்பாக்கி ஏந்தி போர் செய்வது வேறு. சம உரிமைக்காக போராடுவது வேறு.

வி.பு. விசயத்தில் ஒருகாலத்தில் இந்தியா அதற்கு அனுசரணையாக இருந்த நிலை உண்டு. இலங்கையிலிருந்து இந்திய அமைதிப் படையை திரும்ப பெற்றுக் கொண்டதோடு வி.பு. இந்தியாவை சீண்டாமல் இருந்திருக்க வேண்டும். இன்று ஒரு முக்கிய நண்பனையும் இழந்து நிற்கிறது.

தமிழின அழித்தொழிப்பை கண்டித்து அமைதி நிலவச் செய்ய நார்வே அரசாங்கம் முன் வந்ததே. ஏன் வி.பு. போன்ற அமைப்புகள் அந்த வாய்ப்பினை பயன்படுத்தி அமைதி வழியில் அரசியல் தளத்திற்கு திரும்பவில்லை?

உண்மையில் வி.பு. அமைப்பிற்கு சம உரிமையில் நம்பிக்கை இல்லை என்றுதான் தெரிகிறது. அவர்கள் விரும்புவது தனி நாடு. தனி உரிமை. இந்தப் போக்கினை அவர்கள் மாற்றிக் கொண்டு புதிய அரசியல் அமைப்பை தோற்றுவித்தால் ஈழத்திற்கு விடிவுகாலம் நிச்சயம்.

Anonymous said...

Hi Anonymous (Talk abt Pathmanapa),

Have you ever heard anything about EPRLF's actions during IPKF time to tamil people... Pathmanapa was the leader that time.. but he wasn't do anything to stop that and watching it. In 1994 General election Pathmanapa's party public apologies to tamil public for their actions during IPKF time. If they didin't do anything wring then no need to apologies.

Better you know the history and tell your opinions...

Gud luck...!!

--- Kiri

Anonymous said...

//Better you know the history and tell your opinions...//

Even if EPRLF seeked apologies from Tamils that does not mean that LTTE has the right to kill Padmanabha. Did they?

Muthukumaran like people should practice to see the difference btw the welfare of Eezham Tamilians and LTTE agenda.

LTTE cannot provide a peaceful solution for the tamilians despite several opportunities.

The choice is simple. Peace or LTTE? Both cannot exist together unless LTTE changes its political agenda. Wonder why majority of the Tamil leaders could not see this point. Its very clear that they use the Srilankan tamils issue for political mileage.

Thanks to Muthukumaran for publishing these comments. May be later sometime I could participate in such discussion.

Anonymous said...

//Even if EPRLF seeked apologies from Tamils that does not mean that LTTE has the right to kill Padmanabha. Did they?//

Same theory for EPRLF. Do they have right to kill tamil people joined with IPKF???

//Muthukumaran like people should practice to see the difference btw the welfare of Eezham Tamilians and LTTE agenda. //

What is the difference between Eezham tamils welfare and LTTE agenda???


Now its coming like a trend to say, all these happen because of this LTTE...


//Its very clear that they use the Srilankan tamils issue for political mileage. //

Same thing can be applicable for 1987 indo-Lank accord...

Thank you.

-- Kiri

thiru said...

//ஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார் என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது.//

முத்துகுமரன்,

'ஈழத்தமிழர்களுக்காக எந்த தியாகத்துக்கும் தயாரென்று' கலைஞர் வாய்ப்பந்தல் விடுவதும், காங்கிரசுக்கு ஆதரவாக அறிக்கை, எச்சரிக்கைகளை விடுத்து ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு தன்னை மட்டும் சுற்றி சுழலும் அரசியலாக வைக்க முனைகிறார். காங்கிரசை பகைத்துக்கொள்வது தமிழகத்தின் ஆட்சியை இழக்க வைக்கும். வார்த்தைகளில் ஆட்சியையும் இழக்க தயார் என்று கலைஞர் சொல்வது சுத்த ஏமாற்று. தற்போதைய நிலையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை இழந்து கலைஞர் குடும்பத்தால் பாதுகாப்பாக இருக்க முடியாது. பெரியாரின் சுயமரியாதை போராட்ட மரபையும், அண்ணாவின் தமிழின உணர்வு மரபையும் தனது காலத்தில் துடைத்தழிக்கும் செயலில் கலைஞர் ஈடுபடுகிறார். காங்கிரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை கூட விலக்க வேண்டாம், குறைந்தபட்சம் தி.மு.க அமைச்சர்களை விலக்க தயாராக இல்லை. திராவிட இயக்க அரசியல் பற்றிய மீள்பார்வை செய்ய வேண்டிய காலத்தில் நாமிருக்கிறோம். இந்த மீள்பார்வை ஈழத்திற்காக மட்டுமல்ல. பிற தளங்களிலும் செய்வது அவசியமாகிறது.

ராஜ நடராஜன் said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

குழலி / Kuzhali said...

//ஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார்
//
எதுவரை காத்திருப்பார் என்றால் எளிதாக சொல்லலாம், விடுதலை புலிகள் அழியும் நாள்வரை காத்திருப்பாரென்று.... வெறும் மந்திரி பதவி மட்டும் காரணமென்று நான் நம்பவில்லை...

//ஈழமக்களே இல்லை அவர்கள் எல்லாம் இலங்கை மக்களே என்றுரைக்கும் ஜெயலலிதா இருப்பதால்தான் கருணாநிதியை ஆதரிக்க வேண்டி இருக்கிறது. // சூப்பருங்க வழக்கம்போல ஜெயலலிதாவை முன்னிட்டு கருணாநிதியை ஆதரிக்கும் வசனம்(இதே வசனத்தை பலமுறை நானே சொல்லியிருக்கிறேன்,இப்போது என்னோட இதையே நானே திங்கற மாதிரி இருக்கு ).

ஏன் நாம் திருமாவை முழுமூச்சாக ஆதரிக்க கூடாது? என்னதுக்கு கலைஞர் மட்டும்? கலைஞரை ஒதுக்குவோம் கலைஞர் போய் பங்கு பிரிக்கும் வேலையையும் பெரிய குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் புரோக்கர் வேலையை பார்க்கட்டும்...

திருமாவை தமிழக தலைமையாக்குவோம்....

மருத்துவர் இராமதாசு மேல் மிக நிச்சயமாக ஈழம் விசயத்தில் ஏமாற்றமும் அதிருப்தியும் உள்ளது, ஆனால் இதுவரை பாமக சாதிகட்சி என்று பேசியவர்களுக்கு எப்போதிலிருந்து பாமக எல்லா சாதிக்கும் பொதுவான கட்சி ஆனது?

இரண்டு அரசியல் இப்போது செய்யவேண்டும், ஒன்று தமிழினத்திற்கு வெளியேயான அரசியல், மற்றொன்று தமிழினத்துக்குள்ளான அரசியல், ஆனால் இப்போதை இவை இரண்டுக்குமே திமுக தகுதியற்றதாகிவிட்டது...

தமிழ்நதி said...

"காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது."

உண்மையாலுமே புரியவில்லையா:(

முத்துகுமரன் said...

//நீண்ட நாள் சென்று எழுதினாலும் வழக்கமான வெள்ளம் !

அருமை அருமை ! தொடர்ந்து எழுதுங்க சாமி !

நன்றி நன்றி.காலங்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது.

முத்துகுமரன் said...

//இராணுவப் பகுதிக்கு இவர்கள் இடம்பெயர்ந்தால் தள்ளாடும் முதியவரை விடுத்து எல்லோரும் பூண்டோடு அழிக்கப்படுவார்கள். என்ன வித்தியாசம் விமானத் தாக்குதலுக்கும் தோட்டா பாய்ந்து இறப்பதற்கும்?//

தமிழனுக்கு மரணம் மட்டும்விதிக்கப்பட்டிருக்கிறது, உரியதாக்கப்பட்டிருக்கிறது. சொல்லித் தீராது துயரம்

enRenRum-anbudan.BALA said...

முத்து குமரன்,

யதார்த்தமான பார்வை, திறமையாக கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள். சரி/தவறு என்று வாதிட விசயங்கள் இருந்தாலும், ஆதாரமாக சொல்லியிருப்பவை சரியே!

இது சம்பந்தமான என் பதிவை வாசித்தீர்களா?

http://balaji_ammu.blogspot.com/2009/01/500.html

முத்துகுமரன் said...

