சோனியாவின் முந்தானையில் தொங்கும் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் உலகத் தமிழினத் தலைவர்

பள்ளியில் படிக்கும் போது சமூக அறிவியல் பாடத்தின் மீது தனிப்பட்ட ஒரு ஈடுபாடு இருந்தது, இந்திய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று படிக்கும் போது ஒரு இனம்புரியாத பூரிப்பும் பெருமித உணர்வும் இருந்து வந்தது. அவை அனைத்தும் திணிக்கப்பட்ட ஒரு போலியான நம்பிக்கை என்பதையே காலம் உணர்த்தி வருகிறது. ஜனநாயக நாட்டின் அடிப்படையான சுதந்திரம் இங்கு ஆளும் அரசுகளை கேள்வி கேட்காத வரைக்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் உணர்வென்பதை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மை அதுவென்பதே வருத்தத்திற்கு செய்தியாகும். கருத்துச் சுதந்திரம் என்பது பரவலாக்கப்படவில்லை என்பதும் அவை கேள்வி கேட்காத மந்தைகளுக்கு மட்டுமே உரியது என்பதுமே எதார்த்தமான சூழலாக இருக்கிறது.


இந்திய தேசியக் கட்டமைப்பில் தமிழர்களின் நலன் குறித்தான பார்வை எப்படி இருக்கிறது? சந்தேகத்திற்குரிய, கூடுதலான விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஒரு இனமாகவே தொடர்ந்து கண்காணிப்பிலே வைக்கப்பட்டிருக்கிறது. தமிழனது சுதந்திரமான சுயமான சிந்தனைகளை பிரிவினைவாதம் என்ற ஒற்றைச் சொல்லாடலுக்குள் முடக்கும் போக்கே தொடர்ந்து நடந்து வருகிறது. தேசிய ஒருமைப்பாடை புதைத்துவிட்டு திமிருடன் நடக்கும் பல மாநிலங்களை விட மிக நேர்மையான ஈடுபாட்டோடே தமிழகம் இருந்து வந்த போதுலும் இந்த கண்காணிப்பு வளையத்தை விட்டு தமிழகமும் தமிழரும் விடுபட்டதாக தெரியவில்லை.இந்திய அரசியல் அமைப்பின் அனைத்து உறுப்புகளும் தமிழர் தொடர்பான விடயங்களில் மறைமுகமாகமான சில நேரங்களில் வெளிப்படையாகவே எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.


இந்திய தேர்தல் ஆணையம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உதவும் ஒரு சுயேச்சையான அமைப்பு என்று நமக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் எதார்த்ததில் எவ்வாறு இருக்கிறது? நமக்குச் சொல்லப்பட்ட யாவும் போலியானதே என்பதை உறுதி செய்யும் வகையிலே இந்திய தேர்தல் ஆணையத்தின் அண்மைய சுற்றறிக்கை அமைந்து இருக்கிறது. இந்திய அரசின் பார்வையில் இலங்கைத் தமிழர் என்று அழைக்கப்படும் ஈழத்தமிழர்களுக்கு நேரும் பேரவலத்தை மக்கள் மன்றத்தின் முன் தெரிவிக்க கூடாது என்று ஆணையிட்டுருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்தான பதாகைகளோ, விளம்பரங்களையோ அச்சகங்கள் அச்சடிக்ககூடாது என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இது அப்பட்டமான அதிகார வரம்பு மீறலாகும். முழுக்க முழுக்க ஆளும் காங்கிரசு கட்சிக்கு சாதகமான ஒரு தலைப்பட்சமான அதிகார வரம்பு மீறலை அடக்குமுறையை தமிழர்களின் மீது துணிச்சலாக ஏவியிருக்கிறது.


