நன்றி தேசபக்தி சீமான்களே

பார்ப்பனிய முகமூடிகளை
சுட்டினாலே
இந்திய தேசிய எதிர்ப்பு

நன்றி தேசபக்தி சீமான்களே
உங்கள்
ஒப்புதல் வாக்குமூலத்திற்கு

12 மறுமொழிகள்:

குழலி / Kuzhali said...

//நன்றி தேசபக்தி சீமான்களே
உங்கள்
ஒப்புதல் வாக்குமூலத்திற்கு//
அருமையான ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்கள் அவர்கள்... தேசபக்தர்களுக்கு பக்தி தேசத்தின் மீதா? பார்ப்பனியத்தின் மீதா என்பதை தெளியவைத்துள்ளார்கள்...

Naufal MQ said...

திராவிட்டிற்கும் இதற்கும் தொடர்பில்லையே?? :)

Anonymous said...

வெள்ளைக்காரனுக்கு சேவகம் பண்ணிய போதும் இந்திய தேசியம் தான் பேசினார்கள் ஏனென்றால் அப்போது இந்தியா வெள்ளைக் காரர்களிடம் இருந்தது.

அக்பர் முதல் அவுரங்க சீப் ஆகியோரிடம் அமைச்சாராக இருந்தபோதும் இந்திய தேசியம் தான் பேசினார்கள் ஏனென்றால் அப்போது இந்தியா இஸ்லாமிய மன்னர்களிடம் இருந்தது.

அவுங்க எப்பவுமே தேசியவியாதிகள் தான் புரிந்து கொள்ளாமல் புலம்பாத ஓய் !
:))

Hariharan # 03985177737685368452 said...

முத்துக்குமரன்,

அடுத்த வார பூங்கா இதழில் இக்கவிதைத் துண்டு போட்டு இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் :-)))))

Anonymous said...

ஜடாயு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது.

உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானதா? உங்கள் மனதில் கைவைத்துச் சொல்லுங்கள். பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தார்கள், உடையை இழந்தார்கள். கஞ்சிக்கும் வழியின்றி பார்ப்பனர்களை அண்டிப் பிழைக்கும் ஒரு இழிந்த நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.

அப்படி வரலாற்றில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே சிலர் பதிவுகளை எழுதிகிறார்கள். அப்படியான உண்மைப் பதிவுகளை பூங்காவில் போடாமல் ஆர்.எஸ்.எஸ் ஒரு நற்பணிகள் செய்யும் மன்றம் என்று எழுதும் உங்களின் பதிவுகளையும் அரவிந்தன் போன்ற அடிவருடும் கும்பலின் பதிவுகளையுமா போடச் சொல்கிறீர்கள்?

பூங்கா என்பது இதழ். தமிழ்மணம் என்பது திரட்டி. இரண்டும் வெவ்வேறு என்கிறோம் நாங்கள், ஆனால் இரண்டும் ஒன்று என்கிறீர்கள் நீங்கள். எனவே உங்கள் வழிக்கே வருகிறேன், இரண்டும் ஒன்றுதான். எப்போது உங்களுக்கு பூங்காமேல் நம்பிக்கை இல்லையோ அப்போதே தமிழ்மணத்தில் இருக்க உங்களுக்கு தகுதி இல்லை.

நீங்களாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் மரியாதை. இல்லை என்றால் நாங்களாக கழுத்தைப் பிடித்து தள்ளி உங்களை வெளியேற்ற வேண்டி இருக்கும்.

நீங்கள் படித்தவர், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மதியாதார் வாசல் மிதியாதே என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்த கடிதம் உங்களுக்கு மட்டும் இல்லை அரவிந்தனுக்கும் சேர்த்துதான்!

முத்துகுமரன் said...

நடத்துங்க நடத்துங்க!! விளையாட்டு புரியாம இல்லை சாமிகளா

நாகை சிவா said...

//திராவிட்டிற்கும் இதற்கும் தொடர்பில்லையே?? :) //

இருக்காது நானும் நினைக்குறேன்.

என்ன சொல்லுறீங்க குமரன்!

Thangamani said...

முத்துக்குமரன்;

என்னுடைய பெயரில் தமிழ்மணத்தின் சார்பில் பேசுவது போல ஒரு பின்னூட்டம் உங்கள் பதிவில் வெளியாகி இருக்கிறது. தமிழ்மணம் அதனுடைய கருத்துக்களை வெளியிட தேவையான வசதிகளைக் கொண்டிருக்கிறது. இப்படியான போலியான, மலிவான உத்திகளால் பயனடைவோர் (?) இப்படியான பின்னூட்டத்தை வெளியிட்டிருக்கலாம். தயவு செய்து அதை நீக்கிவிடவும். நன்றி.

அசுரன் said...

//பார்ப்பனிய முகமூடிகளை
சுட்டினாலே
இந்திய தேசிய எதிர்ப்பு
//

இதே அடிப்படை பார்ப்ப்னிய புரிதலில் எனது பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டர் ஒரு அனானி, இவர்களின் கணக்கில் பார்ப்ப்னியம் எல்லாம் இந்தியா, இந்தியா என்றால் பார்ப்ப்னியம். இந்த மோசடித்தனத்தனமான திமிரைத்தான் ஜனநாயக தளத்தில் விவாதம் செய்து அம்பலப்படுத்துகிறோம் நாம். ஆனால் இவர்களுக்கோ திண்ணை வலையிதழைப் போல பார்ப்ப்னியத்திற்க்கு கோமணத் துணியாக வேலை செய்யும் ஒரு ஊடகமே சிறந்த ஊடகமாக தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அசுரன்

அருண்மொழி said...

பூங்காவில் அவார்கள் எழுதிய பதிவு வரவில்லை என்ற காழ்ப்புணர்ச்சி/வயிற்றெறிச்சல் அவார்களை இப்படி புலம்ப வச்சுடுச்சு. அகில உலக விஞ்ஞான மேதை பூங்காவை பற்றி புலம்புவது "தங்கச்சிய நாய் கடிச்சுடுச்சுபா" என்பது போல காமெடியாக இருக்கின்றது.

யாராச்சும் ஏதாவது செய்து அவார்கள் பதிவு ஒன்றை பூங்காவில் போடுங்கோ. அப்போதான் நீங்களும் உங்க வம்சமும் நன்னா இருப்பேள்.

Unknown said...

//வெள்ளைக்காரனுக்கு சேவகம் பண்ணிய போதும் இந்திய தேசியம் தான் பேசினார்கள் ஏனென்றால் அப்போது இந்தியா வெள்ளைக் காரர்களிடம் இருந்தது.
அக்பர் முதல் அவுரங்க சீப் ஆகியோரிடம் அமைச்சாராக இருந்தபோதும் இந்திய தேசியம் தான் பேசினார்கள் ஏனென்றால் அப்போது இந்தியா இஸ்லாமிய மன்னர்களிடம் இருந்தது.//

யார் தேசத்தை ஆளும் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்களது காலைக் கழுவிக் குடித்து வாழ்வதே தேசபக்தி. அவர்களது தவறுகளை எடுத்துச் சொல்வது தேசவிரோதம்.
பார்ப்பனீயப் பார்வையில் தேசபக்திக்கு நல்ல விளக்கம்.

லக்கிலுக் said...

தலைவரே!

வர வர உங்க வலைப்பூவைத் தொறந்தாலே ஸ்க்ரீன் நெருப்பு பத்திக்குதே! கலக்குங்க....

Related Posts with Thumbnails