அனானிக்கு,

//தீர்க்கமான கருத்துகளை எடுத்து வைக்கும் நீங்களே பாருங்கள், ஈழ தமிழர்களின் இன்றைய நிலைக்கு வி.பு. அமைப்பும் ஒரு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர். கேட்டால் 'பொது புத்தி' என்ற பழைய பல்லவியே பாடுகினீர்கள். //

ஈழத் தமிழர்களின் இன்றைய சூழலுக்கு பல காரணங்களுல் விடுதலைப்புலிகள் அமைப்பும் ஒரு காரணம் என்பதை ஒத்துக்கொள்வதில் எந்த விதத் தயக்கமும் இல்லை. குறைந்த பட்சம் தார்மீக ரீதியாக என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்வர். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது அதில் நடக்கும் நிகழ்வுகளுக்கு பொறுப்பானவர்கள் ஆகிறார்கள். ஆனால் இந்த இடத்தில் காரணம் என்பதற்கான அழுத்தத்தை முழுவதுமாக அவர்களின் மீது ஏற்றுவது என்பது ஏற்படையது அல்ல. நம் இந்தியாவும் இதற்கு ஒரு பெரும் காரணம் என்பதையும் ஏற்றுக்கொள்வீர்களா??

//வி.பு. கொன்றது எல்லாம் சிங்களவர்களை மட்டும்தானா? பத்மநாபாவை ஏன் கொன்றார்கள்? இந்த கேள்விக்கு எப்பொழுதும் சொல்லப்படும் 'அவர் ஒரு துரோகி' பதிலை காட்டிலும் வேறு ஏதேனும் யோசித்து சொல்லுங்களேன். ஈழத் தமிழருக்கு வேறு எந்த பிரதிநித்துவமும் கூடாது என்பது வி.பு.வினரின் நோக்கம்தானே? //
ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் புலிகளே முதன்மையானவர்களாக, முன்னெடுத்துச் செல்பவர்களாக இருந்தார்கள், இருக்கின்றார்கள். ஈழப்போராட்டத்தின் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தி, அங்கீகாரம் அளித்து ஆயுதப் பயிற்சியையும் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரின் இந்திய அரசாங்கம் அளித்தது. மக்களின் பெருவாரியான ஆதரவும், இந்திய அரசின் அங்கீகாரமும் அவர்களுக்கு இருந்தததுமே இப்போராட்டத்தில் அவர்கள் தலைமைப் பங்கை வகிக்க காரணமாக இருந்தது. போராட்டத்தை நீர்க்கச் செய்யும், அல்லது போராட்டத்தை சுயநலனுக்காக பயன்படுத்தியவர்களை அப்புறப்படுத்தவதும் அவர்களுக்கான தேவையாக்க இருந்திருக்கலாம். அவர்களின் இந்த தன்மையினால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒரு ராணுவ இயக்கத்தை கட்டமைத்து விடுதலைக்காக முன்னெடுத்துச் செல்லும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. எந்த ஒர் கட்டமைப்பிலும் தவறுகளற்ற செயல்பாடு என்பதை காண முடியாது.

//வி.பு. அமைப்பில் அதற்கான ஆட்கள் இல்லாமல் போனாலும், தமிழகத்தில் இருந்து ஆதரவுக் குரல்கள் பல ஒலித்திருக்குமே. //

ஒலித்ததே! அதை ஒத்துக்கொள்ள விரும்பவில்லையா இல்லை தெரியவே தெரியாதா?? ஒலித்தக் குரல்கள்கள் எல்லாம் மிகத் தீவிரவாமக தேசவிரோதமாக கட்டமைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதே! ஆனந்த் தியேட்டரில் நடந்த உள்ளரங்க கூட்டத்திற்காக சுப.வீரபாண்டியன் தமிழ்முழக்கம் சாகுல் அமீது, புதுக்கோட்டை பாவாணன், மருத்துவர் தாயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்களே? திருமங்கலத்தில் பேசியதற்காக வைகோ கைது செய்யப்பட்டரே? நீங்கள் வாசிக்க வில்லை என்பதற்காகவோ இல்லை அறியவில்லை என்பதற்காகவோ எதுவுமே நடக்கவில்லை என்று சொல்வது உங்கள் அறிவின்மையைத்தான் காட்டுகிறது. தமிழகத்தில் தொடர்ச்சியாக குரல் எழுப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது ஆனால் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டது, செய்யப்படுகிறது.

//ராசீவின் அமைதி ஒப்பந்ததில் நடந்த முதல் குளறுபடி என்ன? அமைதிப் படை இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு அமைதியை நிறுவும் என்ற அடிப்படையில் வி.பு. எரிச்சலடைந்ததுதானே உண்மை?//

இருவருக்கிடையேயான பிரச்சனையைத் தீர்க்க நடுவராக வந்த ஒருவன் ஒரு சாரரோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டதுதான் குளறுபடி, கேலிக்கூத்து? இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு அமைதியை நிறுவுவது என்பது என்ன தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுணர்வுக்கு உட்படுத்தி, சிதைத்து கொல்ல்லுவதா? இலங்கையின் இந்த இறையாண்மையைக் கண்டு புலிகள் அல்ல மனிதனாக உணர்பவன் எவனும் எரிச்சலடையவே செய்வான்

//ஈழமக்களின் தேவை என்ன? மனம் விட்டு சொல்லுங்கள். அமைதியான சம உரிமையுள்ள இணக்கமான வாழ்க்கையா? அல்லது தனித் நாடா? 1983-ல் நடந்த இனவெறி தாக்குதலை அம்பலபடுத்தி தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றெடுத்து இன்று இலங்கையையும் ஒரு சிங்கப்பூர் / மலேசியா போன்ற தமிழினம் இணக்கமாக இருக்கும் நாடாக மாற்ற விடாமல், ஈழ மக்களை அல்லல்படும் இனமாகவே இறுக்கி வைத்திருக்கும் செயலுக்கு ஒருவகையில் வி.பு. அமைப்பு காரணமா இல்லையா? //
ஈழ மக்களின் தேவையை அவர்கள் சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும். இதுவரைக்கும் அவர்களின் குரலைச் சொல்லுவதற்கு எந்த வித வாய்ப்பும் வழங்கப்படவே இல்லையே. அவர்களை உணர்வைச் சொல்லவே வழியில்லாத போது சம உரிமையுள்ள இணக்கமான வாழ்க்கை எப்படிச் சாத்தியமாகும்?? மலேசியா/சிங்கப்பூரில் இருந்த அரசுகள் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டதைப் போலவா இலங்கை அரசு நடந்து கொண்டது? கொண்டிருக்கிறது? அது ஒரு பேரினவாத அரசாக, தமிழர்களை இரண்டாம் குடிகளாக நடத்தும் எண்ணத்தில்தானே இயங்கிவருகிறது. இன்று ராஜபக்சே இடத்திற்கு ஒரு தமிழன் வர முடியுமா? அதற்கான உரிமை இலங்கை அரசியல் சட்டத்தில் இருக்கிறதா?? சம உரிமை என்பதற்கு அவர்கள் அரசியல் சட்டத்திலேயே சமாதி கட்டிவிட்ட பிறகு புலிகள் சம உரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று கூப்பாடு போடுகிறீர்கள். வரலாறு தெரியவில்லை என்றால் வாசித்து பாருங்கள். திருச்செல்வம் அவர்கள் எழுதிய ஈழத்தமிழரின் இறையாண்மை என்ற ஒரு நூல் இருக்கிறது, முடிந்தால் வாங்கிப் படிக்கவும். இணக்கமாக வாழ தமிழினம் முடிவெடுத்து ஒத்துழைத்த காலம் முழுவதும் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்று அதில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது கூடவே ஈழத்தின் வரலாற்றை நீங்கள் அறிந்து கொள்ள உதவும். இதற்கு மேல் உங்கள் தினப்படியான ‘’புலி’’க் காய்ச்சலுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை.

