போலி - டோண்டு

இரண்டு நாட்களாக சூடு பறக்க விற்பனையாகிக் கொண்டிருக்கும் போண்டா மஹா உற்சவத்தில் நானும் கலந்துகிறேன். இரண்டு ஆண்டுகளாக போலிப் புராணம் பாடியவர் இன்று போலியாய் அம்பலப்பட்டு நிற்கிறார். இது எதிர்பாராதது மற்றும் அல்ல பெரும் ஏமாற்றத்தை தருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்பட்டு நிற்கிறது.

தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கட்டாயமாக்கிய போது அதை தனது வெற்றியாக அறிவித்து கொண்ட திருவாளர் டோண்டு அவர்களே, உங்கள் யுத்தத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளலாமே, ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.

உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டதற்காக ஆபாச அர்ச்சனைகளை பெற்றார்களே, அவர்கள் எல்லாம் எதற்காக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டார்கள்? நீங்கள் போலித்தன்மை இல்லாது இருப்பீர்கள் என்றூ நம்பித்தானே. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே என உங்க
அரிப்புக்கு ஏன் தமிழ்மணம் போன்ற பொதுத்தளத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள்.

நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம். நீங்கள் போலித்தன்மையற்றவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு ஆதரவளித்த எல்லா பதிவர்களுக்கும் பந்தி போட்டு மலத்தை பறிமாரிவிட்டீர்கள். பிறர் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும், மதிப்பையும் உங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, செய்தவந்த போலித்தனம் அம்பலப்பட்டு நிற்க போர்யுத்தி என்று சொல்லும் போது அருவருப்பாய் இருக்கிறது.

அம்பலப்பட்டவுடன் ஆங்கிலத்திற்கு தாவி தப்பிக்கும் உங்களுக்கு சுத்தத்தமிழில் ஒரு வாக்கியம்.

ஈரத்துணி போட்டு கழுத்தறூக்கும் வழக்கத்தை இந்த வயதிற்கு மேலாவாது விடுங்கள்.

**

போலி- டோண்டு என்று மிகச்சரியாக கணித்த உங்கள் புத்திக்கூர்மைக்கு என் வணக்கங்கள்.

21 மறுமொழிகள்:

சென்ஷி said...

//போலி- டோண்டு என்று மிகச்சரியாக கணித்த உங்கள் புத்திக்கூர்மைக்கு என் வணக்கங்கள். //

:)))))))))))))))

சென்ஷி

satya said...

அட்றா சக்கை...

டோண்டு மாமா...ஏன் தமிழ்ப்பயல்கள் கிட்டேயெல்லாம் ஆங்கிலப் புலமையைக் காட்டுகிறீர்கள்.

இதில் காசு வாங்காமல் நான் மொழிபெயர்ப்பு வேறு செய்வதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏழைத்தமிழ் பிள்ளைகள் எங்கே சென்று மொழிபெயர்ப்பது?

G.Ragavan said...

ஒரு நாலு நாள் வலைப்பூ பக்கம் வராம வெளியூர் போனா என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது. முத்துக்குமரன்...இது தொடர்பா விஷயம் இருக்குற தொடுப்பு இருந்தாக் கொடுப்பா. படிச்சுத் தெரிஞ்சிக்கிறேன்.

ராஜசன் said...

அப்படி போடுங்க முத்துக்குமரன். என்னா நெனைச்சுக்கிட்டிருக்கார் இந்த டோண்டு? எல்லாரையும் கிள்ளுக்கீரைன்னு நெனைச்சுக்கிட்டாரா?

முத்துகுமரன் said...

http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_05.html
http://okkamakkaa.blogspot.com/2007/02/blog-post_04.html

http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_05.html
http://chella.info/webgypsy/archives/274

அபி அப்பா said...

முத்துகுமரன், வணக்கம். போண்டா மாமா சென்னைய விட்டு இஸ்ரேல் தப்பி போயிட்டாராம். ஆனா 1 நிச்சயம். ரஜினியின்'சிவாஜி' படத்தவிட அதிக பதிவு ஆயிடுச்சு போண்டாவுக்கு.

