பீயள்ள வருகிறார் சுஜாதா
தன்னையும் தலித் இலக்கியவாதியாக கருத வேண்டும் என்று கூறிய சுஜாதாவிற்கு எழுத்தாளர் அழகியபெரியவன் தலித்முரசில் எழுதி இருக்கும் கட்டுரை http://www.keetru.com/dalithmurasu/feb06/azhakiya_periyavan.html
Subscribe to:
Post Comments (Atom)
22 மறுமொழிகள்:
சுட்டியினை சுட்டியமைக்கு நன்றி.
//மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குதூகலம் பொங்குகிறது. இதைத் தானே நாங்கள் எதிர்பார்ப்பது. இனியென்ன சுஜாதாவினரும், தலித்துகளும் உறவின் முறையினர்தான்! இனிமேல் அவர்கள் "பீ' அள்ளவும், சாக்கடையைச் சுத்தம் செய்யவும், தொண்டூழியம் புரியவும், உழவும், செத்தமாடு தூக்கவும், பிணம் எக்கவும், சிரட்டையில் தேநீர் குடித்துவிட்டு வெற்றுடம்புடன் செருப்பில்லா காலில் நடக்கவும், இன்ன பிறவுமான வேலைகளுக்கு கோவில்களையும், நீதிமன்றங்களையும் விட்டுக் கீழிறங்கி வருவார்கள்!
வருக சுஜாதாவினரே வருக! மாடறுத்த கையின் ரத்தப் பிசுபிசுப்போடும், பீ வாளி பிடித்த கையின் நாற்றத்தோடும் கதைகளையும் எழுதுக!//
தலித் எழுத்தாலர்களெல்லாம் இப்படி நாற்றத்தோடுதான் எழுதுகிறார்களா என்ன? நம்ப முடியவில்லை.
அப்பாவித் தமிழனின் பின்னூட்டத்தைப் பார்க்கையில், பழைய "சிறைச்சாலை" படத்தில் அந்தமான் சிறையில் ஜெயில் வார்டன் அம்ரீஷ்புரி ஒரு சைவ இந்தியக் கைதியின் வாயில் "இது உனக்காகவே தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் வெஜிடேரியன் பீ" என்று மலத்தைக் கரைத்து ஊற்றுவதுதான் நினைவுக்கு வருகிறது. அந்த லாஜிக்கை ஒத்துக்கொண்டு அதையும் நம் ஊரிலும், அவரவர் வாய்க்கேற்றமாதிரி customized பீக்கரைசலை ஊற்றலாமென்று அமல்படுத்தினால், பிறகு எளக்கியத்தை மோந்துபார்த்து, ஏன் மோண்டுபார்த்தேகூடப் பிரசுரிக்கலாம் - தப்பேயில்லை.
இலக்கியத்திலும் ஜாதியா?. தலித் இலக்கியம் என்றால் என்ன? பார்ப்பன இலக்கியம் என்றால் என்ன? வன்னியர், செட்டியார், முதலியார், தேவர்,,,,,,, மேலும் 1000க்கணக்கான ஜாதியினற்க்கு இலக்கியத்தில் இடஒடுக்கீடு கிடையாதா? என்ன அநியாயம்.....
ஒரு பார்பணர் பீ அள்ளவோ, மாடு அறுக்கவோ விரும்பி செய்தால் அதை தடுக்க யாரால் முடியும் அதேபோல் ஒரு தலித் ஒரு மதகுருவாகவோ அல்லது ஒரு உயர் அதிகாரியாகவோ ஆவதை யாரால் தடுக்க முடியும்.