//வி.பு. அமைப்பு மட்டுமல்ல. ஈழதமிழரின் நலனுக்கு குரல் கொடுக்கும் யாவரும் அறிந்து கொள்ள வேண்டியது - துப்பாக்கி ஏந்தி போர் செய்வது வேறு. சம உரிமைக்காக போராடுவது வேறு.//
கொஞ்சம் விளக்கித்தான் சொல்லுங்கள். ஈழத்திற்கென்று வரலாறு இருக்கிறது. வரலாற்றை உணராமல் வார்த்தை விளையாட்டுக் காட்ட வேண்டாம். நீங்கள் மிகப்புனிதப்படுத்தும் சம உரிமையை அளிக்க அரசாக உள்ள சிங்கள இனம் செய்த ஒரு விடயத்தை சுட்டிக் கட்ட இயலுமா??
அதற்கு பிறகு சொல்லுங்கள் புலிகள் சம உரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று.
//தமிழின அழித்தொழிப்பை கண்டித்து அமைதி நிலவச் செய்ய நார்வே அரசாங்கம் முன் வந்ததே. ஏன் வி.பு. போன்ற அமைப்புகள் அந்த வாய்ப்பினை பயன்படுத்தி அமைதி வழியில் அரசியல் தளத்திற்கு திரும்பவில்லை?//
போராட்டக்களத்தில் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிக்கிறான். புலிகள் விசயத்திலும் அதுதான் நடக்கிறது. அவன் தமிழனத்தை அழிக்க ஆயுதக்குவியலோடு அலையும் பொது புலிகள் எப்படி அமைதி பஜனை பாடிக்கொண்டிருக்க முடியும்.
ஈழத்தையும் புலிகளையும் பிரிக்க முடியாது. அதை உணராதவர்களோடு பேசுவதால் எந்தப் பயனும் இல்லை

முத்துகுமரன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கிரி.

ஆங்கில அனானி
விடுதலிப் புலிகள் போராடுவாது ஈழத் தமிழர் நலனுக்காகத்தான். நாங்கள் அதைத் தெளிவாகவே உணர்ந்திருக்கிறோம். உங்கள் அக்கறைக்கு நன்றி

முத்துகுமரன் said...

//திராவிட இயக்க அரசியல் பற்றிய மீள்பார்வை செய்ய வேண்டிய காலத்தில் நாமிருக்கிறோம். இந்த மீள்பார்வை ஈழத்திற்காக மட்டுமல்ல. பிற தளங்களிலும் செய்வது அவசியமாகிறது.//

நிச்சயமாக திரு. திராவிட இயக்க அரசியலை நீர்த்துப் போகச் செய்யும் செயலை கருணாநிதி செய்வதைக் கொண்டு கோவத்தை தாண்டி ஏமாற்றமும் வருத்தமும்தான் ஏற்படுகிறது. மாற்றுத்தலைமக்கான காலம் மிக அருகாமையில் இருக்கிறது

முத்துகுமரன் said...

//ஏன் நாம் திருமாவை முழுமூச்சாக ஆதரிக்க கூடாது? என்னதுக்கு கலைஞர் மட்டும்? கலைஞரை ஒதுக்குவோம் கலைஞர் போய் பங்கு பிரிக்கும் வேலையையும் பெரிய குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் புரோக்கர் வேலையை பார்க்கட்டும்...

திருமாவை தமிழக தலைமையாக்குவோம்....//

முழு மனதோடு ஆதரிக்கிறேன் குழலி. தமிழகத்திற்கு தலைமையேற்கும் அத்துணைத் தகுதியும் திருமாவளவனுக்கு இருக்கிறது. கலைஞர் தொடர்ந்து இது போலவே நடந்து கொண்டார் என்றால் மக்களாகவே அவரை ஒதுக்கிவிடும் சூழல் வந்தேஎ தீரும். திருமா தமிழர்களுக்கு தலைமையாவதைப் போலவே அரசு அமைப்பிலும் அத்தைகையதொரு நிலையை எட்ட வேண்டும் என்பது எனது அவா.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜ நடராஜன்

முத்துகுமரன் said...

//"காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது."

உண்மையாலுமே புரியவில்லையா:(
//

அது விரக்தியின் மரியாதையான வெளிப்பாடு தமிழ்நதி :-(

முத்துகுமரன் said...

//முத்து குமரன்,

யதார்த்தமான பார்வை, திறமையாக கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள். சரி/தவறு என்று வாதிட விசயங்கள் இருந்தாலும், ஆதாரமாக சொல்லியிருப்பவை சரியே!//

உங்கள் கருத்திற்கு நன்றி பாலா. சரி தவறு என்று வாதிட வேண்டுமானால் அது இரு தரப்பையும் உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே உண்மையாக இருக்கும்

//இது சம்பந்தமான என் பதிவை வாசித்தீர்களா?

http://balaji_ammu.blogspot.com/2009/01/500.html//

நீங்கள் பதிவிட்ட அன்றே வாசித்தேன். பின்னூட்டமிடத்தான் நேரமில்லாது போய்விட்டது. ஈழம் தொடர்பான உங்களது சமீப பதிவுகள் உங்கள் மீது முன்பிருந்ததை விட கொஞ்சம் மரியாதையை அதிகப்படித்தி இருக்கிறது. அம்மக்களின் மீதான உங்கள் பரிவில் நேர்மை இருப்பதாலே மைழ்கிறேன். மதிக்கிறேன்.

நன்றி.

Anonymous said...

/////ஏன் நாம் திருமாவை முழுமூச்சாக ஆதரிக்க கூடாது? என்னதுக்கு கலைஞர் மட்டும்? கலைஞரை ஒதுக்குவோம் கலைஞர் போய் பங்கு பிரிக்கும் வேலையையும் பெரிய குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் புரோக்கர் வேலையை பார்க்கட்டும்...

திருமாவை தமிழக தலைமையாக்குவோம்....////

போட்டுத்தாக்குங்கன்னா! நூத்துல ஒரு வார்த்த சூ...-ல அடிச்ச மாறி சொன்னீங்க.

http://mohankandasami.blogspot.com/2009/01/blog-post.html


-Mohan Kandasamy

வெத்து வேட்டு said...

"அவர்களின் இந்த தன்மையினால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒரு ராணுவ இயக்கத்தை கட்டமைத்து விடுதலைக்காக முன்னெடுத்துச் செல்லும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு"

same thing happened to IPKF :)
why ltte and tamils "took" it so serious??

Ramanan N said...

போரை நிறுத்த வற்புறுத்தி...
உண்ணாநிலையில் நம் தலைவன்,
தன்னையே வருத்தி.

உயிரை பணையம் வைத்து போராட்டம்,
இதை நிச்சயம் தமிழுலகம் பாராட்டும்..,

//ஏன் நாம் திருமாவை முழுமூச்சாக ஆதரிக்க கூடாது? என்னதுக்கு கலைஞர் மட்டும்? கலைஞரை ஒதுக்குவோம் கலைஞர் போய் பங்கு பிரிக்கும் வேலையையும் பெரிய குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் புரோக்கர் வேலையை பார்க்கட்டும்...

திருமாவை தமிழக தலைமையாக்குவோம்....//
//
முழு மனதோடு ஆதரிக்கிறேன் குழலி. தமிழகத்திற்கு தலைமையேற்கும் அத்துணைத் தகுதியும் திருமாவளவனுக்கு இருக்கிறது. கலைஞர் தொடர்ந்து இது போலவே நடந்து கொண்டார் என்றால் மக்களாகவே அவரை ஒதுக்கிவிடும் சூழல் வந்தேஎ தீரும். திருமா தமிழர்களுக்கு தலைமையாவதைப் போலவே அரசு அமைப்பிலும் அத்தைகையதொரு நிலையை எட்ட வேண்டும் என்பது எனது அவா.//


nitharsanamana unmai thanimanitha olukam,poratta kunam,odukapatorin oppatra thalaivan,tamilar nallam kaakum eluchi tamilan intha thaguthigal pothum thirumavai thalamai earka solla
www.tholthiruma.blogspot.com

பனிமலர் said...

நீங்கள் எல்லாம் என்ன புரிந்தும் புரியாதவன் போல் நடிக்கிறீர்களா. ஈழப்போராட்டம் எப்படி துவங்கி எப்படி பயணித்து இன்று எங்கே வந்து நிற்கிறது என்று கூடவா தெரியாமல் கருத்து சொல்ல வந்துவிட்டீர்கள்.

பத்மனாபாவை பற்றி இவ்வளவு கவலை கொள்ளும் உங்களுக்கு கருணாவும், பிள்ளையானும் செய்துக்கொண்டு இருப்பது என்ன என்று தெரியவில்லையா, அல்லது உங்களது அறிவுக்கு அவைகள் எல்லாம் எட்டாதா.