தேர்தலை நடத்தும் சுயமான அமைப்பு எனும் நிலையிலிருந்து விலகி சோனியாவின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக தின்ற எச்சில் துண்டிற்காக நன்றி செய்யத் துடிக்கும் ஒரு எடுபிடியாக மாறி இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அவர்கள் சர்வாதிகாரிகளாக மாறிவிட முடியாது, மாறவும் அனுமதிக்க முடியாது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அரசு இயந்திரங்களின் வாயிலாக அடக்குமுறைகள் தொடர்ந்து வரும் போதும் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்பது வானளாவியது. அவர்களை எந்த வித நீதிமன்ற விசாரணைக்கு தேர்தல் முடியும் வரை உட்படுத்த முடியாது என்ற சிறப்புச் சலுகையை ஆளும் காங்கிரசு கட்சி மிகத் தெளிவாக உபயோகிக்கிறது. மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும் எதைச் சிந்திக்க கூடாது என்பதை தீர்மானிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. மீறி அதை திணிப்பார்களேயானால் அவர்களது அதிகார ஏவல்களை, அரசியல் அமைப்பை மலம் துடைக்கும் காகிதமாக மட்டுமே பயன்படுத்த முடியும். தேர்தல் ஆணையத்தின் இந்த அடக்குமுறையை முற்றிலுமாக நிராகரித்து அவர்களின் அதிகார முகத்தில் கரியைப் பூசுவதே சரியானதாக இருக்கும்.


ஆட்சியதிகாரத்துக்கு வரும் வரைக்கும் சுத்தத் தமிழராகவும் ஆட்சிக்க வந்தவுடன் முழுமையான இந்தியனாக கூடு மாறும் வித்தையைத் தெளிவுற கற்றுணர்ந்தவர் தமிழக காங்கிரசுக் கட்சியின் புதிய செயல்தலைவரும் சோனியா காந்தியின் தமிழக காங்கிரசுப் பொறூப்பாளருமான முதல்வர் கருணாநிதி அவர்கள். திராவிட இயங்கங்களுக்குப் பங்களித்தது போதுமென்று நினைத்து விட்டு தேசிய இயக்கமான காங்கிரசுக்கு தன் சேவையைத் தொடங்கியிருக்கிறார். கலைஞர் மீது இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைப்பது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும் அவரது சறுக்கல்களை சகித்துக் கொண்டு அவரை ஆதரித்தவர்களையும் அவரின் செயல்பாடுகளை இந்த எல்லையை நோக்கி நகர்த்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


கலைஞர் ஆட்சியிலிருப்பதால் நாம் குறைந்தப்பட்சம் போராடவாவது முடிகிறது மேலும் கலைஞர் எதிர்ப்பு என்பது நமது எதிரியான ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவே முடியும் என்பது வறட்டுத்தனமான சப்பைக் கட்டாகவே முடியும். ஆட்சியதிகாரத்துக்கு வந்தப்பின் அடக்குமுறையில் ஜெயலலிதாவிற்கும் கலைஞருக்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஜெயலலிதா தன் வன்மத்தை நேரடியாக வெளிப்படுத்துவார், கலைஞர் வார்த்தை விளையாட்டு விளையாடி அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி வஞ்சத்தை தீர்த்துக் கொள்வார். இதுதான் வித்தியாசம் என்ன அடக்குமுறை கொஞ்சம் ஜனநாயக முறைப்படி நடக்கும்.ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் பெரும் பணியில் இப்போது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அவரது சொக்கத்தங்கமான ‘’சோனியாகாந்தி’’ அம்மையாரை நோக்கி யாரேனும் கேள்வி கேட்டால் உள்ளம் பதறித்துடித்து காவல்துறையை ஏவி அவர்களை சிறையிலடைத்து தன் சேவக விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராஜீவ் காந்தியோ, சோனியா காந்தியோ விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்ட புனிதர்களோ கடவுளோ கிடையாது. ராஜிவ் காந்தியின் மரணத்திற்காக ஒப்பாரி வைக்கும் காங்கிரசுகாரர்கள் எவரும் அவரோடு சேர்ந்து ஏன் மரணிக்கவில்லை? சொல்லி வைத்தாற்போல் அத்தனை பேரும் அங்கில்லாது போனது எப்படி? சுய சிந்தனை உள்ள எவனுக்கும் இந்த கேள்வி மனதில் உதிக்கும். அந்த கேள்விகள் எல்லாம் எப்படி தேச விரோதமானது? ராஜீவ் மரணம் என்பது சந்தேகத்திற்குரியது அதுகுறித்தான அனைத்து சந்தேகங்களும் பதில் சொல்லப்பட வேண்டும் இல்லை என்றால் கேள்விகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.சீமானும், கொளத்தூர் மணியும், இன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கீழ் சிறையிலடைக்கப்பட்டி இருக்கிறார்கள். அவர்கள் செய்த தேச விரோத செயல்கள் என்ன? சிந்திப்பதும் சிந்திப்பதை பேசுவதும் எப்படி தேச விரோதமாகும். தேசப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்பதில் ஆளும் வர்க்கங்களின் தவறாக கொள்கை முடிவுகள்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது. இன்று இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு இந்திய அரசாங்கம் உதவி செய்து வருவதையும், ராஜிவின் போபர்ஸ் ஆயுத ஊழலை அம்பலப்படுத்தி பேசிவந்ததால்தானே தேச விரோதமாக பார்க்கப்படுகிறது, என் இன மக்கள் அங்கு கொத்து கொத்தாக கொன்றழிக்கப்படும் போது அதற்கு இந்திய அரசும் மறைமுகமாக உதவிக்கொண்டிருப்பதை எப்படி கேள்வி கேட்காதிருக்க முடியும், குஷ்புக்காக கருத்துச் சுதந்திரத்தை காக்க கருத்துக் காவலர்களாக உதித்த கனிமொழி அம்மையார் இப்போது வேற்றுக் கிரகத்தில் இடம்பெயர்ந்து வசிக்கிறாரோ என்னவோ? தமிழர்கள் தங்கள் எதிர்ப்பைத் உக்கிரமாகத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே தமிழகம் வழியாகவே நூற்றூக்கணக்கான பீரங்கிகள் அனுப்பப்பட்டதே அது எதை உணர்த்துகிறது நீங்கள் எமது அடிமைகள் என்பதைத்தானே?