நாமக்கல் சிபி said...

ஆஹா! அபி அப்பாக்கு கூட ஆர்வம் வந்துடுச்சே!

:))

Fast Bowler said...

It was an unplayable Bouncer from கொசுபுடிங்கி.

நாமக்கல் சிபி said...

ஜீரா,

இங்கே வந்து பாருங்க! லேட்டஸ்ட் பால் வரைக்கும் தொகுத்திருக்கேன்!

அபி அப்பா said...

//ஆஹா! அபி அப்பாக்கு கூட ஆர்வம் வந்துடுச்சே!//

அப்டீல்லாம் இல்ல சிபி, டோண்டுவை கலாய்க்காதவர்கள் பிளாக் உலகில் இருந்து நீக்கப்படுவர் என்று சன் டிவியில் flash news ல் ஓடிகிட்டு இருக்கு.

நானே இப்பதான் கடை போட்டு இருக்கேன். யாவாரம் கூட சூடு பிடிக்கல. அதுக்குள்ள தொரத்திட்டாங்கன்னா???

dondu(#11168674346665545885) said...

இந்த உதாரெல்லாம் என்னிடம் காட்டவேண்டாம் முத்துக் குமரன். நாம் மூவரும் சந்தித்ததை பதிவாகப் போட்டபோது போலி ஏதாவது திட்டுவானோ என்று பயந்துதானே நீங்கள் பின்னூட்டமிடாமல் தவிர்த்தீர்கள். பார்க்க http://dondu.blogspot.com/2006/09/blog-post_04.html

இந்த அழகுக்கு நீங்கள் போலிக்கு பயப்படவேயில்லை என்று உதார் வேறு கடற்கரையில் கடல் சாட்சியாக விட்டீர்கள்.

//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம்.//
இதில் என்ன அற்பத்தனம் கண்டீர்கள் முத்துக் குமரன்? வேறு பெயரில் எழுதுவது அற்பத்தனமா? யார் சொன்னது? அப்படியானால் அண்ணா, கலைஞர், கல்கி, ஸ்ரீவேணுகோபாலன் போன்ற எழுத்தாளர்களெல்லாம் அற்பர்களா? அப்படி நான் அர்பன் என்றால் நீங்கள் கோழை, கடைந்தெடுத்த கோழை.

ஒரு கேடு கெட்ட பிளாக்மெயிலருக்கு பயந்து பேடியைப் போல ஒடுங்கியவர்கள்தான் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.

ஆயினும் பலர் எனக்கு பின்னூட்டமிட வேண்டும் என்பதற்காகவே புது ஐடிக்கள் தேடிக் கொண்டனர். இதற்காகவும், சில பின்னூட்டங்களை என் சொந்தப் பெயரில் போட்டால் திசை திருப்பப்படும் என்பதாலுமே நான் ஒரு ஐ.டி. உருவாக்கிக் கொண்டேன். அது யாரையும் நகல் செய்யவில்லை. தரமான பின்னூட்டங்களையே இட்டது.

இதுவும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு போர் யுக்தியே. எனது பதிவுகளை நிலைநிறுத்த உதவி செய்தன.

இனிமேல் தேவை இல்லை என்று நான் தீர்மானம் செய்து அனானி/அதர் ஆப்ஷனை போட்டேன். நல்ல வேளையாக இதை நான் ஒரு நாள் முன்னாலேயே செய்தேன். இல்லாவிட்டால் இதற்கு கூட உங்களைப் போன்றவர்கள் ஜல்லியடித்திருப்பீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவ்ன்

முத்துகுமரன் said...