2, 3 வகுப்பு மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதை போல் 1 இரண்டு இரண்டு, ஈ இரண்டு நான்கு என்று தினமும் பாடம் சொல்வதை போல் இந்த முன்னுரைகளை எல்லாம் சொல்லி சொல்லி தான் பதிவுகள் எழுத வேண்டுமா.

யாரை ஏமாற்றுவதாக எண்ணம் உங்களுக்கு எல்லாம். இப்படி பேசுவதற்கு உங்களுக்கு எல்லாம் வெட்க்கமாக இல்லை. அன்றாடம் சாகும் மனிதர்களை காப்பாற்றவேண்டும் என்று சொன்னால், முடிந்தால் குரல் கொடுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள். அதை விடுத்து செத்தால் என்ன என்று எல்லாம் வாதம் செய்ய வராதீர்கள்.

சாகடிக்க படுவது உங்களின் நெருங்கிய சொந்தகாரர் என்று பாருங்கள், பரிவு தன்னால் வரும்.

Anonymous said...

//ஈழத்தையும் புலிகளையும் பிரிக்க முடியாது. அதை உணராதவர்களோடு பேசுவதால் எந்தப் பயனும் இல்லை//

இதுதான் உங்கள் பிரச்சினை. நீங்களே சொன்னதுதான். 'நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்'. இன்று வன்னியில் இலங்கை இராணுவம் வி.பு. அமைப்பிற்கு எதிராக நடத்தும் தாக்குதலை ஒருவகையில் தீர்மானித்தது புலிகளின் அதிகார வெறியே.

வரலாற்றில் வெற்றியடைந்த விடுதலை போராட்டங்கள் எல்லாமே போராட்டத்தில் தொடங்கினாலும் அரசியல் தளத்தில் அமைதியான தீர்வு காணும் பாதையில் திரும்பிய பின்னர்தான் உலக நாடுகளின் அங்கீகாரம் பெற்றது.

ஈழ மக்களின் விருப்பத்தை சொல்ல விடாமல் தடுப்பது இலங்கை அரசாங்கம் மட்டும்தானா? தற்போது புலிகளின் கட்டுபாட்டில் இருக்கும் பகுதியில் யாருக்காக மக்கள் பயப்படப் போகிறார்கள்?

அய்யா... உங்களைப் போன்றோரின் கண்மூடித்தனமான புலி (பயங்கரவாதிகள்) ஆதரவை விடுத்து புலிகளின் தவறுகளை கண்டிக்க மறுப்பது ஏன்? அண்டை நாடான இந்தியாவின் நடுவண் அரசையும், தமிழக அரசையும் குற்றம் சொல்லும் முனைப்பில் பத்து சதவீதமாவது புலிகளின் பயங்கரவாத செயல்களை கண்டிக்கும் மனநிலை பெற்றிருந்தீரெனில் நான் மேற்ச் சொன்ன வதத்தின் சில உண்மைகளை உணர்ந்திருப்பீர். நேர விரயம்தான் நம் இருவருக்கும்.

Anonymous said...

//சாகடிக்க படுவது உங்களின் நெருங்கிய சொந்தகாரர் என்று பாருங்கள், பரிவு தன்னால் வரும்.//

ஆத்திரத்தில் பேசுவதை விட யோசித்து பேசுவது சாலச் சிறந்தது.

புலிகளின் பயங்கரவாதத்தை நான் மட்டும் விமர்சிக்கவில்லை. ஷோபா சத்தி, ராஜன்குறை, சிறீரங்கன் போன்றோரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆனந்த சங்கரி இப்பொழுது பேட்டி கூட கொடுத்திருக்கிறார்.

உங்கள் கண்(மூடித்தனமான) பார்வையை தாண்டியும் உண்மை இருக்கிறது பனிமலர். வெட்கபடவேண்டியது நானல்ல.

Anonymous said...

//செத்தால் என்ன என்று எல்லாம் வாதம் செய்ய வராதீர்கள்//

தேவையில்லாத திரிபு இது. ஈழ மக்களின் அவல நிலைக்கு புலிகளின் அதிகாரவெறி போக்கு ஒரு முக்கிய காரணம் என்றுதான் இங்கே சொல்லியிருக்கிறேன். அதை கண்டிக்காமல், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வாதம் செய்யும் சிறுபிள்ளைத்தனத்தை விமர்சிக்கவே இங்கு வந்தேன்.

இம்மாதிரியான திரிபுகளுக்கு இனிமேல் பதில் சொல்லும் எண்ணமும் இல்லை.

பனிமலர் said...

"ஷோபா சத்தி, ராஜன்குறை, சிறீரங்கன் போன்றோரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆனந்த சங்கரி இப்பொழுது பேட்டி கூட கொடுத்திருக்கிறார்."

இவர்கள் என்ன இவர்கள், சீனா திபெத்தை ஆக்கிரமித்த போது இந்து இராமை கூப்பிட்டு, குறிப்பிட்ட இடங்களை படம் எடுக்க சொல்லி, குறிப்பிட்ட செய்திகளை கொடுத்து, ஆகா திபெத்தில் என்ன அருமையான மக்களாட்சி அங்கே பார். அந்த நாட்டின் சுதந்திரம் போல் அமெரிகாவில் கூட இல்லை என்று எழுத வைதார்களே அதையும் விடவா இவர்களாலும் உங்களாலும் புனைய இயலும்.

எனக்கு புலிகளை பற்றி எந்த கவலையும் இல்லை, நாங்கள் கவலை கொள்ளும் இடத்தில் அவர்களும் இல்லை. எனது மற்றும் எங்களின் கவலை எல்லாம், அங்கே மடியும் அப்பாவி மக்களை பர்றியது தான். சிங்களத்திடம் வாங்கி திண்று பிழைக்கும் மக்களின் கருத்துகள் வேண்டும் என்றால் தெரியாதவர்களுக்குள் ஒரு தாக்கத்தை உருவாக்கலாம். இந்த பொய்யையும் புனைவையும் நாங்கள் நிறைய படித்தாகி விட்டது. உங்களது புனைவை கொண்டு வேறு எங்காவது விற்று பாருங்கள்.

பாருங்கள் இவ்வளவு விவாதங்களு நடுவிலும் கூட அங்கே மடியும் அப்பாவிகள் காக்கப்பட வேண்டியவர்கள் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாத உங்களது மனித நேயம் வாழ்க. அப்படி சொல்லி தான் காசு வாங்கி நல்ல துணியும், உணவும் உண்டு வாழவேண்டுமா.......... நண்பரே சிந்தியுங்கள்.......மடிபவன் பணமோ புகழோ நிறமோ இல்லாமல் இருந்தால் செத்தால் பரவாயில்லை என்று நீங்கள் சொல்வது மன நோயாளியின் பிதற்றலுக்கு சமம். வாழ்க உங்களது சிந்தனை வளரட்டும் உங்களது புதிய வேலையும் வாழ்க்கையும்.

முத்துகுமரன் மன்னிக்கவும் நீண்ட பதிலுரைக்கு.

Anonymous said...

//அங்கே மடியும் அப்பாவிகள் காக்கப்பட வேண்டியவர்கள்//

ஆச்சர்யமாக இருக்கிறது. மாய்ந்து மாய்ந்து நான் எழுதியதும் இதேதான். தமிழீழ மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் பலரும் புலிகள் அமைப்பிற்கும் சேர்த்து வக்காலத்து வாங்குவதின் தவறை புரிந்து கொள்ளாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

எல்லாரையும் சகட்டுமேனிக்கு குற்றம் சொல்பவர்கள் புலிகளின் செயல்களும் தமிழீழ மக்களுக்கு எதிராக அமைவதை சற்றேனும் புரிந்து கொண்டுள்ளனரா என்று தெரியவில்லை.

பனிமலருக்காக மிகத் தெளிவாக சொல்வது இதுதான் - ஈழ மக்களின் எதிர்கால நிம்மதியான வாழ்க்கைக்கு புலிகள் ஆயுத போராட்டத்தை கைவிட்டு அரசியல் போராட்டத்திற்கு திரும்ப வேண்டும். மிகவும் அவசியம் அது. ஈழ மக்களின் துயர் நீங்கி சம உரிமையுடன் வாழ்வதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்தியா போன்ற நாடுகள் நிர்பந்திக்க அம்மாதிரியான ஒரு அரசியல் அமைப்பு கண்டிப்பாக தேவை.

thiru said...

