இணையத்து தமிழ் நண்பர்களே! வணக்கம். MCA Final Yearபடிக்கும் தந்தையை விபத்தில் இழந்த ஒரு கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டி இந்தப் பதிவிடுகிறேன்.
குவைத்தில் நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளி திரு.அழகேந்திரன் ராஜபாளையத்தைச் சார்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் குவைத்தில் ஒரு கோரமான சாலைவிபத்தில் அழகேந்திரன் பயணித்த ஜீப்பின் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதி விழுந்து நசுங்கியதில் இதர இரு பயணிகளோடு தானும் அகால மரணமுற்றார்.
அழகேந்திரன் சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்தாலும் கல்வியே அடுத்த தலைமுறையை மேம்படுத்தும் என அறிவுறுத்தியததை ஏற்று தனது மகளை தம் சமூக வழக்கத்தை மீறி உயர் கல்வியான MCA படிப்பில் சேர்த்துப் படிக்கவைத்தார்.
ஏப்ரல் மாதம் MCA தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தந்தை இறந்த நிலையிலும் படிப்பைத் தொடருகிறார். திருவில்லிபுத்தூரில் MCA படிக்கிறார். படிப்பில் 76% மதிப்பெண் இதுவரை பெற்றிருக்கிறார். இவரது MCA படிப்பைத் தொடர என்னால் இயன்ற நிதி உதவியைச் செய்திருக்கிறேன்.
இப்போது இவர் இறுதியாண்டு MCA படிக்கிறார். இறுதியாண்டில் MCA படிப்பின் அங்கமாக Project Work டிசம்பர் 2007 முதல் ஜூன் 2008 வரை கட்டாயமாக முடிக்க வேண்டும். சென்னையில் இருக்கும் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் FREE project work ஆக J2EE அல்லது .Net platformல் தனது Project workஐச் செய்து முடிக்க விரும்புகிறார்.
05அக்டோபர் 2007 க்குள் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து MCA Course final semester - Acedamic Project work செய்ய அனுமதிக்கும் கடிதத்தை இவர் MCA படிக்கும் கல்லூரியில் சமர்ப்பிக்கவேண்டும்.
தமிழ் இணையம் முழுதும் கணிணித்துறையில், பல்வேறு கணிணி, மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இளகிய நெஞ்சங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
தந்தையை இழந்து தவிக்கும் நிலையிலும் தன் தந்தையின் கனவான MCA படிப்பைப் பூர்த்தி செய்ய விழையும் இந்த கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டுகிறேன்.
மேல் விபரங்கள், Resume , MCA கல்வித் தகவல்களுக்கு harimakesh@gmail.com எனும் எனது முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.
அன்புடன்,
ஹரிஹரன்
http://harimakesh.blogspot.com/2007/09/175-mca-project-work.html
****************************************************************
தேன்கூடு திரட்டியை பார்த்தபோது கண்ணில் பட்ட பதிவு இது. கல்வித்தேவைக்காக என்பதால் என் பதிவில் மீள்பிரசுரமாக இடுகிறேன்.மென்பொருள் துறையில் இருக்கும் நம் வலை நண்பர்கள் இந்த பெண்ணின் கல்விக்காக உதவி செய்யுங்கள்.
அன்புடன்
முத்துகுமரன்
Subscribe to:
Post Comments (Atom)
5 மறுமொழிகள்:
Hi,
Instead of coming to chennai, she could do her own project. Even if she gets a free project in chennai, accomodation, conveyence would cost her more. Give her a good project idea & facilitate doing in her own place/college.
நல்ல காரியம் செய்தீங்க. பாராட்டுகள்.
அந்த மாணவிக்கு நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
உங்களின் உதவும் மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள் முத்துக் குமரன்..
யாரேனும் தருவதற்கு தயாராக இருந்தால் யாரை தொடர்பு கொள்ளலாம்...?
நானும் என்னால் இயன்ற உதவிகளை செய்கின்றேன்.
உதவ விரும்பும் நண்பர்கள் பதிவர் ஹரிஹரனை harimakesh@gmail.com தொடர்பு கொள்ளவும்
நானும் அதே சிறிவில்லிபுத்தூரில் தான் படித்தேன். தொடர்பு கொள்ள விபரம் தாருங்கள் முடிந்ததை நான் செய்ய முயற்சிக்கின்றேன். உலகம் கைகளுக்குள் தான்.
Post a Comment