டோண்டு சார்,

நம் சந்திப்பு குறித்தான உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் போடாதது போலிக்கு பயந்து என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. அப்படி போலிக்கு பயந்தவனாக இருந்தால் தேடி அழைத்து உங்களை சந்தித்திருக்க மாட்டேன். துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது. இதை நம் ஜிடாக் உரையாடலின் போது கூட தெரிவித்து இருந்தேன்.
இந்தியா சென்று வந்தது தொடர்பான விரிவான பதிவை நான் எழுதவில்லை. அதற்கும் காரணம் போலிக்குப் பயந்தா?
உங்கள் பதிவை பார்த்தேன். அப்போதே ஜிடாக்கில் பேசி இருக்கிறோம். அதனால் அங்கு பின்னூட்டம் போடாதது மட்டுமே என் வீரம் பற்றிய முடிவை உங்களுக்குத் தந்திருக்கிறது என்றால் கோழை என்ற உங்கள் பாரட்டுப் பத்திரத்திற்கு நன்றி.

பொதுவாக தனி உரையாடலில் பேசுபவைகளை நான் வெளியே சொல்லுவதில்லை. இன்று குறீப்பிட நேர்ந்தது எனக்கு வருத்தமே.

போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன?
எந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றூதானே...

இந்த நம்பிக்கை துரோகம்தான் உங்கள் பார்வையில் யுத்தியென்றால் அது அற்பத்தனமானது என்பதில் மாற்றுகருத்து இல்லை.

குழலி / Kuzhali said...

// நாம் மூவரும் சந்தித்ததை பதிவாகப் போட்டபோது போலி ஏதாவது திட்டுவானோ என்று பயந்துதானே நீங்கள் பின்னூட்டமிடாமல் தவிர்த்தீர்கள்.
//
டோண்டு அய்யா உங்களின் ஏதோ ஒரு பதிவில் முத்துக்குமரன் வாழ்த்து தெரிவித்திருந்தாரே, அதில் நானும் கூட வாழ்த்து தெரிவித்திருந்தேனே, சுட்டியெல்லாம் தேடி எடுத்து போடும் அளவிற்கு பொறுமையில்லை, சொல்லனும்னு தோன்றியது அவ்ளோதான்.

நன்றி

பங்காளி... said...

வலையுலக டெண்டுல்கர்(?)....ரிட்டையர் ஆக இதுவே சரியான சநதர்ப்பம்......

அவரும் பிழைப்பார், தமிழ் வலைப்பதிவும் பிழைக்கும்....

இந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்த அவரது மகரநெடுங்குழைகாதன் அருள்புரியட்டும்....

நாமக்கல் சிபி said...

//முத்துகுமரன் said...
டோன்டு சார் அசத்தல் போங்க

விஜயகாந்த் கெட்டப்ப விட உங்கது சூப்பர்
//

//dondu(#4800161) said...
"டோன்டு சார் அசத்தல் போங்க. விஜயகாந்த் கெட்டப்ப விட உங்களது சூப்பர்."

நன்றி முத்துக்குமரன் அவர்களே. ஏற்கனவே பலரது கருத்தும் இதுவே. தர்சனுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

பார்க்க : http://dondu.blogspot.com/2005/12/blog-post_22.html

dondu(#11168674346665545885) said...

"போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன?
எந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றுதானே..."
இது என்னப்பா வாதம்? என்னுடனிருந்தவர்களில் பலர் நான் ஒன்றுமே செய்யாமல் உதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சிலர் பதிவிடுவதையே நிறுத்துமாறும் ஆலோசனை கூறினர். எல்லாரின் நினைப்பையும் நான் நிறைவேற்ற வேண்டுமென்றால் வண்ணான், அவன் மகன், கழுதை கதைதான் நடந்திருக்கும்.

"துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது".
என்ன ஸ்வாமி கதையடிக்கிறீர்கள்? சுரதாப் பெட்டி என்று கேள்விப்பட்டதேயில்லையா. இல்லாவிட்டால் ஆங்கிலம் தெரியாதா? என்ன இதெல்லாம் சாக்குப் போக்கு.

