இன்றோடு ஐம்பது ஆண்டுகளாகிறது. தமிழகம் மொழிவாரி மாகாணமாகப் பிரிக்கப்பட்டு. நிலவியல் அடிப்படையில் சில நகரங்களை அண்டை மாநிலங்களிடம் இழந்த போதிலும்பெரும்பாலான பகுதிகளை தன்னிடமே வைத்திருக்கிறது. அதற்காக உழைத்த அத்துணை பெரியோர்களையும் நன்றியோடு இந்த தருணத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
மொழிவழி மாகாணங்கள் அமைந்தது மிக எதார்த்தமானது. தேவையுமானது.
இந்தியா என்பது ஒற்றைத் தேசமல்ல. அது தேசங்களின் தேசம். வேறுபட்ட அதே சமயம் தனித்துவமிக்க தேசங்களை உள்ளடக்கியிருக்கும் ஒரு துணை கண்டம். அதனால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் கூட்டமைப்பின் அடிப்படையாக கொண்டிருக்கிறோம்.
இந்திய தேசியம் ஒற்றைத்தன்மை உடையது என்று நாம் சொல்லுவோமாயின் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதேயாகும்.
பல தேசியங்களை கொண்ட பன்மைத் தன்மை வாய்ந்தது.
இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களையும் விட தமிழகத்தில் இந்த ஒற்றைத் தன்மையை திணித்துவிட முயற்சிகள் நடந்து கொண்டே வருகின்றது. அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
இன உணர்வு என்பது சமூகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்த வகையில் மற்ற மாநிலங்களை பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. நமது நிலையை நோக்கும் போது அது நெருடலாகவே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் மாநிலம் சார்ந்த தேசிய உணர்வுகளை கொண்டிருக்கிறது. அவை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மாநிலங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரம் அவர்களிடம் தம் மொழி சார்ந்த, நிலம் சார்ந்த தேசிய உணர்வு மிகுந்திருக்கிறது.
ஆனால் அதே உணர்வை தமிழகத்தில் கொண்டிருந்தால்???
உங்கள் பெயர்??
பிரிவினைவாதி!
ஏனிந்த நிலமை. தனக்கென தனிக்கொடியை வைத்திருக்கும் கர்நாடகத்தினரை யாரும் பிரிவினைவாதிகள் என்று சொல்வதில்லை. இந்திய தேசியத்தைவிட கர்நாடக தேசியத்தை அவன் பெரிதாக அடையாளப்படுத்திக்கொள்ளும் போதும் எந்த கேள்வியும் கேட்பதில்லை. அவன் தன்னை கர்நாடகத்தானாகவே அடையாளப்படுத்துகிறான். கர்நாடகத்தானகவே இருக்கிறான். எந்த மத, சாதியினராக இருந்தாலும் அவனிடம் கர்நாடக தேசிய உனர்வே மேலோங்கி இருக்கிறது. தன்னை முதலில் கர்நாடகனாகவும் பிறகே இந்தியனாக அவன் உணர்கிறான். தன்னை இந்தியனாக உணர்திருந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருப்பானா?
சொன்ன போதும் அவனை பிரிவினை வாதி என்று எவனும் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழனாக அல்லாமல் இந்தியனாக இருக்க வேண்டும். தமிழகத்தின் மீதுமட்டும் ஏனிந்த திணிப்பு. மற்ற மாநிலங்களைப் போலத்தான இந்தியாவில் இணைந்திருக்கிறது. தேசிய உணர்வை அளக்க ஏன் இந்த வேறுபட்ட அளவீடுகள். தமிழனின் தேசிய உணர்வு மட்டும் ஏன் சோதனைகளுக்குட்படுத்தப்ப்டுகிறது. ஏன் இந்த சமத்துவமற்ற நிலை. சிந்தித்துப்பார்க்க வேண்டும். இங்கிருந்து கொண்டே நம் உணர்வுகளை அடையாளங்களை, பண்பாட்டை சிதைப்பவர்களை அடையாளங்கண்டு,
அவர்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் தகர்க்க வேண்டும்.
வாழ்க தமிழ்!! வாழ்க தமிழ்நாடு!!
Link: Siva murugan blog :நிகழ்வுகள்: தமிழ்நாட்டுக்கு வயது 50
Subscribe to:
Post Comments (Atom)
9 மறுமொழிகள்:
முத்துக்குமரன்,
இது குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரையை சமீபத்தில் விகடன் அல்லது குமுதத்தில் படித்த ஞாபகம்.
