தங்கமணியின் பெயரில் சில போலி பின்னூட்டங்கள்...

நன்றி தேசபக்தி சீமான்களே என்ற என்னுடைய பதிவில் தங்கமணி அவர்களின் பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த போலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

தமிழ்மணமும், பூங்காவும் இந்திய தேசியத்திற்கு எதிராகவும், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவும் இயங்குவது போன்ற தோற்றத்தை தர பலநாட்களாக முயற்சிகள் நடந்துவருவது தெரிந்த ஒன்றுதான். சமூகத்தின் மாற்றுக் குரல்கள் ஒலிக்கும் போது சிலருக்கு நெருடலாகத்தான் இருக்கும். அவை விவாதிக்கப்பட வேண்டியது.

இந்த சூழலில் பூங்கா பற்றி விமர்சித்து திரு. ஜடாயு அவர்கள் பதிவிட்டிருந்தார்கள். விமர்சிப்பது அவர் உரிமை. அதிலும் இந்த பின்னுட்டம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பெயரிலி அவர்களின் பெயரிலும் ஒரு பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. தங்கமணி பெயரில் பிரசுரிக்கப்பட்ட அதே பின்னூட்டம் எனது பதிவிலும் இடப்பட்டு இருந்தது

//தங்கமணி has left a new comment on your post "நன்றி தேசபக்தி சீமான்களே":

ஜடாயு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது.

உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானதா? உங்கள் மனதில் கைவைத்துச் சொல்லுங்கள். பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தார்கள், உடையை இழந்தார்கள். கஞ்சிக்கும் வழியின்றி பார்ப்பனர்களை அண்டிப் பிழைக்கும் ஒரு இழிந்த நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.

அப்படி வரலாற்றில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே சிலர் பதிவுகளை எழுதிகிறார்கள். அப்படியான உண்மைப் பதிவுகளை பூங்காவில் போடாமல் ஆர்.எஸ்.எஸ் ஒரு நற்பணிகள் செய்யும் மன்றம் என்று எழுதும் உங்களின் பதிவுகளையும் அரவிந்தன் போன்ற அடிவருடும் கும்பலின் பதிவுகளையுமா போடச் சொல்கிறீர்கள்?

பூங்கா என்பது இதழ். தமிழ்மணம் என்பது திரட்டி. இரண்டும் வெவ்வேறு என்கிறோம் நாங்கள், ஆனால் இரண்டும் ஒன்று என்கிறீர்கள் நீங்கள். எனவே உங்கள் வழிக்கே வருகிறேன், இரண்டும் ஒன்றுதான். எப்போது உங்களுக்கு பூங்காமேல் நம்பிக்கை இல்லையோ அப்போதே தமிழ்மணத்தில் இருக்க உங்களுக்கு தகுதி இல்லை.

நீங்களாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் மரியாதை. இல்லை என்றால் நாங்களாக கழுத்தைப் பிடித்து தள்ளி உங்களை வெளியேற்ற வேண்டி இருக்கும்.

நீங்கள் படித்தவர், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மதியாதார் வாசல் மிதியாதே என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்த கடிதம் உங்களுக்கு மட்டும் இல்லை அரவிந்தனுக்கும் சேர்த்துதான்!

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by தங்கமணி to என் பார்வையில் at 11:06 AM, March 29, 2007
Anonymous has left a new comment on your post "நன்றி தேசபக்தி சீமான்களே": //


இந்த பின்னூட்டத்தை என் பதிவில் அனுமதித்ததே தங்கமணி பெயரில் தவறாக பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பதை தெரிவிக்கவே.

என் பதிவில் அரவிந்தன் நீலகண்டன் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் வேறு எங்கோ தெரிவித்த கருத்தை எடுத்துக் கொண்டு அதுக்கு பதிலாக மற்றொரு பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது. இங்குதான் போலியாக இயங்கிய நபரின் புத்திக் கூர்மையும் வெளிப்படுகிறது. முகமும் வெளிப்படுகிறது.

அது கீழே

அரைவிந்தருக்கு தங்கமணி அவர்களின் எச்சரிக்கைக் கடிதம்:-

//காறி உமிழ்கிறேன்//

அரவிந்தன் நீலகண்டன்,

உங்களை மதித்து பதில் சொன்னேன். இன்னும் நீங்கள் திருந்துவதாக இல்லை. நான் தமிழ்மணத்தின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் என்றாவது தெரியுமா? அதுவும் தெரியாதா?

இதுகூட தெரியாமல் நீங்கள் எல்லாம் வலைப்பதிவு எழுதி மக்கள் படித்து... என்ன கருமம் அய்யா இது?

தலித்துகளின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தது யார்? நான்கு வர்ணத்தை கண்டு பிடித்தது யார்? ப்ரம்மாவின் மும், தோள், தொடை, காலில் இருந்து பிறந்ததாக மக்களை வகைப்படுத்தியது யார்? குஜராத் கலவரத்துக்கு யார் காரணம்? பாதிரியார் கொலைக்கு யார் காரணம்?

பதிவுகளை தமிழ்மணம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எழுதுவதாக இருந்தால் எழுதுங்கள். இல்லை என்றால் தாராளமாக விலகி விடுங்கள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் நிலைமைக்கு எங்களை தயவுசெய்து ஆளாக்க வேண்டாம்.

தாங்கள் என்னை ஆபாசமாக பேசியதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் தாங்கள் தமிழ்மணம் திரட்டியில் இருந்தும் முற்றாக நீக்கப்படுவீர்கள்.

இது முதல் எச்சரிக்கைக் கடிதம்.

அன்புடன்,
தங்கமணி.


தங்கமணி அவர்களின் பதிவுகளைப் படித்திருப்பவர்களுக்கு எளிதாகப் புரியும் இது அவருடைய எழுத்துகள் இல்லை என்று. இந்த விடயங்கள் தெரிந்தும் அந்த பின்னூட்டங்களை ஜடாயு அனுமதித்தாரா அல்லது தமிழ்மண நிர்வாகிகள் பாசிசத் தன்மையோடு நடக்கிறார்கள் என்பது போன்ற தோற்ற மயக்கத்தை தர பயன்படுத்திக் கொண்டாரா என எனக்குத் தெரியாது. போலிகளுக்குத் துணை போகின்றவர்கள் யார் என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்.

இந்த போலிப்பின்னுட்டமிட்டவருக்காக வருந்துகிறேன். நல்ல மனநல மருத்துவரை அணுகி சுகமடைய முயற்சி செய்யுங்கள்.

3 மறுமொழிகள்:

ஜோ / Joe said...

மண்டையில் கொஞ்சமாவது மசாலா உள்ளவர்களுக்கு அது தங்கமணியின் பின்னூட்டம் அல்ல என்பது புரியும்.

Thangamani said...

இப்பொழுதுதான் உங்களின் முந்தைய பதிவில் என் பெயரில் வெளியான போலியான பின்னூட்டத்தை நீக்கக் கோரியிருந்தேன். உங்களின் இந்தப்பதிவுக்கு மிக்க நன்றி.

தமிழ்மணம் சார்பில் பேச/ கடிதங்களை வெளியிட அதற்கென ஒரு குழு இருக்கிறது; அதற்கு இடமும் இருக்கிறது.

புரிதலுக்கும், ஒத்துழைப்புக்கும் அனைவருக்கும் நன்றி.

அரவிந்தன் நீலகண்டன் said...

என்னுடைய பதிவில் வந்த போது முதலில் இது தங்கமணி என்றே நினைத்தேன். கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவேன் என்பது போன்ற வார்த்தைகளால் சீண்டப்பட்டு நானும் கடுமையாக பதில் அளித்தேன். பின்னர் ஒரு அனானி நண்பர் இது போலி எனக் கூறினார். அந்த அனானி நண்பருக்கு நன்றி. உடனே அந்த பின்னூட்டத்தையும் அதற்கான என் எதிர்வினையையும் எடுத்துவிட்டேன். ஆனால் மீண்டும் போலி பின்னூட்டங்கள் தொடர்கின்றன. இந்த நபர் பயன்படுத்தும் வசைமொழிகள் அவர் யார் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. இந்த விசயத்தில் முத்துக்குமரனுடன் ஒத்து போகிறேன். இந்த போலி பின்னூட்டக்காரனுக்கு தேவை மனநல சிகிச்சை.

Related Posts with Thumbnails