//அதில் நானும் கூட வாழ்த்து தெரிவித்திருந்தேனே..//
உங்களை நான் குறைகூறவேயில்லை குழலி அவர்களே. ஒரு பதிவில் வாழ்த்து தெரிவித்ததற்குத்தான் தன்னை போலி தாக்கியதாகக் கூறினார். அப்போது கூட நான் கேட்டேன், அவரிடம் எதிர்க்கருத்தாயிருந்தாலும் பின்னூட்டமிடுங்கள் என்று. தலையை ஆட்டி விட்டுபோனவர் அப்புறம் வரவேயில்லை. ஓக்கே, அவரை நம்பியெல்லாம் நான் இல்லைதான்.

இங்கு என்னை அற்பன் என்று கூறியவரின் யோக்கியதையைத்தான் கிழிக்கிறேன். அவர் ஒரு ஆஷாடபூதி, கோழை என்று. அண்ணா, கலைஞர், கல்கி, பற்றிய குறிப்புக்கு பதில்?

இப்போது கூட பாருங்கள் குழலி அவர்களே, நான் இன்னொரு பெயரில் வந்ததைத்தான் கூறுகிறார்களே தவிர, அதற்கு ஆணிவேரான காரணம், ஒதுங்கியிருந்தவர் கோழைத்தனம் எல்லாம் பற்றி பேச வாயில்லை.

இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//அப்படி நான் அர்பன் என்றால் நீங்கள் கோழை, கடைந்தெடுத்த கோழை.

ஒரு கேடு கெட்ட பிளாக்மெயிலருக்கு பயந்து பேடியைப் போல ஒடுங்கியவர்கள்தான் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.//

டோண்டு அய்யா,

என்ன ,எங்க திராவிட சிங்கம்,முத்துகுமரன் அய்யாவையா கோழை என்று சொன்னீர்கள்?அவர் அந்த ப்ளாக்மெயிலருக்கு பயப்படவில்லை அய்யா.மரியாதை கொடுத்தார்.அவ்வளவு தான்.அந்த ப்ளாக்மெயிலரும் எங்க முத்து அய்யாவைப் போல் ஒரு அஞ்சாத சிங்கம் தான்.சக திராவிட சிங்கத்துக்கு,இன்னொரு திராவிட சிங்கம் எப்பவும் மரியாதை தரும்.அது தான் திராவிட கொள்கை.எங்க முத்து அய்யா அஞ்சி நடுங்குவது கரும்பாறையிடம் மட்டும் தான்.

பாலா

பினாத்தல் சுரேஷ் said...

என்னமோ போங்க.. இந்தப்பதிவு உங்களுடைய காவிரி நீர் பற்றிய முக்கியமான பதிவை பின்னுக்குத் தள்ளினதுதான் மிச்சம்.

மத்தபடி மேட்டர் பத்தி வாயை இறுக்கி மூடிகிட்டிருக்கேன். எப்போ திறப்பேன்னு எனக்கே தெரியாது! திறக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்:-)

இப்போதைக்கு இந்தப்பிரச்சினை குறித்து என் ஒரே கருத்து:

:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஜோ / Joe said...

முத்துக் குமரன்,
நீங்கள் என்ன தான் பதிவு போட்டாலும் டோண்டு ஐயா கொஞ்சம் கூட அசர மாட்டார் .தூங்குற மாதிரி நடிப்பதில் அவர் ஒரு நடிகர் திலகம் செவாலியே. விதண்டாவாதத்தின் மன்னன் .இதை எப்போதோ உணர்ந்ததால் இப்போது எனக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை.

enRenRum-anbudan.BALA said...

ராகவன் சார்,
//ஒதுங்கியிருந்தவர் கோழைத்தனம் எல்லாம் பற்றி பேச வாயில்லை.

இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு.
//
ஒதுங்கியிருந்தால் கோழைத்தனம் என்று ஜெனரலைஸ் செய்வது சரியானதாகப் படவில்லை. சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம், சிலருக்கு வீண்வேலை என்று தோன்றியிருக்கலாம், இன்னும் சிலருக்கு வேறு முக்கிய ஜோலிகள் இருந்திருக்கலாம் !