. //இங்கிருந்து கொண்டே நம் உணர்வுகளை அடையாளங்களை, பண்பாட்டை சிதைப்பவர்களை அடையாளங்கண்டு,
அவர்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் தகர்க்க வேண்டும்.//
முத்துகுமரன் அய்யா,
அடையாளம் காட்டுங்கய்யா.நீங்க சொல்றதை வைச்சு பாத்தா, நமது உணர்வுகளை,பண்பாட்டை,கலாசாரத்தை சிதைக்கும் ஆதிக்க சக்திகள், அதிகார வர்கங்கள், தி மு க, அ இ அ தி மு க, பா ம க என்று அடையாளம் தெரிகிறது? இன்னும் யாருங்க? காங்கிரசா?சிறுத்தைகளா?வைகோ வா?
வீரமணியின் தி க வா?புதுமுகமா?
கம்யூனிஸ்ட்களா? சொல்லுங்கய்யா.
பாலா
பாலா நீங்க சொல்லாம விட்டவங்கதான் அவங்க :-)
//பாலா நீங்க சொல்லாம விட்டவங்கதான் அவங்க//
தி மு க, அ இ அதி மு க, மற்றும் பா ம க தவிர நான் சொல்லாம விட்ட புதிய தமிழகம், பார்வர்ட் ப்ளாக், மற்றும் ப ஜ க தான், பொல்லாத ஆதிக்க சக்திகள் என்பதை சூசகமாக அடையாளம் காட்டிவிட்டிர்கள்.
நிறையவே ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.
பரவாயில்லை; நம் பக்கத்தில் உண்மை இருக்கிறது. அனைத்து சக்திகளையும் எதிர்த்து போராடுவோம் முத்து குமரன் அய்யா.
பாலா
முத்துகுமரன். நல்ல பதிவு. சிவமுருகனும் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார். பார்த்தீர்களா? நான் பார்த்தேன். இன்னும் படிக்கவில்லை.
ஒரு வேளை கர்நாடகத்திற்குச் சென்று பார்த்தால் அங்கேயும் இன உணர்வு கொண்டவர்களை பிரிவினைவாதிகள் என்று அடையாளப்படுத்துபவர்கள் இருப்பதைக் காணலாமோ? அது எல்லா இடங்களிலும் இருப்பது என்று தான் நினைக்கிறேன். ஒரு கருத்து இருந்தால் அதற்கு எதிர் கருத்துகளும் எப்போதும் எல்லா இடங்களிலும் இருப்பது தானே.
//ஒரு கருத்து இருந்தால் அதற்கு எதிர் கருத்துகளும் எப்போதும் எல்லா இடங்களிலும் இருப்பது தானே.//
ஆமாம் குமரன். ஆனால் இங்கு அதைப் பொதுக்கருத்தாக முனைகிறார்கள் என்பதையே நான் குறீப்பிட்டிருந்தேன். மற்ற மாநிலக்காரர்களை விட தமிழன் தன் தேசபக்தியை நிரூபித்தாக வேண்டிய அவசியமிருக்கிறது. சமத்துவ இந்தியாவில் ஏனிந்த நிலைமை. இதுதான் என் கேள்வி.
சிவமுருகன் பதிவை வாசித்தேன். விகடனில் வந்த கட்டுரையையும் இட்டிருந்தார். நானே அந்த பதிவிற்கு தொடுப்பு கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
தங்கள் வருகைக்கு நன்றி.
//மற்ற மாநிலக்காரர்களை விட தமிழன் தன் தேசபக்தியை நிரூபித்தாக வேண்டிய அவசியமிருக்கிறது. சமத்துவ இந்தியாவில் ஏனிந்த நிலைமை. இதுதான் என் கேள்வி.//
முத்துகுமரன் அய்யா,
அப்படிப்பட்ட அவசியம் இருக்கிறது என்பது உங்கள் கருத்து..ஆனால் அது உண்மையல்ல.
ஆனால், தமிழ் நாட்டில் ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகளான திராவிடக் கட்சிகள் ஒரு நேர்மையற்ற முறையில்
ஒரு சமூகத்தினரை "இவர்கள் தமிழரல்லர்" என்று அடையாளம் காட்டி
ஒரு second class citizens என்ற நிலமையை உருவாக்கி குரூரமாக மகிழ்கிறார்கள்.
இந்த ஆதிக்க சக்திகளால் தமிழ்நாடு ஒரு racist/fascist state ஆக உருவெடுத்துள்ளது.
பாலா
ஊதுமட்டும் ஊதுவோம்
கண்விழித்து உறங்கும்
மரமண்டைகளில்
சம்மட்டியாய் இறங்கும்வரை
கருநாடகத்தில் பிரதிபலிக்கும் இனமொழி தேசியத்தை அம்மாநில அரசுகள் அடக்க விரும்புவதாய் தெரியவில்லை. ஆயினும் ஒரு வகையில் அவர்களது தேசியப் போராட்டம் வீறு கொண்டதாக இல்லை. மேலும் அவர்களது தேசிய ஜல்லி இந்தியா என்ற ஒரு கூட்டமைப்பின் சட்ட அமைப்பை மீறுவதாக இருந்தாலும் அவர்கள் போராளிகல்லவே. அவர்களது தேசிய ஜல்லி அண்டை மாநிலங்களின் மீதான மட்டையடிப்பு மட்டுமே. அவர்களுக்கு உலகெங்கிலும் கருநாடக தேசிய உணர்வாளர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கன்னட மொழியானது வடமொழியையே தாங்கி வந்துள்ளதாலும் அவர்களது தேசிய ஜல்லியானது இந்திய கூட்டமைப்பின் ஆட்சியாளர்களுக்கு பெரும் தலைவலி அல்லவே, அண்டை மாநிலத்தவரை தவிர்த்து.
ஆனால் தமிழ் தேசியம் உலகெங்கிலும் பரந்து கிடக்கிறது. அவர்களை ஒன்று சேராமல் விடுவதே இந்திய கூட்டமைப்பின் லட்சியம். அதனால் தான் எப்பாடு பட்டாவது தமிழ்தேசத்தை நிறுவ விடாமல் அனைத்து விதங்களிலும் பேரினவாத அரசிற்கு உதவி வருகிறது. அடக்குமுறையை மீறினால் தான் போராட்டம் என்பதை நீங்கள் அறியாதவர் இல்லை. தமிழ் தேசிய உணர்வாளர்கள் மீதான அடக்குமுறை அதிகமாக அதிகமாக தமிழ் தேசிய உணர்வும் தழைத்து வளரும். அதனால் அடக்குமுறை என்கிற அந்த ஊட்டச்சத்து நமக்குத் தேவையே.
//தமிழ் நாட்டில் ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகளான திராவிடக் கட்சிகள் ஒரு நேர்மையற்ற முறையில்
ஒரு சமூகத்தினரை "இவர்கள் தமிழரல்லர்" என்று அடையாளம் காட்டி
ஒரு second class citizens என்ற நிலமையை உருவாக்கி குரூரமாக மகிழ்கிறார்கள்.
இந்த ஆதிக்க சக்திகளால் தமிழ்நாடு ஒரு racist/fascist state ஆக உருவெடுத்துள்ளது//
தோ பார்டா...இந்த ஜல்லிய!
பதிவிற்கு நன்றி.
வணக்கம் முத்துக்குமரன். நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். :-)
ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஸ்வர்ண கர்நாடக, ஆந்திரா, (கேரளாவில் நடந்ததா என்று தெரியவில்லை) தொடர்ந்து பொன்விழாத் தமிழகம். அனைத்து மாநில மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தியத் துணணக்கண்டம் மட்டுமல்ல....தமிழகமும் பன்முகத்தன்மை கொண்டது. பொதுமைப்படுத்துதல் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு விதமாக நடக்கிறது என்றால் அதே விதமாகவே உலகெலாம் நடக்கிறது என்பது என் கருத்து. பொதுவாகவே இது மதங்களின் பெயரில் நடக்கிறது என்றே நினைக்கிறேன். இது தவறு என்பதுதான் எனது கருத்தும். நீங்களும் அதே கருத்துதான் கொண்டிருக்கின்றீர்கள் என நினைக்கிறேன்.
எந்தவொரு பொதுமைப் படுத்துதலும் வெற்றி பெறாது. கண்டிப்பாகத் தோல்வியில்தான் முடியும். அதுதான் இயற்கை.
கருநாடகத்தைப் பற்றி நீங்கள் சொன்னது முழுவதும் உண்மையல்ல என்பது எனது கருத்து. உண்மைகளும் இல்லாமல் இல்லை.
Post a Comment