தன்னைத் தமிழினத்தலைவராக பறைசாற்றிக் கொள்ளும் முதல்வர் தமிழின அழிப்பிற்கு எதிராக செயல்பட்ட வேகத்தையும், தம் மக்களுக்காக செயல்பட்ட வேகத்தையும் நாம் கவனித்தே ஆக வேண்டும். குறைந்த பட்சம் தனது எதிர்ப்பை, தமிழக மக்களின் உணர்வை, கொந்தளிப்பை, எழுச்சியை அவர்களின் முதல்வராகவாவது அழுத்தமாக பதிவு செய்தாரா? இல்லையே .. முடிந்த வரை போராட்ட உணர்வை நீர்க்கச்செய்யும் பணியை கோட்டையிலிருந்த போதும் மருத்துவமனையில் இருந்த போதும் தொடர்ந்தாரே?? பிரணாப் முகர்ஜிக்கு தூயவர் என்று பரிவட்டம் கட்டி பூரித்தாரே? இன்னும் எம்.கே.நாரயணன், சிவ சங்கர மேனன், மகிந்த ராஜபக்சேவுக்கும் செயல்வீரர், சமாதானப் புறா, புனிதர் என்ற பட்டங்களும் உலகத்தமிழினத் தலைவர் சூடி உவகை அடைவார், தமிழுணர்வார்கள் எந்தக் கேள்வியும் கேட்காது அவருக்கு உறுதுணையாக இருப்பதுதான் நம் எதிரியான ஜெயலலிதாவை ஆட்சியதிகாரத்துக்கு வரவிடாது தடுக்கும் பெரும் பணி என்று சொல்ல இருக்கவே இருக்கிறார் வீரமணியார்.தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை கண்டிப்பது உலகமெங்கும் மாந்த நேய உணர்வாக இருக்கும் போது இந்திய இறையாண்மைக்கும் தேசப்பாதுகாப்புக்கும் எதிரானதாக நமக்கே தெரியாமல் முதல்வருக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் மட்டும் தெரிந்தவாறு அரசியலமைப்பு இந்திய இறையாண்மை பற்றியான வரையறை எப்போதிருந்து மாறியது? ஒருவேளை மாறி இருக்கலாம். மன்மோகன் என்னும் பொம்மையை வைத்து அரச பொம்மலாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வீராங்கனையின் சாதனைகளுல் ஒன்றாகவும் அது இருக்கக்கூடும்.


பேச்சு என்னும் பேராயுதத்தைப் பயன்படுத்தி சமூக மாற்றத்தையும் புரட்சியையும் ஏற்படுத்திய பெரியாரும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் காட்டிய அண்ணாவின் வழிவந்தவர் ஆட்சியில் பேச்சுரிமைக்கு கல்லறை கட்டத்துடிப்பது ஏன்? தொப்புள் கொடி உறவைக் காக்க முடியாத போது எதற்கு பதவி? எதையும் செய்ய முடியாமல் இருக்கும் போது ஜெயலலிதா ஆண்டால் என்ன கலைஞர் ஆண்டால் என்ன? பழைய வரலாறுகறுகளும் சாதனைகளும் எதுவும் இன்றைய துரோகத்திற்கு அனுமதிச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. கலைஞரின் எல்லாச் சாதனைகளுக்கும் முத்தாய்ப்பாய் இன்றைய துரோகம் அமைந்து விட்டது என்பதுதான் வரலாற்றுச் சோகம். பெரியார் இன்றிருந்தால் துரோக மற்றும் துரோக முன்னேற்ற கழகங்களுக்கு எதிராகத்தான் இயக்கம் கண்டிருப்பார்.

சோனியாவின் முந்தனை நுனியில், தேசிய பாதுகாப்பும் இறையாண்மையோடு தனது மஞ்சள் துண்டோடு தொங்கிக் கொண்டிருக்கிறார் உலகத் தமிழினத் தலைவர் காங்கிரசை தனது தோள்களில் சுமந்தபடி

17 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் said...

தேர்தல் ஆணையத்தை பிய்ந்த செருப்பால் அடித்திருக்கிறீர்கள்.

நல்ல தெளிவான கட்டுரை.

நீண்ட நாட்களுக்கு பிறகு குறிஞ்சி போல் கட்டுரை நிறைவாக இருக்கிறது. பாராட்டுகள் !

Anonymous said...

Its really well said Mr Muthukumar!!! Hats Up!!! Ican see the name similarity with "veerathamizmahan" Muthukumar...

Your words are POWERFUL...

GooD Keep it up!!!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அற்புதமான பதிவு. கருணாநிதி கைது செய்தாலும் சோனியாவைத் தான் திட்ட வேண்டும். ஜனநாகயக நாடென்றால் காவிரி நீர் வாங்கித் தரவில்லை என்றாலும் கிரிக்கெட் பார்த்தாலும் அவர்களை எல்லாம் தேவடியா மகன்கள் என்று கூட திட்டக் கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? இதெப்படி ஜனநாயகம் ஆகும். சீமான் , கொளத்தூர் மணி போன்ற புனிதர்களை எல்லாம் கைது செய்ய எவ்வளவு துணிச்சல்? அதான் தேர்தல் வருகிறதே.. தூக்கி எறிந்துவிடலாம் இந்த தேச துரோகிகளை எல்லாம். உங்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருக்கா முத்துக்குமாரன்?

முத்துகுமரன் said...

அட வாங்க சஞ்சய்!

கலைஞர் கைது செஞ்சதுக்கு சொன்னியாவை ஏன் திட்டுறீங்கனு ஆதங்கபடுறீங்களே,உங்க காங்கிரசு உறுப்பினர்களின் எண்ணத்தை முதன் முறையாக மதித்து வேதவாக்காக எடுத்து அவர்கள் விரும்பிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திலே சீமானையும், கொளத்தூர் மணியையும் கைது செஞ்ச கலைஞரின் நன்றி விசுவாசத்தை மறந்து விட்டு பேசலாமா? ஒவ்வொரு காங்கிரசுகாரரும் கட்சி தலைமையின் எண்ணத்தைத்தான் பிரதிபலிக்கிறோம்னு சொல்றாங்களே அதெல்லாம் சும்மாவா??

// ஜனநாகயக நாடென்றால் காவிரி நீர் வாங்கித் தரவில்லை என்றாலும் கிரிக்கெட் பார்த்தாலும் அவர்களை எல்லாம் தேவடியா மகன்கள் என்று கூட திட்டக் கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? //

பதில் சொல்ல ஒன்றும் இல்லை என்றால் பேசுபவனை ஒழுக்கமற்றவனாக திரிப்பது ஒன்றுதான் உங்களுக்கு தெரிந்த வழிமுறை. நீங்கதான இந்த நாட்டை ஆளுறீங்க எங்கள் பிரச்சனைக்கு ஏன் தீர்வு இல்லைனு உங்களை கேட்காமா ஜர்தாரியாவா போய் கேட்க முடியும். பதில் சொல்லுங்க காவிரி நதிநீர் பிரச்சனைக்கு என்ன தீர்வு கண்டீர்கள்? உங்கள் எண்ணங்களை அடுத்தவர் எண்ணமாக திரிக்காதீர்.

நேற்று என் டி டிவியில் ''வி த பீப்பிள்'' நிகழ்ச்சியில் உங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தேசிய கட்சிதான் தேசிய கண்ணோட்டத்துடன் பிரச்சனையை கையாளும்னு சொன்னாங்க, காவிரி தண்ணீர் பிரச்சனையில் தேசிய கண்ணோட்டதோடு என்ன நடந்துகிட்டீங்க? ஏன் உங்க தேசியத்துக்குள் தமிழ்நாடு இல்லையா?

ராஜீவ் கொலையில் உள்ள சந்தேகங்களை ஏன் நீங்கள் இன்னும் போக்கவில்லை? எனக்கும் சந்தேகம் இருக்கிறது, சொல்லி வைத்தாற் போல் காங்கிரசு தலைவர்கள் எல்லாம் அந்த இடத்திலே இல்லாமல் போனார்களே எப்படி? ராஜிவின் பயணத்திட்டத்திலே முதலில் ஸ்ரீபெரும்புதூர் இல்லாமல் இருந்து பின்பு இடம் பெற்றதக்கு காரணம் என்ன? அதெல்லாம் பேசுனா எப்படிங்கண்ணா தேசத் தூரோகம் ஆகும்? எம் முன்னாள் பிரதமரின் கொலையில் இருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டியது அரசின் கடமையன்றோ??

காங்கிரசில் இருப்பவர்களை விட சீமானும் கொளத்தூர் மணியும் நூறு மடங்கு புனிதர்களே.

ஆமா ராஜபக்சேவை புனிதர்னு கலைஞர் அழைப்பார்னு சொன்னா உங்களுக்கு ஏன் எரியுது??

நான் கிரிக்கெட் விரும்பி பார்ப்பேன் அதே சமயம் இந்திய இலங்கை ஒருநாள் போட்டிகளை புறக்கணிக்கத்தான் செய்தேன்!

முத்துகுமரன் said...

எழுத்து பிழை - சோனியா என்று இருக்க வேண்டும்(சொன்னியா என்று தவறுதலாக வந்து விட்டது)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//ஒவ்வொரு காங்கிரசுகாரரும் கட்சி தலைமையின் எண்ணத்தைத்தான் பிரதிபலிக்கிறோம்னு சொல்றாங்களே அதெல்லாம் சும்மாவா??//

இதுக்கும் என் பின்னூட்டத்துக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.

காவிரிப் பிரச்சனையில் மாநிலத்திற்கு ஏற்ற அனுகுமுறையில் எனக்கும் உடன்பாடு இல்லை. அதற்காக வேசி மகன்கள் என்று சொல்வதை ஏற்ற்க் கொள்ள முடியாது. இழிபிறவிகள் தான் இப்படி பேசும். சீமானைப் போல.

கிரிக்கெட் என்பது விளையாட்டு. அதை பார்ப்பதற்கும் தேசிய கன்றாவிக்கும் என்ன தொடர்பு? அவர்களை எதற்கு வேசி மகன் என்று சொல்ல வேண்டும்?

இலங்கை அணியுடன் விளையாடுவதைப் பார்ப்பவர்கள் மட்டும் தான் வேசி மக்களா? :))

அரசாங்கத்தில் உள்ள அதிகார மையங்களை ஆக்கிரமித்திருக்கும் சிலரின் தவறுகளுக்கு அந்த நாட்டு மக்களும் குற்றவாளிகள் என்று பார்க்கும் மன நிலை எப்படி வந்தது என்று புரியவில்லை. சந்திரிகா கூட இப்போது தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.ரணில் ஒரு சக தமிழன் போலவே செயல்பட்டார். ராஜபக்‌ஷே அங் கோவிற்காக ஒட்டு மொத்த மக்களையும் மோசமானவர்களாக பார்ப்பதில் உடன்பாடு இல்லை.

அபப்டி பார்த்தான் நீங்களும் கூட தமிழருக்கு எதிரி தான். இந்திய அரசு ஆயுதம் தருவதாக சொல்கிறீர்களே.. அதற்கு தமிழக முதல்வரும் துணை போகிறார் என்று சொல்கிறீர்களே. இந்திய நாட்டுக் குடிமகனாக நீங்களும் தமிழருக்கு எதிரானவர் தானே? ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிபப்தில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக சீமானை கைது செய்யவும் இல்லை.

அதற்காக இவர் வேசி மகன்கள் என்று சொல்வதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றால் நிஜமாகவே வேசி மகன்களாக இருந்தால் தான் முடியும். உண்மையைத் தானே சொல்கிறார் என்று. ஆனால் நாம் அப்படி இல்லை என்பதே உண்மை. நான் எதிர்க்கிறேன். நீங்கள் ஆதரிக்கிறீர்கள். இது தான் ஜனநாயகம். உங்கள் வரலாற்றுப் புத்தகத்தில் படித்தீர்களே அதே ஜனநாயகம். :)

//ஆமா ராஜபக்சேவை புனிதர்னு கலைஞர் அழைப்பார்னு சொன்னா உங்களுக்கு ஏன் எரியுது??//

நிச்சயம் எரியும். ஏன்னா சீமான வகையறா தான் இந்த ராஜபக்‌ஷேவும். அவனை புனிதர் என்றால் எரியத் தான் செய்யும் தோழரே. :)

//காங்கிரசில் இருப்பவர்களை விட சீமானும் கொளத்தூர் மணியும் நூறு மடங்கு புனிதர்களே.//

ஹாஹாஹா.. :))

ஈழத் தமிழருக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் பேராதரவு எழுந்த நிலையில் தேவை இல்லாமல் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசி கவனத்தை தன் பக்கம் திருப்பி சிறை, கைது, ஜாமின் என்று ஈழத் தமிழர் போராட்டத்தை மழுங்கச் செய்தார்களே இவர்கள் புனிதர்கள் தான். ஒத்துக் கொள்கிறேன். இவர்களுக்கு சுப்ரமணிய சாமி மேல். :)

அவா சட்டத்துக்கு உட்பட்டு தமிழவாளுக்கு சம உரிமை தரனும்னு சொல்றா.

நந்தா said...

செருப்படிப் பதிவு. முழுதும் ஒத்துப் போகிறேன்.

அப்புறம் இந்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பற்றீ. அது குறித்தான செய்தி குறிப்பு அதிகாலையில் பார்த்தேன். வேறு ஏதேனும் அதிகார பூர்வ தகவல் உண்டா. ஏனெனில் எனக்குத் தெரிந்த பத்திரிக்கைத் துறை நண்பர் அது பொய்யாகவும் இருக்கலாம் என்று சொன்னார். அதனால் கேட்கிறேன்.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//உங்க காங்கிரசு உறுப்பினர்களின் எண்ணத்தை முதன் முறையாக மதித்து வேதவாக்காக எடுத்து அவர்கள் விரும்பிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திலே சீமானையும், கொளத்தூர் மணியையும் கைது செஞ்ச கலைஞரின் நன்றி விசுவாசத்தை மறந்து விட்டு பேசலாமா?//

இந்த மாநில முதல்வராகத் தன் கடமையை செய்திருக்கிறார். இதை காங்கிரஸ் விரும்பியதற்காகவே செய்தார் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

அன்று ஜெயலைதா இந்த மாநிலத்தின் முதல்வராகத் தன் கடமையை செய்ததைப் போல தான் இதுவும். இதின் ஏன் தேவை இல்லாமல் சோனியாவை இழுக்க வேண்டும். சோனியா தலை இடும் அளவு பெரிய ஆளுங்களா இவர்கள்?
(வைகோவை பொடாவில் அடைத்தார் ஜெயலலிதா. இப்போது அதே வைகோ அதே ஜெயலைதாவின் மேடையில் அமர இருக்கைக் கிடைத்தால் போதுமென்று தவம் இருக்கிறார். )

காங்கிரஸ் சொல்வதை எல்லாம் கலைஞர் செய்கிறார் என்பதே பொய்யான பிரச்சாரம். திருமாவளவன் கூட்டணியில் இருக்கக் கூடாது என்று காங்கிரஸ் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர் இந்தக் கூட்டணியில் தான் இருக்கிறார் என்று கலைஞர் சொல்கிறார். ஆக, காங்கிரஸ் சொல்வதை எல்லாம் அலல்து கங்கிரஸ் சொல்வதற்காகவே முதல்வர் செய்கிறார் என்பதெல்லாம் பொய்ப் பிரச்சாரம். நேரடியாக கலைஞரை சாட முடியாத இயலாமை.

முத்துகுமரன் said...

//அதற்காக சீமானை கைது செய்யவும் இல்லை//

வேற எதுக்காக?

எனது கேள்விகள் எல்லாம் அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கியதுதான், மக்களை எதிர்களாக பார்க்கவில்லை, தமிழீழ போரட்டத்தை களத்தில் முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பவர்கள் கூட மக்களை எதிரிகளாக பாவிக்க வில்லை, அரசமைப்பையும், அதிகார மையங்களையுமே தாக்குகிறார்கள்.

கிரிக்கெட் என்பது விளையாட்டுதான் எண்றால் பாகிஸ்தானோடு விளையாடமல் போனது எதற்காக? கிரிக்கெட் என்பதுடன் அரசியலும் தேசிய நலன்களும் தொடர்புடையவை என்பதால்தானே? சொரணையற்ற தமிழனை வேசிமகன்கள் என்று சீமான் சொல்லியிருந்தால் அதில் எனக்கும் உடன்பாடு இல்லை, அவருக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நாம் அரசு செய்யும் குற்றத்திற்கு மறைமுகமான உடந்தையே, அதனால்தான் கேள்விகள் எழுப்புகிறோம்! சீமானின் கோவமும் இத்தகையதே

சீமானையும் ராஜபக்சேவையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் உங்கள் பார்வை வீச்சு புல்லரிக்க வைக்கிறது

இயற்கையாகவே ஒவ்வொருவருவரும் அவரவருக்கு விரும்பிய வகையிலே அர்த்தப்படுத்தி கொள்கிறோம், தேவையானதை வசதியாக தவிர்க்கவும் செய்கிறோம். இது குறித்து மேலதிக பகிர்வுகளை இரவு அறைக்குச் சென்றவுடன் பதிவிடுகிறேன்.

Anonymous said...

ராஜிவ் காந்தியின் மரணத்திற்காக ஒப்பாரி வைக்கும் காங்கிரசுகாரர்கள் எவரும் அவரோடு சேர்ந்து ஏன் மரணிக்கவில்லை? சொல்லி வைத்தாற்போல் அத்தனை பேரும் அங்கில்லாது போனது எப்படி?

முகு said...

தெளிவான கட்டுரை,வாழ்த்துகள் முத்துகுமார்.

இந்தியா....என்பது ஒரு மாய தேசம்.மக்கள் மனம்
விரும்பினால் மட்டுமே அது ஒரு நாடாக முடியும்.
இந்தியாவின் சிறப்பே, வேற்றுமையில் ஒற்றுமை.
ஒரு இனம் அடிப்படை உரிமைக்கு போராடும் போது
சகோதர இனம் குரல் கொடுத்திருக்க வேண்டும்.ஆனால்
தமிழன் சவமாவதை "கிரிக்கெட்" மாதிரி ரசிக்கிறார்கள்.

அதிலும் "இறையான்மை"என்று அலறுவது கேலிக்கூத்து.
அரசுக்கு இருக்க வேண்டும் இறையான்மை.....பார்வை
நியாய, தர்மத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

கடைசியாக தி.மு.கா (திராவிட முன்னேற்ற காங்கிரசு)
தலைவருக்கு நாலுகால் ஆசையால்,தன் இனத்தையே
அழிக்க துணிந்தது.....மன்னிக்க முடியாதது.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//வேற எதுக்காக?//

ஈழத் தமிழர்களை ஆதரித்ததற்காக இல்லை என்பது தெரிந்தும் இந்தக் கேள்வியை கேட்டால் நான் என்ன சொல்வது? அதைத் தான் எல்லோருமே செய்கிறோமே. அது தவறும் இல்லையே.

//கிரிக்கெட் என்பது விளையாட்டுதான் எண்றால் பாகிஸ்தானோடு விளையாடமல் போனது எதற்காக? //

பாகிஸ்தான் போகாதது பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பாக்கிஸ்தானியர் மும்பையில் நடத்திய வெறியாட்டத்திற்காகவும். ஆர்வக் கோளாறில் சென்ற இலங்கை அணி நிலை தெரியும் தானே. இலங்கை இந்தியாவிற்குள் எந்த குற்றமும் செய்யவில்லை. தமிழகத்தில் வைத்து போட்டி இயக்கம் அல்லது அரசியல் தலைவர்களை கொல்லவும் இல்லை. பிறகு அங்கு விளையாடுவது என்ன தவறு?

முத்துகுமரன் said...

//ஈழத் தமிழர்களை ஆதரித்ததற்காக இல்லை என்பது தெரிந்தும் இந்தக் கேள்வியை கேட்டால் நான் என்ன சொல்வது? அதைத் தான் எல்லோருமே செய்கிறோமே. அது தவறும் இல்லையே.//

நன்றி! நன்றி! ஒப்புதல் வாக்குமூலத்திற்கு,

ஆக சீமானின் கைது ஈழத்தமிழர் ஆதரவிற்காக இல்லை என்பதை நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள். சீமான் ராஜீவ் படுகொலையைப் பற்றிப் பேசியதும், சோனியாவைப் பற்றிப் பேசியதால்தான்(சோனியா @ காங்கிரசு அரசு - இரண்டும் வேறு வேறு என்றூ டரியலை கிளப்பிடாதீங்க).

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அட போங்க சார்.. தூங்கற மாதிரி நடிக்கிறிங்க. நிஜமா தூங்கினா எழுப்பலாம். உங்கள் கோபம் சோனியா மேல். அதான் பிரச்சனையே. அதிலிருந்து வெளி வர முடியவில்லை உங்களால்.

சீமானை கைது செய்ததற்கு காரணம் அவர் தடை செய்யப் பட்ட பயங்கரவாத இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாலும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாலும் தான். ஒரு அரசியல் தலைவரை விமர்சனம் செய்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முடியாது என்பது குழந்தைகளுக்கும் தெரியும். ராஜிவ் கொலை அல்லது சோனியா காந்தி பற்றி பேசுவதை சட்ட விரோதமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது தெரிந்தும் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த திரும்ப திரும்ப அவர்களை குறை சொல்கிறீர்கள். உங்களால் புரிந்துக் கொள்ள முடிந்தாலும் மன நிலையை மாற்றிக் கொள்ள மறுக்கிறீர்கள். நான் இதோடு இந்த விவாதத்தை முடித்துக் கொள்கிறேன். திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை. வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

முத்துகுமரன் said...

சீமான் வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் போது அவர் பேசியது தேசவிரோதமானதா, பிரிவினையைத் தூண்டியதா என்பது முடிவுக்கு வரும். இப்போது அந்த பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றமாகாது என்று வைகோ வின் பொடா வழக்கிலே உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சின்னப்பிள்ளைக்கும் தெரியும், காவல்துறைக்குத் தெரியாதா??

காங்கிரசாரின் அழுத்தத்திற்கு பிறகு தானே தேசியபாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. காவல்துறைக்கு ஒரு வாரம் தேவையா சீமான் பேசியது பிரிவினை வாதமா இல்லையா என்பதறிய??

நீங்கள் காவல்துறை சொல்வதை நம்புகிறீர்கள். நான் நம்பவில்லை, நான் இங்கு நடிக்க்கவில்லை. சீமான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டால் அப்போது ஒத்துக் கொள்வீர்களா சோனியாவையும் ராஜீவையும் பற்றி பேசியதால்தான் இந்த கைது என்று.

வார்த்தைகளின் மீதான விவாதத்தில் உங்களுக்கு விருப்பம், வார்த்தைகளின் அர்த்தங்களுடான விவாதத்தை நான் செய்கிறேன்.

மேற்கொண்டு தொடர விரும்பாவிட்டாலும் உங்களுடனான நல்ல உரையாடலுக்கு நன்றிகள்

Anonymous said...

அட போங்க சஞ்சய் சார்.. தூங்கற மாதிரி நடிக்கிறிங்க. நிஜமா தூங்கினா எழுப்பலாம்.

இதற்கு பதில் சொல்லுங்க சார்

ராஜிவ் காந்தியின் மரணத்திற்காக ஒப்பாரி வைக்கும் காங்கிரசுகாரர்கள் எவரும் அவரோடு சேர்ந்து ஏன் மரணிக்கவில்லை? சொல்லி வைத்தாற்போல் அத்தனை பேரும் அங்கில்லாது போனது எப்படி?

Anonymous said...

//சீமான் வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் போது அவர் பேசியது தேசவிரோதமானதா, பிரிவினையைத் தூண்டியதா என்பது முடிவுக்கு வரும். //

appo neethi mandram "thesavirotham, pirivinaivatha pechu" endru sonna athu sarithaana?

thamilina arasilalargale, een ippadi arasu iyanthirathai punitha vattathodu paarkkireergal?

ungalukkum kalaignarukkum enna vithyasam? - avar pathaviyil irukkiraar, neengal illai enbathai thavira.

Related Posts with Thumbnails