நாம் கல்வி கற்பதே நம் அறிவுக் கண்களை திறந்து சமுதாய ஏற்றத் தாழ்வுகளை சமன் படுத்ததானே. அப்படிக் கல்விக் கற்று இலக்கியம் படைக்கும் அளவிற்க்கு உயர்ந்த இலக்கியவாதிகள் தலித் என்றும் பார்ப்பணர் என்றும் தத்தம் ஜாதிகளைப் பார்த்து தங்களை முன்னிலை படுத்தோவோரை இலக்கிய வாதிகள் என்று அழைத்தால் அது நாம் இலக்கியத்திற்கு செய்யும் துரோகம்
சரியா சொன்னீங்க கால்கரி சிவா! இலக்கியம் எங்கிருந்தாலும் படித்து ரசிக்க வேண்டிய ஒன்னு! இத பார்க்கிறப்ப எனக்கு பழய ஞாபகம் தான் வருகிறது. என்னுடய சிறு வயதில், எங்க வீட்டுக்கு பீ அள்ள வரும் வாலிப பெண்ணின் அழகில் மயங்கி, நாற்றமடிக்கும் இடத்தில் நின்று அவளுக்கு தண்ணி ஊற்றினாலும், அவள் அழகை ரசிக்க வேண்டுமென்று தினம் அவள் கழுவ வரும் நேரத்திற்காக காத்துகிடந்த நாட்கள் அனேகம்! அது போல எதனையும் ரசிக்க வேண்டுமென்பதே தவிர, இதற்கு எல்லையிட்டு பிரிவினை நிகழ்த்தி பார்ப்பது கொடுமை! மாறி வரும் உலகிலே, தொழில்முறை கொண்டு இனம் பிரிப்பது, கொடுமையிலும் கொடுமை!
// "இது உனக்காகவே தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் வெஜிடேரியன் பீ" என்று மலத்தைக் கரைத்து ஊற்றுவதுதான் நினைவுக்கு வருகிறது. அந்த லாஜிக்கை ஒத்துக்கொண்டு அதையும் நம் ஊரிலும், அவரவர் வாய்க்கேற்றமாதிரி cஉச்டொமிழெட் பீக்கரைசலை ஊற்றலாமென்று அமல்படுத்தினால்,//
அது!!! :-)
கால்கரி சிவா,
இலக்கியம் என்பதே சமூகத்தை பிரதிபலிப்பதுதான். இத்த்னை சாதிய சிடுக்குகள் நிறைந்த சமுதாயத்திலிருந்து, அதை பிரதிபலிக்க வருகிற இலக்கியம் மட்டும் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..??
பீயள்ள வருகிறார் சுஜாதா என்று படிக்கும்போதே கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறதே என்று நினைத்தேன்.. இந்த வேலையை சில சமூகங்கள் பரம்பரை பரம்பரையாக செய்கிறதே, அது எப்படி வித்தியாசமாய் தோணாமல் இருக்கிறது..?? என்று யோசித்தென்.அப்போதுதான் தெரிந்தது உண்மை. நீங்களும் யோசித்துப் பாருங்கள்.
//அதேபோல் ஒரு தலித் ஒரு மதகுருவாகவோ அல்லது ஒரு உயர் அதிகாரியாகவோ ஆவதை யாரால் தடுக்க முடியும்.
//
கண்டிப்பாக தெரியுமா..?? தலித் கோவிலில் அரச்சகராவதோ, பீடாதிபதியாவதோ இருக்கட்டும் தமிழில் மந்திரம் ஓதுவது கூட தீட்டு என்றார்களே தெரியுமா..??
//நாம் கல்வி கற்பதே நம் அறிவுக் கண்களை திறந்து சமுதாய ஏற்றத் தாழ்வுகளை சமன் படுத்ததானே. அப்படிக் கல்விக் கற்று இலக்கியம் படைக்கும் அளவிற்க்கு உயர்ந்த இலக்கியவாதிகள் தலித் என்றும் பார்ப்பணர் என்றும் தத்தம் ஜாதிகளைப் பார்த்து தங்களை முன்னிலை படுத்தோவோரை இலக்கிய வாதிகள் என்று அழைத்தால் அது நாம் இலக்கியத்திற்கு செய்யும் துரோகம் //
இலக்கியத்திற்கு செய்யும் துரோகத்தைவிட சக மனிதனுக்குச் செய்யும் இழிவு அதிக துரோகமல்லவா..?? இலக்கியம் அறிவுக்கண்ணை திறக்கிறது என்று எடுத்துக் கொண்டால், இலக்கியவாதிகளில், இலக்கிய திறனாய்வாளர்களில், இவ்வளவு ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள்,
என் இருக்கிறார்கள்..? என்று யோசித்தீர்களா..?
"அரம் போலும் கூர்மையரேனும் " நினைவுவருகிறதா..??
நண்பர்களே! அடக்குமுறையாளன் வரலாறை சொல்லுவதற்கும், அடிமை தனது அனுபவத்தின் வலியை பதிவு செய்வதற்கும் உள்ள இமாலய வேறுபாடுதான், தலித் இலக்கியத்தை சுஜாதாக்கள் எழுதுவதற்கும்
தலித்துகள் எழுதுவதற்கும் உள்ள வேற்றுமை.
ஜார்ஜ் புஸ் அமைதி, சமாதானம் போதிக்க புத்தர் போல வேடமிடுவது எனலாம். சுஜாதா பிராமணர் சங்க கூட்டத்தில் முழங்கியதையும் படித்து இந்த கட்டுரையையும் தொடர்புபடுத்துங்கள். அப்போது வ்வ்ளிப்படும் சுஜாதாவின் அறிவு (!) மேதாவித்தனமும் சாதி அழுக்கும்.
சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கார்த்திக்ரமாஸீன் இந்த பின்னூட்டம் பிரசுரிக்கமுடியவில்லை.
இதோ அவரது பின்னூட்டம்
karthikramas has left a new comment on your post "பீயள்ள வருகிறார் சுஜாதா":
/தலித் எழுத்தாலர்களெல்லாம் இப்படி நாற்றத்தோடுதான் எழுதுகிறார்களா என்ன?/
சிறிலின் கேள்வி எதிர்மறையாய் இருந்தாலும் அவருக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்.
சிறில், பிரச்சினை தலித் எழுத்தளர் பீ அள்ளுகிறார்களா என்று கேட்பது மிகவும் சரியான வாதமாக இருந்தா, 'ஏன் தலித் எழுத்தாளர்கள் என்றாலே பீதான் அள்ளவேண்டுமா? ' என்ற கேள்விக்கு எப்படி பதில் சொல்வீர்கள். இன்னும் ஒரு படு மேலே போய், "யாரெல்லாம் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்" என்றுகூட என்னால் சொல்லமுடியும்.
அழகிய பெரியவனின் கட்டுரையின் உட்பொருள், தலித் எழுத்தாளர்களௌக்கிடையே பொதுவாக இருக்கும் ஒரு நோக்கமாவது சுஜாதாவுக்கு கடுகளவாவது இருக்குமா? என்பதுதான். "தாம்பிராஸ் கூட்டத்தில்" ஒரு விதமாகப் பேசியவருக்கு, "தலித் " எழுத்தாளராக காட்டிக்கொள்ளத் தேவை வந்திருப்பது உண்மையிலேயே வியப்பானது. அவரது செயல்பாடுகள் எந்த அளவுக்கு அதற்கு இடம் கொடுப்பவை என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
சுட்டியை இட்டமைக்கு நன்றி, இன்னும் முக்கியமான விசயங்களையும் டானியல் குறித்து எழுதியிருந்தார் அதையும் இட்டிருக்கலாம்.
//தலித் எழுத்தாலர்களெல்லாம் இப்படி நாற்றத்தோடுதான் எழுதுகிறார்களா என்ன? நம்ப முடியவில்லை.//
அலெக்ஸ், ஆமாம். நாற்றத்தோடுதான் எழுதுகிறார்கள். இதை நம்ப வேண்டாம். நீங்கள் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தவறி உடம்பில் மலம் பட்டுவிட்டால் அதை நன்றாகக் கழுவியபின்னும் சில சமயம் அது நாற்றம் அடிக்கிறதா என்று பார்பது சாதரண மனித இயல்பு. தலைமுறையையாய் மலம் அள்ளுவதையே செய்து அதைச் செய்வதற்குத்தான் அந்த சாதி இருப்பதாய் சான்றிதழை மதமும், அரசும் கொடுக்கும் போது, அதை சமூகம் முழுக்க ஒத்துக்கொள்ளும் போது அந்த நாற்றம் எப்போதும் இருக்கும். அவ்வளவு சீக்கிரம் மறையாது; எனவே நாற்றத்தோடுதான் எழுதுகிறார்கள். மதம் அதை சாஸ்திரப்பூர்வமாக அங்கீகரித்து வலியுறுத்தும் போது அந்த மதமாகிய வீட்டைக் கொளுத்தத்தான் வேண்டும்.
எல்லோரும் அமைதியில் திளைக்க, சமமாய் வாழ நாம் கண்ணை மூடிக்கொண்ட மாத்திரத்தில் நடந்துவிடுமெனில் நாம் கண்ணை மூடிக்கொண்டிருப்பதே ஒரு புனிதச் செயலாய் மாறிவிடும்; அப்படி என்னாலும் ஒரு புனிதச் செயலை செய்துவிட முடியாதா என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் வாழ்க்கை துரதிஸ்ட்ட வசமாக அப்படி இருப்பதில்லை.
கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
தலித்துகள் விழுப்புணர்வும், எழுச்சியும் பெற்றும் வரும் இந்த சூழலில் அவர்களின் கோபங்கள் எதுவும் தம்மை நோக்கி வராமல் தவிர்க்க எல்லா முயற்ச்சிகளையும் பார்ப்பனியம் செய்கிறது. தலித் இனத்தோடு ஒன்றிப் போவது போலவும், தாங்களும் அவர்களைப் போன்றூ ஒடுக்கப்பட்டவர்களே என பாசாங்கு செய்வதும் அந்த வகையில்தான். உன் எதிரி உனக்கு மேல் அடுக்கில் இருப்பவந்தான் நான் அல்ல என்று அவர்களை நம்ப வைக்கும் தொடர்ச்சியான திட்டங்களோடுதான் இயங்கி வருகிறார்கள். இலக்கியத்தில் அந்த வேலையை சுஜாதா செய்கிறார்.
தலித் இலக்கியம் பற்றி பேச எந்த யோக்கியதையும் ''குண்டாமவன்''சுஜாதாவிற்கு கிடையாது.
தமிழ்க இலக்கியவாதிகள் எல்லாம் தன்னிடம் ஞானஸ்னானம் வாங்கத் தவம் இருக்கிறார்கள் என்று நம்பி வரும் சுஜாதாவிற்கு அழகிய பெரியவன் போன்றோர் எழுத்துகள் எல்லாம் கசப்பாய்தான் இருக்கும்.
எனினும் சுஜாதா பீயள்ள வருவதை நான் மனமாற வரவேற்கிறேன்
//..?? தலித் கோவிலில் அரச்சகராவதோ, பீடாதிபதியாவதோ இருக்கட்டும் தமிழில் மந்திரம் ஓதுவது கூட தீட்டு என்றார்களே தெரியுமா..??
//
ரிக் வேதம் எழுதியவரே மனுதர்மத்தின் படி வேத யாகங்கள் செய்யும் இடங்களுக்கு வரகூடாது என்ற தமாஷான விசயம் ஒன்று உள்ளது தெரியுமா?
வேதங்களில் எங்கே அர்ச்சகர்களின் Qualificiationகளை பற்றி சொல்லப்ட்டுள்ளது? (உங்கள் கற்பனை வேதங்களை தவிர)
கால்கரி சிவாவின் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் விட நினைத்து வந்த போது நான் நினைத்ததையும் விட தெளிவாக சொல்லியுள்ளார் மூக்கு சுந்தர்.
//இலக்கியத்திலும் ஜாதியா?. தலித் இலக்கியம் என்றால் என்ன? பார்ப்பன இலக்கியம் என்றால் என்ன?
//
உண்மையிலேயே தெரியவில்லையா? தலித்துகளின் மீதான அடக்குமுறையையும் அவர்களின் வாழ்க்கையையும் இலக்கியமாக வடிப்பது பார்ப்பன இலக்கியம் எது தெரியுமா? ஒரு பிராமண குடும்பம் நொடித்து போய் அடுத்த வேளை காப்பிக்கு காபி பொடிக்கு அடுத்த ஆத்து மாமியிடம் கடன் கேட்கும் நிலைக்கு வந்தது தான் உலகின் மிகப்பெரிய துக்கம் போல எழுதுவது.
பட்ட படிப்பு படித்து பின் 'டி' கிரேடு தேர்வெழுதி வேலைக்கு வந்த தலித் பெண்ணை கோட்டா என்று பட்டம் கட்டி டெஸ்பாட்ச் வேலை கொடுத்து ஓரம் கட்டி வைத்து விட்டு எஸ்எஸ்எல்சி யில் கோட் அடித்துவிட்டு சூப்பர்வைசரின் சொந்தக்காரன் என்பதால் காண்ட்ராக்டில் வேலைக்கு சேர்ந்து கிளார்க் வேலை செய்யும் அநியாயத்தை கண்டு புழுங்கி அந்த வேதனையை எழுதுவது தலித் இலக்கியம்.
ஏன்டி இப்படியா டிரஸ் பண்ணுகிட்டு மினுக்கற அவனை மயக்கறதுக்கு என்று மகளை கேட்க, நீ மட்டும் என்ன அப்பா செத்த பிறகு மொட்ட பாப்பாத்தியாவா இருக்க நன்னா எண்ணெய தடவி வழிச்சி சீவிண்டு தானே இருக்க என்று மகள் கேட்ட வார்த்தைக்காக மறுநாள் மொட்டை அடித்துவிட்டு வந்ததை உலகின் பெரிய துக்கமாக எழுதுவது பார்ப்பன இலக்கியம்.
//சுடலைமுத்து ரெட்டியார் வீட்டிற்கு போய் தன் மகன் பெயர் மோகன் என்று சொன்னான், செல்லப்பெயரையும் கூறினான் , இப்படி தனக்கு தெரிந்த எல்லா வீடுகளுக்கும் போய் சொன்னான், முனிசிபல் சேர்மனின் மனைவி கேட்டாள்: "அப்போ அவனை பேபி தோட்டீன்னு கூப்பிடனுமா?" இப்படி சொல்லிவிட்டு சிரித்தாள் அவள்.- தோட்டியின் மகன் நாவலிலிருந்து
//
சிறிய வயதில் கல்யாணம் ஆகி விதவையாக நிற்கும் அத்தை சாமி பூசை பஜனை என்று இருப்பதாகவும் வேலைக்காரி கணவன் இருக்கும் போது இன்னும் வேறொரு ரவுடியிடம் சோரம் போவதாகவும் எழுதுவது பார்ப்பன இலக்கியம், அய்யா ராசா பார்ப்பன இலக்கியம் பற்றி நிறைய நிறைய நிறைய எழுதலாம்....தலித் இலக்கியம் படைப்பது தலித்களால் மட்டுமே முடியுமா என்றால் பிறரும் எழுதலாம் தலித்களின் மீதான அடக்கு முறையை பார்த்து தான் அவர்களால் எழுதமுடியும் இது எப்படியென்றால் பசி என்றால் எப்படியிருக்கும் என்று அனுபவித்து சொல்பவனுக்கும், பசியை அனுபவிக்காமல் பசியால் துடிப்பவனை பார்த்து பசி என்றால் எப்படியிருக்கும் என்பதை எழுதுபவனுக்கும் உள்ள வித்தியாசம்.
//ஒரு பார்பணர் பீ அள்ளவோ, மாடு அறுக்கவோ விரும்பி செய்தால் அதை தடுக்க யாரால் முடியும் அதேபோல் ஒரு தலித் ஒரு மதகுருவாகவோ அல்லது ஒரு உயர் அதிகாரியாகவோ ஆவதை யாரால் தடுக்க முடியும்.
//
எத்தனை தலித்கள் மாடு அறுக்க வேண்டுமென்றும் எத்தனை தோட்டிகள் பீ அள்ளவேண்டும் என்றும் தன் பரம்பரையே தோட்டியாக இருக்க வேண்டுமென்றும் விரும்பி செய்கின்றார்கள்?
//தோட்டியின் மகன் தோட்டியாகவே பிறப்பதில்லை, தோட்டியாக உருவாக்கப்படுகிறான் அந்த தோட்டி தந்தையே அவனை தோட்டியாக வளர்க்க நினைக்காவிடினும்.
- தோட்டியின் மகன் நாவலிலிருந்து//
இன்னும் நிறைய உதாரணங்கள் எழுதலாம்.
நன்றி குழலி.
சமுத்ரா உங்க நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா:-)))))
முத்துகுமரன்,
சுட்டிக்கு நன்றி. இந்த கட்டுரையாளர் குறிப்பிட்ட சுஜாதாவின் கட்டுரையை உயிர்மையில் படித்தேன்.
வாழ்நாள் சாதனையாளர் ஆகியபோது தன்யனான சுஜாதா இன்று நானும் தலித் இலக்கியவாதி என்று கூறுவது நல்ல காமெடிதான்.எப்படியோ அழகியபெரியவன் கூறியதுபோல் சுஜாதா அறிவுஜீவி என்ற பெயரை தக்க வைக்க போராடுகிறார் என்பது உண்மையே.
//தலித்துகள் விழுப்புணர்வும், எழுச்சியும் பெற்றும் வரும் இந்த சூழலில் அவர்களின் கோபங்கள் எதுவும் தம்மை நோக்கி வராமல் தவிர்க்க எல்லா முயற்ச்சிகளையும் பார்ப்பனியம் செய்கிறது. தலித் இனத்தோடு ஒன்றிப் போவது போலவும், தாங்களும் அவர்களைப் போன்றூ ஒடுக்கப்பட்டவர்களே என பாசாங்கு செய்வதும் அந்த வகையில்தான். உன் எதிரி உனக்கு மேல் அடுக்கில் இருப்பவந்தான் நான் அல்ல என்று அவர்களை நம்ப வைக்கும் தொடர்ச்சியான திட்டங்களோடுதான் இயங்கி வருகிறார்கள்.//
இது சூப்ப்ப்ப்பர்....
ஒரு சந்தேகம்தான் எனக்கு --குண்டாமவன் என்றால் என்ன? :)))))
//குண்டாமவன் என்றால் என்ன? :))))//
தமிழகத்தின் சிறந்த சங்கத் தமிழ் உரையாசிரியர் ''முடக்காத்தான் மரம்''சுஜாதா அவர்களின் வசனத்திற்கு விளக்கம் கூறும் அளவிற்கு அடியேன் தமிழ் இன்னும் வளரவில்லை முத்து:-)))))))
//சமுத்ரா உங்க நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா:-))) //
தேடித்தான் பாருங்களேன், எனது கெள்விகளுக்கு பதில்களை.
சுஜாதா என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது.அவர் தன்னை தலித் எழுத்தாளர் என்று எந்தப் பொருளில் கூறுகிறார் என்பதும் எனக்குத் தெரியாது.சுஜாதா விரும்பினால் தலித்கள் குறித்து எழுதலாம். அவர் எழுதுவது இலக்கியமா, தலித் இலக்கியமா என்ற கேள்வியை அவர் படைப்புகளை
வைத்துதான் மதிப்பிட வேண்டும். தமிழ்நாடு பிராமணர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து அவர்
ஆனந்த விகடனில் எழுதியிருந்தார். அதை வைத்துக் கொண்டு அவரால் தலித்கள் குறித்து எழுத முடியாது, எழுதக் கூடாது என்ற முடிவிற்கு வரமுடியாது.இலக்கியம் குறித்த மயக்கங்கள் இருப்பவர்களுக்கு அப்படித் தோன்றலாம். இலக்கிய பிரதியை யாரும் உருவாக்கலாம். அப்பிரதி எப்படி உள்ளது என்பதைத் தான் மதிப்பிட வேண்டும்.இலக்கியம் என்பதை எழுதுபவரின் ஆளுமையின் பிரதிபலிப்பு என்று கொள்ளத் தேவையில்லை.
தலித் என்பதை எப்படி சுய வரையறை செய்து கொள்வது, தலித் என்றால் இப்படித்தான் என்று கருதிக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது.என்னை முட்டாள் என்று பிறர் கூறினால் அல்லது வரையறை செய்தால் நான் அதை ஏற்க வேண்டுமா என்ன.
திருவாளர்கள் மூக்கு சுந்தர் மற்றும் குழலி அவர்களே,
எப்போது ஒரு மனிதன் தன்னையும் மற்றவர்களையும் ஜாதியை வைத்து அடையாளம் காணாமல் ஒரு மனிதனாக மட்டும் அடையாளம் காண்கின்றானோ அப்பொழுதுதான் அனைவருக்கும் விடிவுகாலம் பிறக்கும்.
ஒரு சமூகத்தின் வலியை அந்த சமூகத்தினர் மட்டும் எழுதினால் அது இலக்கியமா அல்லது அவரின் டைரி குறிப்பா?.
தமிழில் மந்திரம் ஒதினால் தீட்டு என்று கூறிய நம் முன்னோர்கள் செய்தது தவறு என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அதே சமயம் மந்திரம் ஓதுபவர்கள் இப்போது தமிழிலும் ஓதுகிறார்களே. இறந்த கால தவறுகளைக் கிளறி கிளறி நிகழ்காலத்தை நரகமாக்கி எதிர்காலத்தை இழக்கிறோம்.
ஒருவரின் பிறப்பைவைத்து அவரை ஆதிக்கம் செய்பவர் எவ்வளவு பெரிய அறிஞர் அல்லது இலக்கியவாதியாக இருந்தாலும் அவர் மதிக்கத் தகுந்தவர் அல்லர்.
நாவல்களில் வரும் கதாப் பாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள் அவர்கள் தங்களை படைப்பவர்களை பிரதிபலிக்கவில்லை என்பது என் தாழ்வானக் கருத்து. பார்பணர்கள் தலித்களை நசுக்குவதுபோல் வந்த நாவல்கள் அதிகம். அதேசமயம் பார்பணர்களை தாழ்த்தி கிண்டல் செய்த நாவல்களையும் சினிமாக் காட்சிகளையும் நாமும் ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் ரசித்திருக்கிறோம்.
தலித்கள் தாழ்வு மனபான்மையும் பார்ப்பனவர்கள் ஆதிக்க மனபான்மையும் விடவேண்டும்.
அடே, ஒரு ஆரம்பத்திற்க்கு நீங்களும் நானும் மாறுவோமே, நம்மைப் பார்த்து மற்றவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையோடு. அதைவிட்டு ஒருவர் மேல் ஒருவர் சேற்றை வாரி இறைத்து ஏன் வெறுப்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்
சிவா,
நீங்கள் சொல்வதேல்லாம் கேட்க மிக சந்தோஷமாக இருக்கிறது..நியாயமாக பார்த்தால் உலகத்தில் எல்லோரும் இப்படித்தான் நினைக்க வேண்டும். ஆனால் பாருங்கள், அப்படி நடப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
மேலாதிக்க எண்ணம் உடையவர்கள், (சாதி) வித்தியாசங்கள் இருப்பது தான் வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருப்பதாக சொல்பவர்கள், "பிராமண சமுதாயத்தில் பிறந்தவர்கள் செருப்பு கடை வைத்திருக்கிறார்கள்" என்று அதையே ஒரு செயற்கரிய விஷயமாக பேசுகின்ற மனப்போக்கு உள்ளவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். சொல்வதும், எழுதுவதும் அத்தகைய எண்ணம் கொண்டவர்களுக்காகவே ஒழிய, ஒரு சாதியில் பிறந்து விட்டதனாலெயே கண்மூடித்த்னமாக யார் மீதும் துவேஷமோ, தூஷணையோ செய்வது கிடையாது.
நம்மில் மாற்றம் நிகழட்டுமே என்கிறீர்கள் அது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. வெளிச்சம் போட்டு அதை பெரிய பேச்சாக பேச வேண்டிய அவசியமில்லை. கண்டிக்க வேண்டிய விஷயங்ளைத்தான் உரக்கச் சொல்ல வேண்டும் - சொல்லக் கூடிய இடத்தில்.
//தமிழில் மந்திரம் ஒதினால் தீட்டு என்று கூறிய நம் முன்னோர்கள் செய்தது தவறு என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அதே சமயம் மந்திரம் ஓதுபவர்கள் இப்போது தமிழிலும் ஓதுகிறார்களே. இறந்த கால தவறுகளைக் கிளறி கிளறி நிகழ்காலத்தை நரகமாக்கி எதிர்காலத்தை இழக்கிறோம்//
இந்த விஷயங்கள் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது சிவா. இந்த விஷயங்கள் பேசப்படுவதால் நிகழ்காலம் நரகமாகிறது என்றால் ஆகி விட்டுப் போகட்டும். கலர் கனவுக் குமிழிகளின் தேவை நமக்கு இல்லை.
சுந்தர்,
நான் சொல்லதைக் கேட்பதற்க்கே சந்தோசமாக இருக்கிறதல்லவா? இன்னும் நடைமுறைப் படுத்தினால் அமைதியும் இன்பமும் நிலவும்.
மேலாதிக்க எண்ணம் கொண்டோரை ஒதுக்குங்கள். கண்ட்டிக்க வேண்டிய விசயங்களை அயராது கண்டியுங்கள்.
மந்திரங்களும் சம்பிராதயங்களும் உங்கள் மனதில் உழைச்சல் அளித்தால் அவற்றையும் தள்ளி வைத்து விட்டு இந்த அருமையான நிகழ்காலத்தை அனுபவியுங்கள்
பாவை, நான் சொல்லவந்த கருத்தை நீங்கள் சொன்னதற்க்கு நன்றி
Post a Comment