//ஈழ மக்களின் எதிர்கால நிம்மதியான வாழ்க்கைக்கு புலிகள் ஆயுத போராட்டத்தை கைவிட்டு அரசியல் போராட்டத்திற்கு திரும்ப வேண்டும். மிகவும் அவசியம் அது. ஈழ மக்களின் துயர் நீங்கி சம உரிமையுடன் வாழ்வதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்தியா போன்ற நாடுகள் நிர்பந்திக்க அம்மாதிரியான ஒரு அரசியல் அமைப்பு கண்டிப்பாக தேவை.//

எந்த மாதிரி அரசியல் போராட்டம்? ஆனந்தசங்கரி, டக்ளஸ், பிள்ளையான் - கருணா மாதிரி அரசியல் போராட்டமா? இவர்களின் 'அரசியல் போராட்டம்' எந்த அளவுக்கு சிங்கள பேரினவாத அடக்குமுறையை தடுத்து நிறுத்தி, அரசியல் உரிமைகளை பெறுகிறது? விளக்கமா சொல்லுங்கள்.

ஆயுத போராட்டம் அரசியல் இலக்குகளை அடையும் ஒரு போராட்ட வடிவமில்லையா?

இலங்கை பாராளுமன்றத்திற்குள் செயல்பட்டு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் 'தமிழ்தேசிய கூட்டமைப்பு' புலிகளின் ஆதரவு பெற்றது தானே? மக்களிடம் அரசியல் பணி செய்ய புலிகளின் அரசியல் பிரிவு இருக்கிறது.

நீங்கள் குறிப்பிடும் அரசியல் போராட்ட வடிவம் எப்படி இருக்கும்? விரிவாக சொல்லுங்கள். மேற்கொண்டு பேசுவோம்.

Anonymous said...

கிழக்கில் இப்போது எல்லா தமிழர்களும் மிகவும் மரியாதையாகவும் சிங்களவர்களுக்கு நிகராக தானே நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் இப்போது. அங்கே யாரும் ஆயுதம் ஏந்தவில்லையே. அல்லது கொழும்பில் உள்ள மக்கள் எல்லோரும் மிகவும் மரியாதையாகவும், சிங்களரை போல் முதல் தர குடிமக்களாகத்தானே நடத்துகிறார்கள் சிங்களவர்கள். அந்த மரியாதையையும் அங்கிகாரத்தையும் இங்கே செத்துமடியும் மக்களுக்கும் வாங்கித்தரத்தானே இவ்வளவு துடிக்கிறீர்கள் நீங்கள்.

நீங்களும் உங்களது மற்ற ஆட்களும் இந்த கண்மூடி தனமான தாக்குதலை நிறுத்த என்ன என்ன செய்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா. சமாதானமாக இருந்த நிலையில் ஒரு தலைபட்சமாக சென்று மக்களை கொன்று குவித்துவரும் நாட்டில் நீதியை வேண்டி ஏழைகளும் இல்லாதவர்களும் தானே வலிய வந்து நரியிடம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று எந்த தைரியத்தில் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

இந்த 21 நூற்றாண்டில் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டு வருகிறது சிங்களம் என்று உங்களுக்கு தெரியவில்லையா. அல்லது தெரியாதது போல் நடிக்கிறீர்களா. இந்தியாவையும் சீனத்தையும் மிரட்டும் விதமாக ஒரு ஏவுகணை தளத்தை அமைக்க அமெரிக்கா ஆயுதம் கொடுத்து சிங்களத்தை மேலும் மேலும் கொலைகள் செய்ய சொல்கிறது, அது போல தான் பாக்கிட்த்தானும் சீனமும், இந்தியாவும். இந்த நாடுகளின் சுய நலத்தில் எத்தணை எத்தணை ஆயிரம் பேரை பலி கொடுப்பது.

புலிகள் செய்வது பயங்கரவாதம் என்று சொன்னால் சிங்களம் செய்வதன் பெயர் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா. தமிழர்கள் இருந்தால் தானே இந்த சண்டையே என்று, இருக்கும் அத்தணை மக்களையும் கிளசுடரு குண்டு போட்டு கொத்து கொத்தாக கொன்று கொண்டு இருகிறது சிங்களம். அதை போலவே சிங்களம் இருந்தால் தானே அவர்களிடம் உரிமை எல்லாம் கேட்கவேண்டும் என்று புலிகள் இறங்கினால் எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

புலிகளிடம் இருக்கும் பொறுப்பில் கிஞ்சித்தும் இல்லாமல் நடந்துகொண்டு இருக்கும் சிங்களத்திற்கு பாதிக்கப்பட்டவர்களது சார்பில் நீங்கள் பேசுவது உங்களது நன்றிக்கடனை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நிறுத்துங்கள், போதும் இந்த பிதற்றல்கள்.

பனிமலர்.

Anonymous said...

எனக்கு புலிகளை பற்றி எந்த கவலையும் இல்லைஇ நாங்கள் கவலை கொள்ளும் இடத்தில் அவர்களும் இல்லை. எனது மற்றும் எங்களின் கவலை எல்லாம் அங்கே மடியும் அப்பாவி மக்களை பர்றியது தான்.-பனிமலர்

பனிமலர்,அப்படியானால் புலியை தான் நீங்கள் கண்டிக்க வேண்டும். இலங்கை தமிழரின் இவ்வளவு துன்பத்திற்கும் புலியின் ஆயுத போராட்டம் தான் காரணம். இலங்கையில் மடியும் அப்பாவி மக்கள் காக்கப்பட வேண்டியவர்கள் என்று நீங்கள் கருதினால் மனிதக் கேடயங்களாக மக்களை பயன்படுத்தாமல் அவர்களை வெளியேற அனுமதிக்கும் படி புலிகளை நீங்கள் கேட்டு கொள்ள வேண்டும்.

முத்துகுமரன் said...

பனிமலர் தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப ஒரூப்போதும் முடியாது. அது காலவிரயமே. எல்லா குற்றச்சாட்டுகளையும் புலிகளின் மேல் அடுக்கி, சிங்களை அரசை முழுமனதோடு நம்பிக்கொண்டிருக்கும் அனானியிடம் வேறு எதையும் எதிர்பார்க்க இயலாது.

ஈழத்தமிழர்களின் வெற்றியே இவர்களை போன்றவர்களுக்கு சரியான பதிலாக இருக்கும்.

Anonymous said...

மிக்க நன்றி முத்துக்குமரன்,

இந்த அனானிக்கு விளக்கம் சொல்வது எனது நோக்கம் இல்லை. இந்த மாதிரியான கைகூலிகள் கொஞ்சம் நஞ்சம் பரிவோடு பார்க்கும் மக்களின் மனதில் நஞ்சை கலக்கும் வேலையை சத்தம் போடாமல் செய்துக்கொண்டு இருக்கிறார். இவர்களது போன்றோர்கள் எனது தளத்தில்லும் இதே போல்தான் இவர்கள் செய்து வருகிறார்கள். புதிதாகவும், ஈழவர்களையும் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் என்று வருபர்களை திசை திருப்பும் வேலை இது.

பாருங்கள் நான் கேட்க்கும் எந்தவிதமான நீதியான கேள்விக்கும் இவரிடம் இருந்து பதிலே வராது. மீண்டும் மீண்டும் புலி பாடல் அதுவும் பல்லவி மட்டும் தான் வரும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்........

பனிமலர்.

thiru said...

அனானி,

எனது முந்தைய பின்னூட்டத்திற்கும் விளக்கமாக பதில் சொல்லுங்கள். சிங்கள பேரினவாத அரசின் தாக்குதலில் மடியும் மக்களை காப்பாற்ற தாக்கும் இராணுவத்தை போர் நிறுத்தம் செய்ய குறைந்தபட்ச மனிதாபிமானமும் உங்களிடம் இல்லை. போராடும் மக்களின் ஆயுதங்களை பறித்து கொலைக்களத்திற்கு ஆட்டுமந்தைகள் போல கொண்டு சேர்க்க அடக்குமுறையாளனுக்கு வசதியான பரப்புரைகளை மேற்கொள்வதை கேவலமாக கருதவில்லையா?
இனப்பிரச்சனைக்கு அரசு என்ன அரசியல் திட்டத்தை வைத்திருக்கிறது, விளக்கமுடியுமா உங்களால்? மௌனம் சாதிக்காமல் பதில் சொல்லுங்கள்.

Anonymous said...

பனிமலர்,

முந்தைய அனானி பின்னூட்டம் என்னுடையதில்லை. இதுதான் ஒரு சங்கடம். தொடர்ந்து கருத்துள்ள விவாதம் செய்வதில் பதிவுலகில் உள்ள சிக்கல்.

//
நீங்களும் உங்களது மற்ற ஆட்களும் இந்த கண்மூடி தனமான தாக்குதலை நிறுத்த என்ன என்ன செய்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா//

இப்படி நானும் கேள்விக் கேட்கலாம். என்ன, நீங்கள் பதில் சொல்லும்போது இன்னமும் வெறுப்போடு சில வாசகங்கள் வந்து விழும்.

சிங்கள அரசின் பேரினவாதமும், அரச பயங்கரவாதமும், தமிழ் இன அழிப்பும் நீங்கள் சொல்லும்படி கடுமையாக இருக்கும் பட்சத்தில் உலக நாடுகள் மத்தியில் அதனை ஏன் உரக்க சொல்ல முடிவதில்லை என்று யோசித்திருக்கிறீர்களா?

பயங்கரவாதம் என்னும் 'கறை' மட்டும் இல்லாவிடின் உலக நாடுகளின் மத்தியில் எப்பொழுதோ வேண்டிய அழுத்தம் ஏற்படுத்தி, சம-உரிமை, விடுதலை பெற்றுத் தர அதிக சாத்தியங்கள் இருக்கின்றன. இதைத்தான் நான் சொல்ல நினைப்பது.

இதில் என்ன 'விஷம்' கலக்கும் முயற்சி இருக்கிறதோ அல்லது 'தூங்குவது போல் நடிக்கும்' நிலை இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை.

முடிந்தால் வேறு தளத்தில் இதனைப் பற்றி விரிவாக எழுத முடியுமா என்று பார்க்கிறேன். நண்பட் 'திரு'விற்காக கீழே எழுதும் பதிலைத் தவிர இந்த தளத்தில் வேறு எந்த மறுமொழியும் இனி நான் இடப்போவதில்லை. வேறு அனானிகள் பதிலிறுத்தால் தயவுசெய்து எனதாக நினைத்து மீண்டும் வேறு ஏதேனும் வசைபாடலை தொடரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திரு,

தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். முன்னமேயே எழுத வேண்டும் என்று எண்ணியபோது தமிழ் எழுத்துரு சரியாக வராமல் போய் விட்டது. ஆங்கிலத்தில் நினைத்தது போல் எழுத முடியாது என்பதினால் தாமதமாகி விட்டது.

//இராணுவத்தை போர் நிறுத்தம் செய்ய குறைந்தபட்ச மனிதாபிமானமும் உங்களிடம் இல்லை.//

மனிதாபிமானம் இல்லாமல் இவ்வளவு நேரம் செலவழித்து எழுதி பின்னர் தேவையில்லாத விமர்சனம் பெற்றுகொள்வது எனது நோக்கமல்ல.

ஆயுதப் போராட்டம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அரசியல் தளங்களில் அடைய வேண்டிய இலக்குகள் வேறானவை. சிங்கள பேரினவாதத்திலிருந்து தமிழர்கள் விடுதலை பெறுவது அதிக முக்கியமாக இருக்க வேண்டும். தமிழீழம் அதற்கான வழிகளில் ஒன்று. வேறு வழிகளும் உண்டு. சமஷ்டி அமைப்பாக தமிழர்களுக்கு சம் பிரதிநிதித்துவம் உள்ள அமைப்பாக இலங்கை அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்ற அழுத்தம் கொடுப்பதும் ஒரு வழி.

இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. எந்த மக்களின் விடுதலைக்காக நாம் பாடுபடுகிறோமோ, அந்த மக்களுக்கு நமது செய்கையால் தீங்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது. ராசீவ் கொலை, பொன் சகோ கொலை முயற்சி, போன்ற முயற்சிகள் விபு அமைப்பின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

கருணா, பிள்ளையான், ஆனந்த சங்கரி போன்றவர்கள் விபு அமைப்பின் குறிக்கோளை நம்பாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களோடு விரோதம் பாராட்டாமல் தமிழ் மக்களின் (ஒரு சில மக்களின்) பிரதிநிதிகளாக அவர்களையும் கொண்டு அரவணைத்து செல்லும் முதிர்ச்சி விபு அமைப்பிடம் இல்லை. நான் சொல்வது Statesmanship மாதிரியான அணுகுமுறை.

ஹமாஸ் நடத்தும் விடுதலைப் போருக்கும், நெல்சன் மண்டேலாவின் இன எழுச்சிப் போருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கத்தானே செய்கின்றன.

எனது அனுபவமின்மையால் விரிவான அரசியல் போராட்ட வரைவுகளைப் பற்றி எழுதமுடியாமல் போகலாம். ஆனால் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். மீண்டும் முத்துகுமரனோ, பனிமலரோ வந்து நான் விசவிதையை விதைப்பதாக குற்றம்சாட்டாமல் இருக்கும் பொருட்டு இதனை மீண்டும் சொல்ல முற்படுகிறேன்.

இந்தியா தனது அண்டை நாடான இலங்கையில் அமைதி நிலவ ஆக்கபூர்வமான பங்காற்ற வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தரவேண்டும். உலக நாடுகள் சிங்கள பேரினவாதத்தை கண்டிக்க வேண்டும். ஈழ தமிழ் மக்கள் மற்ற நாடுகளில் தமிழர்கள் வளமாக, இணக்கமாக, ஆனந்தமாக வாழ்வது போன்று இலங்கையிலும் வாழ வேண்டும். இத்தனை விழைவுகளுக்கும் தடையாக இருப்பது விபு அமைப்பின் சில தவறுகள். மேலே நான் குறிப்பிட்டது போன்ற (எல்லா) சக தமிழ் தலைவர்களையும் அரவணைத்து போகாமலும், இந்திய முன்னாள் பிரதமரை கொலை செய்ததின் மூலம் இந்திய அரசாங்கத்தின் நட்பை இழந்ததும் அதில் முக்கிய தவறுகள். விபு அமைப்பு ராசீவ் கொலையில் சம்பந்தப்படவில்லை என்றால், அதனை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மற்றபடி ஈழ மக்களின் நிம்மதிக்காக பிரார்த்திக் கொள்ளும் பல கோடி தமிழர்களின் குரலோடு எனது குரலும் ஓங்கி ஒலிக்கும்.

திரு! உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து படிப்பேன். ஆனால் மறுமொழி இட முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.

Anonymous said...

அனானி அவர்களுக்கு,

மன்னிக்கவும். பொதுவாக ஈழவர்களது விடயங்களில் எனது பதிலுரையும் கருத்துகளும் எப்பவுமே மென்மையானதாய் தான் இருக்கும். காரணம் எவ்வளவு கடினமான தொரு இழப்பை சந்தித்துக்கொண்டு இருப்பவர்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். அந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு அணுஅளவும் உதவ முடியவில்லையே என்ற ஆதங்கம் தவிர வேறு ஒன்றும் இல்லாதவர்களாக இருப்பதில் வெட்கமும் வெறுப்பும் எங்களின் மேல் எங்களுக்கே எப்பவும் உண்டு.

நீங்கள் சொல்வது போல் ஒரு அரசியல் தீர்வு தான் நிரந்தர தீர்வாக இருக்கமுடியுமே தவிர மற்றவை நிலக்க வாய்ப்போ இல்லை.

எனது கனிப்பு சரியாக இருந்தால், விபுவும் அந்த பாதையில் தான் பயணிக்கிறது. கடந்த கால வரலாறில் அதுவும் தமிழ்செல்வன் மறைவுக்கு முன்னால் அரசியல் நகர்வுகளில் முகவும் ஒரு முன்னேற்றமான ஒரு நிலையை தான் கண்டு வந்தோம்.

எங்கே இப்படியே போனால் விபுவின் முயற்சிகள் வெற்றி கொள்ளுமோ என்ற அச்சத்தில், ஊடகத்தின் அத்தணை கதவுகளையும் மூடி, பூட்டிய அரைக்குள் படு கொலைகளை செய்து வருகிறது சிங்களம்.

சமாதான காலம் தொட்டு இத்தணை ஆண்டுகளும் விபு அப்பாவி மக்களையோ அல்லது அரசியல் தலைவர்களையோ குறிவைத்து தாக்குதல் தொடுக்காமல் இருப்பதால், அவர்களின் மேல் இருக்கும் அந்த பயங்கரவாத கறை குறைந்துகொண்டு தான் வருகிறது. இந்த முயற்சியிலும் அவர்கள் வெற்றி பெற்றுவிட கூடாது என்று தான் சிங்களம் நாள் தோறும் அப்பாவி தமிழ் மக்களை கொன்று விபுகளில் பதில் தாக்குதலை எதிர்பார்த்து நிற்கிறது.

ஆனால் இவ்வளகாலம் பொறுமை காத்தது வீணாகி போகுமே என்று விபுவும் தவிர்த்துக்கொண்டே சென்றாலும். நெருக்குதலின் உச்சத்தில் சிங்களம் ஏறி நிற்கும் இந்த வேளையில் நாங்கள் பயப்படுவது எல்லாம் மறைந்த கறையை மீண்டு உருவாக்கி தான் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பு தேடமுடியும் என்றால் கடைசி ஆயுதமாக அதையும் செய்ய வேண்டிய நிர்பந்தம் எற்பட்டுவிட கூடாதே என்று தான் கவலை கொள்கிறோம்.

விபு தோற்றார்களா இல்லையா என்றது ஒருவருக்கும் முக்கியம் இல்லை, ஆனால் தமிழர்களது விடுதலை போராட்டம் வெற்றி கொள்ளவேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். உங்களது போராட்டம் வெற்றி கொள்ள வாழ்த்துக்கள். கடுமையான விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.......

பனிமலர்.

thiru said...

அனானி,
//ஆயுதப் போராட்டம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அரசியல் தளங்களில் அடைய வேண்டிய இலக்குகள் வேறானவை. சிங்கள பேரினவாதத்திலிருந்து தமிழர்கள் விடுதலை பெறுவது அதிக முக்கியமாக இருக்க வேண்டும்.//
அறுபது ஆண்டு வரலாற்றில் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் அமைதி வழியில் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் துவங்கியது. ஆயுதம் தாங்காத போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் ஆயுத போராட்ட வடிவமெடுக்க காரணமென்ன? ‘ஈழத்தமிழர்களுக்கு விடுதலை’ என்னும் நோக்கத்தை புலிகள் அன்றும், இன்றும் இலட்சியமாக கொண்டு செயல்படுகிறார்கள். வி.புலிகளும் அவர்களது தலைமையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களில்லை. அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாலுள்ள வேற்று கிரகத்துவாசிகளுமில்லை. உலகின் அனைத்து விடுதலை அமைப்புகளையும், அதன் தலைமைகளையும் போல அவர்களும் மனிதர்கள். அவர்களது செயல்களிலும் தவறுகள் இருக்கலாம். ஆனால், புலிகளையும், அவர்களது வழிமுறைகளையும் மட்டுமே விமர்சிக்கும் உங்களைப் போன்றவர்கள் செய்யும் மிகப்பெரும் தவறு, புலிகளை விமர்சிக்கிறேனென்று தமிழின படுகொலைகளையும், இனவொழிப்பையும் விமர்சிக்கவோ, கண்டிக்கவோ செய்யாமல் சிங்கள பேரினவாதத்திற்கு (அறிந்தோ/அறியாமலோ) ஆதரவாக இருப்பது. உண்மையில் இது அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானதும், ஆபத்தானதும் கூட.
பல இலட்சம் தமிழ்மக்கள் இராணுவத்தால் கொலைவேட்டையில் துரத்தப்படுவதையும், பல்லாயிரம் பேர் கொல்லப்படுவதையும், பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தலுக்கு ஆளாவதையும் நீங்கள் இன்னும் அறியவில்லை. இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை இலங்கை அரசு படுகொலை செய்ததை நீங்கள் அறியவில்லை போல தெரிகிறது. செஞ்சோலையில் குழந்தைகள் மீது குண்டு வீசி இலங்கை அரசு கொலை செய்ததையும் நீங்கள் அறியவில்லை. ‘விடுவிக்கப்பட்ட’ கிழக்கு மாகாணத்தில் அரசு கட்டுப்பாட்டில் தமிழர்கள் படும் வேதனைகளையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. வி.புகளை மட்டுமே குற்றம் சாட்டுவது எளிது. அது தற்போதைய சூழலில், இலங்கை/இந்திய அரசுகள் மிஞ்சியிருக்கும் தமிழர்களையும் கொன்றொழிக்க ஆதரவழிக்கும் ஆபத்தான செயலில் முடியும்.
இந்தியாவில், சோனியாவின் காங்கிரஸ் கட்சியும், ஜெயலலிதாவின் அ.தி.மு.கவும் மிக அபத்தான இந்த அணுகுமுறையையும், அரசியலையும் செய்து வருகிறது. தாக்கப்படும் ஒரு இனம் எடுத்திருக்கும் ஆயுதத்தை கண்டிக்கும் இந்த அரசியல் தாக்குகிற அரசியல் ஆதிக்கத்தை கண்டிக்காமல் விடுகிற புள்ளியில் ‘பாசிச’ ஆதரவையும், எண்ணத்தையும் வளர்க்கிற குரூரமானது. தேன் தடவிய வார்த்தைகளில் இருந்தாலும் இந்த அரசியல் புள்ளி வெளிப்பட்டுவிடுகிறது.
ராஜீவ்காந்தியின் படுகொலை கண்டிக்கத்தக்கது. ஆனால் அந்த படுகொலையின் முக்கிய (இந்திய) சூத்திரதாரிகள் விசாரிக்கப்படவில்லை. சோனியா அம்மையாரின் காங்கிரஸ் முடிவெடுத்தால் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ள இயலும். ஆனாலும் ஏனோ ஒரு அரசியல் மௌனத்தினால் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது பற்றிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளியாக முறையான விசாரணையில்லை. முக்கிய முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலுள்ள சூழலில் எவர் மீதும் குற்றம் சுமத்தி, அவர்களது உரிமைகளை பறிப்பது நல்லதல்ல.
//கருணா, பிள்ளையான், ஆனந்த சங்கரி போன்றவர்கள் விபு அமைப்பின் குறிக்கோளை நம்பாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களோடு விரோதம் பாராட்டாமல் தமிழ் மக்களின் (ஒரு சில மக்களின்) பிரதிநிதிகளாக அவர்களையும் கொண்டு அரவணைத்து செல்லும் முதிர்ச்சி விபு அமைப்பிடம் இல்லை. நான் சொல்வது Statesmanship மாதிரியான அணுகுமுறை.//
பகிடி செய்யாதீர்கள். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு மேற்குறிப்பிட்டுள்ள இவர்களது நிலைபாடுகளும், செயல்களும் என்ன? ஆனந்தசங்கரி பக்கம் பக்கமாக எழுதிய ‘கடிதங்களிலும்’, கருணா கொடுக்கிற ‘நேர்காணல்’ கதைகளிலும் இந்த அரசியல் ஆனந்த கூத்தாடுகிறது. ஈழத்தமிழர்கள் இந்த நுண்ணிய அரசியலை புரிந்து வைத்துள்ளனர். புலிகளின் தவறுகளை எதிர்ப்பவர்களாக ‘காட்டிக்கொள்ளும்’ இவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான குரல்களையும், திட்டத்தையும் முன்வைத்து சிங்கள பேரினவாத அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்கியிருந்தால் அவர்களது வழிமுறைகளை பற்றியும் பேசப்பட அவசியம் வந்திருக்கும். தங்களது போராட்டத்தின் நியதியையும், இருப்பையும் மறந்து, மறுப்பதை பேச என்ன இருக்கிறது? பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் புலிகளை சார்ந்திருக்கும் அரசியல் சூழலின் முக்கிய காரணங்களில் ஒன்று மேற்படி நபர்களது அரசியல் பிழைப்புவாதம். புலிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வதில் மட்டுமே காலத்தையும், வலுவையும் செலவிட்டு சிங்கள பேரினவாத பரப்புரைகளுக்கு உதவுகிற தமிழர் தரப்பினராக இவர்கள் முடிந்து போனது ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றின் சோகம்.
// தமிழீழம் அதற்கான வழிகளில் ஒன்று. வேறு வழிகளும் உண்டு. சமஷ்டி அமைப்பாக தமிழர்களுக்கு சம் பிரதிநிதித்துவம் உள்ள அமைப்பாக இலங்கை அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்ற அழுத்தம் கொடுப்பதும் ஒரு வழி.//
ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றையும், இலங்கையின் அரசியல் வரலாற்றையும் அறியாத அப்பாவியா நீங்கள்? ஈழத்தமிழர்களின் போராட்டம் சம உரிமைக்காக துவங்கி, தமிழீழம் கோரிக்கையாக உருவெடுத்தது. தமிழீழத்திற்கான போராட்டம் தொடரும் வேளையில் திம்பு துவங்கி இன்றைய காலகட்டம் வரையில் தமிழீழம் உள்ளிட்ட/தவிர்த்த எல்லா வழிகளையும் புலிகள் மற்றும் இதர அமைப்புகளும், தமிழ்மக்களும் பேசியுள்ளனர். ஆனால், தமிழர்களின் மொழி, இன, கலாச்சார, அரசியல் அடையாளங்களையும், உரிமைகளையும் நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட எந்த அமைப்புமுறையையும், வழிகளையும் உருவாக்க சிங்கள தரப்பும், இந்திய ஆளும்/அதிகார வர்க்கமும் தயாராக இல்லை. 2002 போர் நிறுத்தத்திற்கு பின்னர் புலிகளின் பிரதிநிதிகள் மேற்குலக நாடுகளில் ஆட்சிமுறை பற்றி அறிந்துகொள்ளும் பயணங்களில் ஈடுப்பட்டனர். அதிகார பரவலாக்கத்துடன், தமிழர்களுக்கான சம உரிமையுள்ள தீர்வுகளை எட்டும் முகமாக அமைந்த இந்த பயணங்கள் உண்மையான நோக்கத்துடன் நடந்தன. சுனாமி பேழிவிற்கு பின்னர் சுனாமி மீள் கட்டமைப்பிற்காக 2005ல் புலிகள் முன்வைத்த (குறைந்த பட்ச) திட்டத்தையும் இலங்கை அரசு ஏற்கவில்லை.
சிங்கள பேரினவாதம் இந்தியாவில் கிராம ஊராட்சிக்கு உள்ள அதிகாரத்தை கூட ஈழத்தமிழர்களுக்கு வழங்க தயாராக இல்லை. சோனியாவின் காங்கிரசிற்கும், இந்திய அதிகாரவர்க்கத்திற்கும், இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை பறித்து, தமிழர்கள் மீது தனது திட்டங்களை திணித்து வலுவற்ற அரசியல் தலைமைகளை ‘கோஷ்டிகளாக’ வளர்ப்பது மட்டுமே நோக்கமாக உள்ளன. அவர்கள் எதிர்பார்ப்பது:
சிங்கள பேரினவாத அரசுக்கு பணிந்து ஆயுதங்களை கழைந்து, வி.புலிகள் அமைப்புகளை கலைத்து, மக்களையும் தங்களையும் அவர்களிடம் கையழித்து, அரசியல் கட்சியாக ‘ஒற்றையாட்சிமுறை பாராளுமன்றத்தில்’ எல்லா கட்சிகளோடு தாங்களும் ஒருவராக நுழைவது. அதாவது சம உரிமையை மறந்துவிடுவது.
உலக வல்லரசுகளும் (சீனா, அமெரிக்கா, ஜப்பான்…), பிராந்திய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் இராணுவ, பொருளாதார ஆடுகளமாகியுள்ள இலங்கை சூழலில் அங்கீகரிக்கப்பட்ட அரசற்ற மக்களும், அவர்களுக்காக போராடும் அமைப்புகளும் தேசிய இன விடுதலையை அடைய இரண்டு சாத்தியங்கள்.
1. உலக வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார ஆதிக்கத்துக்கு துணையாக இருந்து தங்களது உரிமைகளை வல்லரசுகளின் ஆதிக்கத்திற்குள்/ஆதரவிற்குள் பெறுவது. புலிகள் கடந்த காலங்களில் இவற்றை செய்ய தயாராக இல்லை. இனியும் வாய்ப்புகளில்லை.
2.விடுதலைக்காக உள்நாட்டில் அனைத்து போராட்டங்களையும், கட்டுமானங்களையும் முன்னெடுப்பது. உலக அரங்குகளில் அரசியல் பரப்புரைகளை பெருக்குவதும், ஆதரவை திரட்டுவதும். ஈழத்தமிழர்களின் நியாயங்களையும், பிரச்சனையைகளையும் உலக மக்கள் அறியப்படுத்தி ஆதரவை திரட்டுவது.
இன்றைய சூழலில், இந்தியாவின் அதரவுடன் நிகழ்த்தப்படுகிற தமிழ்மக்களின் படுகொலை மற்றும் இன அழிப்பை தடுப்பது அனைவரும் செய்ய வேண்டிய கடமை. இலங்கை அரசின் கோரப் பிடியிலிருந்து மக்களுக்கு உணவு, பாதுகாப்பான சூழலை உருவாக்க தமிழர்கள் முன்னணியில் இருக்க வேண்டும். மிகப்பெரிய மனித அவலம் அரங்கேறாமல் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியமானது.
அரசியல், இராணுவ வெற்றிகளைப் பொறுத்த அளவில்; ஒப்பாரி வைக்க அவசியமில்லை. சமர்களில் வெற்றி தோல்வி பல சூழல்களை வைத்து இயங்குவது. பல்லாயிரம் தமிழ்மக்களை இலங்கை அரசு படுகொலை, புலிகளின் அரசியல் பிரிவுக்கு தலைமையேற்றிருந்த தமிழ்ச்செல்வன் படுகொலை, தற்காலிக நிர்வாக தலைநகராக செயல்பட்ட கிளிநொச்சி ஆக்கிரமிப்பு போன்ற இழப்புகளுக்கு பின்னரும் வலிந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இன்றைய சூழல் புலிகளின் பலவீனமல்ல (இன்றைய நிலையில் இதுபற்றி விரிவாக பேச விருப்பமில்லை). இராணுவ வெற்றியை மட்டுமே நம்பியிருக்கும் வெறியாளர்களல்ல புலிகள் என்னும் செய்தியை ‘வலிந்த தாக்குதல்’ நடத்தாத இன்றைய புலிகளின் போர்க்கள நிலை சொல்கிறது. இந்த நிலை இலங்கையை சர்வதேச அளவில் அம்பலப்படுத்த துவங்கியுள்ளது. புலம்பெயர் தமிழர்கள், தமிழகத்து தமிழர்களின் அரசியல் போராட்டங்களும், பரப்புரைகளும் ஒருசேர எழும் போது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் ஆதரவுகள் உருவாகும்.