சிலருக்கு உங்கள் யுக்திகள் பிடிக்காமல்இருந்திருக்கலாம், சிலர் வேறு யுக்திகள் தெரிந்திருந்தும், சுயவிருப்பத்தின் பேரில், பிரயோகிக்காமல் விட்டிருக்கலாம் !

"அவரவர் தமதமது அறிவறி வகை வகை" ஒரு பிரச்சினையை அணுகுவார்கள் என்பதே யதார்த்தம் ! நன்றி.

முத்துக்குமரன்,
உங்கள் கருத்தை வெளியிடுவதற்கு உங்களுக்கு நிச்சயம் உரிமை உள்ளது. அதே சமயம், பதிவு சற்று காரம் தான் !

எ.அ. பாலா
****************************

dondu(#11168674346665545885) said...

//இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு//. "ஒதுங்கியிருந்தால் கோழைத்தனம் என்று ஜெனரலைஸ் செய்வது சரியானதாகப் படவில்லை"

மன்னிக்க வேண்டும் பாலா அவர்களே. அந்த சம்பந்தப்பட்ட பதிவர் என்னை இவ்வாறு கேட்டு கொண்டதும், நான் அவரை காரணம் கேட்டதும் தான் போலியின் மீதுள்ள பயத்தால் அவ்வாறு கூறுவதாக ஒப்பு கொண்டார். அவர் மேல் எனக்கு கோபம் இல்லை.

இப்போது கூட 3-ஆம் தேதி நடந்த வலைப்பதிவு சந்திப்புக்கு அவரும் வந்திருந்தார். அப்பதிவைப் பற்றி ஒரு பின்னூட்டம்கூட இல்லை. இதற்கு என்ன சொல்லுவீர்கள்?

முத்துக்குமரன் மேலும் கோபம் இல்லை. ஆனால் இப்போது வந்து என்னமோ நான் கொலை செய்து விட்டது போல பதிவு போடுவதற்கு நான் சரியான எதிர்வினை தர வேண்டும்.

//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம்.//
இப்படி அவர் உதார் விட்டதால்தான் அவர் கோழை என்பதை அழுத்தம் திருத்தமாக வெளியிட வேண்டியதாயிற்று.

முரளி மனோஹர் என்ன ஆபாசமாக எழுதினார்? அப்படி அவர் மற்றவர்கள் பதிவில் எத்தனை பின்னூட்டம் இட்டு விட்டார்? இன்னொருவர் மின்னஞ்சல் போல ஐடி போல தயார் செய்து கல்யாண போட்டோக்கள், என் பெண் போட்டோக்கள் வாங்கினாரா?

டோண்டு சார் இப்படி செய்யலாமா என்று கேட்பவர்களை அவரை இவ்வாறான நிலைக்கு துரத்தியது பற்றி ஒரு வார்த்தையும் கேட்கக்கூடாதா?

//ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.//
உங்களிடம் அனானி மற்றும் அதர் ஆப்ஷன் இல்லை அல்லவா? மற்றப்படி தமிழ்மணம் மட்டுறுத்தலை கட்டாயமாக்கியது அல்லவா, அதனால் தமிழ்மணத்தில் ஆபாசங்கள் கட்டுப்பட்டன அல்லவா. போலிகளை பற்றி பேச எனக்கு யோக்கியதை இருப்பதால்தான் இதெல்லாம் நடந்தது.

மற்றப்படி ஒரு புனைப்பெயரை வைத்து கொண்டதற்காக அற்பம் என்று எல்லாம் திட்டினால் கோழை நீங்கள் என்ற எதிர்வினைதான் வரும். இந்த அழகில் சீப்பு இல்லை ஆகவே கல்யாணம் நின்றது என்ற ரேஞ்சில் இகலப்பை இல்லை என்ற அபத்ததமான சால்ஜாப்பை வைத்ததும் இதே பயம்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails