சமஸ்கிருத அறிஞர்கள் உதவுக...

இந்து மதத்தினையும், வேதங்களை குறித்தும் ஒருவர் மாற்றுக் கருத்துகளையோ, விமர்சனங்களையோ செய்யும் போது சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை மொழி. பரந்து விரிந்த இந்துமதத்தின் வேதங்களும்,நீதிகளும் சமஸ்கிருதத்தில் இருந்துவிட கடைக்கோடி மனிதனுக்கு சிரமம்தான். ஓராண்டிற்கு முன் இங்கே ஒரு மந்திரத்தை முன் வைத்து நான் போட்ட பதிவின் போதே நான் தவறான மொழிபெயர்ப்பை வாசித்ததாக கடிந்து கொண்டார்கள். ஆகவே மீண்டுமொருமுறை அந்த தவறைச் செய்யமால், நான் வாசித்த சில சமஸ்கிருதச் சுலோகங்களுக்கு அல்லது மந்திரங்களுக்கான உண்மையான அர்த்தம் என்னவென்பதினை நண்பர்களிடம் விளக்கம் கேட்டு விடலாம் என்பதற்காகவே இந்தப் பதிவை இடுகிறேன். சரியான மொழிபெயர்ப்பு கிடைத்த பின்பே அவை தொடர்பான எனது கருத்துகளை சொல்வதையோ சந்தேகங்களை கேட்பதோ முறையானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவைகளுக்குத்தான் எனக்கு சரியான மொழிபெயர்ப்பு வேண்டும்.

''வேதம்:ஸ்மிருதி:சதாச்சார்: ஸ்வஸ்ளச ப்ரிய மாத்மன:!''

''யோவமன்யேத் தே மூலே ஹேதுசாஸ்த்ராஅயத் த்விஜ:!
ஸ ஸாதுபிர்பஹிஷ்கார்யோ நாஸ்த்கோ வேதநிந்தக்:!!

''ஸ்ருதித்வைதம் து யத்ர ஸ்யாப்தத்ர தர்மாவுபெள ஸ்ம்ருதெள!''

''யா வேதபாஹ்யா: ஸ்ம்ருத்யோ யாஸ்ச காஸ்ச குத்ருஷ்:!
ஸர்வாஸ்தா நிஷ் வலா: ப்ரேத்ய தமோநிஸ்டா ஹித்: ஸ்ம்ருதா:!!''

''வேதாயத்வோபநிபந்திருதத் ப்ரமாண்ய ஹி மனோ: ஸ்ம்ருத்
மன்வர்த்தவிபரீதா து யா ஸ்மிருதி ஸா ந சஸ்யதே!!''

''புராண மாநவோ தர்ம: ஸாங்கோ வேத ஸ்சித்ஸித்!
ஆங்யாஸித்தானி சத்வாரி ந ஹந்தவ்யானி ஹேதுபி!!''


சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற, சமஸ்கிருதத்தை நன்கறிந்த இனிய வலை நண்பர்கள் இதற்கான சரியான காழ்ப்புணர்வற்ற தமிழ் மொழிபெயர்ப்பினைத் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

41 மறுமொழிகள்:

VSK said...

இதிலும் சில பிழைகள் இருப்பது போன்று தோன்றுகிறது. மூலத்தை[வடமொழியில்] அனுப்பினால், அல்லது சுட்டி தந்தால், தெரிந்தவர்களிடம் கேட்டு மொழிபெயர்த்து அனுப்புகிறேன்.

முக்கியமாக எவற்றிலிருந்து இவை எடுக்கப்பட்டவை எனத் தெரிந்தால் நலம்.

சிவபாலன் said...

முத்துகுமரன்

ஏதோ முடிவோடு வந்திருக்கிறமாதிரி தெரியுதே!! :)

சும்மா சொன்னங்க..

வாழ்த்துக்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவற்றுக்கான மொழிபெயர்ப்பை அடியேனும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

Anonymous said...

Anna,

Itahi sollithan kalyanam seitherikala....

குமரன் (Kumaran) said...

''--வேதம்--:ஸ்மிருதி:--சதாச்சார்--: --ஸ்வஸ்ளச-- ப்ரிய மாத்மன:!''

''யோவமன்யேத் தே மூலே ஹேது--சாஸ்த்ராஅயத்-- த்விஜ:!
ஸ ஸாதுபிர்--பஹிஷ்கார்யோ-- --நாஸ்த்கோ-- --வேதநிந்தக்--:!!

''--ஸ்ருதித்வைதம்-- து யத்ர --ஸ்யாப்தத்ர-- --தர்மாவுபெள-- ஸ்ம்ருதெள!''

''யா வேதபாஹ்யா: ஸ்ம்ருத்யோ --யாஸ்ச-- --காஸ்ச-- --குத்ருஷ்:--!
ஸர்வாஸ்தா நிஷ் வலா: ப்ரேத்ய தமோநிஸ்டா --ஹித்: ஸ்ம்ருதா:--!!''

''--வேதாயத்வோபநிபந்திருதத்-- ப்ரமாண்ய ஹி மனோ: --ஸ்ம்ருத்--
மன்வர்த்தவிபரீதா து யா ஸ்மிருதி ஸா ந --சஸ்யதே--!!''

''புராண மாநவோ தர்ம: ஸாங்கோ வேத --ஸ்சித்ஸித்--!
--ஆங்யாஸித்தானி-- சத்வாரி ந ஹந்தவ்யானி ஹேதுபி!!''

-- -- இவற்றிற்கிடையே இருக்கும் சொற்களில் பிழை இருப்பது போல் தோன்றுகிறது முத்துகுமரன். எஸ்.கே.சொன்னது போல் மூலத்தை (வடமொழி எழுத்துகளில்) சொன்னால் பொருள் சொல்வது எளிதாக இருக்கும். சில சொற்களுக்குப் பொருள் புரியாவிட்டால் எல்லோரும் பார்க்கும் படி இணைய அகராதிகளும் இருக்கின்றன.

குழலி / Kuzhali said...

//மூலத்தை[வடமொழியில்] அனுப்பினால், அல்லது சுட்டி தந்தால், தெரிந்தவர்களிடம் கேட்டு மொழிபெயர்த்து அனுப்புகிறேன்.
//
எஸ்.கே. அய்யா, அப்பாலிக்கா மூலத்தை ஓலைச்சுவடியில் கேட்டுப்புடாதிங்கோ...
இப்போ எழுத்துப்பிழையோட தமிழில் ஒரு கட்டுரை கொடுத்தா படிச்சிடுவிங்களோ இல்லையோ.... படிச்சி சரியா பொருள் சொல்வீங்களோ இல்லையோ அது போல செய்யலாமே இதற்கும், எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைச்சிக்கலாம் அப்பாலிக்கா...

G.Ragavan said...

ஒன்னும் புரியலையேப்பா...இது எந்த நூலு? (மயிலார்: நூல் பேரச் சொன்னா மட்டும் புரிஞ்சிரப் போற மாதிரி. சும்மா இர்ரான்னா!)

எதோ காரணத்தோடுதான் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆகையால் நானும் ஆவலோடு விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

// குழலி / Kuzhali said...
எஸ்.கே. அய்யா, அப்பாலிக்கா மூலத்தை ஓலைச்சுவடியில் கேட்டுப்புடாதிங்கோ...
இப்போ எழுத்துப்பிழையோட தமிழில் ஒரு கட்டுரை கொடுத்தா படிச்சிடுவிங்களோ இல்லையோ.... படிச்சி சரியா பொருள் சொல்வீங்களோ இல்லையோ அது போல செய்யலாமே இதற்கும், எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைச்சிக்கலாம் அப்பாலிக்கா... //

:-))) நல்ல நகைச்சுவை. ஆனால் கருத்து சரியாகத் தெரியவில்லை. தமிழில் பிழையிருந்தாலும் பொருள் கொண்டு விடுவோம். ஏனென்றால் அது தமிழில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இங்கு வடமொழியில் எழுதப்பட்டிருந்தால் அவருக்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் அவர் கேட்பதும் சரியென்றுதான் தோன்றுகிறது.

VSK said...

முத்தைக் கேட்டதற்கு ஒன்றுமறியா குழல் ஏன் குதிக்க்கிறது?

நான் உள்ளன்போடு கேட்டது தவறென்று குமரன் சொல்லட்டும்.

குழல் அடங்கட்டும்!

முத்துகுமரன் said...

அன்பின் எஸ்.கே அய்யா, நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக்கூடாது என்பார்கள். நான் குறிப்பிட்ட சமஸ்கிருத வாக்கியங்கள் முதல் ஐந்தும் மனுஸ்மிருதியிலும், இறுதியானது மகாபாரதத்திலும் எடுக்கப்பட்டது. இவை யாவும் கற்பனையாக புனையப்பட்டவை இல்லை. வழிவழியாக சொல்லப்பட்டு வந்த உரையாடல்களே. சொற்களில் ஏதேனும் பிழையாக இருக்கலாம். ஆனால் அவை மிகக்குறைந்த அளவிலே இருக்கக்கூடும். விளக்கம் சொல்லும் நண்பர்கள் இந்த வாக்கியங்களிலிருக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளவும் வசதியாக இருக்கும். வேதங்களும் மனுதர்மங்களும் மறை பொருளாகத்தானே வைத்திருக்கிறார்கள்.

குழலி குதித்தாக நான் உணரவில்லை. அவரும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார் என்றே உணர்கிறேன்.

Anonymous said...

உதவிகள் வராது குமரன், இது சமஸ்கிரதத்திற்கு கொடிபிடிப்பவர்களின் முகத்திரையை கிழிக்கும் விசயமாக இருக்கலாம் என்பதால் மவுனம் தொடர்கிறது.

ஒருவேலை இதன் பொருளை எவராவது வெளியிடும் போது.. அவாள்கள் பொங்கி வருவாங்க பாருங்க! அப்பதெரியும் வேடிக்கை!

Anonymous said...

முத்துக்குமரன்,
இதை தெரிந்து என்ன ஆகப்போகிறது?
சமஸ்கிரதம் என்பது தேவ பாஷை! அதில் சொல்லப்பட்டிருக்கும் ஆயிரமாயிரம் நல்ல விஷயங்களை விட்டு விட்டு இப்படியான ஸ்லோகங்களுக்கு அர்த்தம் கேட்பது அறிவீலித்தனம்.

உங்களுக்கு நாங்கள் யாரும் பதில் சொல்ல மாட்டோம்.

Anonymous said...

மேலே இருப்பது போலி கிருஷ்ணா. இனிமேல் ஒரிஜினல் கிருஷ்ணா பெயரில் மறுமொழி வந்தாலும் தயவுசெய்து நிராகரித்து விடுங்கள்.

- ஒரிஜினல் கிருஷ்ணா

லக்கிலுக் said...

அன்பு முத்துக்குமார்!

ஏதோ வில்லங்கமா இருக்கும் போல இருக்கே. சமஸ்கிருத அய்யாக்கள் எல்லாம் நைஸா எஸ்கேப்பு ஆவப் பாக்குறாங்க போல :-)

Pot"tea" kadai said...

இப்படி கேட்டால் எப்படி பதில் வரும். அனிமல் செக்ஸ் மாதிரி விசயத்தோட போட்டா அன்பர் அரிகரன் ஓடோடி வருவார்.

அவரையும் காணோமே?
எதுனா தப்பா ஏசிட்ட்டீங்களா சமசுகிருதத்துல...பாப்ஸுங்க எல்லாம் மடத்துல கவட்டிக்குள்ள கைய உட்டுகிட்டு தூங்குதுங்களோ?

Anonymous said...

அரசியல் திரா"விட" பெத்தடின்கள் தமிழ் கடவுள் முருகனை பெரிய யோக்கியமாக சித்தரித்து சித்து விளையாட்டு விளையாடும் அயோக்கியதனத்தை ஐம்பது நூற்றாண்டுகளாக நடத்தி வருவதை பகுத்தறிந்து தமிழ் கடவுள் முருகன் ஒரு காமாந்தகன் என்றொரு பதிவு போட்டிருக்கிறேன். படிக்கவும். முருகன் குறத்திமகளை வண்புணர்ந்ததை பற்றியும் எழுதி இருக்கிறேன். முருகன் பிராமணன் அல்ல என்பதையும் திரா"விட" பெத்தடின்கள் உணரவேண்டும்.

வரவனையான் said...

//Hariharan # 26491540 said...
முருகன் பிராமணன் அல்ல என்பதையும் திரா"விட" பெத்தடின்கள் உணரவேண்டும்//


ஒ அதனால்தான் ஆரிய அல்குல்கள் தமிழ்நாடுதாண்டினால் முருகனை வணங்குவதில்லையா

Anonymous said...

http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch1/ch1_1_5.html

- இங்லீஷ் மனு

முத்துகுமரன் said...

//தமிழ் கடவுள் முருகன் ஒரு காமாந்தகன் என்றொரு பதிவு போட்டிருக்கிறேன்//

ரெம்ப சந்தோசம். அதுக்கும் சேர்த்து விளக்கம் அளிக்குமாறு எஸ்.கே அய்யா, குமரன், மற்றும் ஜி.ராகவனை கேட்டுக் கொள்கிறேன். ஹரி நான் அந்த கட்டுரை படிக்கவில்லை. அந்த லிங்க் இல்லை அந்த கட்டுரையை அனுப்புங்களேன் தனிமடலாகவாவது. ஆனா எந்த ஊர்லயா பொண்டாட்டியை வண்புணர்வானுங்க. முருகனுக்கு பொண்டாட்டி வள்ளிதான். எங்களைப் பொறுத்தவரை தெய்வானைதான் வராலாற்றில் திணிக்கப்பட்டவள், நுழைக்கப்பட்டவள் .

Anonymous said...

நான் அந்த பதிவு போட்டதுமே நான் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் எதிர்பாராவிதமாக திரா"விட" பெத்தடின்களும் மகிழ்ச்சி அடைந்து விட்டார்கள். திரா"விட" பெத்தடின்கள் என்ன செய்தாலும் எரிச்சல் அடைய மறுக்கிறார்கள் என்பதாலும், சில ஆரிய அன்பர்கள் மனம் புண்பட்டதாலும் அந்த பதிவினை முருகன் அருளால் நீக்கிவிட்டேன்.

குழலி / Kuzhali said...

//முத்தைக் கேட்டதற்கு ஒன்றுமறியா குழல் ஏன் குதிக்க்கிறது?
//
என்ன செய்யங்கய்யா, ஏதோ தேவபாஷையில் ஓரிரண்டு சுலோகங்களுக்கு பொருள் தெரிந்து கொண்டு ஒன்றுமறியா குழலாக இருப்பதைவிட ஒன்றே ஒன்றாவது அறிந்த குழலாக இருக்கலாமே என்று தான் நான் அப்படி கேட்டேன்...

//// குழலி / Kuzhali said...
எஸ்.கே. அய்யா, அப்பாலிக்கா மூலத்தை ஓலைச்சுவடியில் கேட்டுப்புடாதிங்கோ...
இப்போ எழுத்துப்பிழையோட தமிழில் ஒரு கட்டுரை கொடுத்தா படிச்சிடுவிங்களோ இல்லையோ.... படிச்சி சரியா பொருள் சொல்வீங்களோ இல்லையோ அது போல செய்யலாமே இதற்கும், எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைச்சிக்கலாம் அப்பாலிக்கா... //

:-))) நல்ல நகைச்சுவை. ஆனால் கருத்து சரியாகத் தெரியவில்லை. தமிழில் பிழையிருந்தாலும் பொருள் கொண்டு விடுவோம். ஏனென்றால் அது தமிழில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இங்கு வடமொழியில் எழுதப்பட்டிருந்தால் அவருக்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் அவர் கேட்பதும் சரியென்றுதான் தோன்றுகிறது.
//
vanakkam g.raghavan, enna ippadi sollitinga? ippo naan english il ezhudhi irukene idhu ungalukku puriyavillaiyaa? edho ondru irandu pizhai irukalam aanal ungalal idhai padithu purindhu kolla iyalaadha? sari idhai paditha pirakum ungalukku nakaichuvaiyaka mattume theriyudha?

SK ayya mele naan english ezhuthil ezhudhi irupadhan porul thamizh ezhuthila ezhudhinal mattume padithu purindhu kolven ena atam pidipeerkala?

//நான் உள்ளன்போடு கேட்டது தவறென்று குமரன் சொல்லட்டும்.

குழல் அடங்கட்டும்!
//
ஹி ஹி ஏற்கனவே அடங்கித்தானுங்க இருக்கிறேன்...

குமரன் (Kumaran) said...

முத்துகுமரன்,

தமிழ் எனக்கு இரண்டாம் தாய்மொழி. வடமொழி பழக்கம் கொஞ்சம் உண்டு. அவ்வளவு தான். அதனால் எழுத்துப்பிழைகளுடன் வடமொழி சுலோகத்தை படிக்கும் போது தமிழில் எழுத்துப்பிழைகளுடன் இருந்தாலும் பல நேரம் புரிவது போல் பொருள் பிடிபடுவதில்லை. 'பல்' என்பதற்கு உச்சரிப்புக்குத் தகுந்த படி பொருள் வரும். ஒரு பலுக்கலுக்கு பழம் என்றும் இன்னொரு பலுக்கலுக்கு வலிமை என்றும் பொருள் வரும். இங்கே பல் என்று மட்டும் எழுதியிருந்தால் எந்தப் பொருளைச் சொல்வது? இதற்காகவும் வடமொழி எழுத்துகளில் எழுதப்பட்ட மூலத்தைக் கேட்கலாம் இல்லையா?

நதிமூலம் ரிஷிமூலம் கேட்பது இப்படியுள்ளவற்றைச் சரியாக அறிந்து கொள்ளத் தான். ஆனால் இப்போது இங்கே வந்திருக்கும் சில பின்னூட்டங்களைப் பார்த்தால் அப்படி எடுத்துச் சொன்னாலும் அவை ஏற்றுக் கொள்ளப்படும் போல் தோன்றவில்லை. அதனால் உங்களுக்கு யாராவது இந்த சுலோகங்களுக்குப் பொருள் என்ன என்று சொல்லியிருக்கிறார்களோ அதனையே சொல்லுங்கள்.

இவை மனு நூலில் வரும் சுலோகங்கள் என்பதாலும் பொருள் உரைக்க விருப்பம் இல்லை. மனு நூல் திருக்குறள் இல்லை. (தவறாகப் புரிந்து கொள்வேன் என்றே இருப்பவர்களுக்கு - திருக்குறள் சிறந்த நூல் என்று கூறுகிறேன்).

முத்துகுமரன் said...

நன்றி குமரன்.
//இங்கே பல் என்று மட்டும் எழுதியிருந்தால் எந்தப் பொருளைச் சொல்வது? இதற்காகவும் வடமொழி எழுத்துகளில் எழுதப்பட்ட மூலத்தைக் கேட்கலாம் இல்லையா? //
உண்மைதான் குமரன். ஒரு வாக்கியத்தில் எந்த பொருள் அர்த்தமுடையதாக இருக்கும் என்பதனை ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம். வடமொழி மூலங்கள் என்பது எல்லாருக்கும் எட்டிய தொலைவில் இல்லை என்பதுதான் எதார்த்தம். அதாவது அனைவருக்கும் பொதுவானதாக இல்லாத ஒன்றைக் கொண்டே எல்லோரும் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.

உங்கள் விருப்பமின்மையை நான் மதிக்கிறேன்.
//அப்படி எடுத்துச் சொன்னாலும் அவை ஏற்றுக் கொள்ளப்படும் போல் தோன்றவில்லை//
ஹரிஹரனின் பின்னூட்டமும் அதைத் தொடர்ந்த சில எதிர்வினைகளும் ஆபாசமில்லாததாக இருந்ததாலே நீக்கவில்லை. பதிவுக்கு பொருந்தாத பின்னூட்டங்களை ஆபபசமில்லாதவை என்பதற்காகவே பிரசுரிக்கப்பட்டன.

சமஸ்கிருத மூலங்களை கேட்பது சரிதான். இனி எல்லா இடங்களிலும் இவ்வாறு மூலங்களை கேட்பது தொடங்கினால் மகிழ்ச்சிதான். எந்தவித விளக்கங்களும் இன்றித்தான் மந்திரங்களும் சடங்குகளும் விதிக்கப்பட்டன( ஒரு சாரரைத் தவிர). அப்போது கேட்காமல் விட்டு விட்டோம்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

G.Ragavan said...

இன்னமுமா...யாரும் சொல்லலை. ம்ம்ம்..முத்துக்குமரன் நீங்களே சொல்லீருங்க. அதுல ஏதோ காரணமில்லாம எடுத்துப் போட்டிருக்க மாட்டீங்க. என்னன்னு சொல்லுங்க. ரொம்பவும் காக்க வைக்காதீங்க.

Anonymous said...

முத்துக்குமரன் அய்யா,
என் பார்வையில்...என்று தலைப்பு வைத்துவிட்டு பிறரிடம் ஏன் விளக்கம் கேட்கிறீர்கள். வெண்தாடி வேந்தனின் அடியாட்கள் வரிசையாக வந்து போயிருக்கிறார்கள் அய்யா.

தயவு செய்து நீங்களே விளக்கம் சொல்லி விடுங்கள் அய்யா. இல்லையென்றால் நான் பனாரஸ் சென்று தான் மனுஸ்மிருதியை படிக்கவேண்டும்.

என்னை வெட்டியாக காக்க வைக்காதீர்கள் அய்யா.

வெட்டிப்பயல் said...

அப்படி இதுல என்ன தான் இருக்குனு யாராவது சொல்லுங்களேன்!!!

குமரன், எஸ்.கே ஐயா உங்களுக்கு புரிஞ்ச வரைக்கும் சொல்லுங்களேன். தப்பா இருந்தா வேற யாராவது தப்புனு சொல்லுவாங்க...

அந்த மனு தர்மத்துல அப்படி என்னதான் இருக்குனு நாங்களும் தெரிஞ்சிக்கறோமே!!!

என்னதான் இங்க எல்லாரும் சொல்லாம விட்டாலும் இதுல இருக்கறது இல்லனு ஆகிவிடுமா???

G.Ragavan said...

// முத்துகுமரன் said...
//தமிழ் கடவுள் முருகன் ஒரு காமாந்தகன் என்றொரு பதிவு போட்டிருக்கிறேன்//

ரெம்ப சந்தோசம். அதுக்கும் சேர்த்து விளக்கம் அளிக்குமாறு எஸ்.கே அய்யா, குமரன், மற்றும் ஜி.ராகவனை கேட்டுக் கொள்கிறேன். ஹரி நான் அந்த கட்டுரை படிக்கவில்லை. அந்த லிங்க் இல்லை அந்த கட்டுரையை அனுப்புங்களேன் தனிமடலாகவாவது. ஆனா எந்த ஊர்லயா பொண்டாட்டியை வண்புணர்வானுங்க. முருகனுக்கு பொண்டாட்டி வள்ளிதான். எங்களைப் பொறுத்தவரை தெய்வானைதான் வராலாற்றில் திணிக்கப்பட்டவள், நுழைக்கப்பட்டவள் . //

ஓ என் கிட்டயும் அந்தப் பதிவு பத்திக் கேட்டிருக்கீங்களா? அதை ஒரு பொருட்டாவே மதிக்கலையே நான். ஆகையால அதுக்கு விளக்கம் சொல்லனும்னே தோணலை. விரும்பலை. ஆனாலும் நீங்க கேட்டதற்காகச் சில தகவல்கள். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

முருகன் வள்ளியை வண்புணர்ந்ததாக எனக்குத் தெரிந்து எந்த நூலிலும் இல்லை. காதற் சீண்டல்கள் என்று வரும். அதற்கு வேறொரு பரிமாணம் உண்டு. பழைய தமிழ் நூல்களில் காதலிக்கின்ற ஆண்கள் அனைவரும் முருகன் என்றும் பெண்கள் அனைவரும் வள்ளி என்றும் சொல்வார்கள். இளங்கோவடிகளும் இருவர் காதலிக்கையில் காதலனை முருகன் என்றும் காதலியை வள்ளி என்றும் சொல்கிறார். எனக்குத் தெரிந்து தெய்வயானையைப் பழைய தமிழ் நூல்களில் காண முடியாது. திருமுருகாற்றுப்படை உட்பட.

Anonymous said...

சீக்கிரமா சொல்லுங்க.

Hariharan # 03985177737685368452 said...

அரசியல் திரா"விட" பெத்தடின்கள் //தமிழ் கடவுள் முருகனை பெரிய யோக்கியமாக சித்தரித்து சித்து விளையாட்டு விளையாடும் அயோக்கியதனத்தை ஐம்பது நூற்றாண்டுகளாக நடத்தி வருவதை பகுத்தறிந்து தமிழ் கடவுள் முருகன் ஒரு காமாந்தகன் என்றொரு பதிவு போட்டிருக்கிறேன். படிக்கவும். முருகன் குறத்திமகளை வண்புணர்ந்ததை பற்றியும் எழுதி இருக்கிறேன். முருகன் பிராமணன் அல்ல என்பதையும் திரா"விட" பெத்தடின்கள் உணரவேண்டும்.//

முத்துக்குமரன்,

இது நான் போட்ட பின்னூட்டம் அல்ல. புரோபைலில் எனது படம் இல்லை. அவசரப்பட்டு இன்னொரு பதிவும் போட்டுவிட்டீர்கள்.

வார விடுமுறையாதலால் வலைப்பக்கம் வரவில்லை.

Hariharan # 03985177737685368452 said...

//நான் அந்த பதிவு போட்டதுமே நான் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் எதிர்பாராவிதமாக திரா"விட" பெத்தடின்களும் மகிழ்ச்சி அடைந்து விட்டார்கள். திரா"விட" பெத்தடின்கள் என்ன செய்தாலும் எரிச்சல் அடைய மறுக்கிறார்கள் என்பதாலும், சில ஆரிய அன்பர்கள் மனம் புண்பட்டதாலும் அந்த பதிவினை முருகன் அருளால் நீக்கிவிட்டேன். //


முத்துக்குமரன் இதுவும் நான் போட்ட பின்னூட்டம் இல்லை.

முத்துகுமரன் said...

ஹரிஹரன்,

இந்த பதிவில் உள்ள இரு பின்னூட்டங்கள் நீங்கள் இட்டது இல்லை என்று சொல்லியிருப்பதால் மேற்சொன்ன அந்த இரு பின்னூட்டங்களையும் நீக்கிவிட்டேன். அதே போல் அது சம்பந்தமாக நான் போட்ட பதிவின் பின்னூட்ட பெட்டியும் மூடப்படுகிறது. இதானல் தங்களுக்கு ஏதேனும் மனவருத்தம் ஏற்பட்டிருப்பின் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

கருப்பு said...

//முத்துக்குமரன் இதுவும் நான் போட்ட பின்னூட்டம் இல்லை. //

முருகன் சாமிய பத்தி தப்பு தப்பா பதிவப் போட்டுட்டு இப்ப இல்லன்றே படுவா ராஸ்கோலு? பிச்சிபுடுவேன் பிச்சி!

முத்துகுமரன் said...

நண்பர்களுக்கு
ஹரிஹரனனின் முருகன் பதிவு சம்பந்தமான பின்னூட்டங்கள் இனி இங்கு பிரசுரிக்கப்படமாட்டாது. இந்த பதிவின் நோக்கமும் அதுவல்ல.

Anonymous said...

"எனக்குத் தெரிந்து தெய்வயானையைப் பழைய தமிழ் நூல்களில் காண முடியாது. திருமுருகாற்றுப்படை உட்பட."

GR,
Refer line 6 in Tirumurukatrupadai. Here the 'Karpu' mentioned is Deivayanai. Read great scholar Kamil V. Zvlebil's legendary research work on Muruka.
Thanks
VRP

thiru said...

முத்துகுமரன்,

யாரும் இதற்கு மொழியாக்கம் சொல்லுவதாக தெரியவில்லை. நீங்களாவது சொல்லுங்க. மனுதர்மத்தின் எத்தனையாவது அதிகாரம் மற்றும் விதி என சொன்னாலாவது எதைப்பற்றியது அறிய வாய்ப்பாக அமையும்.

அறிய ஆவலுடன்...

ஜெயஸ்ரீ said...

முத்துக்குமரன்,


நீங்கள் தந்துள்ள வடமொழிச் செய்யுள்கள் மனுஸ்ம்ருதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன
கடைசி ஸ்லோகம் மஹாபாரதத்தில் உள்ளது. இவற்றின் வடமொழி மூலம் கிடைத்திருந்தால்
பொருள் சொல்வது கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும். வடமொழியின் கட்டமைப்பு சிறிது
மாறுபட்டது. (தமிழில் ஒரு க என்றால் வடமொழியில் நான்கு 'க' க்கள் ( க, க்க, ga, gha)
உண்டு. ஒரு எழுத்து மாறுபட்டலும் பொருள் மாறிவிடும். சொற்கள் சேர்ந்திருப்பதால் பிரித்துப் பொருள்
கொள்ளவேண்டும் தெரிந்தவர்களிடம் கேட்டும்
என்னுடைய மிகக்குறைந்த வடமொழிப் பரிச்சயத்தை வைத்தும் பொருள் கண்டுபிடிக்க முயற்சி செய்தேன்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் டாக்டர். அம்பேத்கர் எழுதிய ஒரு கட்டுரையில் மேற்கோள்
காட்டியிருக்கிறார்.

நீங்கள் தந்துள்ளவை மனுஸ்ம்ருதியின் இரண்டாவது அத்தியாயத்தில் உள்ளன. ஓரிருமுறை
அதன் மொழிபெயர்ப்பைப் படித்திருப்பதால் நான் சொல்லும் பொருள் அதன் மூலப்பொருளிலிருந்து
பெரிதும் வேறுபட்டிருக்காது என்னும் நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். தவறிருப்பின் அறிந்தவர்கள்
திருத்தவும்.

2. ''யோவமன்யேத் தே மூலே ஹேதுசாஸ்த்ராஅயத் த்விஜ:!
ஸ ஸாதுபிர்பஹிஷ்கார்யோ நாஸ்த்கோ வேதநிந்தக்:!!

எவனொருவன் வேதங்களையும் மனுஸ்ம்ருதியையும் தனது தர்க்கத்தால்(reasoning) கேள்விக்குட்படுத்துகிறானோ
அவன் சாதுக்களால்(சான்றோர்களால்) ஒதுக்கப்பட்டு(பஹிஷ்காரம் செய்யப்பட்டு) நாஸ்திகனாகவும், வேதத்தை
நிந்தித்தவனாகவும் (blasphemist) அறியப்படுவான்

கடைசியில் உள்ள மஹாபாரத சுலோகம்..

''புராண மாநவோ தர்ம: ஸாங்கோ வேத ஸ்சித்ஸித்!
ஆங்யாஸித்தானி சத்வாரி ந ஹந்தவ்யானி ஹேதுபி

பராணங்கள், மனுஸ்ம்ருதி, வேதங்கள், சிகிச்சை சாஸ்திரங்கள் ஆகியவை சான்றோர்களின்
கட்டளை(அவர்கள் வகுத்த விதிகள்) அவற்றைத் தர்க்கத்தால்(logic) கேள்விக்குட்படுத்துவதோ, மறுப்பதோ தவறாகும்.
இவை அறிவினால் மட்டும் உணரக்கூடியவை அல்ல என்று பொருள் கொள்ளலாம்.

சில மணி நேரங்கள் கழித்து மற்ற சுலோகங்களுக்குப் பொருள் தருகிறேன்.

Disclaimer : இவை நீங்கள் கேட்ட சுலோகங்களின் பொருள் மட்டுமே. எதுவும் என் சொந்தக் கருத்து அல்ல ))

மனுஸ்ம்ருதியின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கான சுட்டி..

http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch1/ch1_1_5.html

VSK said...

அன்பு நண்பரே!

மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்.

இதிலும் சில பிழைகள் இருப்பது போன்று தோன்றுகிறது. மூலத்தை[வடமொழியில்] அனுப்பினால், அல்லது சுட்டி தந்தால், தெரிந்தவர்களிடம் கேட்டு மொழிபெயர்த்து அனுப்புகிறேன்.


நீங்கள் இதை எதையோ பார்த்துத்தான் பதிந்திருக்கிறீர்கள்!

இது தமிழாக இருப்பின் என்னால் ஒரு மாதிரி சரியான சொல்லைத் தொடமுடியும்.

ஆனால், இது வடமொழியில் இருப்பதால், அது என் தாய்மொழி இல்லாததால், மூல்வரிகள் இருந்தால் நிச்சயமாக தெரிந்தவரிடம் காட்டி சரியான மொழி பெயர்ப்பை அனுப்ப முயல்கிறேன்.

இல்லையென்றால், உங்களுக்குத் தெரிந்ததையே போடுங்கள்!

kasaikannan said...

இன்று இரண்டு ஸ்லோகம். நாளை மற்றவை.
மனுஸ்ம்ருதி
2:11,
யோ அவமந்யேத தே மூலே ஹேது ஸாஸ்த்ராஸ்ரயாத் த்விஜ:
ஸ: ஸாதுபிர் பஹிஷ்கார்யோ நாஸ்த்திகோ வேத நிந்தக:

எந்த இருபிரப்பாளன் தர்க்கம் முதலான அறிவால் அவற்றை ( மேலே குரிப்பிட்ட வேதம். ஸ்ம்ருதி ஆகிய இரண்டையும்)அவமதிக்கின்றானோ அவன் ஸாதுக்களால் நாஸ்திகனென்றும் வேதத்தை தூற்றுபவனென்றும் ஒதுக்கி விடப்படுகிறார்கள்.
2.12.
வேத: ஸ்ம்ருதி ஸதாசார: ஸ்வஸ்ய ச ப்ரியம் ஆத்மந:
ஏதத் சதுர்விதம் ப்ராஹு;சாக்ஷாத் தர்மஸ்ய லக்ஷணம்.

வேதம், ஸ்ம்ருதி , பெரியோர்கள் கடைப்பிடித்த வழி முறைகள்
தனக்கு பிரியமானவை இவை நான்கும் தர்மத்தின் லக்ஷணங்கள் என்று சொல்லப்படுகின்றன.

ஜெயஸ்ரீ said...
This comment has been removed by the author.
Anonymous said...

Go ahead, repeat endlessely that Manu Smriti said this, Mahabaratha
said this.This is the typical Periyraist trick to focus only
on Hindu scriptures and epics but
pretend that all other scriptures
of other religions are perfect.
One can find equally obnoxious
thinking in Koran and Bible.
But Muthukumarans and their
intellectual masters like Supa.Vee
will not open their mouths about that.These shameless Hindu baiters
are agents for islamic fundamentalists

kasaikannan said...

மேலும் இரண்டு

2:14,
ஸ்ருதித்வைதம் து யத்ரஸ்யாத் தத்ர தர்மாவுபெள ஸ்ம்ருதெள
உபயோபி ஹி தெள தர்மெள ஸம்யக் உக்தெள மனீஷிபி:

(வேதம், ஸ்ம்ருதி) இவை இரண்டில்வேறுபாடு காணப்பட்டாலும்
இரண்டுமே தர்மமென்று அறிந்தவர்களால் சொல்லப்படுகிறது.

12:95
யா வேத பாஹ்யா: ஸ்ம்ருதயோ யாஸ் ச காஸ் ச குத்ருஷ்ட்ய:
ஸ்ர்வாஸ் தா நிஷ்பலா ப்ரேத்ய தமோ நிஷ்டாஹி தாஸ்ம்ருதா:

வேதத்திற்கு புறம்பானதும் ஸ்ம்ருதிக்கு புறம்பானதும் கோணலாக
பார்க்கப்பட்டதும் பலன் தராதவை.இருளில் காணப்பட்டவை
என்று ஆகும்.

ஜெயஸ்ரீ said...
This comment has been removed by the author.
Related Posts with Thumbnails