அனானி,
இறுதியாக, ஈழத்தமிழர்களுக்கு எந்த வகை அரசியல் தீர்வு வேண்டுமென்பதை அவர்கள் மட்டுமே முடிவு செய்யும் உரிமையுண்டு.


முத்துகுமரன்,
உங்களது பதிவில் விரிவவன பின்னூட்டத்தை எழுத அனுமதித்தமைக்கு நன்றி! தொடர்ந்து உங்களது உரையாடலை எடுத்து செல்லுங்கள்.

Anonymous said...

பொன்சகோவை அவர்கள் தீர்த்து கட்ட திட்டம் தீட்டியதின் விளைவாக இராணுவத்தின் பதில் தாக்குதல் யார் மேல் நடக்கும்? மக்களின் பின்னால் மறைந்திருக்கும் இயக்கதினர் மேல்தானே?//

குமுதம் ரிப்போட்டரில் வரும் தொடரைப் படித்து ஈழப் போராட்டம் குறித்து கருத்து சொல்ல புறப்பட்டால் இப்படியான கேலிக்கூத்துக்கள் தான் நடக்கும்.


வன்னியில் இருந்து வரும் வீடியோக்களை பாருங்கள். தெருவெங்கும் காடு மேடுகள் எங்கும் மக்கள் கூட்டம். சன வெள்ளம். எங்கேயாவது அவர்களுக்குள் புலிகள் தெரிகிறார்களா..?

மக்கள் மீது குண்டு போடுவது மக்கள் எனத் தெரிந்து கொண்டேதான். மழுப்புகள் சொல்லி சிங்களத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் உண்மை வேறானதே

வீதி ஒழுங்குகளை சரிசெய்யும் பணியை கூட காவல்துறைதான் செய்கிறது.

Related Posts with Thumbnails